Friday, July 20, 2018

பார்ப்பனரோட பலிஆடுகள்தான் சங்கிகள்

உண்மையில் சங்கிகளை சமாளிப்பதில் எந்த சிக்கலும் கிடையாது... இவர்களுக்கு சொல்லி கொடுக்கப்படும் பயிற்சி என்பது... கெட்ட வார்த்தைகள் பேசி எதிரியை பேசாமல் இருக்க செய்ய வேண்டும். அவ்வளோதான், அவர்கள் போடும் பதிவுகள் தரவுகள் என்பது ஒன்று கூட அவர்களாக தேடி ஆராய்ந்து உருவாக்கியவை கிடையாது, எல்லாமே ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்கள் உருவாக்குவது...
அதை உருவாக்கும் போதே அந்த பார்ப்பனருக்கு இரண்டு விஷயங்கள் உறுதியாக தெரியும் ஒன்று அந்த தரவு பொய் என்பது, இரண்டாவது அதை பரப்ப போகும் இவர்கள் அதை படித்து கூட பார்க்க மாட்டார்கள் என்று... ஆதனால்தான் இங்கே களத்தில் இந்த முட்டாள்கள் அசிங்கபடுகின்றார்கள்... நல்லா கவனிச்சி பாருங்க இங்க கத்துற எல்லா சங்கியும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத்தான் இருப்பாங்க, ஆனா இட ஒதுக்கீடுதான் இவனுக்கு பாதுகாப்பு என்பதையே புரிஞ்சிக்க மாட்டானுங்க.... சுருக்கமா சொல்லனும்னா பார்ப்பனரோட பலிஆடுகள்தான் சங்கிகள்..

Tuesday, July 17, 2018

காமராசரின் ஆட்சியே பெரியாரின் ஆட்சிதான்

காமராசரை திராவிடர் இயக்கத்திற்கு எதிராக நிறுத்தும் கைக்கூலிகளுக்கு

காமராசரின் ஆட்சியே பெரியாரின் ஆட்சிதான்

காமராசரும்,சுந்தரவடிவேலுவும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வர நேரிட்டது,,,சுந்தர வடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காமராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார்,,

`நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக்கணும்,,அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான்,, கிராமவாசி எங்க போவான்? அவனால் மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறது கட்டுப்படி யாகாது'

 சாதாரண பள்ளிக்கூட படிப்புக்கே அவன் ஆடு,மாடு,கோழியெ ல்லாம் விக்க வேண்டியிருக்கு,,,மேல் படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க,,, ஏழை வீட்டுப் பிள்ளைங்க அந்தந்த ஊர்லயே பெரியபடிப்பு படிக்கட்டும்” என்றார் காமராஜர்,,,

உடனே அதிகாரி சுந்தரவடிவேலு , இப்போது, கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களில் நூற்றுக்கு அறுபது பேர்,பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள்” என்றார்,,, “அதைத்தானே நாம விரும்பினோம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படிச்சி மேல வந்துட்டான்னா அப்புறம் அவன் மூலம் அந்த கிராமமே மேல வந்திடுமில்லையா" என்றார் காமராஜர்,,

 அதற்கு சுந்தர வடிவேலு பதில் அளிக்கையில், நான் பெரியார் ஐயாகிட்டே இந்த விவரத்தைச் சொன்னேன். அவரு மிகுந்த மகிழ்ச்சியோடு இவ்வளவு க்கும் காரணம் காமராசர் தான், அவருக்குத்தான் தமிழன் கடன்பட்டிருக்கிறான்,,,அவர் மட்டும் இல்லேன்னா 1952-ல் இலேயே நம்ம தலைமுறையையே ஆச்சாரியார் குழிதோண்டிப் புதைத்திருப்பார்” என்று பெரியார் ஐயா சொன்னார் என்றார்,,,

உடனே காமராஜர், “அதுஎப்படின்னேன்? எல்லாம்பெரியார்ஐயாவாலேதானேநடக்குது,,,அவர்சொல்றார்நாமசெய்யிறோம்! #காரணகர்த்தா_அவருதானே…?

 இது1952இல்ஆரம்பிச்சபிரச்சனையாஎன்ன? #ஐயாயிரம்வருஷமாஇருக்கறதாச்சே,, தெய்வத்தின் பேராலேயும் மதத்தின் பேராலே யும் நம்மள ஒடுக்கி வச்சிட்டானே… இப்படி இருக்கிறது என் தலையெழுத்துன்னு சொல்லிட்டானே! இதப்பத்தி யார் கவலைப்பட்டார்?” “பெரியார்ஒருத்தர்தானேஎல்லாத்தையும்தலையில்எடுத்துப்போட்டுகிட்டுபண்ணிகிட்டிருக்கார்,,

அவருமட்டும்இல்லேன்னாநம்மபுள்ளைங்ககதிஎன்னவாகியிருக்கும்…? அத்தனைப்பேரும் கோவணத்தோட வயல்லே ஏரோட்டிக் கிட்டிருப்பான்…! இன்னிக்கு டெபிடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரட்டரியாவும்ல ஒக்காந்திருக்கான்…! நம்மகிட்ட அதிகாரம் இருக்கிறதாலே பெரியார்நெனச்சகாரியத்தஏதோகொஞ்சம்பண்ணிக்கொடுக்கிறோம்

அவருஎந்தஅதிகாரத்தையும்கையிலவச்சிக்காமஊர்ஊராதிரிஞ்சிசத்தம்போட்டுக்கிட்டுவராரு.! அவராலேதான்நமக்கெல்லாம்பெருமை…!” என்று உணர்ச்சி பொங்கக் காமராசர் கூறினார்.

“எவ்வளவு பெருந்தன்மை இவருக்கு! தான் செய்கிற எல்லா நலத் திட்டங்களையும் தந்தை_பெரியாருக்கே காணிக்கையாக்குகிற இவரது மேன்மைதான் என்னே?” என்று எண்ணி அதிகாரி சுந்தர வடிவேலு
 பூரித்துப்போனார்.


Monday, July 16, 2018

உலகக் கால்பந்துப் போட்டியும், அக்கிரஹார அழிச்சாட்டியமும்!

உலகக் கால்பந்துப் போட்டியும், அக்கிரஹார அழிச்சாட்டியமும்!
...தேசிய கால்பந்து தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் தேசிய கால்பந்து அணி வீரருமான சய்யத் நயிமுதீனின் கூற்று மெய்யாக்குகிறது. “நான் தேசிய கால்பந்து அணிக்குப் பயிற்சியாளராக இருந்தபோது பயிற்சியின்போது விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பான பாட்டில் குடிநீர், பழ ரசம் போன்றாவற்றுக்குக்கூட அதிகாரிகளிடம் போராடித்தான் வாங்க வேண்டியிருந்தது. வெறும் வயிற்றுடன் கால் பந்து விளையாட முடியுமா?” அதிகாரிகளில் மிகப் பெரும்பான்மையினர் பார்ப்பனரே என்பதுதான் இந்நிலைக்கான அடிப்படை.
... Indoor Games எனப்படும் சற்றுக் குறைந்த உடல் உழைப்புள்ள விளையாட்டுகளில் வென்று விளையாட்டு ஒதுக்கீட்டில் மேற்படிப்பு களைப் படித்து அல்லது இதையே தகுதியாக அமெரிக்கா போன்ற நாடுகளில் காட்டி அங்கு செட்டிலும் ஆகின்றனர். இது பெரும்பான்மையான பார்ப்பனரல்லாதோரால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத டெக்னிக். அது மட்டுமல்ல பார்ப்பனர்களின் வெளிநாட்டுத் தொடர்புகள் போல நமக்குக் கிடையாது என்பதும் இங்குள்ள சமூகச் சூழல்.
...தற்போது தரமான மாணவர்கள் கிடைத்தாலும் அவர்களை உருவாக்க கல்விக்கான நேரங்கள் அனுமதிப்பதில்லை. பெற்றோரும் கல்விக்குச் சமமாக இவ்விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒன்பதாம் வகுப்பு வந்தவுடனேயே அம்மாணவன் கல்விக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மேலும் இவ்விளையாட்டுகள் ஊடகங்களால் முதன்மைப் படுத்தப்படுவதில்லை. 

கடைக்குட்டிச்சிங்கம்.

இந்துத்துவாவில் கடைந்தெடுத்த சிங்கம்//
ஜாதியை நிலைநிறுத்தும் ரேக்ளாபந்தயப் போதையுடன் படம் தொடங்குகிறது. கதாநாயகனின் சகோதரிகள் எல்லோருக்கும் வேலுநாச்சியார், சம்யுக்தா, பத்மாவதி, ஜான்சி என ராணிகளின் பெயர் வைக்கப்படுகிறது. கதாநாயகியின் பெயர் மட்டும் ‘கண்ணுக்கினியாள்’. உலகத்தில் எந்தப் பெண் வேண்டுமானாலும் ராணியாக இருக்கலாம். போராளியாகவும் இருக்கலாம். மனைவி மட்டும் கண்ணுக்கு இனியவளாக மட்டுமே இருக்க வேண்டும். அறிவுக்கினியாள், அறிவுக்கொடி, அறிவு என்றெல்லாம் மனைவி கேரக்டருக்குப் பெயர்கூட வைக்கக்கூடாது.
மற்ற பெண்கள் என்ன ட்ரெஸ் வேண்டுமானாலும் போடலாம். மனைவியும் கூட திருமணத்திற்கு முன்பு என்ன ட்ரெஸ் வேண்டுமானாலும் அணியலாம். ‘மனைவி’ ஆகிவிட்டால், சேலை, கே.ஆர்.விஜயா பொட்டு, மல்லிகை, மஞ்சள், ஆறடிக்கூந்தல் என்ற காம்போவுக்குள் அடங்கிவிடவேண்டும் என்ற பொதுப்புத்தியில் எல்லா போராளி இயக்குநர்களும் தெளிவாக இருக்கின்றனர்.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மண் கலயத்தில் தேநீர் கொடுக்கிறார்கள். வீட்டிற்கு வருபவர் களுக்குத் தாங்கள் புழங்கும் டம்ளர்களில் டீ கொடுக்காமல், யூஸ் அண்ட் த்ரோ போல மண் கலயத்தில் கொடுப்பது நவீனத் தீண்டாமை. இயற்கை விவசாயம் செய்யும் நிலஉடமையாளரின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசாத தலித் வேலைக்காரர் வருகிறார். எத்தனை காலத்துக்கு இப்படி தலித் மக்களை அடிமைகளாக மட்டுமே காட்டிக் கொண்டிருப்பீர்கள்? அவருடைய மகனுக்காக, சொந்த ஜாதிக்காரனை எதிர்க்கிறாராம் கார்த்தி. என்னுடைய அடிமைக்கு வேறு எவனும் தொந்தரவு தரக்கூடாது என்பது தான் இதன் பொருள்.
ஆணவக் கொலைக்கு எதிராகப் படம் பேசுகிறது என்று ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. எதற்கு எதிராகவும் ‘பேசுவது’ என்பது சிக்கல் இல்லாதது.
ஆணவக்கொலைக்கு எதிராகப் பேசும் கடைக்குட்டிச் சிங்கம், இந்தப் படத்திலும், தனது வாழ்க்கையிலும் செய்வது, செய்தது சொந்த ஜாதித் திருமணம். தான்.
“சொத்து சேர்ப்பது சேமிப்பு அல்ல; சொந்தத்தைச் சேர்ப்பதுதான் சேமிப்பு” என்பது தான் படத்தின் போதனை. இவர்கள் கூறும் சொந்தம் என்பது ஜாதி சொந்தம் தான். அந்த ஜாதிச் சொந்தம், குடும்பம் என்ற அமைப்பு, குலதெய்வம், காதுகுத்து, தாய்மாமன், கூட்டுக்குடும்பம், சீர் செனத்திகள், என்று இப்படத்தில் பெருமைப்படுத்தப்படும் இந்து மத மற்றும் தமிழ்ப் பண்பாடுகள் தான் ஆணவக் கொலைகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. இந்தப் பண்பாடுகளுக்கு எதிராக ஒரு புல்லைக்கூட பிடுங்க முடியாத இயக்குநர், ஆணவக்கொலையை எதிர்க்கிறாராம்.
ஆனால், இப்போ இதுதான் ட்ரெண்ட். நம்மாழ்வார், ஜல்லிக்கட்டு, ஆர்கானிக், வேட்டி, சேலைப் பண்பாட்டுப் பந்தாக்கள், அப்படியே சிறிதளவு தீண்டாமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குலதெய்வம், நாட்டார்தெய்வம், காதுகுத்து, பூப்புனிதநீராட்டுவிழா, தாய்மாமன், கூட்டுக்குடும்பம், நிலமே தெய்வம், மாடு தான் கடவுள், பசுமை விகடன், ஜாதி ஒழியணும்னா, ஜாதிச் சங்கங்கள் ஒழிய வேண்டும். நாடு வளரணும்னா அரசியல்வாதிகள் ஒழிய வேண்டும். ஊழல் ஒழிய வேண்டும்....
இப்படி எல்லாத்தையும் கலக்கி அடிச்சா..அதுதான் இன்றைய மய்யம், சிஸ்டம், தமிழ்த்தேசியம், தற்சார்பு, இந்துத்துவா, பொதுவுடைமை. (இந்தியாவில் மட்டும்) இந்த முற்போக்குப் பொதுப்புத்தியைப் பணமாக்கும் படவரிசையில் புதிய வரவுதான் கடைக்குட்டிச்சிங்கம்.

நல்ல பொருளாதார ஆதரவும் உணவு சுதந்திரமும் தேவை....அதை இந்துத்துவ நாட்டில் ரோம்ப கஷடம்.

ஹீம தாஸ் வெற்றியும் இந்தியாவின் விளையாட்டு துறை தலைநகரமாக மாறி இருக்கும் வட கிழக்கு மாநிலங்கள்
ஹர்பாஜன் சிங் --BBC NEWS
"135 கோடி மக்கள் வாழும் நாட்டில் கால்பந்தில் சாதிக்கமுடியாமல் வெறும் இந்து முஸ்லீம் சண்டை போட்டுகொண்டு இருக்கிறோம்..."
Mr.பஜ்ஜி உண்மை தான் மறுக்கவில்லை...அதை விட மிக முக்கியமானதை விடுவிடீர்கள்....அது உணவு and அரசங்கத்தின் வழியான பொருளாதர& Private SPONSORSHIP ஆதரவு ....கால்பந்து மட்டுமல்ல அத்லெடிக்ஸ் வீரர்களுக்கு BEEF PORK and கடல் உணவு மிக அத்தியாவசியமானது...புரதசத்து அதிகம் தேவை..
உதாரணமாக ஒரு கால்பந்து வீரன் ஒரு நாள் ஐந்து வேலை உணவு உன்ன வேண்டும்...அதற்கு நல்ல பொருளாதார ஆதரவும் உணவு சுதந்திரமும் தேவை....அதை இந்துத்துவ நாட்டில் ரோம்ப கஷடம்....ஸ்டாமினா குறைவாக தேவைப்படும் கிரிக்கெட் மட்டுமே பணக்கார , முதலாளிகளின் மீடியாக்களின் ஆதரவு... அது ஏன் என்றால் உண்மை எல்லாருக்கும் தெரியும்..
இன்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் பெருமை பட வைக்கும் விளையாட்டு வீர்கள் பெரும்பாலும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து தான் வருகிறார்கள்... வட கிழக்கு மாநிலங்கள் BEEF and PORK பிரதான உணவுகள்...கிறிஸ்துவர்கள் அதிகம் ...அதுமட்டுமல்ல மலை தவளை உணவு & மலைப்பாங்கான இயற்கையான உணவுகள் அங்கு அதிகம்...அதற்கு ஆதாரமான இருப்பது மாசுபடாத பிரம்மபுத்திரா நதி மற்றும் அதில் வரும் மீன் உணவுகள்..வட கிழக்கு மாநிலத்தில் பிறக்கும் ஒரு குழந்தை இயற்கையாக விளையாட்டு துறையை தேர்ந்தெடுப்பார்கள்..மத்த மாநிலத்தில் விளையாட்டு துறையை வீணான துறை என்று அவமானப்படுத்துவது இந்த ஏழு மாநிலங்களில் நடக்காது...
Khelo India program மூலம் அங்கு வெவேறு விளையாட்டை ஊக்கப்படுத்தும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை கொஞ்சம்கொஞ்சமாக மேம்படுத்திவருகிறார்கள்..பாக்ஸிங் வீராங்கனை மேரிகோம் மற்றும் கால்பந்து ஸ்டார் பாய்ச்சுங் பூட்டிய போன்றவைகள் இங்கு ரோல் மாடல் மட்டுமல்ல...அவர்கள் தங்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்கள்..
எனக்கு ஒரு ஆசை நான் இறப்பதற்கு முன் இந்தியாவில் அதுவும் வடகிழக்கு மாநிலத்தில் இருக்கும் அத்தனை விளையாட்டு துறை அம்சங்களை பெற்று இருக்கும் வட சென்னையில் ஒலிம்பிக் அல்லது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த வேண்டும்...முதல் ஐந்து இடத்திற்குள் தங்க பதக்க வேட்டையில் இந்திய வந்திருக்க வேண்டும்.....நடக்குமா தோழர்களே..

கலைஞர் கருணாநிதி & டெலோ தலைவர் குட்டி மணி

கலைஞர் கருணாநிதி டெலோ தலைவர் குட்டி மணிக்கு துரோகம் இழைத்ததாக இன்று சிலர் முகநூலில் பதிவு செய்துள்ளனர்.
கலைஞர் கருணாநிதி குட்டி மணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தது உண்மைதான்.
அந்த காலத்தில் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் பரஸ்பரம் பரிமாறப்படும் நடவடிக்கையின் கீழேதான் குட்டிமணியும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஒப்படைக்கப்பட்ட குட்டிமணி சில மாதங்களில் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் இலங்கை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அப்போது தொடரப்பட்ட வழக்கில்தான் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்காக அவர்கள் வெலிக்கடை சிறையில் வைக்கப்பட்டிருந்தவேளையில் 23.07.1983 யன்று அரசின் சதித்திட்டபடி சக சிங்கள கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர், “குட்டிமணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதி” என்று சட்டசபையில் எம்.ஜி.ஆர் குற்றம் சாட்டினார்.
இதனால் “ கருணாநிதியால் ஒப்படைக்கப்பட்ட போது எமது தலைவர் குட்டிமணி போராளி இல்லை. கடத்தல்காரன்” என்று அப்போதைய டெலோ தலைவர் சிறீசபாரட்ணம் கருணாநிதிக்காக பேட்டி கொடுத்தார்.

மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்!

மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்!
களப்பிரர் ஆட்சி ஏறக்குறைய (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகளும் தமிழகம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட்ட காலகட்டம்.
இவர்களுடைய ஆட்சியில் பார்ப்பனியம் அடங்கி ஒடங்கிபோனது.
தங்களுக்கு தாங்களே உயர்வு கற்பித்துக்கொண்டு, அந்த கற்பிதத்தை வலிந்து திணிக்கும் விதமாக புராணங்களையும் இதிகாசங்களையும் எழுதிக்கொண்ட பார்ப்பனியம் கி.மு.1700 -கி.மு.1500-களில் தமிழகத்திற்குள் நுழைந்தது.
தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் கேடுகாலம் இந்த காலகட்டத்தில்தான் தொடங்கியது.
மூவேந்தர்களும் எந்த விதமான எதிர் கேள்வியும் இல்லாமல் பார்ப்பனியத்தின் ஆட்டங்களுக்கும்,யாகங்களுக்கும் தங்களின் அறிவை தொலைத்ததோடு சேர்த்து தமிழ் சமூகத்தையும் அழிவிற்கு உள்ளாக்கினார்கள்.
தமிழர்களின் மதம், கலை, கலாச்சாரம், வானியல், சோதிடம், மருத்துவம், மொழி அனைத்தும் வெகு விரைவாக ஆரிய சமஸ்கிருத மயமாக்கப்பட்டன.
ரிக் வேத ஆரிய முனிகள் தமிழர்களின் கண்டு பிடிப்புகளுக்கு உரிமை கொண்டாடினார்கள்.
தமிழ் கல்வி பிராமணர்களின் ஏகபோக உரிமையானது.
உதாரணம்: சங்க இலக்கியங்களுக்கு பிற்காலத்தில் உரை எழுதிய அனைவரும் பிராமணர்களே. திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரும் பிராமணரே.
இதன் விளைவு சங்க இலக்கியங்கள் அனைத்திலும் திருக்குறள் உட்பட எல்லாவற்றிலும் பார்ப்பனியத்தை திணிக்கும் வேலைகள் சுதந்திரமாக நடந்தது.
இதை தட்டி கேட்க வேண்டிய மூவேந்தர்களும் யாகங்களில் மூழ்கி கிடந்தார்கள்.
தங்களுக்கு எதிரான அனைத்தையும் விழுங்கி செரித்து விடுவது பார்ப்பனியத்தின் சிறப்புகளுள் ஒன்று.
வட இந்தியாவில் சமணமும், பௌத்தமும் பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டன.
இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியாவில் பரவாததற்கு காரணம் இதுவே.
மூவேந்தர்களும் போட்டி போட்டுகொண்டு வைதீக பார்ப்பனியத்தை ஆதரித்தார்கள்.
பிராமணர்களுக்கு உள்ளூர் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது.
மனு போன்ற பிராமணியத்தின் பிரத்தயேக தர்மங்கள் பொது மக்களிடையே திணிக்கப்பட்டன.
பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் வழங்கப்பட்டன.
பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் என்றால் என்ன ?
பிராமணர்களுக்கு என்று ஒரு ஊரை உருவாக்கி, அந்த ஊரில் வசிக்கப் போகும் ஒவ்வொரு பிராமணருக்கம் அந்த ஊரை சுற்றி விவசாய நிலங்களை ஏற்படுத்தி, அந்த நிலங்களில் உழைப்பதற்கு வேலையாட்களையும் கொடுப்பதற்கு பெயர் பிரம்மதேயம் மற்றும் சதுர்வேதி மங்களம்.
இந்த ஊர்களில் வசிக்கும் பிராமணர்களிடமிருந்து எந்தவிதமான வரியும் வசூலிக்கப்படாது. இவர்களின் விவசாய நிலங்களுக்கும் வரிகள் கிடையாது.
எந்த தகுதியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் இத்தகைய ஆதிக்க சலுகைகள் என்று அன்றைய தமிழ் சமூகத்திற்கும், அன்றைய மூவேந்தர்களுக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றாத நிலையில்தான் களப்பிர புரட்சியாளர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தார்கள்.
ஒடுக்கப்பட்ட விவசாய மற்றும் வணிக வர்கத்தின் கூட்டே களப்பிரர்கள்.
சமூக சீரழிவிற்கு துணைபோன மூவேந்தர்களும் ஆட்சி அதிகாரங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.
இந்த விரட்டியடிப்பு கி.பி.150 ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது.
கி.பி. 250 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் களப்பிர புரட்சியாளர்களின் முறையான ஆட்சி தொடங்கியது.
தமிழகமும் பார்ப்பனியத்தின் பிடியிலிருந்தது மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.
பார்ப்பனியம் மற்றும் பிராமணர்கள் பக்கம் களப்பிர புரட்சியாளர்களின் பார்வை திரும்பியது.
பிரம்மதேயங்களும் சதுர்வேதி மங்களங்களும் பிராமணர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டன.
பிராமணர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்த சொத்துகள் அனைத்தும் களப்பிர ஆட்சியாளர்களால் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டன.
பிராமணர்களின் மேலாதிக்கம் அடக்கி ஒடுக்கப்பட்டது.
பிராமணர்கள் உழைக்கும் வர்கத்திற்கு அடங்கி இருக்க வேண்டிய நிலையை களப்பிர புரட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள்.
இந்தியாவில் தோன்றிய பேரரசுகளில் பார்ப்பனியத்திற்கு எதிரான வலுவான நடவடிக்கை எடுத்த ஒரே ஒரு பேரரசு களப்பிர பேரரசு மட்டுமே.
பார்ப்பனியத்தை அடக்கி ஒடுக்கி உட்கார வைத்த காரணத்திற்காகவே இன்று களப்பிரர் ஆட்சி இருண்ட காலமாக வருணிக்கப்படுகிறது.
களப்பிரர் கொள்ளையர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள்.
நேர்மையான எந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் களப்பிர ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணியக் கூட மாட்டார்கள்.
அனைவரும் அனைவருக்கும் சமம் என்று போதிக்கின்ற சமண மதமும், பௌத்த மதமும் களப்பிரர்களின் அரசாங்க மதமாக இருந்தது.
களப்பிர புரட்சியாளர்களின் காலத்தில் காஞ்சிபுரமும், காவிரிபூம்பட்டினமும் மிக மிக முக்கியமான பௌத்த நகரங்களாக இருந்தன.
ஆரிய கலப்பற்ற மிகச் சிறந்த பௌத்த தமிழ் இலக்கியங்கள் களப்பிரர் ஆட்சி காலத்திலேயே எழுதப்பட்டன. சீவகசிந்தாமணி, நரிவிருத்தம், கிளிவிருத்தம், பெருங்கதை போன்ற இலக்கியங்கள் இதற்கு உதாரணம்.
சங்கமித்திரர், புத்ததத்தர், புத்தமித்திரர், போதிதருமர் (ஏழாம் அறிவு புகழ்) போன்ற மிகச் சிறந்த பௌத்த மத துறவிகள் களப்பிர அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதில் சங்கமித்திரர் இலங்கையில், பௌத்த தத்துவத்தின் ஒரு பிரிவான மகாயன பௌத்தத்தை பரப்பி புகழ் பெற்றவர்.
போதிதருமர் தென்கிழக்காசியாவில் பௌத்த தத்துவத்தின் தியான பிரிவான ஜென் தத்துவத்தை பரப்பி புகழ் பெற்றவர்.
இன்றைய வரலாற்று நூல்கள் சித்தரிப்பது போல் களப்பிரர் ஆட்சி காலம் இருண்ட காலமாக இருந்திருந்தால் இவர்களால் இத்தகைய சாதனைகளை செய்திருக்கவே முடியாது.
உண்மை வரலாற்றை திரிப்பதும், மறைப்பதும் இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் தருமம்.
அதுவும் ஆரிய வர்ணம் தூக்கலாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதும்,
அதற்கு எதிரான அனைத்தையும் சிறுமைபடுத்துவதும், கேவலப்படுத்துவதும், எதிர்ப்பு குரல் எழுப்புபவர்களை துரோகிகளாக சித்தரிப்பதும் இவர்களின் செயல்கள்.
கி.பி. 250 முதல் தமிழகத்தை ஆரிய ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்த களப்பிரரின் ஆட்சி 350 வருடங்கள் கழித்து கி.பி.600-ல் முடிவிற்கு வந்தது.
தெற்கில் பாண்டியன் கடுங்கோனும், வடக்கில் பல்லவன் சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வீழ்ச்சியடைய செய்தார்கள்.
பிடுங்கபட்ட பிராமணர்களின் ஆதிக்கச் சலுகைகள் மீண்டும் அவர்களுக்கு கிடைத்தது.

சந்திரன் உருவான புளுகு அர்த்தமுள்ள இந்துமதம் கூறுகின்றது.

சந்திரன் உருவான மகா அசிங்கமானப் புளுகு படியுங்களேன். அர்த்தமுள்ள இந்துமதம் கூறுகின்றது.
இந்துவாக இருந்தால் இதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
அத்திரிமா முனிவர் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்த வர அவர் உடல் சோமரசமயம் ஆயிற்று. அவர் கண்களிலிருந்து சோமரசம் சிந்த ஆரம்பித்தது.
அதைக் கண்ட பிரம்ம தேவர் தேவதா ஸ்திரீகளை அழைத்து அந்த சோம ரசத்தை அருந்தி கருவுறுமாறு கூறிட, அவர்களும் அவ்வாறே செய்து கருவுற்றனர்.
ஆனால், அவன் கனம் தாங்காமல் அவற்றை அவர்கள் கீழே நழுவவிட அவை கீழே விழுந்து உடனே ஒன்றாக இணைய சந்திரன் (சோமன்) உருவானான்.
பிரம்மா உடனே சந்திரனைக் கீழே விடாமல் தேரில் வைத்துக் கொண்டு செல்ல பிரம்மாவின் மானச புத்திரர்கள் வேத மந்திரங்களால் துதி செய்தனர்.
பிரம்மாவுடன், சந்திரன் அத்தேரிலிருந்து பூமண்டலத்தை இருபத்தோரு முறை சுற்றிவர ஓக்ஷதிகள், வனஸ்பதிகள் (தாவரங்கள்) தோன்றி வளர்ந்தன.
சந்திரன் தவம் செய்து தன் சக்தியை வளர்த்துக் கொண்டான். பிரம்மா சந்திரனை ஓஷத சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார்.
தக்ஷன் நக்ஷத்திரங்களான இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கு விவாகம் செய்து வைத்தான். சந்திரன் அரசாட்சி பெற்ற மமதையுடன் ஆங்கீரசர் ஆகிய முனிவர்களை எதிர்த்து பிரகஸ்பதியின் மனைவியாகிய தாராவை அபகரித்துச் சென்றான்.
ரிஷிகள், தேவர்கள் அவன் செய்வது அக்கிரமம் என்றும், தாரையை விட்டு விடுமாறும் அறிவுரை கூறினர். ஆனால், அவன் கேட்கவில்லை. அவனுக்கு உதவியாகச் சுக்கிராச்சாரியார் வர தேவாசுரப் போர் நடந்தது.
இந்நிலையில் தேவர்கள் பிரம்மாவை நாடிப் போரை நிறுத்த வேண்டினர். பிரம்மா வும் தலையிட்டு போரை நிறுத்தி தாரையைத் தானே பெற்று பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார்.
ஆனால், கருவுற்றிருந்த அவளை ஏற்க மறுத்தார் பிரகஸ்பதி. அக் கருவை விட்டு விட்டு வருமாறு கூறினார். அவள் அக்கருவை ஒரு மரத்தடியில் விட்டுவிட்டாள். அக்கரு உடனே ஒரு சிறுவனாக மாறிட அதன் ஒளி, அழகு கண்டு தேவர்கள் வியப்புற்றனர்.
பின்னர் அக்குழந்தை சந்திரனுடையதே என்று தாரை கூறினாள். அக்குழந்தைக்குச் சந்திரன், புதனெனப் பெயரிட்டான்.
இதேபோன்ற புராண கதைகளில் கூறிய பாத்திரங்களைத்தான் இன்று கடவுளாக கோவில்களில்வைத்து கும்பிடுகிறார்கள். கோவிலிற்கு, கடவுளிற்கு பின்னால் உள்ள சுரண்டலும் எவருக்குமே புரிவதில்லை. காரணம் கடவுள் என்ற மூடநம்பிக்கை. எவருமே சுயபுத்தியுடன் யோசிப்பதேயில்லை. வடிகட்டிய முட்டாள்கள்.

புளட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன்

இன்று புளட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் அவர்களின் நினைவு தினமாகும்.



முகுந்தன் என்று அழைக்கப்பட்ட உமா மகேஸ்வரன் நில அளவையிலாளர் உத்தியோகத்தை உதறிவிட்டு போராட்டத்திற்கு வந்தவர்.

தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் தெரிந்தவர். பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர்.

புலிகளின் இயக்கத்தின் தலைவராக இருந்தவர்.

ஊர்மிளா என்ற முதல் முழுநேரப் பெண் போராளியுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்டார்.

அப்பொது உமா மகேஸ்வரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதை நிறைவேற்றும் பொறுப்பு போராளி சுந்தரத்திடம் வழங்கப்பட்டது.

இதனால் உமா மகேஸ்வரன் சிறிது காலம் தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட கொலை கொள்ளை பாதைக்கு மாற்றாக புதிய மக்கள் பாதை வேண்டும் என கூறி அமைப்பு இரண்டாக உடைந்தது.

சுந்தரம் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒரு பிரிவாக இயங்கினர். இவர்கள் புதியபாதை என்னும் பேப்பர் வெளியிட்டமையினால் இவர்கள் பதிய பாதை பிரிவினர் என அழைக்கப்பட்டனர்.

இந்த புதியபாதை பிரிவிற்கு தலைமறைவாக இருந்துவந்த உமாமகேஸ்வரன் அழைத்து வரப்பட்டு தலைவராக்கப்பட்டார். பின்னர் இவ் அமைப்பு புளட் இயக்கம் என அழைக்கப்பட்டது.

இந்த புதியபாதை அமைப்பு உமாமகேஸ்வரன் தலைமைக்கு பின்னர் மீண்டும் பழைய புலிப் பாதையில் இயங்கியதால் அதனை விமர்சித்து சிலர் விலகி சென்றனர்.

அத்துடன் போராளி சுந்தரமும் யாழ்ப்பாணத்தில் சித்ரா அச்சகம் முன்றலில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன் பின்னர் சுதந்தரம் கொலைக்கு பழி வாங்குவதாக கூறி புளட் அமைப்பினால் பலிகளின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் பாண்டிபஜாரில் பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் நேரிடையாக சுட்டுக்கொண்டனர். இதனால் தமிழக பொலிஸ் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

இவர்களுக்கிடையில் நடந்த சகோதர படுகொலைகள் ஓரளவு மக்கள் அறிந்திருந்தாலும் புளட் இயக்தில் நடந்த உட் கொலைகள் விபரம் மக்களுக்கு தெரியவில்லை.

இந்த உட் கொலைகள் உமாமகேஸ்வரனின் கையால் நடக்கவில்லை என்றாலும் அமைப்பின் தலைவர் என்ற ரீதியில் அவருக்கு பொறுப்பு இருக்கிறது.

குறிப்பாக அமைப்பின் அடுத்த தலைவராக இருந்த சந்ததியாரின் கொலைக்கு உமாமகேஸ்வரனே பொறுப்பு என்று டேவிட் அய்யா தமிழக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அப்பொது உமாமகேஸ்வரனும் புளட் இயக்கமும் தமிழக முதல்வாரன எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளையாக இருந்ததால் பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஈழ விடுதலை இயக்கங்கள் தமக்கிடையேயான சகோதரப் படுகொலைகள் நடத்தியிருக்காவிடின் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று கருணாநிதி 2009ல் கூறியிருந்தார்.

ஆனால் உண்மையில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நினைத்திருந்தால் சகோதரப் படுகொலைகளை ஓரளவு நிறுத்தியிருக்க முடியும்.

அவர்கள் இருவரும் தமக்கு சார்பாக இயக்கங்களை வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினரே யொழிய இயக்கங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என விரும்பவில்லை.

இந்நிiயில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை யடுத்து புளட் தலைவர் உமா மகேஸ்வரன் இலங்கை வந்து கொழும்பில் தங்கியிருந்து செயற்பட்டார்.

அவர் கொழும்பில் இருந்து செயற்பட்டபோது 16.07.1989 யன்று சில புளட் இயக்க போராளிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொங்கு சுயம்வரங்கள்

#கொங்கு சுயம்வரங்கள்#
(பொறுப்புத் துறப்பு:
சில விஷயங்களுக்கான தீர்வுகள் கிடைக்க அவற்றைப் பொதுவெளியில் உடைத்துப் பேச வேண்டியிருக்கிறது. யாரையும் புண்படுத்துவது இந்தப் பதிவின் நோக்கமல்ல.)
//
34 வயசுக்குமேல் உள்ள ஆண்களும்
28 வயசுக்குமேல் உள்ள பெண் வரன்கள் கலந்து கொள்ளும் ...
கொங்கு கவுண்டர்கள் மணமாலை
*சுயம்வரம் விழா*
*08.07.2018* அன்று
பெருமாநல்லூர் to திருப்பூர் சாலையில்
அண்ணா நகரில் உள்ள
*A.K.C.ஹாலில்* நடைபெறும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…..
//
இந்த விளம்பரத்தைத் தொடர்ந்து இந்த சுயம்வரத்துக்காகக் கூடிய கூட்டத்தில் அந்தப் பகுதியே ஸ்தம்பித்துள்ளது. ஆனால் அங்கே கூடிய அனைவருமே திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்கள் மட்டுமே. பெண்கள் யாரும் வராததால் அல்லது மிகக் குறைந்த அளவே வந்திருந்ததால் நிகழ்ச்சி பெரிய தோல்வியில் முடிந்திருக்கிறது. இத்தனைக்கும் 5 வயதுக்குள் குழந்தை உள்ள மறுமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அழைப்பு இருந்தது. இதையடுத்து கவுண்டர் சமுதாயத்தில்தான் பெண் வேண்டும் என்று அச்சமுதாயத்து ஆண்கள் காத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை, கிடைத்த சாதியில் திருமணம் செய்து கொள்ளுங்கள் மாப்ளைகளா என்று வெளியான ஒரு பதிவு பலராலும் பல கோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் இது நகைச்சுவையாகவோ, நக்கல் நையாண்டியாகவோ அணுகக்கூடிய ஒரு விஷயம் அல்ல. நடைமுறையில் காணப்படும் விடை தேடப்பட வேண்டிய ஒரு சமுதாயப் பிரச்னை.
ஒரு வகையில் பார்த்தால் தாங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் விதைத்ததையேதான் அறுவடை செய்து வருகிறது கொங்கு சமுதாயம். ஆதியிலிருந்து விவசாயம்தான் கவுண்டர் சமுதாயத்தின் ஒரே தொழில். ஆண் பிள்ளை பிறந்தால்தான் காலங்காலத்துக்கும் உழைத்துப் போடுவான். வீட்டிலேயே இருந்து விவசாயத்துக்கு உதவுவான். பெண் பிள்ளை என்றால் திருமண வயது வந்ததும் அடுத்த வீட்டுக்குப் போய் விடுவாள். செலவு வேறு. 'பொட்டப் பெருக்கான்' என்று முதியவர்கள் பெண்களை இழிவாக அழைப்பதை நானே கேட்டிருக்கிறேன். எனக்கு இரண்டாவது மகள் பிறந்தபோது 'அட ரெண்டும் புள்ளயாப் போச்சா, அட உடு பொட்டப்புள்ளதான் நாளக்கி போனா மேல உளுந்து அழுவும்' என்று ஏதோ துக்கம் விழுந்தது போல ஆறுதல் கூறியவர்கள் உண்டு. அதற்கு முக்கியமான காரணம் வரதட்சணை. அம்பது – அம்பது, இரவத்தஞ்சு – இரவத்தஞ்சு, 1 கிலோ என்பதெல்லாம் திருமணப் பேச்சின்போது காதில் விழும் தங்கத்தைக் குறிக்கும் அளவீடுகள். மாப்பிள்ளையின் படிப்பு மற்றும் வசதி பொறுத்து கார், இரு சக்கர வாகனம் என்று இத்யாதிகள் கூடும். இப்படி எதுவும் வாங்காமல் இருந்தால் மாப்பிள்ளையிடம் குறை இருக்குமோ என்று சந்தேகம் வேறு எழுப்புவார்கள். இது தவிர திருமணச் செலவு முழுமையும் பெண் வீட்டார் ஏற்க வேண்டும். பத்து பதினைந்து ஆண்டுகள் முன்பு வரை இதுதான் அங்கு நிலை.
இதன் காரணமாக பெண் பிள்ளைகள் பெற்றுக் கொள்வதை கடந்த முப்பது, நாற்பது வருடங்களாக பல விதமான வழிகளில் தவிர்த்து வந்தது கொங்கு சமுதாயம். மரபிலேயே பெண் குழந்தை என்றால் தாழ்வு என்ற எண்ணம் பதிந்திருந்ததுதான் காரணம். ஒரு தம்பதிக்கு முதலில் மகன் பிறந்தால் அடுத்து பிள்ளை பெறுவதைத் தவிர்த்து விடுவார்கள். வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளை இருக்கும் இடங்களில் பெரும்பாலும் ஆண் பிள்ளைகள்தான். வயிற்றில் இருக்கும் பிள்ளை ஆணா பெண்ணா என்று அறிவிப்பது சட்டப்படி குற்றமாக்கப்படும் வரை பெண் என்று அறிந்து கருவை அழித்தவர்களும் உண்டு. இப்படியாக ஆண் பெண் சம நிலையற்ற ஒரு சூழல் அந்தப் பகுதியில் கடந்த ஒரு தலைமுறையாக அங்கு மெல்ல உருவாகி வந்திருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக பெண்களைப் படிக்க வைக்கும் வழக்கம் தமிழகத்தின் எந்தப் பகுதியையும் விட (கன்னியாகுமரி தவிர்த்து) கொங்கு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. சதவிகித அளவில் பெரும்பாலான பெண்கள் பள்ளியைத் தாண்டி கல்லூரி வரை படிக்கிறார்கள். முக்கியமாக பையன்களை விட அவர்கள் நன்றாகவே படிக்கிறார்கள். கொடுமை என்னவென்றால் பெண்கள் அப்படி முனைந்து படிப்பது வேலைக்குப் போவது என்ற லட்சியத்துக்காக இல்லை. ஆனால் படித்த வேலைக்குப் போகும் மாப்பிள்ளை வேண்டுமென்றால் குறைந்த பட்சம் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும். இப்படியாக வருடக்கணக்கில் ஒரு நல்ல மாப்பிள்ளைக்காக தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் கட்டாயத்துக்கு இந்த சமூகப் பெண்கள் தொடந்து தள்ளப்பட்டு வந்திருக்கிறார்கள். அந்தப் பந்தயத்தில் ஓட ஆரம்பித்த அவர்களை இப்போது மாப்பிள்ளைகள் துரத்த வேண்டிய சூழல். இளநிலைப் பட்டதாரிப் பெண்ணைத் திருமணம் செய்ய மாப்பிள்ளைகள் முதுநிலைப் பட்டதாரி ஆகவேண்டும். இளங்கலை படித்த பெண்ணைத் திருமணம் செய்ய பொறியாளர் ஆக வேண்டும்.
இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம். ஆண் பிள்ளைகள் பெறுவதை மட்டுமே விரும்பிய ஒரு சமூகத்தால் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டிருந்த சமனற்ற பாலினநிலை, ஆண்களை விட விகிதாச்சார அடிப்படையில் அதிகம் படிக்கும் பெண்கள் இவற்றோடு புலம் பெயர்ந்த கொங்கு சமுதாயத்தினர் சொந்த சாதிக்குள் திருமணம் செய்ய நகரங்களிலிருந்தும் கடல்கடந்தும் பெண் தேடிவரும் போட்டிச் சூழலும் சேர்ந்துகொண்டுள்ளது. ஐடி துறையின் வளர்ச்சியால் பெண்களும் பெருமளவு வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருப்பது இந்த சிக்கலின் அடுத்தகட்ட நகர்வு. இப்படி பல காரணிகளால் முப்பது வயதுக்கு மேற்பட்ட, நல்ல பொருளீட்டும் வேலையில் இல்லாத, சொந்த ஊரிலேயே வசிக்கும் கொங்கு சமுதாய ஆண்களுக்கு திருமணம் நடப்பது கிட்டத்தட்ட இயலாத காரியமாகியிருக்கிறது. இவற்றில் குலத்தொழிலான விவசாயம் செய்பவர்களும் அடக்கம். இங்கே விவசாயத்தைத் தனிமைப் படுத்திப் புறக்கணிக்கவேண்டும் என்பது பெண்களின் நோக்கமல்ல, ஆனால் புறக்கணிக்கப்படும் தொழில்களில் தனது நிலையற்ற வருமானத்தின் காரணமாக விவசாயம் சேர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த நாற்பது வருடங்களில் விவசாயத்துக்காக தனது பிள்ளையைத் தயார் செய்வதை இந்தச் சமூகமே முற்றாக நிறுத்திவிட்ட நிலையில் பெண்களிடம் மட்டும் அப்படி ஒரு தியாகத்தை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.
கூடவே, சாதியைத் தாண்டிய திருமணம் என்பது கவுண்டர் சமுதாயத்தில் சாத்தியமில்லாத ஒன்று. சட்டப்படி அது குற்றமில்லை என்றாலும் அப்படி செய்தவர்கள் உறவுகளிலிருந்து ஒதுக்கியே வைக்கப்படுவார்கள். உள்ளூரில் நிறைய சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். சொந்த பந்தங்களின் கேள்விகளுக்கும் அறிவுரைகளுக்கும் பதில் சொல்ல நேரிடும். நீங்கள் பெருநகரங்களில் வாழ்ந்தாலும் விசேடங்களில் தலை காட்ட முடியாது. இப்படியான காரணங்களால் பெண் கிடைக்காத சூழலிலும் பல ஆண்கள் வயது கடந்து காத்திருக்க நேரிடுகிறது. இது சம்மந்தமான அந்த முகநூல் பதிவு சொல்லியிருக்கும்படி சொந்த சாதிப் பெண்களுக்காக காத்திருப்பதில் பொருளில்லை என்ற முடிவைச் சிலர் எடுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கேரளாவிற்குச் சென்று திருமண செலவுகள் செய்து தாங்களே நகைகளும் போட்டு மலையாளப் பெண்களைத் திருமணம் செய்து கூட்டி வரும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதற்காகவே தனியான தரகர்கள் உண்டு. வேற்று சாதியை விட இது கொஞ்சம் பரவாயில்லை என்ற சமாதானத்துக்கு சில குடும்பத்தினர் வந்திருக்கிறார்கள். பெண் தட்டுப்பாடு காரணமாக விதவைகள், மணமுறிவு ஏற்பட்ட பெண்களுக்கு மிக எளிதில் வரன்கள் கிடைக்கின்றன. படித்த, வசதியான மாப்பிள்ளைகளுக்கு இன்றும் வரதட்சணை கேட்கப்படுகிறது என்றாலும் இவ்வளவு வேண்டுமென்று கட்டாயப்படுத்துதல், தொடர்ந்து பெண் வீட்டாரைக் கொடுமைக்கு ஆளாக்குதல் ஆகியவை குறைந்து வருகின்றன.
இந்தப் பிரச்னை இனி எந்தத் திசையில் திரும்பும் என்று தெரியாது. ஆனால் இது கொங்கு சமுதாயத்தின் இறுக்கமான கட்டுமானத்தை சிறிது அசைத்துப் பார்த்திருக்கிறது. இதனால் பிற சாதியிலிருந்து வரன்களை ஏற்றுக் கொள்ளும் நிலை அங்கு வரும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. இதற்காக கொங்கு சமுதாயப் பெண்களை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை. தங்களுக்குக் காலங்காலமாக மறுக்கப்பட்ட தனது துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத்தான் அவர்கள் சமீப காலங்களில் மீட்டெடுத்து வருகிறார்கள். அதற்கு இயற்கையும் பொருளாதார மாற்றங்களும் கல்வியும் அவர்களுக்கு உதவியிருக்கின்றன. அதே நேரம், அந்தச் சமூகமும் இந்த இளைஞர்களின் விரக்தியை வெறும் மீம் போடும் விஷயமாகவோ பெண்கள் வேண்டுமென்ற வன்மத்துடன் செய்வதாகவோ தட்டையாகப் பார்க்காமல் இதன் தீவிரத்தை நீண்டகால அடிப்படையில் உணரத் தொடங்க வேண்டும். இந்தப் பிரச்னை ஒரே நாளில் உருவானதில்லை. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளில் பல முனைகளிலிருந்து மெல்ல உருக்கொண்டு இன்று தீவிர நிலையை அடைந்திருக்கிறது. இதை விரைவாகத் தீர்க்க நிறைய அடிப்படை மாற்றங்களும் வெளிப்படையான உரையாடல்களும் தேவை. தங்களுடைய எதிர்பார்ப்புகளை இத்துடன் சம்மந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் இன்று அனைவர் முன்பாகவும் எழுந்து நிற்கும் கேள்வி.