புலிகள் எங்குமே முழு வெற்றி பெற்றவர்கள் அல்ல, அவர்களின் சிறிய தாக்குதலையும் ஏதோ பெரும் அமெரிக்க தாக்குதல் போல சித்தரித்தவை தமிழக ஏடுகள், அங்கே சும்மா புலிகள் ஆயுதம் இல்லாதவனை சுட்டால் கூட, இங்கே பெரும் யுத்தம் இலங்கையில் நடந்தது போல எழுதுவார்கள்
அப்படித்தான் புலிகளின் செய்திகள் இருந்தன, தாக்குதல் வெற்றிக்கும், பெரும் போருக்கும் புலிகளுக்கும் வெகுதூரம், எல்லாம் ஊதிபெருக்கிய பிம்பம்
அன்றைய வடமராட்சியில் அவர்கள் கதை முடியும்பொழுதே ராஜிவ்காந்திதான் காத்தார்,
புலிகள் அப்படித்தான் சிங்களனை அடித்துவிட்டு ஓடுவார்கள், அல்லது மக்கள் நடுவில் அமர்வார்கள், சிங்களன் வந்து மொத்தமாக அப்பாவிகளை கொல்வான்,
இப்படித்தான் அவர்களின் வீரவிளையாட்டு பொதுவாக இருந்தது
இப்படித்தான் அவர்களின் வீரவிளையாட்டு பொதுவாக இருந்தது
அவர்களின் ஒரே பலம் ஊதிபெரிதாக்கும் ஊடக செய்திகளும், ஆண்டன் பாலசிங்கத்தின் வாயும்
ஆனால் ஒரே ஒரு இடத்தில் புலிகள் முழுவெற்றி பெற்றார்கள், அது ஆனையிறவு தாக்குதல் , முக்கியமான வெற்றி அவர்களின் முந்தைய 20 வருட போராட்டத்தில் அது ஒன்றுதான் உச்ச வெற்றி...
இலங்கையின் வரைபடத்தினை கவனித்தால் புரியும் யாழ்பாண பகுதிகளையும் இலங்கையினையும் இணைக்கும் நிலபரப்பது அதுவே, மிக முக்கியமான பகுதி, அங்கு இலங்கை ராணுவத்தின் முகாம் இருந்தது 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்
கிட்டதட்ட 2 ஆயிரம் புலிகளை இழந்து அந்த முகாமினை புலிகள் பிடித்தனர், புலிகள் வாழ்வில் ஒரே வெற்றி
அந்த வெற்றியில் 50 ஆயிரம் சிங்களர்களை புலிகள் சிறைபிடித்தனர், அத்தோடு வடக்கில் இருந்து சிங்களம் வெளியேறிற்று,இனி ஈழக்கொடி ஏற்றவேண்டியதுதான் பாக்கி
அப்படியான நிலை, போரில் புலிகளுக்கு வெற்றிதான், ஆனால் அங்கீகரிப்பது யார்? ராஜதந்திரம் வேண்டும், புலிகளிடம் அது என்றைக்கு இருந்தது..
ஆனால் சிங்களம் ஆடியது, தன் நேசநாடுகளுக்கு தூது அனுப்பியது. எப்படி தூது அனுப்பும்? "எங்கள் உள்நாட்டில் குழப்பம் வந்து தீர்த்து வைப்பீர்.."
இப்படியான அழைப்பு இந்தியாவிற்கும் வந்தது, "நீங்கள் வருகின்றீர்களா அல்லது வேறுயாரையும் அழைக்கட்டுமா? பாகிஸ்தான் கூட தயார்தான்.."
ஆனால் ராஜிவ் கொலைக்கு பின் தயங்கி நின்ற இந்தியா, லேசாக எட்டிபார்த்தது, அப்பொழுது வாஜ்பாய்தான் பிரதமர்
ஈழம் அமைய அதுதான் வாய்ப்பு, அந்த சூழ்நிலை ஒன்றுதான் ஒரே வாய்ப்பு, ஆனால் நடந்ததென்ன?
புலிகளுக்கு இந்தியா சார்பில் ஓலை அனுப்பபட்டது, 50 ஆயிரம் சிங்கள வீரர்களை விடுவித்துவிட்டு , உங்கள் வழியில் செல்லவும் இல்லையென்றால் இந்தியா களமிரங்கும்
அவ்வளவுதான் கிட்டதட்ட 2 ஆயிரம் புலிகள் செத்து கிடைத்த ஒரே வெற்றியும் வீணானது
ஏன் அன்று வாஜ்பாய் அப்படி அறிவித்தார்? ஏன் ஈழம் அமைவதை தடுத்தார்கள்? சரி இந்தியா ஏன் தன் ராணுவத்தை அனுப்பி ஆனையிறவினை மீட்கவில்லை??
இந்தியா மிரட்டவில்லை என்றால் ஐ.நா பன்னாட்டு படை அங்கே வந்திருக்கும், பன்னாட்டு படை என்றால் அமெரிக்க படை என அர்த்தம்,
இந்தியா அதனைத்தான் தடுத்தது
பாலஸ்தீனம் போல ஈழபோராட்டம் சர்வதேச அரசியலை பெறவில்லை, ஒருவகையான ரவுடிச பேரம்பேசுதலாகவே உலகம் அதனை 1991க்கு பின் கண்டது..
ஆனால் இந்தியா ஈழத்தை விரும்புமோ இல்லையோ புலிகள் அழிவதை விரும்பாது, இது ஒரு அரசியல். பன்னீரை வைத்து டெல்லி ஆடுகின்றல்லவா அப்படி
ஈழம் அமைய ஒரே வாய்ப்பான அந்த ஆனையிறவு வெற்றி வீணாய் போனபொழுது வாஜ்பாய் அமைச்சரவையில் வைகோ இருந்தார், ஒரு வார்த்தை எதிர்த்திருப்பார்?
உண்மையில் அன்றுதான் தமிழகம் பொங்கியிருக்க வேண்டும், அன்றுதான் ஏன் புலிகள் பின்வாங்க வேண்டும்? என சீறியிருக்க வேண்டும் ஆனால் எல்லாம் அமைதி, வைகோ, திருமா,நெடுமாறன் எல்லாம் அமைதி
சீமான், வேல்முருகன், திருமுருகன் எல்லாம் அன்று எங்கிருந்தார்களோ தெரியாது, சீமான் பாஞ்சால்ங்குறிச்சி எடுத்துகொண்டிருந்தார்
ஆக அன்று ஈழம் அமைய தங்கள் வாழ்நாளின் உச்சபட்ட ஒரே வெற்றியினை புலிகள் பெற்றபொழுது ஈழம் அமையாமல் தடுத்தது பாஜக அரசு, அருகே இருந்தவர் வைகோ
அதனை எல்லாம் பற்றி ஒருவரும் பேசமாட்டார்கள், மாறாக ஈழத்தை அழித்தது கலைஞர், காங்கிரஸ் என கடும் ஒப்பாரிமட்டும் மறக்காமல் வைப்பார்கள்....
தன் நாட்டில் பெரும் படுகொலை புரிந்த ஒருவனை, இந்திய ராணுவத்தார் 1500 பேரை கொன்ற இயக்கத்தின் தலைவனை, ஒரு நாட்டின் அதிபராக இந்தியா அனுமதிக்குமா? ஒருகாலும் இல்லை
வாஜ்பாய் அதனைத்தான் செய்தார்,அன்று வாஜ்பாய் முன்னால் அமைதியாக இருந்த வைகோதான் பின்னாளில் குதியோ குதி என குதித்தார்..
இந்தியாவிற்கு எதிராக அவ்வளவு காரியங்களை செய்துவிட்டு இந்தியா தங்களை காக்கும் என்றோ, தங்களை அதிபர்களாக ஆளவிடும் என்றோ மனப்பால் குடித்தவர்களை என்ன சொல்லமுடியும்??
No comments:
Post a Comment