Tuesday, March 06, 2018

பெரியார் ராமனை செருப்பால் அடிச்சப்ப

பெரியார் ராமனை செருப்பால் அடிச்சப்ப நாங்க அமைதியா தானே இருந்தோம் இப்ப மட்டும் ஏன் பொங்குறீங்கனு உங்க கேள்வி
பதில்:
1971 ஆம் ஆண்டில், ராமனை செருப்பாலடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு? என்று காமராஜரையும், இராஜாஜியையும் ஒன்று சேர்த்தார்கள்.
போச்சு, போச்சு என்று தி.மு.க.காரர்களும் நம்பினார்கள்.
திராவிடர் கழகம் ஊர்வலம் நடைபெறுகிறது. தந்தை பெரியார் அவர்கள் அந்த ஊர்வலத்தில் வருகிறார். கடவுள் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் உருவங்களை அந்த ஊர்வலத்தில் எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக கலைஞர் அவர்கள் இருந்தார். அப்பொழுது பா.ஜ.க. கட்சி இல்லை. அன்றைக்கு ஜனசங்கம் என்ற பெயரில் இருந்தது.
அந்த ஊர்வலத்திற்குக் கருப்பு கொடி காட்டப் போகிறோம் என்று ஜனசங்கத்தினர் சொன்னதும், கலைஞர் அவர்கள் ஜனநாயகவாதி. அப்படியா? நல்லது! அவர்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்குங்கள் என்று சொன்னார். ஏனென்றால், பெரியாருக்கு எதிர்ப்பைக் கண்டால் இன்னும் கொஞ்சம் உற்சாகம் வரும் - மாநாட்டில் இன்னும் நன்றாகப் பேசுவார் என்றார்.
எதிர்ப்புதான் எங்களுக்கு எப்பொழுதும் தீனி. எங்கள் வயலில் எவ்வளவு அசிங்கத்தை நீங்கள் வீசினாலும், எங்கள் விளைச்சலுக்கு அவைகள் உரங்கள் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருக்கக் கூடியவர்கள்.
ஜனசங்கத்தினரை சுற்றி காவல்துறையினர் நின்றிருந்தார்கள். ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறது. முழக்கங்களை எழுப்பிக்கொண்டு தோழர்கள் வருகிறார்கள்.
ஜனசங்கத்தினர் கருப்புக் கொடி காட்டிவிட்டு போவது தானே நியாயம். ஆனால், அப்படி அவர்கள் செய்யாமல், அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர், திடீரென்று செருப்பை தூக்கி பெரியார்மீது எறிந்தார். அதற்குள் பெரியார் வந்த வண்டி நகர்ந்துவிட்டது. அவருக்குப் பின்னால் வந்த கருப்புச் சட்டைத் தோழரின்மேல் விழுந்தது.
பெரியார்மீதுதானே நீங்கள் செருப்புப் போடவேண்டும் என்று நினைத்தீர்கள். உன்னுடைய ராமனை நான் செருப்பால் அடிக்கிறேன் என்று அந்த செருப்பை எடுத்து ராமன் படத்தின்மீது அடித்தார்.
இப்படித்தான் அந்த சம்பவம் நடைபெற்றது..
ஆக நாங்க எத எடுக்கணும்னு நீங்க தானே முடிவு பண்றீங்க பக்தாள்களே