Saturday, May 20, 2017

உயிர்கொடுத்து எங்களை விடுவித்தவ‌ர் ராஜிவ்

ஒரு ஈழ சிந்தனையாளர் ஒருவரிடம் பேசிகொண்டிருக்கும் பொழுது சொன்னார், அவர் புலி குஞ்சு அல்ல மாறாக சிந்திப்பவர்
"எங்கள் நாட்டில் புலிகள் காலங்களில் எங்கள் நாட்டில் நடந்த கொடூரங்கள் உங்களுக்கெல்லாம் ஓரளவுதான் தெரியும், முழுக்க தெரியாது
கொலைக்கும், கொள்ளைக்கும் போராட்டம் என பெயர், அவர்களை கட்டுபடுத்த யாராலும் முடியவில்லை, காலம் அப்படி
நாங்கள் வாழ்ந்த பரிதாப வாழ்வு அப்படி
ஏதோ ஒரு சக்தி ராஜிவினை கொல்ல அவர்களுக்குள் புகுந்தது , ராஜிவ் மட்டும் சாகவில்லையென்றால் எங்களுக்கு விடிவே இல்லை
உயிர்கொடுத்து எங்களை விடுவித்தவ‌ர் ராஜிவ்"
அந்த ஈழதீயில் தன்னையே எரித்து உண்மையினை உணர்த்தியவர் அவர்
ராஜிவ் தமிழகத்தில் சாகவில்லை என்றால், தொடர்ந்து பல அரசியல் கொலைகள் நடந்திருக்கும், புலிகளை எதிர்த்த எல்லோரும் கொல்லபட்டுகொண்டே இருந்திருப்போம்
ராஜிவ் அதனை தடுத்திருக்கின்றார்
ராஜிவோடு கொல்லபட்டு, தமிழகத்தில் புலிகளின் கொலைகரங்களை முறித்த அந்த 15 தமிழருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்
அதில் எம் நெல்லை மாவட்ட காவல் அதிகாரியும் உண்டு
அவர்கள் எல்லாம் செத்து தமிழகத்தை அமைதியாக்கியிருக்கின்றார்கள், அவர்கள் தான் மாவீரர்கள்
ராஜிவிற்கும் அவர்களுக்கும் வீரவணக்கம்

ராஜிவ் கொலை

ராஜிவ் கொலைகுற்றவாளிகள் பற்றி என் பதிவுகளில் யாரும் பின்னோட்டம் இடவேண்டாம், அப்படி பதிவிட்டால் நீக்கபடும், நட்பும் துண்டிக்கபடும்
ராஜிவ் கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இல்லை என சொல்லவேண்டியது நீங்களோ, நானோ அல்ல, அதில் மிக முக்கியான குரல் பிரபாகரனிடம் இருந்து வந்திருக்க வேண்டும்
இவர்கள் நிரபராதிகள் என அவன் தான் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் அவனுக்கோ இந்த 7 பேரும் சயனைடு கடித்த பட்டியில் இருந்ததாகவே நினைவு, அவன் முடிவு அப்படி
ஆக அந்த 7 பேரும் என்றோ மாவீரர் ஆகிவிட்டவர்கள், அதனால் அந்த குற்றவாளிகளை பற்றி இங்கு வந்து சொல்லிகொண்டிருக்க வேண்டாம்..
அவர்களை காப்பாற்றும் பொறுப்பு புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் இருந்தது, சாட வேண்டுமென்றால் அவரை சாடுங்கள்
நளினி சம்பாதித்து படிக்கவைக்க முடியாத நளிய்யினின் மகள் லண்டனில் டாக்டராகிவிட்டாள், படிக்க வைத்தது யார்? கூலி கிடைத்ததா இல்லையா?
எல்லோரும் அவரவர்க்கான கூலியினை பெற்றுவிட்டார்கள், கூலிப்படை கொடுத்துதான் கணக்கை முடித்திருக்கின்றது
அதனை பற்றி பேசாமல் இருப்பது நல்லது

ஆரம்பத்திலேயே தூக்கில் போட்றுந்தா இன்னேரம் மறந்துறுப்பாய்ங்க.

ராஜிவ் அமைதிபடையினை அனுப்பினார் அதனால் புலிகளால் செத்தார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்
அட மானிட பதர்களா, தமிழனத்தினை இலங்கை மண்ணிலிருந்தே கருவருப்பேன் கன கங்கணம் கட்டி நின்ற தமிழின விரொதி ஜெயவர்த்தெனே என்றொருவன் இருந்தானே, கொழும்பில் 10 ஆயிரம் தமிழரை கொளுத்தினானே, யாழ்பாண நூலகத்தை கொழுத்தினானே அவனை என்ன செய்தார்கள் புலிகள்?
அமைதிபடையினை இலங்கைக்கு அழைத்த ஜெயவர்த்தனேக்கு என்ன நடந்தது? ஒன்றுமே இல்லை
ஈழசிக்கலின் பிதாமகன் ஜெயவர்த்தனே, அவன் தான் ராஜிவினை தந்திரமாக இழுத்துவிட்டு, புலிகளை சீண்டிவிட்டு ஆடியவன், அவனுக்கு புலிகளும் எதிரி , இந்தியாவும் எதிரி
ஆனால் இருவரையும் மோதவிட்டு இந்தியாவினை ஓரங்கட்டி , பின் புலிகளை எப்படி ஒழிக்கவேண்டும் என அஸ்திவாரம் எழுப்பியவனும் அவனே
புலிகள் வீரர்கள், மானமுள்ளவர்கள், பழிவாங்குவதில் சூரர்கள் என்றால் ஜெயவர்த்தனேவினை கொன்றிருக்கவேண்டும் செய்தார்களா?
அட அதன் பின்னாவது கோத்தபாய, மஹிந்த என தொட்டார்களா?
புலிகள் என்பது யார்? தனக்கு பிடிக்காதவர்களை அவர்கள் எதிர்பாரா நேரத்தில் நம்ப வைத்து அடித்து கொல்லும் கூட்டம்
ராஜிவ், பிரேமதாசாவினை அப்படித்தான் கொன்றார்கள், விழிப்பாக இருப்பவன் பக்கம் செல்ல கூட மாட்டார்கள்
அதுவும் ஜெயவர்த்தனே போல அமெரிக்க விசுவாசி என்றால் அவன் பக்கமே செல்லமாட்டார்கள், அதுதான் புலிகள்
ஒருசிலர் இன்று அமைதிபடை , பழி என என்னமோ சொல்லிகொண்டிருக்கின்றான்
அப்படி மானமுள்ள புலி ஏன் ஜெயவர்த்தனே பக்கம் செல்ல கூட இல்லை என பதில் கேள்வி கேட்டால் பதிலே இல்லை
அமைதிபடையினை வரசொல்லி கேட்டதே ஜெயவர்த்தனே தான், அவன் மகாராஜா போல வாழ்ந்து நிம்மதியாக செத்தான்
ஏன் புலிகள் ஜெயவர்த்தனேவினை கொல்லவில்லை என எவனாவது மலையாள மந்திரவாதியினை பிடித்து, பிரபாகரன் ஆவியினை துப்பாக்கி முனையில், சயனைடு குப்பியில் வரவழைத்து கேட்டால் தான் உண்மை தெரியும்..
இப்படியான கோணங்கள் எல்லாம் சீமானிய அடிப்பொடிகளிடம் இல்லை, அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கலைஞர் ஒழிக...
சிதறி செத்திருக்க வேண்டியவன் ஜெயவர்த்தனேவே தவிர ராஜிவ் அல்ல, இதுதான் உண்மை
வரலாறு இப்படி இருக்க சிலர் இன்று குதித்துகொண்டிருக்கின்றான்
அவனுகளும் அவனுக படித்த ஈழமும்.. போங்கடா டேய்

யார் தமிழ் மக்கள் , அவன் ஸ்ரீலங்கா தமிழன் டா , நீ இந்திய தமிழன் டா , அவன் கொன்னது உன்னோட நாட்டு பிரதமரை , ,, இந்தியா செய்யாம விட்டது MOAB (அமெரிக்கா காரன் ஆப்கானிஸ்தான் ல போட்டான் ல அது) அங்கே போடாம விட்டது தான்டா , அப்படி போட்டு இருந்தால் இன்னைக்கு நீங்கல்லாம் சத்தம் போட மாட்டிங்க .


 
 

ராஜிவிற்கு ஜெயா கொன்ற நன்றி

அந்த படுகொலை தமிழகத்தில்தான் நிகழ்ந்தது , தமிழகம் தன் தாய்வீடு என நம்பி வந்த தலைவன் இங்குதான் செத்தான்
அவனின் சாவில்தான் ஜெயா ஆட்சிக்கே வந்தார், ராஜிவின் ரத்தம் இங்கு சிந்தியிராவிட்டால் ஜெயா அரசியல் வாழ்வு முளைத்தே இருக்காது
1984ல் தொல்வியின் விளிம்பில் இருந்த ராமசந்திரன் இந்திரா கொலையில் கிடைத்த அனுதாபத்தில், அவருடன் இருந்த கூட்டணியால் தப்பினார், இல்லை அன்றே தோற்றிருப்பார்
1991ல் ஜெயா முதல்வரானதும் ராஜிவ் கொலையிலே தான், இரு பெரும் தலைவர்களின் அனுதாபமும் தமிழகத்தில் அதிமுகவிற்குத்தான் சென்றதே தவிர காங்கிரசுக்கு அல்ல, அப்படி ஒரு அப்பாவி கட்சி அது
அந்த தலைவனின் நினைவிடம் இங்குதான் இருக்கின்றது, என்றாவது ஜெயாவோ கலைஞரோ அங்கு அஞ்சலி செலுத்த கண்டீர்களா?
கலைஞர் செல்லமாட்டார், அப்படி சென்றால் அவர் நினைவுகளை கிளறிவிட்டு காங்கிரஸ் வந்துவிடும் என்பதால் அல்ல, மாறாக ஒரு குற்றவுணர்ச்சி அவர் நெஞ்சில் இருக்கலாம்
பத்மநாபா கொலை நடந்தபொழுதே அந்த சிவராசனை, தஞ்சைபக்கம் போலிசில் சிக்கிய சிவராசனை சுட்டு கொன்றிருந்தால் ராஜிவ் கொலை நடந்திருக்காது, கலைஞருக்கு அது நன்றாகவே தெரியும்
ஆனால் இவ்வளவு தூரம் கொடூர புலிகள் செல்வார்கள் என யாரும் நினைத்து பார்க்கவில்லை, அப்படி கலைஞரும் நினைக்கவில்லை, ஆனாலும் கலைஞரின் மன்சாட்சி உலுக்கியிருக்கலாம்
ஆனால் ஜெயலலிதா?
கொஞ்சமேனும் நன்றி இல்லாதவர் அவர்தான், ஜெயாவினை அரசியலில் உயர்த்திவிட்டதே ராஜிவ், கடைசியாக உயிர்கொடுத்து முதல்வராக்கியதும் அவரே
அன்று ஜெயாவும், ராஜிவும்தான் கூட்டணி, ஆனால் அந்த கூட்டத்திற்கு ஜெயா வரவில்லை ஏன்? பலத்த சந்தேகம் தான், ஆனால் முன் கூட்டியே மறுநாள் ராஜிவ் கலந்துகொள்ள இருந்த கிருஷ்ணகிரி கூட்டத்திற்கு தயாராக ஜெயா அங்கே இருந்ததால் சந்தேகம் தீர்ந்தது
ராஜிவ் திருப்பெரும்புதூரில் தப்பியிருந்தால் மறுநாள் கிருஷ்ணகிரியில் ஜெயாவோடு கொல்லபட்டிருப்பார்
அப்படி ராஜிவினை நினைக்க வேண்டிய ஜெயா என்றாவது திருப்பெரும்புதூர் சென்றதாக சொல்லமுடியுமா?
அதனை கூட மன்னித்துவிடலாம், அதற்கொரு காரணம் சொன்னார் பாருங்கள்
"நான் ஏன் திருப்பெரும்புதூர் செல்ல வேண்டும்? சென்னைக்கு வரும் காங்கிரசார் எல்லாம் அண்ணா சமாதிக்கு செல்கின்றார்களா?"
ராஜிவிற்கு ஜெயா கொன்ற நன்றி கொஞ்சமல்ல..

Friday, May 19, 2017

பிரபாகரன் & கலவரம் & அமைதி

ஈழதமிழர் விவகாரத்தில் பலர் அள்ளிவிட்டனர், கடைசியில் வந்து கப்சா விட்டவர் ஜெகத் கஸ்பர் எனும் பாதிரி, சும்மா சொல்ல கூடாது , அவர்தான் சீமானுக்கு முன்னோடி
புலிகள் பற்றி அவர் அள்ளிவிட்ட கதைகள் ஏராளம்
அதாவது இவர் பிரபாகரனை பார்த்து நாள்கணக்காக பேசி ஒரே இலையில் உண்டு மகிழ்ந்தாராம்
ஒருநாள் பிரபாகரன் சொன்னாராம், "பாதர், 1983க்கு பின்னால இன்னைக்கு வரைக்கும் கொழும்பில, மற்ற இடத்தில‌
சிங்களன் தமிழரை அடிக்கையில்லை, ஏன் என்டால் புலியள் திருப்பி அடிக்கும்ங்க்ற பயம்
அந்த பயபயத்துலதான் பாதர், இந்த நாட்டிலே தமிழன் வாழமுடியுது, புலியள் இல்லண்ணா ஒரு நொடி கூட தமிழன விடமாட்டான்"
உடனே கஸ்பார், "பிதா சுதன் பரிசுத்தஆவி பெயராலே ஆமென், ஸோஸ்த்திரம் கர்த்தாவே ஸ்ஸோஸ்திரம் புலியள் இல்லாட்டி தமிழினம் அழிஞ்சி போயிரும் கர்த்தாவே" என நெற்றியில் சிலுவை போட்டாராம்
இன்றோடு புலிகள் அழிந்து 8 வருடம் ஆகின்றது, எங்காவது ஒரு கலவரம் இலங்கையில் நடந்திருக்கின்றதா?
ஒரு ஈழதமிழன் வலியோடு சொன்னது நிஜம்
"பிரபாகரன் பிறந்தான், அமைதியான நாட்டில் குண்டுகள் வெடிக்க தொடங்கின, அவன் இறந்ததும் மறுபடி நாடு அமைதியாயிற்று"
ஆக புலிகள் இல்லையென்றால் இலங்கை தமிழர் எல்லாம் அழிந்துவிடுவர் என்பதெல்லாம் தமிழக பொறுப்பற்றதரப்பினர் கட்டிவிட்ட கதைககளில் ஒன்று
சீமான், வைகோ, வேல்முருகன், திருமுருகன், திருமாவளவன் இந்த பாத(க)ர் எல்லாம் ஒரே வரிசை..

புலிகள் வெற்றி பிம்பம்

புலிகள் எங்குமே முழு வெற்றி பெற்றவர்கள் அல்ல, அவர்களின் சிறிய தாக்குதலையும் ஏதோ பெரும் அமெரிக்க தாக்குதல் போல சித்தரித்தவை தமிழக ஏடுகள், அங்கே சும்மா புலிகள் ஆயுதம் இல்லாதவனை சுட்டால் கூட, இங்கே பெரும் யுத்தம் இலங்கையில் நடந்தது போல எழுதுவார்கள்
அப்படித்தான் புலிகளின் செய்திகள் இருந்தன, தாக்குதல் வெற்றிக்கும், பெரும் போருக்கும் புலிகளுக்கும் வெகுதூரம், எல்லாம் ஊதிபெருக்கிய பிம்பம்
அன்றைய வடமராட்சியில் அவர்கள் கதை முடியும்பொழுதே ராஜிவ்காந்திதான் காத்தார்,
புலிகள் அப்படித்தான் சிங்களனை அடித்துவிட்டு ஓடுவார்கள், அல்லது மக்கள் நடுவில் அமர்வார்கள், சிங்களன் வந்து மொத்தமாக அப்பாவிகளை கொல்வான்,
இப்படித்தான் அவர்களின் வீரவிளையாட்டு பொதுவாக‌ இருந்தது
அவர்களின் ஒரே பலம் ஊதிபெரிதாக்கும் ஊடக செய்திகளும், ஆண்டன் பாலசிங்கத்தின் வாயும்
ஆனால் ஒரே ஒரு இடத்தில் புலிகள் முழுவெற்றி பெற்றார்கள், அது ஆனையிறவு தாக்குதல் , முக்கியமான வெற்றி அவர்களின் முந்தைய‌ 20 வருட போராட்டத்தில் அது ஒன்றுதான் உச்ச வெற்றி...
இலங்கையின் வரைபடத்தினை கவனித்தால் புரியும் யாழ்பாண பகுதிகளையும் இலங்கையினையும் இணைக்கும் நிலபரப்பது அதுவே, மிக முக்கியமான பகுதி, அங்கு இலங்கை ராணுவத்தின் முகாம் இருந்தது 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்
கிட்டதட்ட 2 ஆயிரம் புலிகளை இழந்து அந்த முகாமினை புலிகள் பிடித்தனர், புலிகள் வாழ்வில் ஒரே வெற்றி
அந்த வெற்றியில் 50 ஆயிரம் சிங்களர்களை புலிகள் சிறைபிடித்தனர், அத்தோடு வடக்கில் இருந்து சிங்களம் வெளியேறிற்று,இனி ஈழக்கொடி ஏற்றவேண்டியதுதான் பாக்கி
அப்படியான நிலை, போரில் புலிகளுக்கு வெற்றிதான், ஆனால் அங்கீகரிப்பது யார்? ராஜதந்திரம் வேண்டும், புலிகளிடம் அது என்றைக்கு இருந்தது..
ஆனால் சிங்களம் ஆடியது, தன் நேசநாடுகளுக்கு தூது அனுப்பியது. எப்படி தூது அனுப்பும்? "எங்கள் உள்நாட்டில் குழப்பம் வந்து தீர்த்து வைப்பீர்.."
இப்படியான அழைப்பு இந்தியாவிற்கும் வந்தது, "நீங்கள் வருகின்றீர்களா அல்லது வேறுயாரையும் அழைக்கட்டுமா? பாகிஸ்தான் கூட தயார்தான்.."
ஆனால் ராஜிவ் கொலைக்கு பின் தயங்கி நின்ற இந்தியா, லேசாக எட்டிபார்த்தது, அப்பொழுது வாஜ்பாய்தான் பிரதமர்
ஈழம் அமைய அதுதான் வாய்ப்பு, அந்த சூழ்நிலை ஒன்றுதான் ஒரே வாய்ப்பு, ஆனால் நடந்ததென்ன?
புலிகளுக்கு இந்தியா சார்பில் ஓலை அனுப்பபட்டது, 50 ஆயிரம் சிங்கள வீரர்களை விடுவித்துவிட்டு , உங்கள் வழியில் செல்லவும் இல்லையென்றால் இந்தியா களமிரங்கும்
அவ்வளவுதான் கிட்டதட்ட 2 ஆயிரம் புலிகள் செத்து கிடைத்த ஒரே வெற்றியும் வீணானது
ஏன் அன்று வாஜ்பாய் அப்படி அறிவித்தார்? ஏன் ஈழம் அமைவதை தடுத்தார்கள்? சரி இந்தியா ஏன் தன் ராணுவத்தை அனுப்பி ஆனையிறவினை மீட்கவில்லை??
இந்தியா மிரட்டவில்லை என்றால் ஐ.நா பன்னாட்டு படை அங்கே வந்திருக்கும், பன்னாட்டு படை என்றால் அமெரிக்க படை என அர்த்தம்,
இந்தியா அதனைத்தான் தடுத்தது
பாலஸ்தீனம் போல ஈழபோராட்டம் சர்வதேச அரசியலை பெறவில்லை, ஒருவகையான ரவுடிச பேரம்பேசுதலாகவே உலகம் அதனை 1991க்கு பின் கண்டது..
ஆனால் இந்தியா ஈழத்தை விரும்புமோ இல்லையோ புலிகள் அழிவதை விரும்பாது, இது ஒரு அரசியல். பன்னீரை வைத்து டெல்லி ஆடுகின்றல்லவா அப்படி
ஈழம் அமைய ஒரே வாய்ப்பான அந்த ஆனையிறவு வெற்றி வீணாய் போனபொழுது வாஜ்பாய் அமைச்சரவையில் வைகோ இருந்தார், ஒரு வார்த்தை எதிர்த்திருப்பார்?
உண்மையில் அன்றுதான் தமிழகம் பொங்கியிருக்க வேண்டும், அன்றுதான் ஏன் புலிகள் பின்வாங்க வேண்டும்? என சீறியிருக்க வேண்டும் ஆனால் எல்லாம் அமைதி, வைகோ, திருமா,நெடுமாறன் எல்லாம் அமைதி
சீமான், வேல்முருகன், திருமுருகன் எல்லாம் அன்று எங்கிருந்தார்களோ தெரியாது, சீமான் பாஞ்சால்ங்குறிச்சி எடுத்துகொண்டிருந்தார்
ஆக அன்று ஈழம் அமைய தங்கள் வாழ்நாளின் உச்சபட்ட ஒரே வெற்றியினை புலிகள் பெற்றபொழுது ஈழம் அமையாமல் தடுத்தது பாஜக அரசு, அருகே இருந்தவர் வைகோ
அதனை எல்லாம் பற்றி ஒருவரும் பேசமாட்டார்கள், மாறாக ஈழத்தை அழித்தது கலைஞர், காங்கிரஸ் என கடும் ஒப்பாரிமட்டும் மறக்காமல் வைப்பார்கள்....
தன் நாட்டில் பெரும் படுகொலை புரிந்த ஒருவனை, இந்திய ராணுவத்தார் 1500 பேரை கொன்ற இயக்கத்தின் தலைவனை, ஒரு நாட்டின் அதிபராக இந்தியா அனுமதிக்குமா? ஒருகாலும் இல்லை
வாஜ்பாய் அதனைத்தான் செய்தார்,அன்று வாஜ்பாய் முன்னால் அமைதியாக இருந்த வைகோதான் பின்னாளில் குதியோ குதி என குதித்தார்..
இந்தியாவிற்கு எதிராக அவ்வளவு காரியங்களை செய்துவிட்டு இந்தியா தங்களை காக்கும் என்றோ, தங்களை அதிபர்களாக ஆளவிடும் என்றோ மனப்பால் குடித்தவர்களை என்ன சொல்லமுடியும்??

தமிழ் கடவுள்கள்

தமிழ்ச் சமூகம் கற்பனையான கடவுள்களை உருவாக்கி வழிபடும் பழக்கம் கொண்டிருந்ததா?..
ராமனை போல நீல நிறம் கொண்ட மனிதர்கள் எங்காவது வாழ்த்திருக்கிறார்களா?, ஆனால் கறுத்த நிறம், தடித்த உடம்பு, சுருள் முடி, கிடா மீசை கொண்ட கருப்பு சாமியின் சாயல் உங்களுக்கும் இருக்கிறதுதானே?,
தமிழர்கள் தாங்கள் வணங்கிய தெய்வங்களுக்கு பிரம்மனை போல மூன்று நான்கு தலைகளோ, நான்கைந்து கை கால்களோ , பிள்ளையாருக்கு போன்று பிளாஸ்டிக் சர்ஜரியோ செய்து பார்த்திருக்கிறீர்களா?.
அப்படியென்றால் தமிழர்களுக்கு கற்பனை வளம் கம்மி என்று எடுத்துக் கொள்வதா?, இல்லை தமிழர்கள் எதார்த்தவாதிகள் என்பதா?..
தமிழ்த் தெய்வங்கள் நிறமும் உருவமும் இந்த மண்ணின் மனிதர்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது, இந்த நிலத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது, உற்பத்தியோடு தொடர்புடையதாக இருக்கிறது,
பிரம்மனுக்கோ, பிள்ளையாருக்கோ இந்த துணைக்கு கண்டத்தின் ஏதாவது வட்டாரத்தன்மை இருக்கிறதா?, திணைக் கூறுகளைக் கொண்ட தலைவன்களும், போரிட்டு மடிந்த வீரன்களும்தானே தமிழ் தெய்வங்களின் கூறுகள்.
மூன்று திசைகளும் கடல் அரணாக உள்ள தென்னிந்தியாவில் வடக்கு திசை எதிரி நுளையும் வாய்ப்புள்ள பகுதி என்பதால்தானே மாரியம்மனையும், பிற காவல் தெய்வங்களையும் எல்லா தமிழ் கிராமங்களின் வடக்கு எல்லையில் நிறுத்தி இருக்கிறார்கள்,
அப்படியென்றால் வடக்கு எதிர்ப்பு என்பதும் வடக்கு ஆபத்து என்பதும் தானே தமிழ்த் தெய்வங்களே உணர்த்தும் தொன்மமாக இருக்கிறது.
என்றால் வடக்கின் ஆன்மீக ஆதிக்கத்திற்கு, வடக்கின் மார்வாடி பொருளாதார ஆதிக்கத்திற்கு, வடக்கின் ஹிந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராகவும் தமிழ் எல்லை தெய்வங்களை நிறுத்தி வளர்ந்திருக்க வேண்டியது அவசியமில்லையா?..
மூதேவி என்றொரு தமிழ் தெய்வம் விவசாய உற்பத்திக்கு ஆதாரமான மண்ணோடும், சேரோடும், குப்பை உரங்களோடும் தொடர்புடையது, பழந்தமிழர் கடல் வணிகத்தில் மாசாத்தான் என்னும் பெரு வணிகர்கள் கடல் பயணங்களில் தங்களை காக்கும் தேவதையாக ஒரு பெண் தெய்வத்தை வணங்கினார்கள், சாஸ்தா கோவில் வழிபாடுகள் இம்மண்ணின் கூறுகளை உடையதுதானே?.
திராவிட பகுதிகளை போல அதிகமான பெண் தெய்வங்களை கொண்ட பகுதி வேறெதுவும் கிடையாது,
தாய்த்தெய்வ வழிபாடும், தாய்மாமன் மரியாதையும், இறப்பை போற்றும் சடங்குகளும் பழக்கமும் இந்த மண்ணிற்க்கே உடையது, இவை எதுவும் ஆரிய கூறுகளில் இல்லாதது, அவர்கள் கடவுள்களிலும் இல்லாதது.
தமிழ் மக்களால் வணங்கப்படாத சுடலை மாடனையோ காத்தவராயனையோ, அய்யனார்களையோ , அரிவாள்களையோ தமிழ்நாட்டில் எங்கும் எங்காவது பார்க்க முடியுமா,
ஆனால் ஆடு மாடு கூட போகாத உயரமான கோபுரங்களையும் கொடிமரங்களையும் கருவறைகளையும் கொண்ட கோவில்களை நூற்றுக் கணக்கில் சாலை ஓரங்களில் காணலாம்,
இம்மண்ணில் ஆரியத்தை வேரறுக்க, வெகுமக்கள் பண்பாட்டில் வைதீகத்தை வேறுபடுத்தி காட்ட ஆயிரம் கூறுகள் சும்மாவே கிடக்கின்றன..
புராதனமான வைதீக ஆதிக்கம் என்பது அருவமானது கண்ணுக்கு புலப்படாதது, ஆனால நிஜத்தில் இருப்பது, அதனாலேயே ஆரிய எதிர்ப்பும் வெகுமக்கள் தன்மையில் புலப்படுத்த முடியாதிருக்கிறது,
நவீன முரண்களில் ஆரிய எதிர்ப்பை உள்வாங்கிக் கொள்வதும் அவசியமாக இருக்கிறது, புலித்தேவன், ஒண்டி வீரன், மருது சகோதர்களின் வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு கூறுகளை நவீன சமூகத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா?.
அந்த கூறுகள் அந்த காலகட்டத்தோடு நின்றுவிடுமா மருது சகோதரிகளின், தமிழ் கூறுகள் சம்ஸ்கிருத இந்தி திணிப்பிற்கு எதிராக பயன்படுத்த கூடியது அல்லவா?..
அதுபோலத்தானே தீரன் சின்னமலையும், வீரன் அழகுமுத்துக் கோணும், சுந்தரலிங்கமும், புலித்தேவனுடைய தமிழ் கூறுகளும் ஆரிய பார்ப்பனியத்தின் மேலாதிக்கத்திற்கு எதிரான பயப்படுத்தக் கூடியதுதானே,
அவன் விநாயகரை எடுத்துக்கிட்டு இந்துக்களே முஸ்லீம்களை விரட்டுங்கள்னு வந்தான்னா, நாம வடக்கு எதிர்ப்புன்னு மாரியம்மனை எல்லை சாமிகளை கையிலெடுப்பதில் என்ன தப்பு?,,
நெத்தி நிறைய பட்டை அடிச்சிட்டுதான் மறுத்து சகோதர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சண்டையிட்டு இருப்பார், ஜக்கம்மான்னு சொல்லித்தான் கட்டபொம்மன் வெள்ளைக்காரனை எதிர்த்து நின்றிப்பார்.
"ஆற்றங்கரையில் இருக்கும் அந்த எளிய மக்களின் களிமண் பொம்மைகளை விட்டு விடுங்கள் அவற்றை சமூகத்திற்கு பயனில்லாதது என்று உணரும்போது அந்த மக்களே தூக்கி வீசிவிடுவார்கள்" என்று மாவோவின் மேற்கோளாக எங்கோ வசித்த ஞாபகம்.
அந்த வார்த்தைகள் எவ்வளவு அரசியல் கொண்டது..

புலிகள் & ராஜிவ் காந்தி

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு ஒரு தெளிவற்ற நிலைதான், இவர் காரணம் அவர் காரணம் என்று சொல்லிகொண்டே போகலாம் .மிக மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் ...யார் இல்லையென்றால் ராஜிவ் காந்தி படுகொலை நடந்திருக்காது என்ற கேள்விக்கு உண்டான பதில் விடுதலை புலிகளாவே இருக்கின்றனர்.
இதை விடுதலை புலிகளும் எங்கும் எப்போதும் மறுக்கவில்லை.
நமக்கு ஒருவரை பிடித்திருக்கோ இல்லையோ ... எந்த நாடும் தன் முன்னாள் பிரதமரை (மீண்டும் ஆகப்போகும் பிரதமரை) ஓர் இயக்கம் படுகொலை செய்தால் ஒருபோது அந்த இயக்கத்தை விட்டுவைக்காது. அதுவும் மற்ற நாட்டின் இயக்கம் கொன்றுவிட்டால் அதற்கு பதிலடி கொடுத்தே தீரும் ...
எப்போது ராஜிவ் படுகொலை நடந்ததோ அன்றிலிருந்து ஈழ விடுதலையின் தோல்வி தொடங்கியது ...
விடுதலை புலிகள் இந்தியாவின் உதவிகிடைக்காமல் இருந்தால் கூட வென்றிருக்கலாம் மாறாக மிகவும் முட்டாள்தனமாக பகைத்து கொண்டார்கள் ...அது போரில் எவ்வளவு பெரிய பாதமாக அமையும் என்று கூடவா தெரியாது ? இதனால் மற்ற நாடுகள் விடுதலை புலிகளுக்கு உதவும் வாய்ப்பும் பறிபோனது ...ஏனினில் அவர்களை பொறுத்தவரை விடுதலை புலிகளுக்கு ஆதரவு என்பது ராஜிவ் படுகொலையை ஆதரிப்பது போன்றது, அந்த தவறை அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டர்கள் ...அது தான் நடக்கவும் செய்தது ..எந்த நாட்டின் உதவி இல்லாமல் எப்படி ஓர் உள்நாட்டின் போரை வெல்ல முடியும் ? அதுவும் தன் பக்கத்தில் இருக்கும் பெரிய நாட்டை பகைத்துக்கொண்டு ?
மீண்டும் சொல்கிறேன் ..
யார் இல்லையென்றால் ராஜிவ் காந்தி படுகொலை நடந்திருக்காது என்ற கேள்விக்கு உண்டான பதில் விடுதலை புலிகளாவே இருக்கின்றனர்.
இதை விடுதலை புலிகளும் எங்கும் எப்போதும் மறுக்கவில்லை.
நமக்கு ஒருவரை பிடித்திருக்கோ இல்லையோ ... எந்த நாடும் தன் முன்னாள் பிரதமரை (மீண்டும் ஆகப்போகும் பிரதமரை) ஓர் இயக்கம் படுகொலை செய்தால் ஒருபோது அந்த இயக்கத்தை விட்டுவைக்காது. அதுவும் மற்ற நாட்டின் இயக்கம் கொன்றுவிட்டால் அதற்கு பதிலடி கொடுத்தே தீரும் ...
எப்போது ராஜிவ் படுகொலை நடந்ததோ அன்றிலிருந்து ஈழ விடுதலையின் தோல்வி தொடங்கியது ...

விடுதலைப்புலிகள் & கலைஞர்

1.
காதல் மனைவி செய்த துரோகத்தை வெளியே சொல்லமுடியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்குகிறவனை போலத்தான் விடுதலைப்புலிகள் செய்த தவறுகளைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தோம். பருத்திவீரன் படத்தில் இறக்கும் தருவாயில் பிரியாமணி ஒரு வசனம் சொல்வார். "நீ செஞ்ச எல்லா பாவத்தையும் எம்மேல வந்து இறக்கிட்டாங்கடா வீரா! " என. அதுபோல எல்லா தவறுகளையும் கலைஞர் மீது சாட்டி பேசாமடந்தையாக இருந்த எங்களையும் பேசவைக்கிறார்கள் .
இந்த எளிமையான கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு விவாதத்தை தொடரலாம் வாருங்கள் :
1. நார்வே அமைதி ஒப்பந்த காலத்தில் ஆன்டன் பாலசிங்கத்துக்குத் தெரியாமல் ஆயுதங்களை குவித்தது யார்? அதன்காரணமாக சர்வதேச அமைப்பு முன்பாக பாலசிங்கம் தவறு செய்தது போல நிற்க வைக்கப்பட்டாரே ஏன்?
2. ரணில் விக்ரமசிங்கே தோற்கடிக்கப்பட்டு ராஜ பக்சே வெற்றி பெற்றது எப்படி?
3. அமைதி ஒப்பந்தத்தை மீறி போரைத் துவக்கியது யார்?
4. போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க மறுத்து போரை நிறுத்த மறுத்தது யார்?
5. கடைசியாக அப்பாவி தமிழர்களை மனித கேடயமாக பயன்படுத்தியது யார்?

2.
சில ஆண்டுகளுக்கு முன்பு நூற்றில் எண்பது திமுகவினருக்கு பிரபாகரன் மீது ஒருவித மதிப்பும், ஈர்ப்பும் இருந்தது.
இறுதி யுத்தத்தின் போதும், அதன்பின்பும் கூட அந்த நிலை தொடர்ந்திருந்தது. ஆனால் எப்போது இந்த தமிழ் தேசியவாதிகள் ஜெயலலிதாவிற்காக திமுகவையும், கலைஞரையும் ஈழத்துரோகிகள் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்களோ அப்போதிலிருந்தே இந்த எண்பது திமுகவினரில் பலரும் பிரபாகரன் மீதும், புலிகள் மீதும் விமர்சனங்களை வைக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் இப்படி பிரபாகரனை விமர்சிப்பதில் தயக்கமும், உறுத்தலும் கொண்டிருந்த திமுகவினரை உசுப்பிவிடும் வகையில் இந்த தமிழ்தேசியவாதிகள் கலைஞர் மீதும், திமுக மீதும் தொடர்ந்து அவதுறான, அசிங்கமான பரப்புரையை மேற்கொண்டனர்.
இந்த நிலைக்கண்டு இனியும் பொறுக்க முடியாது என்று அந்த எண்பது திமுகவினரில் இன்று எழுவது பேர் பிரபாகரனை மிகக்கடுமையாக விமர்சிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றாற் போல புலிகள் மீதும், பிரபாகரன் மீதும் நிறைய குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக தென்படுகிறது. இதில் என்ன கொடுமை எனில் இன்று பிரபாகரன் மீது இத்தகைய கரும்புள்ளிகளும், கடும் விமர்சனங்களும் வைக்கப்பட காரணமாயிருந்த தமிழ்தேசியவாதிகள் எவரும் பிரபாகரன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை களைக்க முற்படுவதில்லை. மாறாக இன்னும் கலைஞரையும், திமுகவையுமே திட்டிக்கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனுக்காக அவர்கள் கவலை பட்டதாகவோ, பரிதாபப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆனால் இன்றும் பிரபாகரனை ஒரு போராளியாக பாவித்து, அவர் மீதான விமர்சனத்திற்காக பரிதாபப்படுபவர்கள், அனுதாபப்படுபவர்கள் யாரென்று பார்த்தால் அது அந்த எண்பதில் மீதமிருக்கும் பத்து திமுகவினரே.
இந்த பத்தும் இனிவரும் காலங்களில் கண்டிப்பாக குறைந்து சுழியாகும், காரணம் நமது தமிழ்தேசிய பிள்ளைகளின் சுழி அப்படி.
எப்படியோ, பிரபாகரனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

3.
கலைஞரின் உண்ணாவிரத்திற்கு பிறகு சீஸ்ஃபயர் அறிவிப்பு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து இலங்கை அரசு அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியைக் காட்டுகிறார். காலை 7 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்தை 2 மணியளவில் முடிக்கிறார் கலைஞர்.
ஆனால் அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் போர் துவங்கியது எப்படி??
கலைஞரின் உண்ணாவிரதத்திற்கு அடுத்த தினத்திற்கு அடுத்த தினம் புலிகளின் அரசியல் ஆலோசகராய் அப்போது இருந்த திரு.நடேசன் "நாங்கள் செய்வது பின் வாங்கும் தந்திரோபாயம்! கருணாநிதி எங்கள் வெற்றியை மழுங்கச் செய்கிறார் என்று அறிக்கை வெளியிட்டார். "இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துவிடும், பிஜேபி நிச்சயம் வெல்லும். அதுவரை தாக்குப் பிடியுங்கள்" என்று தமிழக அரசியல்வாதிகள் குடுத்த யோசனையைக் கேட்டே புலிகள் போரை நீடித்ததாக நார்வே குடுத்த அறிக்கை இப்போதும் இணையத்தில் இருக்கிறது!
போர் நிறுத்தம் என்றால் இரு தரப்பும் நிறுத்த வேண்டும். ஒருவர் மட்டும் நிறுத்தி மறு தரப்பு நிறுத்தாமல் அடிப்பதற்கு பெயர் போர் நிறுத்தம் அல்ல.
கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். அறிவிப்பு வந்தது. ஆனால் நாங்கள் தொடருவோம் என்று சொன்னவர்கள் யார்????????????
அன்றைக்கு மொத்த மீடியாவும் திமுகவுக்கு எதிராக இருந்த நிலையில் பல செய்திகள் மக்களிடம் மறைக்கப்பட்டது. சமூக வலைதளத்தின் வீச்சும் இந்த அளவிற்கு இல்லை அப்போது.
ஆனால் அதையும் மீறி மக்களிடம் சொல்ல ஒரு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்து அநியாயமாகக் கோட்டை விட்டார். எப்படி?
"போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று சொன்ன பிறகும் போர் நடக்கிறதே?" என்று கலைஞரிடம் கேட்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். பெரிய இலக்கியத் தரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு இந்த மனுசனும் " மழை விட்டும் ( அதாவது இலங்கை நிறுத்தியும்) தூவானம் விடவில்லை ( புலிகள் விடவில்லை) என்றார். இதற்கு பதிலாக நேரடியாக " இலங்கை நிறுத்திருச்சு. அவங்க நிறுத்தலையே! என்னைய என்ன பண்ண சொல்றீங்கன்னு? பாமரத்தனமாகக் கேட்டு இருந்தால் அது மக்களுக்கு எளிதில் புரியும் செய்தியாகி இருக்கும். இலக்கிய வாயால் அதைக் கோட்டை விட்டார் தலைவர் கலைஞர். இந்த விசயத்தில் எனக்கு அவர் மேல் தீராத கோபம் உண்டு.
இனி புலிகளின் கதையும், ஈழமும் மொத்தமாய் முடிந்தது என்பதை உணர்ந்த ஜெயலலிதா...தன் வாழ்நாள் முழுவதும் புலிகளை ஈழத்தை எதிர்த்த ஜெயலலிதா போர் முடிவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தனி ஈழமே தீர்வு என்று..நடக்காது என்று உறுதியாகத் தெரிந்த விசயத்திற்கு பல்டி அடித்து பேசி ஈழத்தாய் ஆனார். கலைஞர் துரோகியானார்.
இன்றைக்கு புலிகள் வாழ்க ஈழம் வாழ்க என்று யார் வேண்டுமானாலும் பேசலாம். ஈழம் என்று வாயை அசைத்தாலே பொடாவிலும் தடாவிலும் தள்ளிய அன்றைய நேரத்தில் பிரபாகரன் வாழ்க தமிழ் ஈழம் வெல்க என்று எழுதிய யுவகிருஷ்ணாக்களும் அப்துல்லாக்களும் நரேன்களும் இன்று திடீர் குபீர் டாலர் வசூல் போராளிகளுக்கு இன்று தமிழின விரோதியாகிப் போனோம். மகிழ்ச்சி :(

புலிகள் 2

ஈழவிவகாரத்தை இந்திரா கையில் எடுத்ததும் முதலில் வரவேற்றது கலைஞர், அமிர்தலிங்கம் சென்னை வந்தபொழுது முதலில் வரவேற்க சென்றதும் அவரே
அதுவரை தமிழகத்தில் ஈழ அபிமானம் ஏதுமில்லை, 1964ல் மலையக மக்கள் திருப்பி அனுப்பபடும்பொழுது சிறிய சலசலப்பு மட்டும்தான் இருந்தது
கலைஞர்தான் ஈழவிவகாரங்களுக்கு தமிழகத்தில் உயிர்கொடுத்தார், விடுவாரா ராமசந்திரன்? அவர் உள்ளே குதித்ததுதான் பிரச்சினையின் மூலம்
கலைஞர் மூளைக்காரர், ஆழ்ந்து சிந்திப்பவர். தமிழகம் என்றுமே டெல்லிக்கு ஆகாது, மாநில கட்சி அதுவும் முன்பு பிரிவினை பேசிய கட்சி இன்னொரு நாட்டு பிரிவினையினை பேசுவது பெரும் ஆபத்தில் முடியும் என கணித்தார்
அது மகா உண்மையும் கூட பின்னாளில் வைகோ அனாதை ஆனது அப்படித்தான், 2009ல் புலிகள் அடிபட்டு சாக இந்தியா அமைதியாக இருந்ததும் அப்படித்தான்
அதனால் அகில இந்திய அளவில் ஈழபிரச்சினை எதிரொலிக்காமல் தீர்வில்லை என்றுதான் அன்று டெசோ அமைப்பினை வாஜ்பாய், பரூக் அப்துல்லா, பட்நாயக் என அகில இந்திய தலைவர்களை வைத்து அசத்தினார்
"இலங்கை தமிழரை தொட்டால், இந்தியா முழுக்க அதிரும்" என அவர் ராஜதந்திரமாக மிரட்டி நின்றார்
நிச்சயம் மிக அறிவார்ந்த காய்நகர்த்தல் இது, எம்ஜிஆருக்கு இப்படிபட்ட தந்திரம் எல்லாம் இல்லை, ஆனால் அவர் கையில் பிரபாகரன் கிடைத்தான்
இந்திரா ஈழபிரச்சினையினை கையாண்டது வெறும் 1 வருடமே, போராளிகளுக்கு பயிற்சி ஆரம்பிக்கும்பொழுதே இவர்கள் நச்சுபாம்புகள் என அவருக்கு தெரிந்தது, ஆனாலும் ஜெயவர்த்தனேவுக்கு ஆட்டம் காட்டினார்
சென்னையில் சிக்கிய பிரபாகரனை அவர்தான் காத்தார், இந்திரா செய்தது அந்த பெரும் தவறு
ராஜிவிற்கும் பிரபாகரனுக்கும் உரசல் இருந்தது, அதே நேரம் ஜெயாவினை வளர்க்கின்றார் என ராஜிவிற்கும் எம்ஜிஆருக்கும் உரசல் இருந்தது, நீ ஜெயாவினை வளர்த்தால் நான் உன் எதிரி பிரபாகரனை வளர்ப்பேன் என வரிந்து கட்டினார் எம்ஜிஆர்
இங்கு ஒரு கேள்வி எழும்? ஒரு மாநில முதல்வர் அந்நிய நாட்டு தீவிரவாதிக்கு உதவுகின்றார், அந்த அரசை டிஸ்மிஸ் செய்தால் என்ன? செய்திருக்கலாம், ராஜிவ் செய்யவில்லை
வாழ்வில் பல போராட்டங்களை நடத்தியவர் கலைஞர், ராஜ தந்திரமாக அற்புதமாக ஈழ ஆதரவாக‌ இந்தியாவினை திரட்டினார்
ஆனால் சகலத்தையும் கெடுத்தே பழக்கபட்ட ராமசந்திரன், புலிகளை வளர்த்துவிட்டு எல்லாவற்றையும் பாழாக்கினார்
கலைஞரின் டெசோவில் பிரபாகரன் தவிர்த்த ஈழ இயக்கம் கலந்து கொண்டது, அன்றே வெறிபிடித்தது புலிகளுக்கு
எல்லா இயக்கங்களை அழித்தார்கள், கலைஞர் சொல்லிபார்த்தார் "பழம் கிடைக்கட்டும் அதன் பின் சுளைகளை பங்கிடுங்கள்" என்றார், புலிகள் கேட்கவில்லை
"கெஞ்சி கேட்கின்றேன், ஈழதிசை நோக்கி கதறி கேட்கின்றேன் புலிகள் சபாரத்தினத்தை கொல்லவேண்டாம்..." என அவர் மன்றாடி நின்றபொழுது கொஞ்சம் கூட புலிகள் சட்டை செய்யவில்லை,
கலைஞரை மனிதனாக கூட நினைக்கவில்லை
வெறுப்புற்ற கலைஞர் டெசோவினை கலைத்துவிட்டு அமைதியானார், இப்பொழுது காட்சியில் வென்றது எம்ஜிஆரும் புலிகளும்
அப்பொழுதும் புலிகளை அவர் முழுக்க கைவிட்டுவிடவில்லை
அமைதிபடையினை ராஜிவ் அனுப்பும் பொழுது எம்ஜிஆர் தடுக்கவில்லை, மாறாக கலைஞர்தான் இது ஈழம் அடைவதை தடுக்கும் முயற்சி என மறுத்தார், அமைதிபடையினை எதிர்த்த முதல் தமிழர் கலைஞர்தான்
எம்ஜிஆர் சத்தமே இல்லை, அத்தோடு மறைந்தும் போனார்
மணலாற்றில் இந்திய படையினரால் வளைக்கபட்டிருந்தார் பிரபாகரன்,
ஒரு நாள் அவகாசமிருந்தால் இந்திய படை பிடித்து நசுக்கியிருக்கும்,
கிட்டதட்ட சோலி முடிந்த நிலை
அப்பொழுதுதான் விபிசிங்கிடம் மன்றாடி அமைதிபடையினை திரும்ப பெற்றார் கலைஞர்
பிரபாகரனின் உயிர் அவரால்தான் அன்று காப்பாற்றபட்டது, இதனை வரலாற்றில் எவன் மறுக்க முடியும்?
15 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தார் கலைஞர், அவரின் நெடிய போராட்டம் கழிந்து அப்பொழுதுதான் மூச்சுவிட்டார், புலிகள் அவர் ஆட்சியில் தமிழகத்தை வலம் வந்தனர்
அங்கோ இந்திய ராணுவத்துடனான மோதல், இந்தியாவிலே அடைக்கலம் எனும் அளவிற்கு புலிகளின் ஆதரவு இருந்தது, கலைஞர் அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருந்தார்
அப்பொழுதுதான் பத்மநாபா படுகொலை சம்பவம் நடந்து கலைஞர் ஆட்சி கலைக்கபட்டது, நொந்து போனார் கலைஞர், இவர்களை நாம் தான் அனுமதித்தோம், நம் ஆட்சிக்கே உலையா?
அடுத்த பேரிடியாக ராஜிவ் கொலை, அகில இந்தியாவும் அலறிற்று திமுகவினர் தாக்கபட்டார்கள், ஓடவிரட்டபட்டார்கள், தேர்தலில் திமுக 1 இடத்தில்தான் வென்றது
திமுக விசாரணை வளையத்தில் வந்தது, கலைஞர் திகைத்தார், கட்சி முடக்கும் அளவு சிக்கல், கலைஞர் கூட்டம் ரத்து ஏன் என ஏக கேள்விகள்
ஆனால் அன்று ராஜிவுடன் கூட்டணியான அதிமுகவின் ஜெயா ஏன் அந்த மேடைக்கு வரவில்லை என யாரும் விசாரிக்கவில்லை, பிராமண பாசம் அப்படி
தப்பி பிழைத்தது திமுக, பத்மநாபா கொலைக்குபின் புலிகளுடனான எல்லா தொடர்பையும் கலைஞர் முறித்ததால் திமுக ராஜிவ் கொலையில் பெரிதாக சிக்கவில்லை, அதன் பின்னும் விடா பிடியாக இருந்த வைகோவினை விரட்டினார்
ஈழதலைவன் என்றும், மிகபெரும் சிந்தனையாளன், பெரும் அரசியல்வாதி என இந்திராவாலும்,ராஜிவாலும் , வாஜ்பாயினாலும் அறிபட்டிருந்த அமிர்தலிங்கத்தின் கொலை கலைஞரை மனம் நோக செய்தது
ஈழம் அமைந்திருந்தால் அமிர்தலிங்கம்தான் ஜனநாயக அதிபராகியிருக்கவேண்டும் என்றால் அந்த கொலையின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என சொல்லி தெரியவேண்டியதில்லை
சர்வாதிகாரத்தின் உச்சியில் இருந்து எல்லோரையும் கொல்வோம், அதன் பெயர் போராட்டம் என சொன்னால் அறிவில்லாத வைகோ ஏற்கலாம், கலைஞர் ஏற்பாரா?
பின் வைகோ தனிகட்சி கண்டார், ஒன்றுமில்லாத வைகோ தமிழகத்தை மிரட்டும்படி பிரமாண்ட செலவு செய்ய பணம் எங்கிருந்து வந்தது என யாருக்கும் தெரியாது
அதன் பின் கலைஞர் ஈழவிவகாரங்களில் இருந்து ஒதுங்கினார், 1998, 2002 எல்லாம் புலிகளின் வெற்றி காலங்கள், யாரும் கலைஞரை தேடவும் இல்லை, அப்படி ஒரு மனிதர் இருப்பதாக நினைக்கவுமில்லை
பிரேமதசாவுடன் நட்பு கொண்டு பின் அவரையே கொன்றதை சிங்களம் மறக்கவில்லை, ஆனால் பிரபாகரன் அபபடி மகிந்தவுடன் நெருங்கினார், மகிந்த ராஜபக்சேவினை அதிபராக்கியது நிச்சயம் பிரபாகரனே
ஆட்சிக்கு வந்தார் மகிந்தா, அவரும் பிரேமதாச சாயலே, பல சக்திகள் உலகளாவிய தீவிரவாதத்திற்கு எதிராக திரண்டன‌ அழகாக பயன்படுத்தினார் ராஜபக்சே
புலிகளுக்கோ கடல்மீன்கள் கூட நண்பர்கள் இல்லை, புலி ஆதரவு என ஒருகுரலுமில்லை
ஆனானபட்ட யாசர் அராபத்தே போராட்டத்தை கைவிட்டு சுயாட்சிக்கு திரும்பிய நேரம் அது, பிரபாகரனை உலகம் விடுமா? இவ்வளவிற்கும் அராபத் மீது அமெரிக்க அதிபரை கொன்ற வழக்கு கூட கிடையாது
நார்வே குழு மூலம் பேசிபார்த்தார்கள், ஆண்டன் பாலசிங்கமே அலறிவிட்டு ஓடினார், புலிகளின் இறுமாப்பு அப்படி இருந்தது,
அமெரிக்க தூதர் பகிரங்கமாக எச்சரித்தார் "இனி யுத்தம் வருமாயின் புலிகள் பெரும் படுதோல்வியினை சந்திப்பர், அவர்கள் இருப்பே நிர்மூலமாகும்"
ஆனால் விதி புலிகளை திருந்த விடவில்லை, 2006ல் யுத்தம் தொடங்கிற்று, புலிகளின் பாசாங்கு யுத்தம் வெல்லவில்லை
காரணம் கருணாவின் பிரிவு அப்படி, கருணா சமாதானம் பேசினார், மாத்தையாவின் முடிவு உனக்கும் வரலாம் என சிலர் எச்சரிக்க தந்திரமாக விலகினான் கருணா, சும்மா விலகவில்லை தன் படைகளோடு விலகினான், உயிர்காக்க சிங்களனிடம் சேர்ந்தான்
அன்று பிரேமதாசாவுடன் கிட்டுவும் பாலசிங்கமும் பேசலாம், பின் ராஜபக்சேவும் கருணாவும் பேசகூடாதா?
அதுவும் விமானங்களில் சென்று ஒரு தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்துவதை உலக நாடுகள் அனுமதிககாது, காரணம் இன்னொரு தீவிரவாத இயக்கம் அதனை நொடியில் பெற்றுகொள்ளும், இம்மாதிரி பல விஷயங்களில் புலிகளுக்கு கட்டம் கட்டபட்டது
அமெரிக்கா புலிகளின் 11 கப்பல்களை காட்டி கொடுத்தது, ஐரோப்பா புலிகளின் வங்கி கணக்கை மூடியது, உலகமே திரண்டது புலிகள் முடிந்துகொண்டிருந்தனர்
இப்பொழுது கலைஞரை வம்புக்கு இழுத்தனர், நீ புலிகளை காப்பாற்றவில்லை என்றால் துரோகி என மண்வாரி தூற்றினர், இந்த மண்ணில் முளைத்தவர்தான் சீமான்
இந்தியாவும் புலிகள் அழியவேண்டும் என நினைத்தநாடல்ல, அப்படி நினைத்தால் 1995ல் சந்திரிகாவோடு சேர்ந்து நசுக்கியிருப்பார்கள், இலங்கையின் எங்கோ ஒரு மூலையில் இலங்கை அரசுக்கு எதிரான முணகல் இந்தியாவிற்கு வேண்டும்
இந்த தைரியத்தில்தான் ராஜிவ் கொலையினை சாதாரணமாக நினைத்தனர் புலிகள்
ஆனால் 2009ல் உலகம் ஒன்றாய் கூடியது, இந்தியாவிற்கும் வேறு வழியில்லை, இலங்கையில் புலிகளை காத்துவிட்டு பாகிஸ்தானிடம் காஷ்மீரில் தலையிடாதே என எந்த முகத்தை வைத்து சொல்லமுடியும்
அப்பொழுதும் சிதம்பரம் தலையிட்டார், ப.சிதம்பரமும் பிரபாகரனும் 1980களில் பழகியவர்கள். பிரபாகரன் தமிழகத்தில் தங்கி இருந்தபொழுது சிதம்பரத்தின் கண்காணிப்பில்தான் இருந்தார்
ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிய பிரபாகரன் அதன் பின் இந்தியா வரவே இல்லை , காரணம் அவரை தமிழக போலிஸ் கண்காணிப்பது அவருக்கு பிடிக்கவில்லையாம்
அப்படி அன்றே அவமானபட்ட சிதம்பரம் 2009ல் யுத்தம் நிறுத்த வழி ஒன்றே ஒன்றுதான் அது இந்தியா 1987ல் செய்தபடி மாநில அரசை அமைத்தல் யுத்தம் நிறுத்துதல் என்ற ஒப்பந்தம், புலிகள் ஆயுதங்களை கைவிட சொல்லும் ஒப்பந்தம்
அதற்கு மேல் இந்தியா இறங்கிவரவில்லை, இதுதான் முடிவு இதற்கு ஒப்புகொண்டால் பேசலாம் என்றது, 1987ல் இருந்த நிலையில்தான் இந்தியா 2009லும் இருந்தது
கலைஞரும் அதனையே வற்புறுத்தினார்
விடுவாரா வைகோ? 2009ல் ஆட்சி மாறும் என்றும், பாஜக ஆட்சி வந்தவுடன் ஈழம் கிடைக்கும் என்றேல்லாம் சொல்லி அவரை உசுப்பேத்திவிட்டார்கள்
அரசியலில் மிக அப்பாவியும், தீவிரவாதத்தில் மூர்க்கனுமான பிரபாகரன் அதை நம்பினார், சிதம்பரம் சொன்ன யோசனைகளை புறங்கையால் தள்ளினார்
இந்தியா அதிகார மட்டத்தில் வேறு மாதிரி யோசித்தார்கள், என்ன இது? பலமுறை புலிகள் தோற்றார்கள், மக்கள் நடுவில் அமர்ந்தார்கள், மக்களை கொல்கின்ரார்கள் என அலறினார்கள்
நாம் சென்று மக்களை காப்பாற்றினால் இவர்கள் தப்பிப்பார்கள், தப்பித்து?
மறுபடி அதே சண்டை, அதே அலறல், நாம் சென்று காப்பாற்றிவிட்டால் அதே விளையாட்டு, சில நேரம் நம் மீதே அடி, இவர்களை காப்பாற்றினால் இந்த விளையாட்டு இன்னும் 30 ஆண்டுகள் நீடிக்கும், இன்னும் ஆயிரகணக்கானோர் செத்துகொண்டேதான் இருப்பார்கள்
புலிகள் சமாதான‌ முடிவுக்கு வந்தால் ஏதும் செய்யலாம், இல்லாவிட்டால் ஒழியட்டும்
புலிகள் முடிவிற்கு வரவுமில்லை, இந்திய யோசனையினை, நார்வே யோசனையினை கேட்கவுமில்லை
ப.சிதம்பரம், பண்ருட்டி ராமசந்திரன் என பிரபாகரனோடு பழகிய பலர் தமிழகத்தில் உண்டு, அவர்கள் எல்லாம் சத்தமே இல்லை, காரணம் புலிகளை பற்றி அவர்களுக்கு தெரியும்
மாறாக கத்துவதெல்லாம் யார் என்றால் பிரபாகரனை சரியாக கூட பார்க்காதவர்கள், புலிகளிடம் வாங்கியவர்கள், வைகோ போல என்ன பைத்தியங்கள்
உண்மை தெரிந்தவர் எல்லாம் அமைதியாக இருக்க, ஒன்றுமே தெரியாதவர் உளறல்தான் கலைஞர் ஒழிக, காங்கிரஸ் ஒழிக‌
இப்பொழுது வடகொரிய பிரச்சினையினை தமிழக முதல்வர் தீர்க்க முடியுமா? முடியாது. ஈழ இறுதிபோரும் அபபடியே , அது பெரும் கைகளால் நடத்தபட்டது
கலைஞர் தன்னால் முடிந்த மட்டும் ஈழபோராட்டத்திற்கு எல்லா உதவியும் செய்தார், அவர் கை நீட்ட நட்புக்கு அழைத்த பொழுது தட்டிவிட்டவர்கள், அவர் கும்பிட்டு கேட்ட பொழுது கையினை முறித்தவர்கள்தான் புலிகள்
கலைஞர் சொற்படி கேட்டிருந்தால் என்றோ இலங்கையில் அமைதி நிலவியிருக்கும், இத்தனை பேரழிவுகள் நடந்திருக்காது,
ஈழசிக்கலில் எந்த பக்கம் பார்த்தாலும் தெரியும் கல்வெட்டு அது
உடன் போராட வந்தவனை கொன்றது புலிகள், ஆதரவான இந்தியாவினை விரட்டியது புலிகள், சமாதானம் பேச வந்தவனை கொன்றுபோட்டதும் புலிகள்
உலகில் எந்த சக்திக்கும் கட்டுபட மாட்டோம், எங்களுக்கு நார்வே, அமெரிக்கா வேண்டாம். எத்தியோப்பியா, எரித்திர்யா ஆதரவு போதும் என சிந்தித்ததும் புலிகள்
செய்த தவறெல்லாம் அவர்களுடையது
சபாரத்தினம்,பத்மநாபா, அமிர்தலிங்கம், ராஜிவ் என எல்லோரையும் கலைஞரை கேட்டுவிட்டா கொன்றார்கள்? கலைஞரை கேட்டுவிட்டா மகிந்தவினை முதல்வராக்கினார்கள்?
கலைஞரை கேட்டுவிட்டா வைகோவினை தலைவராக்கினார்கள்?
அவரை ஒரு மனிதனாக கூட சிந்திக்கமாட்டார்களாம், ஆனால் அவர்களுக்கு ஒன்று என்றால் கலைஞர் செத்து காத்திருக்கவேண்டுமாம்
அப்படிபட்ட அவசியம் கலைஞருக்கு ஏன் வரவேண்டும்?
கலைஞரை மீறி சென்ற புலிகள் என்ன கிழித்துவிட்டார்கள், அல்லது திமுகவிற்குத்தான் என்ன குறைந்துவிட்டது?
இன்றும் வலுவான எதிர்கட்சி திமுக, இன்று தேர்தல் வைத்தாலும் வலுவான ஆளும் கட்சி திமுக‌
ஆக கலைஞருக்கு ஒன்றுமே இழப்பில்லை, இந்த வயிற்றெரிச்சலில்தான் கத்திகொண்டே இருக்கின்றார்கள்
அதற்காக அவர் ஒரு காலத்தில் செய்த ஈழ உதவிகளை மறப்பது எவ்வகையிலும் நியாயமாகாது..
பிரபாகரன் மட்டும்தான் போராளி என்றும், அவரை காக்காதவர்கள் எல்லாம் துரோகிகள் என சொல்வார்கள் என்றால் அது பைத்தியகாரதனம்
அப்படித்தான் பல பைத்தியங்கள் உருண்டு புரண்டு அழுதுகொண்டிருக்கின்றன‌

புலிகளால் கொல்லபட்ட தமிழர்கள்

முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்காக அழுகின்றார்களாம், புலிகளுக்காக அழுகின்றார்களாம் அழுங்கள்
நாங்களும் ஏராளமான தமிழருக்காக அழுகின்றோம்
ஆல்பர்ட் துரையப்பா எனும் யாழ்பாண முன்னாள் மேயருக்காக, செல்லகிளி எனும் புலியின் மர்ம மரணத்திற்காக, மைக்கேல், பற்குணம் போன்ற ஆரம்பகால தமிழர்களுக்காக‌
கொஞ்சம் பொறுத்திருந்தால் சிறை தப்பியிருக்கும் குட்டிமணி கோஷ்டிக்கு வாய்பளிக்காமல் அவசரமாக புலிகளால் நடந்த கண்ணிவெடி தாக்குதலும், அதனை தொடர்ந்த கொழும்பு கலவரத்தில் செத்தவர்களுக்காக அதனை தொடர்ந்து வெலிக்கட சிறையில் கொல்லபட்ட குட்டிமணி கோஷ்டிக்காக..
புலிகளால் கொல்லபட்ட பஸ்தியான் பிள்ளை போன்ற இலங்கை தமிழ் காவல் அதிகாரிகளுக்காக..
புலிகளின் வங்கி, அடகுகடை முயற்சியில் கொல்லபட்ட தமிழர்களுக்காக‌
வெடிகுண்டு சோதனைகளில் புலிகளால் கொல்லபட்ட தமிழருக்காக‌
புலிகளால் கொல்லபட்ட ராஜினி முதல் ஏராளமான சிந்தனைவாதி தமிழர்களுக்காக..
புலிகளின் கந்தன் கருணை இல்லத்தில் கொல்லபட்ட 80 தமிழ் போராளிகளுக்காக‌
புலிகளால் கொல்லபட்ட சபாரத்தினம் அவரின் படையில் இருந்த ஆயிரம் தமிழருக்காக, ஆமாம் ஆயிரம் தமிழர்கள் அன்று புலிகளாலே கொல்லபட்டனர்
புலிகளால் கொல்லபட்ட மாற்று இயக்க தமிழர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும் அந்த தமிழருக்காக‌
புலிகளால் கொல்லபட்ட மெண்டிஸ் போன்ற போராளிகளுக்காக....
துணுக்காய் போன்ற புலிகளின் வதைமுகாமில் சித்திரவதை செய்து கொல்லபட்ட ஏராளமான தமிழருக்காக..
ஈழ தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் என்ன உறவு? மொழி உறவாம். ஆனால் இலங்கை இஸ்லாமிய தமிழருக்கும் ஈழதமிழருக்கும் மொழி ஒன்றாயினும் உறவே இல்லையாம், அந்த புலிகளால் மசூதியில் கொல்லபட்ட 200 இஸ்லாமிய தமிழருக்காக‌
புலிகளால் சென்னையில் கொல்லபட்ட பத்மநாபாவிற்காக, அவரோடு செத்த 14 தமிழருக்காக, அப்பொழுது சிவராசனால் கொல்லபட்ட ஒரு தமிழக காவலுனுக்காக‌
கொழும்பில் கொல்லபட்ட அமிர்தலிங்கம் எனும் தமிழ் தலைவனுக்காக. இன்னும் 2005 வரை கொல்லபட்ட லஷ்மன் கதிர்காகர் போன்ற தமிழருக்காக‌
ராஜிவ்காந்தியுடன் சென்னையில் கொல்லபட்ட 16 தமிழருக்காக‌
வஞ்சகமாக பேரரிவாளனையும், நளினியினையும் சிக்க வைத்துவிட்டு இறுதிவரை வாய்திறக்காத புலிகளின் வஞ்சகத்திற்காக, கிட்டதட்ட இதுவும் கொலையே
புலிகள் இயக்கத்தில் இருந்த மாத்தையா என்பவரை 500 தமிழர்களுடன் சுட்டு கொன்றார்கள் அல்லவா? அந்த கொலைகளுக்காக‌
கருணா பிரிவு போராளிகள் 400 பேரை வெருகல்லில் கொன்ற கொலைக்காக‌
பள்ளி தமிழ் சிறுவர் சிறுமியரை பிடித்து அவர்களை போர்முனைக்கு அனுப்பி கொன்றார்கள் அல்லவா? அந்த அழிவிற்காக‌
3 தமிழ் தலைமுறை கல்வி, வாழ்வு என சகலமும் புலிகளால் அழிந்திருக்கின்றதல்லவா அதற்காக ....
2009ல் மக்களை விடுங்கள் என உலக நாடுகள் கேட்டும் சுட்டிம் அடித்தும் தங்களோடு வைத்திருந்தார்கள் அல்லவா? அந்த கொடூரத்திற்காக‌
அந்த தமிழர்களை எல்லாம் நினைத்து அழுகின்றோம்
பிரபாகரனுக்கு தன் குண்டுதுளைக்காத பிரத்யோக சட்டையினையும், கை நிறைய பணமும் கொடுத்து அனுப்பிய ராஜிவ் காந்தி
முதலில் பிரபாகரனை நம்பி, பின் இவர் மக்கள் போராளியே அல்ல என முதலில் சொன்ன ராஜிவ்காந்தி சொன்னதும், பின்னாளில் பிரபாகரனுடன் பேசிவிட்டு அலறி அடித்து ஓடிய
நார்வே தூதர் எரிக் சோல்ஹிம் சொன்னதும் தான் மகா உண்மை
"பிரபாகரன் தன் உயிருக்கு அஞ்சுகின்றார், துப்பாக்கியினை கீழே வைத்தால் மறுநிமிடம் கொல்லபடுவோம் என சந்தேகிக்கின்றார்
அந்த பயம் இருக்கும் வரை அவர் எதனைபற்றியும், யாரைபற்றியும் கவலைபட மாட்டார், அவர் இருக்கும் வரை அழிவுகள் தொடர்ந்தே இருக்கும்"
இறுதியாக அதுதான் பலித்தது, அந்த அழிவு பல்லாயிர கணக்கான மக்களோடு நிகழ்ந்ததுதான் சோகம்
கொழும்பிலும், வடமராச்சியிலும் களம்புகுந்து தன் கையினை சுட்டுகொண்ட இந்தியா அதன் பின் ஒதுங்கியது, அதாவது ஆரம்பத்திலே இந்திய தலையீடு இல்லையென்றால் 1980களிலே முடிந்திருக்க வேண்டிய பிரச்சினை, 2009 வரை நீடித்திருக்காது
2009 வரை பிரபாகரன் வாழ ஒரே காரணம் இந்தியா, ராமன் ராவணனுக்கு கொடுத்தது போல, கண்ணன் துரியோதனனுக்கு கொடுத்தது போல பல வாய்ப்புகளை இந்தியா கொடுத்தும் புலிகள் ஏற்கவே இல்லை
சிங்கள தளபதி சொன்னது போல "இந்திரா, ராஜிவ் தலையீடு மட்டும் இல்லையென்றால் 1980களிலே எமது நாடு அமைதியாயிருக்கும், 2009 வரை இழுத்த காரணமே இந்தியாதான்"
எல்லாம் முடிந்துவிட்டது
பலர் புலிகள், முள்ளிவாய்க்கால் என அழுது இந்தியாவிற்கும், கலைஞருக்கும், காங்கிரசுக்கும் சாபமிடட்டும்
காரணமில்லா சாபம் பலிப்பதில்லை
இப்படியாக தமிழர்களை கொன்று, தமிழ் போராளிகளை கொன்று, தமிழ் தலைவர்களை கொன்று, சிங்களன் கொலை முயற்சியில் தப்பிய ராஜிவ்காந்தியினை கொன்ற புலிகள், உண்மையில் யாருக்கு உபயோகமான காரியம் செய்திருக்கின்றார்கள்?
சாட்சாத் சிங்களனுக்கு,, இந்த காரியங்களால் அவனுக்குத்தான் பெருத்த இலாபம். இதனால்தான் அவனால் வெல்ல முடிந்தது
ஆக புலிகள் போராடிய பலன் இதுதான், சிங்களனுக்கு சார்பாகத்தான் அனைத்து கொலைகளையும் நிகழ்த்தியிருக்கின்றார்கள்
புலிகள் காரணமின்றி ஒருவித மூர்க்கத்தில் நிகழ்த்திய இக்கொலைகள்தான், சிங்களனுக்கு வெற்றியினை கொடுத்தன, தமிழருக்கு முள்ளிவாய்க்காலை காட்டின‌
உறுதியாக சொல்லலாம், 1970 முதல் 2000 வரை ஈழத்தில் எழும்பிய மிக உணர்ச்சியான கொதிநிலையிலான மக்கள் எழுச்சியினை அடக்கி, சிங்களனிற்கு உதவியாக இருந்தை அன்றி புலிகள் ஒன்றும் செய்துவிடவில்லை
ஆழநோக்கினால் அதுதான் புரியும்
தமிழ்போராட்டம் தமிழர்களை கொன்ற விசித்திரத்தையும், அதனை தடுக்க முடியாத நம் நிலையினையும் நினைத்து நினைத்து அழலாம்...
நாம் மேற்கண்ட தமிழருக்காக அழலாம், புலிகளால் கொல்லபட்ட சிறுபகுதி தமிழர்கள் நிலைதான் சொல்லபட்டிருக்கின்றது, இன்னும் ஆயிரகணக்கான பட்டியல் உண்டு
அது முள்ளிவாய்க்கால் பட்டியலை விட கொடூரமானது..

புலிகள் 1

நிச்சயமாக முள்ளிவாய்க்கால் கொடூரம்தான், மறுக்க முடியாது
ஆனால் பாலஸ்தீனமும், இன்றைய சிரியாவும், இன்னும் ஏராளமான நாடுகள் அனுதினமும் சந்திக்கும் நிலை அதுதான், அப்படித்தான் உலகம்
வலுவான பின்புலம் இல்லா போராட்டம் இப்படித்தான் நொறுக்கபடும்
இதனை 1980லே சொன்னது இந்தியா, அதனால்தான் அன்றே முள்ளிவாய்க்காலான வடமராச்சியினை இந்தியா களமிறங்கி காத்தது
புலிகள் பெருவீரர்கள் என்றால் இந்தியா களமிறங்க அவசியமே வந்திருக்காது, புலிகளால் காக்க முடியாத தமிழரை காக்கத்தான் அன்று ராஜிவ் களமிறங்கினார்
இன்னொரு அழிவு வந்துவிட கூடாது என்றுதான் இந்திய படை அனுப்பவும் பட்டது
ஆனால் நடந்தது என்ன?
புலிகளும் சிங்களனும் கூட்டாளியாயினர், பிரேமதாசாவும் புலிகளும் சேர்ந்து இந்திய படையினை விரட்டினர்
எப்படிபட்ட அவமானம் இது? யாருக்காக களமிறங்கினோம்? தமிழருக்காக‌
யாரை எதிர்த்து இறங்க்கினோம் சிங்களனை..
ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாகி நம்மை அடிப்பார்களாம்,
இந்தியா தனிநாட்டை தடுக்கின்றது என சீறிய புலிகள், சிங்களனிடம் அடைக்கலாமனது ஏன்?? அவன் மட்டும் கொடுத்துவிடுவானா?
உதவ வந்தவனை அடித்துவிட்டு பகைவனோடு கை கோர்ப்பதை அறிவுள்ளவன் செய்வானா? ஆனால் புலிகள் செய்தனர்
ஆனால் அதனையும் மீறி, அந்த அவமானங்களையும் தாண்டி இந்தியா தமிழ் மாகாணசபை வரை நிறைவேற்றியது, ஆனால் பொய்பிரச்சாரங்களிலும் , புலிகள் செய்த பல தந்திரங்களாலும் அவமானமாக திரும்பியது
இந்த முள்ளிவாய்க்கால் நினைவு வரும்பொழுதெல்லாம், அதில் தமிழரை இந்தியா காக்கவில்லை என பலர் கதறும்பொழுதெல்லாம், இந்தியா அன்று உதவபோய் சம்பாதித்த அவமானங்கள் எல்லாம் நினைவுக்கு வரும்
இவர்களை காக்க சென்று புலிகளால் தூண்டபட்ட மோதலில் உயிர்விட்ட 1500 இந்திய வீரர்களின் நினைவு வரும், அவர்களில் பலரை அம்மணமாக்கி கொன்ற புலிகளின் கொடூரம் நினைவுக்கு வரும்
குறிப்பாக அந்த வார்த்தை, புலிகளின் வார்த்தை, சிங்கள பிரேமதாசாவும், புலிகளும் சேர்ந்து சொன்ன வார்த்தைகள்..
"சிங்களனும் தமிழனும் அண்ணன் தம்பிகள், இன்று அடித்துகொள்வோம் நாளை சேர்ந்துகொள்வோம்
இந்திய நாய்களுக்கு இங்கு என்ன வேலை???"
ஆம், இப்படி விரட்டியபின் எங்களுக்கு அங்கு என்ன வேலை?
பின் கலைஞருக்கும், சொனியாவிற்கும் எதற்கு ஈழவிவகாரம்?