Thursday, November 21, 2019

ஆதிதமிழர்களின் வரலாற்றை இரண்டே நிமிடத்தில் சொல்ல டாக்டர் திருமாவளவன் அவர்களால் மட்டுமே முடியும்

ஆதிதமிழர்களின் வரலாற்றை இரண்டே நிமிடத்தில் சொல்ல டாக்டர் திருமாவளவன் அவர்களால் மட்டுமே முடியும்.

(என் குறிப்பு: இந்து என்கிற பெயரில் முதல் முதலில் அழைத்தவர்கள் சிந்து நதிக்கரையில் வணிகம் செய்ய வந்த அரேபியர்கள். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் யாரெல்லாம் கிறித்தவர், முஸ்லிம் இல்லையோ அவர்கள் ஹிந்துக்கள் என அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் முந்தையது சைவம். ஆரியர் வருகைக்கு பின் வேத காலத்தில் வைணவம் பரவியது. பிற்காலத்தில் சைவம், வைணவம் பின்பற்றிய மக்கள் சடங்குகளை எதிர்த்து தோன்றிய புரட்சிகர மதங்களான பௌத்தம், சமணத்தை ஏற்றனர்.

இதில் சமணத்தை ஏற்றவர்கள் சைவர்களால் கழுவேற்றப்பட்டனர். இன்றும் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு சைவ கோவில்களின் சமணர்கள் கழுவேற்றப்பட்ட சிலைகளை காணலாம்.

பௌத்தத்தை ஏற்றவர்கள் புத்தர் மறைந்த பின் வைணவர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். பலர் எரித்து கொல்லப்பட்டனர். புத்த விஹார்கள் பெருமாள் கோவில் ஆக மாறின. விரட்டி அடிக்கப்பட்ட மக்கள் தான் பிற்காலத்தில் தீண்டாமைக்கு ஆளாகினர்.

புத்தரின் காவி உடை, தாமரை போன்ற மத அடையாளங்களை தான் பார்ப்பனியம் முதல் பாஜக வரை பயன்படுத்தி வருகிறது! இங்கே இன்னொரு சந்தேகம் எழும்.. பிறகு ஏன் சிங்கள பௌத்தன் சைவ தமிழனை தாக்க வேண்டும்?

இலங்கையில் உள்ள தமிழர்கள் சைவத்தின் வழி வந்தவர்கள். சிங்கள பௌத்தர்கள் வட இந்தியாவில் இருந்து குடியேறிய வைண வழி தோன்றல்கள்.  மத அடையாளத்தில் அவர்கள் பௌத்தர்களாக இருந்தாலும் இன அடையாளத்தில் ஆரியர்கள்.

அதனால் தான் இலங்கையில் கொல்லப்பட்ட சைவ தமிழர்களுக்கு இந்துக்களின் கட்சி என கூறும் பாஜக எந்த கண்டனமும் வெளியிட்டதில்லை. மாறாக சிங்கள பௌத்தர்களுடன் கைகோர்த்து நிற்கிறது. அங்கே நடப்பது மத அரசியல் அல்ல, இன அரசியல்.)

விட்டில் பூச்சிகளாக அவர்களிடம் பலியாகின்றனர் பார்ப்பணரல்லாத அப்பாவி மக்கள். 😔

சுவாதி படுகொலையில் முஸ்லிம்கள் மீது அவதூறு பேசி சட்டம் ஒழுங்கு கெடுவது போல கருத்துச் சொன்ன ஒய்.ஜி.மகேந்திரன் கைது செய்யப்படவில்லை.

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சை ஆண்மையற்றவர்கள் என்று சொன்ன துக்ளக் குருமூர்த்தி கைது செய்யப்படவில்லை.

காவல்துறையினரிடமே ஹைகோர்ட்டாவது மயிராவது என்று சொல்லி சட்டத்துக்கு புறம்பாக பேசிய ஹெச்.ராஜா கைது செய்யப்படவில்லை.

பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாகவும், அவதூறாகவும் பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை.

பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சனாதன முறையை நியாயப்படுத்தியும்,  நாயையும் மனிதர்களையும் இணைத்தும் சாதி வெறியோடு கருத்துச் சொன்ன  வெங்கடகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்படவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணின் கன்னத்தில் அடித்த தீட்சிதர் தர்ஷன் இதுவரை கைது செய்யப்படவில்லை.

விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகை காயத்ரி ரகுராம் கைது செய்யப்படவில்லை.

இவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு கொண்ட பார்ப்பண சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

இதே பாஜக, ஆர்.எஸ்.எஸ்-சுடன் தொடர்பு உள்ள பார்ப்பணரல்லாத கல்யாண ராமன் போன்றவர்களை எல்லாம் மிகவும் இலகுவாக கைது செய்யும் அரசு இயந்திரம் ஒரு பார்ப்பண சமுதாயத்தை சேர்ந்தவரை கைது செய்ய முடியவில்லை. அவர்கள் குற்றமிழைத்துள்ளனர் என்று தெளிவாக தெரிந்தும் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை.

இந்த உண்மைகள் எல்லாம் இவ்வளவு தெளிவாக தெரிந்தும் விட்டில் பூச்சிகளாக அவர்களிடம் பலியாகின்றனர் பார்ப்பணரல்லாத அப்பாவி மக்கள். 😔

நவீன பார்ப்பணர்களின் சிந்தனைக்கு,

நவீன பார்ப்பணர்களின் சிந்தனைக்கு,

உண்மையிலேயே எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது,

இன்றைய சூழலிலும், சிதம்பரம் கோவிலில், கேள்வி கேட்கும் ஒரு அம்மாவை ஒரு பார்ப்பண தீட்சிதரால், அடிக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது, IIT நிர்வாக தலைமையை கேள்வி கேட்கும் ஒரு விரிவுரையாளரின் வாழ்க்கையவே நாசம் செய்ய முடிகிறது, IITல் நன்றாக படித்த இஸ்லாமிய பெண்ணை தற்கொலை செய்யத் தூண்ட முடிகிறது. 
அப்படியென்றால் 1950களின் நிலைமை???!!!!

இப்படி ஒரு சூழலில் வன்னியர், கள்ளர், நாடார், வலையர், அம்பட்டர், பறையர், பள்ளர் சமூகத்திலிருந்து புதிய பரிணாம வளர்ச்சி எடுத்திருக்கும் நவீன பார்ப்பணர்களை நினைத்து சிரிப்பதா, வேதனைப்படுவதா தெரியவில்லை. ஏனெனில் 60களில் நவீன பார்ப்பணர்களாக பரிணாம வளர்ச்சி எடுத்த முதலியார், பிள்ளை, வெள்ளாளர், செட்டியார் போன்றவர்கள் பார்ப்பணீயத்தின் சட்டத்தில் இருந்து ஒரு நூல் விலகினாலும், அவர்களை சாக்கடையில் போட்டு மிதித்தெடுக்கும். மதுரை ஆதீனமாக இருந்தாலும் சரி, திருவாடுதுறை ஆதீனமாக இருந்தாலும் சரி பார்ப்பணீயத்தை ஆதரிக்காமல் திராவிட சித்தாந்தத்தை ஆதரித்தால் பாலியல் குற்றச்சாட்டு அல்லது பணம் கொள்ளையடித்த குற்றச்சாட்டு. அவர்களுக்கே அந்த நிலை.
அது போகட்டும்.

இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, 70களில் கலைஞரின் நிலையை நினைத்துப் பார்க்கிறேன்.

சிங்கம், புலி, சிறுத்தை, Leopard, Jaguar, Panther போன்ற வலிமை மிக்க மிருகங்களுக்கு நடுவில் ஒரு மான், தன்னை மட்டும் காக்க போராடாமல் தன்னைப்போலவே உள்ள ஆடு, மாடு போன்ற வலிமை குறைந்த மிருகங்களையும் காக்க போராடியதைப் போன்ற ஒரு சூழ்நிலைதான், அன்றைக்கு கலைஞரின் சூழ்நிலை.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத, ஆங்கில புலமை இல்லாத ஒருவர்
நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,
தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், கோட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஊடகங்கள் என எல்லோருமே பார்ப்பணர்கள் அல்லது நவீன பார்ப்பணர்களான முதலியார், பிள்ளை, வெள்ளாளர், செட்டியார் போன்றவர்கள்தான். அவர்களிடம் வேலை வாங்க வேண்டும்.

ஏற்றுக் கொள்வார்களா?!!!

கலைஞர் மீது எவ்வளவு தனிமனித தாக்குதலை தொடுத்தனர்.

ஆனாலும், 
எவ்வளவோ பிரச்சினைகள், தொந்தரவுகள், இழப்புகள், அவமானங்கள் என்று எல்லாவற்றையும் எதிர் கொண்டு
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்காக எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ அதனை செய்து முடித்தது மட்டமல்லாமல் தமிழ்நாட்டையும் வளர்ச்சி பாதையில் எடுத்து வந்துள்ளார் என்றால்,

#கலைஞர் எவ்வளவு வலிமை மிக்க மனிதர்.

Tuesday, November 19, 2019

நீதி கட்சியின் 103 வருடங்கள் (103 Years Of Justice Party தமிழ்)

நவம்பர் 20. (1916)
தமிழ் நாட்டில் திராவிட மக்களின் (பார்ப்பனரல்லாதோர்) முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்த திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி 103 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்:

சென்ற நூற்றாண்டின் (20-ஆம் நூற்றாண்டு) துவக்கத்தில், திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்லூரி படிப்பை சென்னையில் தங்கிப் படிக்கவும், உண்ணவும் விடுதிகள் இன்றி கஷ்டப்பட்டனர். பார்ப்பனர் விடுதிகளில் அவர்கள் தங்கிடவும், உண்ணவும் கூட அனுமதியில்லை.

“திராவிடர் சங்கம்”, “திராவிடர் இல்லம்” என இரண்டு அமைப்புகளை, பார்ப்பனர் அல்லாத மக்களின் நல்வாழ்விற்காகத் தனிமனிதனாக நின்று தொடங்கித் தொண்டாற்றிய டாக்டர் சி. நடேசனார், 1916 சூலைத் திங்கள் திருவல்லிக்கேணி அக்பர் சாயபு தெருவில் திராவிடர் இல்லத்தினைத் தொடங்கி திராவிட மாணவர் தங்கி படிப்பதற்குத் துணை புரிந்தார்.

இங்கே தங்கிப் படித்த ஆர்.கே. சண்முகம், பிற்காலத்தில், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகவும், எஸ். சுப்பிரமணியம் உயர்நீதிபதியாகவும், தி.மூ. நாராயணசாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் உயர்வு பெற்றார்கள்.

காங்கிரஸ் இயக்கம் வடநாட்டார் ஆதிக்கமும், தென்னாட்டுப் பார்ப்பனர் ஆதிக்கமும் கொண்ட இயக்கம் என்பதை சர். பிட்டி. தியாகராயரும், (டி.எம். நாயர் என அழைக்கப்பட்ட) டாக்டர் தாராவத் மாதவனும் நன்கு உணர்ந்திருந்தனர். தென்னிந்திய திராவிட மக்களுக்கு காங்கிரசு அநீதி இழைத்து வருவதை அறிந்து அவ்வியக்கத்தினின்றும் விலகியிருந்தனர்.

 இந்நிலையில் பார்ப்பனர் அல்லாதாரின் நலன்களுக்கு அச்சுறுத்தலாக ஹோம் ரூல் இயக்கம் தோன்றியதால், அவ்வியக்கத்தையும் திராவிடர் நலன் கருதி எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் பார்ப்பனரல்லாத தலைவர்கள் இருந்தனர்.

ஆனால் இந்த இருபெரும் தலைவர்களும் சென்னை நகர சபை உறுப்பினராக இருந்த நேரத்தில் - 1913-களில் நடைபெற்ற சில நிகழ்வுகளால் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர்.

சில ஆண்டுகள் பேசிக்கொள்ளாமலிருந்த டாக்டர் தாராவத் மாதவன், சர். பிட்டி. தியாகராயர் ஆகிய இருவரையும் ஒன்றிணைய வைத்தவர் டாக்டர் சி. நடேசனார் ஆவார்.

பொது நலனின் பொருட்டு சொந்த ஆசைகளையும், கோபதாபங்களையும் அடக்கி ஆளக்கூடிய பெருமக்களாக டாக்டர் தாராவத் மாதவனும், சர். பிட்டி. தியாகராயரும் விளங்கினார்கள். தங்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், பார்ப்பனரல்லாத மக்களின் வாழ்வியல் உரிமைகளைக் காப்பாற்றும் கொள்கையின் பொருட்டு வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுபட்டனர்.

இப்பெரும்  தலைவர்கள் ஒன்றுபட்டதன் விளைவாக, 1916 நவம்பர் 20ஆம் நாளன்று சர். பிட்டி. தியாகராயர், டாக்டர் தாராவத் மாதவன், டாக்டர் சி. நடேசன், மேலும் ஏறத்தாழ 30 பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் கூடி, “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” (South Indian Liberal Federation) என்ற அரசியல் அமைப்பினைத் தொடங்கினர். சென்னை விக்டோரியா பொது அரங்கில், (சென்னை சென்டிரல் நிலையத்திற்கும் – மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்திற்கும் இடையில் உள்ள அரங்கம்) இது நடைபெற்றது.

அமைப்பின் சார்பில் ‘ஜஸ்டிஸ்’ (Justice) என்ற ஆங்கில ஏடு தொடங்கப்பட்டது. தமிழில் ‘திராவிடன்’ என்ற நாளிதழும், தெலுங்கில் ‘ஆந்திரப்பிரகாசிகா’ என்ற நாளிதழும் வெளியிடப்பட்டன.

திராவிட மக்கள் (பார்ப்பனரல்லாதார்) முன்னேற பாடுபட்ட தலைவர்கள் குறிப்பாக டாக்டர் நடேசனார், டாக்டர் தாராவத் மாதவன், சர்.பிட்டி.தியாகராயர் ஆகிய மூவரின் தொண்டையும் நாம் மறக்கலாகாது. இது நமக்கு மகிழ்வையும், பெருமையையும் தருகின்றது என்றாலும், மீண்டும் பார்ப்பன மேலாதிக்கம் தற்போது தலைவிரித்தாடும் நிலையிலும், அதற்கு துணைபோகும் ஆரிய அடிவருடிகள் மிகுந்துள்ள நிலையிலும், திராவிடர் இயக்க முன்னோடிகளின் செயல்பாட்டையும், தியாகத்தையும் நினைவுபடுத்திடவும், செயல்படுத்திடவும் நாம் முனைவோம்.

-கோ.கருணாநிதி

#103YearsOfJusticeParty
#DravidanMovement

கருப்புச்சட்டை அணியுங்கள்

கருப்புச்சட்டை அணியுங்கள்

யாராவது, 'ஏனப்பா கறுஞ்சட்டை அணிந்து கொள்கிறீர்கள்', என்று கேட்டால் ' நான் என்னமோ சட்டப்படி சாஸ்திரப்படி சூத்திரனாம்.பார்ப்பானின் தாசி மகனாம். அப்படி இருக்க எனக்கு இஷ்டமில்லை. அது எனக்கு அவமானமாக, துக்ககரமாக இருக்கிறது
அந்த இழிவை உணர்ந்திருக்கிறேன்.அதைப் போக்கிக் கொள்ள முயற்சிப்பேன் என்பதன் அறிகுறியாக இதை அணிந்து கொள்கிறேன்.'

பெரியார்
விடுதலை 11.3.1948

Achievements and Legacies of key Justice Party leaders

Achievements and Legacies of key Justice Party leaders

Raja of Panagal, the Premier of Madras (1921-1926)

▪ 1921 - removed gender as a criteria for running for legislature

▪ 1921 - expanded Madras Corporation's mid-day meal scheme of 1920 in Thousand Lights school to four more schools.

▪ 1921 - Hindu Religious Endowments Bill, opposed by brahmin members of the assembly as intrusion in religious affairs by government

▪ 1921 - Communal Government Order (GO) 613 - introduced caste-based reservation in Madras; 44% for non-brahmins, 16% for brahmins, 16% for muslims, 16% for Anglo-Indians and christians, 8% for panchamas

▪ 1921 - Dr. Gour's Bill - amended Special Marriages Act to sanction legal validity of inter-caste marriages

▪ 1922 - Madras State Aid to Industries Act, unopposed. state policy to advance loans to developing industries

▪ 1923 - Madras University Act, broke brahmin domination of Madras University

▪ 1923 - utilized provisions of Madras Town Planning Act of 1920 to create Theagaroya Nagar, created a railway station in Mambalam

▪ 1925 - Andhra University Act

▪ throughout his tenure, he improved medical facilities, water supply, and communication facilities in rural areas.

P. Subbarayan, Premier of Madras (1926-1930)

▪ 1927 - enacted GO 1020 to implement GO 613, reduced reservation percentages for brahmins & non-brahmins, and increased muslims/Anglo-Indians/christians/panchamas percentages

▪ 1932 - introduced Temple Entry Bill that made refusal of entry into temples by dalits and low-caste hindus illegal. This was not accepted by the Viceroy citing it as a national issue and shouldn't be dealt at a provincial level.

Ramakrishna Ranga Rao of Bobbili, Premier of Madras (1932-1936, 1936-1937)

▪ 1933 - Estates Land Act of 1933 - amended Estates Land Act of 1908 to safeguard rights of cultivators and freed from bondage. This was widely opposed by zamindars.

Dr. Muthulakshmi Reddi, Legislator

▪ Many firsts -  first female student to be admitted into a men's college, the first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital, the first woman legislator in British India, the first Chairperson of the State Social Welfare Advisory Board, the first woman Deputy President of the Legislative Council, and the first Alderwoman of the Madras Corporation Avvai Home

▪ 1930 - Introduced the Devadasis Abolition Bill. Enacted into the Madras Devadasis (Prevention of Dedication) Act in 1947, suppression of brothels and immoral trafficking in women and children.

▪ 1935 - Expressed the desire to open a hospital for Cancer treatment and created the Cancer Relief Fund, which became Adyar Cancer Institute in 1952

▪ Opened a hostel for muslim girls, and started scholarships for Harijan girls.
09/01/2018, 9:58 pm - Manoj: Achievements and Legacies of key Justice Party leaders

Raja of Panagal, the Premier of Madras (1921-1926)
▪ 1921 - removed gender as a criteria for running for legislature
▪ 1921 - expanded Madras Corporation's mid-day meal scheme of 1920 in Thousand Lights school to four more schools.
▪ 1921 - Hindu Religious Endowments Bill, opposed by brahmin members of the assembly as intrusion in religious affairs by government
▪ 1921 - Communal Government Order (GO) 613 - introduced caste-based reservation in Madras; 44% for non-brahmins, 16% for brahmins, 16% for muslims, 16% for Anglo-Indians and christians, 8% for panchamas
▪ 1921 - Dr. Gour's Bill - amended Special Marriages Act to sanction legal validity of inter-caste marriages
▪ 1922 - Madras State Aid to Industries Act, unopposed. state policy to advance loans to developing industries
▪ 1923 - Madras University Act, broke brahmin domination of Madras University
▪ 1923 - utilized provisions of Madras Town Planning Act of 1920 to create Theagaroya Nagar, created a railway station in Mambalam
▪ 1925 - Andhra University Act
▪ throughout his tenure, he improved medical facilities, water supply, and communication facilities in rural areas.

P. Subbarayan, Premier of Madras (1926-1930)
▪ 1927 - enacted GO 1020 to implement GO 613, reduced reservation percentages for brahmins & non-brahmins, and increased muslims/Anglo-Indians/christians/panchamas percentages
▪ 1932 - introduced Temple Entry Bill that made refusal of entry into temples by dalits and low-caste hindus illegal. This was not accepted by the Viceroy citing it as a national issue and shouldn't be dealt at a provincial level.

Ramakrishna Ranga Rao of Bobbili, Premier of Madras (1932-1936, 1936-1937)
▪ 1933 - Estates Land Act of 1933 - amended Estates Land Act of 1908 to safeguard rights of cultivators and freed from bondage. This was widely opposed by zamindars.

Dr. Muthulakshmi Reddi, Legislator
▪ Many firsts -  first female student to be admitted into a men's college, the first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital, the first woman legislator in British India, the first Chairperson of the State Social Welfare Advisory Board, the first woman Deputy President of the Legislative Council, and the first Alderwoman of the Madras Corporation Avvai Home
▪ 1930 - Introduced the Devadasis Abolition Bill. Enacted into the Madras Devadasis (Prevention of Dedication) Act in 1947, suppression of brothels and immoral trafficking in women and children.
▪ 1935 - Expressed the desire to open a hospital for Cancer treatment and created the Cancer Relief Fund, which became Adyar Cancer Institute in 1952
▪ Opened a hostel for muslim girls, and started scholarships for Harijan girls.
09/01/2018, 11:07 pm - Manoj: Achievements and Legacies of key Justice Party leaders

Raja of Panagal, the Premier of Madras (1921-1926)
▪ 1921 - removed gender as a criteria for running for legislature
▪ 1921 - expanded Madras Corporation's mid-day meal scheme of 1920, first introduced by PT Thiagarajar in Thousand Lights school to four more schools.
▪ 1921 - Hindu Religious Endowments Bill, opposed by brahmin members of the assembly as intrusion in religious affairs by government
▪ 1921 - Communal Government Order (GO) 613 - introduced caste-based reservation in Madras; 44% for non-brahmins, 16% for brahmins, 16% for muslims, 16% for Anglo-Indians and christians, 8% for panchamas
▪ 1921 - Dr. Gour's Bill - amended Special Marriages Act to sanction legal validity of inter-caste marriages
▪ 1922 - Communal GO 785 to replace the word Panchamas with Adi Dravidas in government documents
▪ 1922 - Madras State Aid to Industries Act, passed unopposed. state policy to advance loans to developing industries
▪ 1923 - Madras University Act, broke brahmin domination of Madras University; ordered all schools and colleges to increase enrolment of non-brahmin students
▪ 1923 - utilized provisions of Madras Town Planning Act of 1920 to create Theagaroya Nagar, created a railway station in Mambalam
▪ 1925 - Andhra University Act
▪ throughout his tenure, he improved medical facilities, water supply, and communication facilities in rural areas.

P. Subbarayan, Premier of Madras (1926-1930)
▪ 1927 - enacted GO 1020 to implement GO 613, reduced reservation percentages for brahmins & non-brahmins, and increased muslims/Anglo-Indians/christians/panchamas percentages
▪ 1928 - ordered enrolment of non-brahmin students in Madras Presidency College
▪ 1932 - introduced Temple Entry Bill that made refusal of entry into temples by dalits and low-caste hindus illegal. This was not accepted by the Viceroy citing it as a national issue and shouldn't be dealt at a provincial level.

Ramakrishna Ranga Rao of Bobbili, Premier of Madras (1932-1936, 1936-1937)
▪ 1933 - Estates Land Act of 1933 - amended Estates Land Act of 1908 to safeguard rights of cultivators and freed from bondage. This was widely opposed by zamindars.

Dr. Muthulakshmi Reddi, Legislator
▪ Many firsts -  first female student to be admitted into a men's college, the first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital, the first woman legislator in British India, the first Chairperson of the State Social Welfare Advisory Board, the first woman Deputy President of the Legislative Council, and the first Alderwoman of the Madras Corporation Avvai Home
▪ 1930 - Introduced the Devadasis Abolition Bill. Enacted into the Madras Devadasis (Prevention of Dedication) Act in 1947, suppression of brothels and immoral trafficking in women and children.
▪ 1935 - Expressed the desire to open a hospital for Cancer treatment and created the Cancer Relief Fund, which became Adyar Cancer Institute in 1952
▪ Opened a hostel for muslim girls, and started scholarships for Harijan girls.

ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த வரலாறு - ஜவஹர்லால் நேருவின் டிஸ்கோவேரி ஆப் இந்தியா

ஆரியர்கள் இந்தியாவில் சுமார் 3000 வருடம் முன்னர் நுழைந்த வரலாறு பற்றி அம்பேத்கரும் பெரியாரும் சொல்லியிருப்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் நிறைய பேருக்கு தெரியாத விஷயம் ஆரியர் இந்தியாவில் நுழைந்தது பற்றி *ஜவஹர்லால் நேரு* தெளிவாக விளக்கி இருப்பது பற்றி.

நவீன இந்தியாவின் சிற்பியும் இந்தியாவை 17 ஆண்டுகள் பிரதமராக இருந்து ஆண்டவருமான *ஜவஹர்லால் நேரு* தன்னுடைய மிக பிரபலமான *"டிஸ்கோவேரி ஆப் இந்தியா"* நூலில்  ஆரியர்கள் இந்தியாவின் வட மேற்கு எல்லை வழியாக ஈராக் ஈரானிலிருந்து எப்படி இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என்று தெளிவாக விளக்குகிறார். இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள் இங்கே தமிழர்களின் சிந்து சமவெளி நாகரீகத்தை எப்படி வீழ்த்தினார்கள், ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்களை எப்படி 4 வர்ணமாக வர்ணாசிரம் வைத்து பிரித்தார்கள் என்று தெளிவாக விளக்குகிறார்.

ஜவஹர்லால் நேரு வின் டிஸ்கோவேரி ஆப் இந்தியா புத்தகம் முழு PDF கீழே உள்ள லிங்க் இல் டவுன்லோட் செய்யலாம்.

http://varunkamboj.typepad.com/files/the-discovery-of-india-1.pdf

ஆரியர் இந்தியாவில் நுழைந்த முறை, அவர்கள் 4 வர்ண பயன்பாடு, தமிழர்/திராவிடர் வீழ்த்தப்பட்டது, சமஸ்கிரதத்துக்கும் சிங்களத்துக்கு உள்ள தொடர்பு, பெர்சிய மொழியும் சமஸ்கிரதமும் சகோதர மொழிகள், பிராமணர்களின் ரிக்/யசூர்/சாம/அதர்வண வேதம், ஈரானியர்களின்  அவெஸ்டா வேதம் இடையே உள்ள தொடர்புகள் போன்ற இந்த நூலில் உள்ள சில செய்திகளின் excerpt கீழே காணலாம். முழு விபரம் அறிய PDF புத்தகத்தை மேற்கண்ட லிங்க் இல் download செய்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

Page 71 : This emphasis on the agricultural aspect may have been given to it by the *newcomers, the Aryans who poured into India in successive waves from the north-west*.

Page 72 : *The Aryan migrations are supposed to have taken place about a thousand years after the Indus Valley period*; and yet it is possible that there was no considerable gap and tribes and peoples came to India from the north-west from time to time, as they did in later ages, and became absorbed in India. We might say that the *first great cultural synthesis and fusion took place between the incoming Aryans and the Dravidians*, who were probably the representatives of the Indus Valley civilization.

Page 75 : The Vedas were the outpourings of the *Aryans* as they stream-ed into the rich land of India. They brought their ideas with them from that common stock out of which *grew the Avesta in Iran*, and elaborated them in the soil of India. Even the lang-uage of the Vedas bears a striking resemblance to that of the Avesta, and it has been remarked that the Avesta is nearer the Veda than the Veda is to its own epic Sanskrit.

Page 82 : *The coming of the Aryans into India raised new problems racial and political* .The conquered race, the Dravidians, had a long background of civilization behind them, but there is little doubt that the *Aryans considered themselves vastly superior* and a wide gulf separated the two races.

Page 83 : It was in keeping with the spirit of the times and some such grading took place in most of the ancient civilizations, though apparently China was free from it. *There was a four-fold division in that other branch of the Aryans*, the Iranians, during the Sassanian period, but it did not petrify into caste.

Page 84 : *The Aryans not only divided society into four main groups but also divided the individual's life into four parts*: the first part consisted of growth and adolescence, the student period of life, acquiring knowledge, developing self-discipline and self-control, continence;

Page 141 : *The Aryans came here in repeated waves and mixed with the Dravidians*;

Page 144 : Among the many peoples and races who have come in contact with and influenced India's life and culture, the oldest and most persistent have been the Iranians. Indeed the relationship pre-cedes even the beginnings of Indo-Aryan civilization, for it was out of some common stock, that the Indo-Aryans and the ancient Iranians diverged and took their different ways. Racially con-nected, their old religions and languages also had a common background. The Vedic religion had much in common with Zoroastrianism, and Vedic Sanskrit and the old Pahlavi, the language of the Avesta, closely resemble each other. Classical Sanskrit and Persian developed separately but many of their root-words were common, as some are common to all the Aryan languages.

Page 166 : It is often difficult to say whether a word has come from Persian or Sanskrit, as the root words in both these languages are alike.

Page 168 : *Aryan language derived directly from Sanskrit*. *The Singhalese people have not only got their religion*, Buddhism, from India, but are racially and linguistically akin to Indians.

Right man 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣 வாஜ்பாய்

Right man 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

வாஜ்பாய் -  by Thameem Tantra

முதலில் வாஜ்பாய் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

வாஜ்பாய் என்றவுடன் எதையுமே முழுமையாக படிக்காதவர்கள் "வாஜ்பாய் is Right man in Wrong party, அவர் ஒரு ஜனநாயவாதி, அவர் ஒரு பூக்காத நெல்சன் மண்டேலா " என்று சொல்வார்கள்.

எனக்கு மோடிக்களை விடவும் வாஜ்பாய்க்கள் மீதுதான் பயம் !
வாஜ்பாய்க்கு வெகு  மக்களையே விஷமத்தன்மையாக மாற்ற தெரியும்.

வாஜ்பாய்தான் ஒரு தீவிர மதவாத இயக்கத்தை தன் முகமூடியால் வெகு மக்கள் ஆதரிக்கிற ஓர் அரசியல் கட்சியாக மாற்றினார்.

தான் செய்யும் காரியங்கள் அரசியல்ரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனால் அது பொதுவெளியில் பெரிதாக தெரியக்கூடாது என்று மிக கவனமாக இருப்பார். அதுதான் ப்ராஹ்மணர்களின் சூட்சமம்.

வாஜ்பாயின் நாக்கு:
----------------------------------
இரட்டை நாக்கு என்று சொல்லுக்கு ஒரு உருவம் கொடுத்தால் அது வாஜ்பாயாகவே இருக்கும்.

பாபரி மசூதி இடிப்புக்கு முந்தைய நாள் பாபரி மசூதியை தரைமட்டமாக்க வேண்டும் என்று பேசுவார். பிறகு NDTV அவரை பேட்டியெடுக்கும் போது "கரசேவகர்கள் கடப்பாரை எடுத்துக்கொண்டு மசூதியை இடிக்கவேண்டும்  என்றுதான் சென்றார்கள். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு 😂 உண்மையாகவே இடித்து விட்டார்கள்" என்பார்.

பத்திரிக்கைகள் இவரை வெளிநாட்டில் கேள்விகளால் துளைக்கின்றன...
அப்போ என்ன சொல்கிறார் ?

"ராமர் மிக சரியாக பாபரி மசூதி இருக்கும் இடத்தில்தான் பிறந்தார் என்று உறுதியாக சொல்லமுடியாது !"

குஜராத் கலவரம்:  கோத்ர ரயில் எரிப்புக்கு பிறகு சுமார் ஐந்து நாட்கள் பதட்டமான சூழ்நிலைக்கு பிறகே, 5வது நாள் மாலைதான், கலவரம் வெடிக்கிறது. அது சம்பந்தமாக அத்தனை இன்டெல்களும் வாஜ்பாய்க்கு தெரிவிக்கப்படுகிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. மயான அமைதி.

பிறகு கலவரம் சுமார் 15 நாட்களை கடந்து தொடர்ந்து நடக்கிறது. அப்பொழுதும் மயான அமைதி வாஜ்பாயிடம்.

 லோக் சபாவில் கடுமையான எதிர்ப்பிற்கு பிறகு வாஜ்பாய் வேண்டா வெறுப்பாக, மோடி பற்றி குறிப்பிடாமல், குஜராத் கலவரத்தை கண்டிக்கிறார்.

கண்டித்து மூன்றே நாட்களில் கோவாவில் RSS பொதுக்கூட்டம் நடக்கிறது. அப்போதும் குஜராத்தில் கலவரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. வாஜ்பாய் பேசுகிறார்...

"முஸ்லிம்கள் ஒரு கரையான்கள், எங்கெல்லாம் அவர்கள் செல்கிறார்களோ அங்கெல்லாம் அழிவு. எங்கெல்லாம் அவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எப்பொழுதும் வன்முறை"
இவை ஒரு மாபெரும் கலவரம் நடந்துகொண்டு இருக்கும்போது ஒரு பிரதமர் கூறிய வார்த்தைகள். மாபெரும் அன்பு ஜனநாயகவாதியான வாஜ்பாய் இப்படித்தான் பேசினார்.

இன்னொரு கொடுமை இருக்கிறது.

நாடாளுமன்ற தாக்குதலை காரணம் காட்டி POTA என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த அமல்படுத்தப்பட்டது மார்ச் 28,2002.

இந்த சட்டம் மூலம் குஜராத்தில்தான் முதன் முதலில் பல பேர் வேட்டையாடப்பட்டனர்.  புரியும்படி சொல்லுனும்னா சட்டத்துக்கு புறம்பாக கலவரம் மூலமாகவும், சட்டப்படி POTA மூலமாகவும் இஸ்லாமிய மக்கள் குறிவைத்து வேட்டையாடப்பட்டனர்.

Humans Rights Commission வாஜ்பாயின் மீது சரமாரி புகார்கள் வைக்க, எதையும் கண்டுகொள்ளவில்லை.

இங்கு பலபேர் "வாஜ்பாய்  ராமர் கோவில், Article 370. பொது சிவில் சட்டம் எல்லாம் கொண்டு வர முயற்சிக்கவில்லை" என்று புகழ்ந்து கொண்டு இருக்கின்றனர். யோவ் 😤 என்னையா சொல்றீங்க ?
அவர் இருந்தது கூட்டணி ஆட்சி.  மிருக பலத்துடன் ஆட்சிக்கு வந்த மோடி ராமர் கோவில், Article 370. பொது சிவில் சட்டம் எல்லாம் கொண்டு வந்துட்டாரா?

அப்போ மோடி வாஜ்பாயை விட நல்லவரா ? உங்கள் logicஇல் தீயை வைக்க 😡.  RSSக்கு என்றுமே இந்த மூன்று விஷயங்கள் பிரதானமாக இருந்ததில்லை. இது ஒரு பொலிடிகல் அஜெண்டா அவ்வளவுதான்.

அவர்களின் பிரதானமான குறிக்கோள்  infiltrating judiciary and bureaucracy. அது மட்டுமே நிரந்தர அதிகாரம். ஆனால் ஆட்சி மாறக்கூடியது. வாஜ்பாய் காலத்தில் இது மிக அதிகமாக  நடைபெற்றது.

வாஜ்பாய் ஆண்டது வெறும் ஆறு ஆண்டு காலம் மட்டுமே. இந்த காலகட்டத்தில் நடந்த மிக முக்கியமான நடந்த சம்வங்கள் ...

1. 1998, ஜனவரியில் கிருத்துவ பாதிரியார் கிரகாம் ஸ்டைன்ஸ் தன் குழந்தைகளோடு பஜ்ரங்தங் அமைப்பினரால் உயிரோடு கொளுத்தப்படுகிறார்.

2. சோ ராமசாமியின் அறிவுரையின் பெயரில் 1999ல்  ஸ்ரீனிவாச ஐயங்காரின் பேரன் RK ராகவன் CBIன் டைரக்டர் ஆக மாறுகிறார்.
இந்த RK ராகவன் தான் பிற்காலத்தில் குஜராத் கலவரத்தை விசாரித்த SIT தலைவர். நேரடி ஆதாரங்கள் கொட்டி கிடந்தும் மோடிக்கு clean சிட் கொடுத்தவர்.
3. சோ'வுக்கு நெருக்கமான Justice சதாசிவம் மேலிடத்திற்கு அறிமுகமாகுகிறார். அவர்தான் பின்னாளில் மோடியை உச்சநீதி மன்றத்தில் விடுவித்தவர்!

4. குஜராத் கலவரம் நடக்கிறது. 

5. POTA சட்டம் வருகிறது. நாடெங்கும் ஆயிரக்கணக்கானோர் வேட்டையாடப்படுகின்றனர்.

வாஜ்பாய்யின் நெல்லி படுகொலை பற்றிய பாராளுமன்ற உரையெல்லாம்  ஒரு தனி history  😡😤

இப்போ சொல்லு கண்ணா. வாஜ்பாய் யாரு?
அன்பான ஜனநாயகவாதி.... !

103 Years Of Justice Party

November 20 (1916)

It was on this historic day, 103 years ago, the foundation was laid by three leaders of the Dravidian Movement under the banner of South Indian Liberal Federation, popularly called as Justice Party, for the development of Dravidians (non-brahmins) in Tamil Nadu.

The poor people belonging to Dravidians find it to stay and to pursue their college studies in Chennai. They were barred from staying and dining in the hotels run by brahmins. This was the condition at the beginning of the 20th century in Tamil Nadu.

Dr.C.Natesan, a practicing as a Doctor in Triplicane, Chennai single-handedly started the ‘Dravidian Association” and also the “Madras Dravidian Association” and through that, the “Dravidian Home” at Akbar Sahib Street, Triplicane, Chennai in July 1916 for the Dravidian (non-brahmin) students to stay and study in Colleges.

It will be worth mentioning that Sir R.K.Shanmugam, the first Finance Minister of the Indian Republic, S.Subramanyam, the Judge of High Court, T.M.Narayanasamy, Vice-Chancellor of Annamalai University, all of them stayed in the Dravidian Home founded by Dr.C.Natesan.

Sir Pitty Theyagarayar and Dr.Taravath Madhavan (Dr.T.M.Nair) understood that then Congress party is dominated by the brahmins of South India and doing injustice to the Dravidians. They kept aloof from the activities of Congress. But the “Home Rule” movement started against the interests of the Dravidians (non-brahmins) forced the non-brahmin leaders to oppose that movement.

These two leaders were at loggerheads in the Madras Corporation Council and Dr.C.Natesan mediated with them to bring about a rapprochement. Sir Pitti Theyagarayar and Dr.Taravath Madhavan gave up their personal conflicts and came together for a great cause of Dravidian empowerment.

On 20 November 1916, Dr.C.Natesan, Sir Pitty Theyagarayar and Dr.Taravath Mathavan along with about thirty prominent non-Brahmin leaders met in Victoria Public Hall, Chennai and established the South Indian People's Association (SIPA) to publish English, Tamil and Telugu newspapers to publicise grievances of non-Brahmins.. The meeting also formed the "South Indian Liberal Federation" (SILF) as a political association. Later, the association came to be popularly called the "Justice Party", after the English daily Justice published by it.

Let us remember and pay our respects to these founder leaders of the Dravidian Movement who devoted their life to the development of the Dravidians (non-brahmins) in the then Madras Presidency. At a time when the brahmin dominance is spreading its octopus with more force and power across the country, the role played by these leaders of the Dravidian movement has to be cherished and pursued by us.

#103YearsOfJusticeParty

#DravidanMovement

Monday, November 18, 2019

வேதம்=சுயநலம். குறள்=பொதுநலம்

🌹🌹🌹🌹🌹🌹

இந்து மத மனு தர்மம் நான்கு வருணம் என்கிறது..👎
குறள் பிறப்பொக்கும் என்கிறது..👍

இந்து மதம் ஏர்பிடிப்பது சூத்திரனுக்குரியதாக கூறுகிறது..👎
குறள் உழவனைப் போற்றுகிறது..👍

இந்து புராணங்களில் சூதாட்டங்கள் வருகின்றன..👎
குறள் சூதாடுவது தவறு என்று கூறுகிறது..👍

பிராமணன் பிச்சை வாங்கி உண்ண வேண்டும் என்கிறது இந்து மதம்.👎
இரந்து வாழின் உலகியற்றியவன் கெட்டழியட்டும் என்கிறது குறள்..👍

மரணம் வந்தால் எந்தச் செயலையும் செய்யலாம் என்கிறது இந்து மதம்..👎
மானம் உயிரினும் பெரிது என்கிறது குறள்..👍

இந்து புராணங்களில் கடவுளுக்கே பல மனைவிகள் உண்டு..👎
குறள் பிறன்மனை நோக்காமை என்கிறது..👍

வேதம்..பசு, குதிரைகளை, வேள்வியில் இடலாம் என்கிறது..👎
குறள் கொல்லாமை பற்றி பேசுகிறது..👍

வேதம் விதி வலியது என்கிறது..👎
குறள் விதியை முயற்சியால் வெல்லலாம் என்கிறது. (ஊழையும் உட்பக்கம் காண்பர்.... குறள்).👍

வேதம் தாழ்ந்த சாதிகள் கல்வி கற்க கூடாது என்கிறது..👎
குறள் எல்லோரையும் கல்வி கற்கச் சொல்கிறது..👍

 வேதம்=சுயநலம்.
 குறள்=பொதுநலம்

திருவள்ளுவரை இந்து மதம் என்ற பெட்டிக்குள் அடக்கக் கூடாது. அது சுயநல அரசியலின் கூப்பாடு.

வாழ்க திருவள்ளுவர்..

வாழ்க திருக்குறள்..


💐💐💐

ஆகமவிதி ஆகாதவிதி இனியாவது திருந்துங்கப்பா!

சபரிமலைக்கு பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி.!
ஆகமவிதி படி கோவில் நிர்வாகம் அனுமதி மறுப்பு..?

● பெண்களை உடன்கட்டை ஏற்றி கொளுத்திக் கொல்வது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

உடன்கட்டை தடுப்பு சட்டம் வந்திருக்குமா ?

● சிறு வயதில் திருமணம் மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

குழந்தை திருமணத் தடுப்பு சட்டம்
வந்திருக்குமா ?

● வர்ணாசிரம சாதி ஏற்றத்தாழ்வுகள் மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

அனைவரும் சட்டதின் முன் சமம்
என்னும் உரிமை கிடைத்திருக்குமா??

● கணவன் இறந்தால், மனைவிக்கு மொட்டை அடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்க்காரவைப்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

இந்த சமூக தீமை ஒழிந்திருக்குமா ?

● பெண்களுக்கு பொட்டுகட்டி கோவில் தேவதாசியாக்குவது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா ?

● பார்ப்பனர் அல்லாதோர் படிக்கக்கூடாது
என்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் படித்திருக்க முடியுமா??

● சில பிரிவு பெண்கள் மேலாடை உடுத்தக்கூடாது என்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

அனைத்து பெண்களுக்கும் மேலாடை அணிய உரிமையுண்டு என்ற சட்டம்
வந்திருக்குமா?

● அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

பெண் கல்வி சாத்தியப்பட்டிருக்குமா ?

● திருமணம் முடிந்த பெண், முதல் நாள்
பார்ப்பன நம்பூதிரியுடன்தான் முதலிரவு கொள்ளவேண்டும் என்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

இந்த இழி பழக்கம் மறைந்திருக்குமா??     

● ஒரே மத அமைப்பு என்று சொல்லிக்கொண்டு, ஒரு பிரிவின் மீது தீண்டாமை கடைபிடிப்பதுவும் மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

தீண்டாமை தடை சட்டம்
வந்திருக்குமா ?

● ஒரே மத அமைப்பு என்று சொல்லிக்கொண்டு, எங்கள் கோவிலினுள் நுழையாதே என்று மக்களின் ஒரு பிரிவினரை தடுப்பது அந்த மதத்தின் நம்பிக்கை என விட்டிருந்தால்,

அனைத்து சாதிக்கும் ஆலய நுழைவு
சாத்தியப்பட்டிருக்குமா?

● பார்ப்பனர்கள் கடல்தாண்டி போகக்கூடாது என்பது கூட மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

இன்றைய நிலையில் லட்சகணக்கான
பார்ப்பனர்கள் வெளிநாடுகளில் வசிக்கவோ
வேலைசெய்யவோ முடியுமா ?

● உலகம் தட்டையானது என்பது  மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

உலகம் உருண்டையானது என்பது
நிருபிக்கப்பட்டிருக்குமா ?

● பூமியைத்தான் சூரியன் சந்திரன்
போன்றவை சுற்றிவருகின்றன என்பது
 மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

அறிவியல் வளர்ந்திருக்குமா ?

● ராகுகேது என்ற பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுகுவதால்தான் கிரகணங்கள் உருவாகின்றன என்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

வான்வெளி அறிவு
வளர்ந்திருக்குமா ?

● பிராத்தனைசெய்தால் நோய்கள் குணமாகும் என்பது  மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

மருத்துவ அறிவியல் தான்
வளர்ந்திருக்குமா ?

● தாய்மொழி என்பது நீசபாசை, தாய்மொழியில் கடவுளை
வழிபடக்கூடாது என்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

தமிழ் அர்ச்சனை என்னும் சட்டம்
நடைமுறைக்கு வந்திருக்குமா ?

யார் சொல்லியிருந்தாலும் எதைச் சொல்லியிருந்தாலும் நானே சொல்லியிருந்தாலும், அதை நம்பாதே !
உன் பகுத்தறிவின் துணை கொண்டு ஆராய்ந்து அறிவு பெறு என்று
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீசு தந்தைப் பெரியார் போன்ற பகுத்தறிவாளர்களும் இறைமறுப்பாளர்களும்  கூறியதால் தான் மேலே  உள்ள அனைத்தும் சாத்தியமானது.

மாற்றம் ஒன்று தான் மாறாதது.

அன்று அகல் விளக்கில் முகம் காட்டிய கடவுளர்கள் இன்று LED விளக்கில் ஜொலிக்கும்போது எங்கு போனது உங்கள் 'ஆகம விதி' ?

48 நாள் விரதமிருந்து மலையேறிய கன்னி சாமிகள், இன்று 'காலையில் மாலை போட்டு சிறப்பு தரிசனத்தில் அன்றே மலையேறி , அன்று மாலையே Tasmac மலையேறும் போது எங்கே போனது 'உங்க ஆகம விதி' ?

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கோசத்துடன் பெரு வழியில் 48 மைல்கள் நடந்த கால்கள் இன்று 4 கி.மீ களாக சுருங்கிய போது எங்கே போனது உங்கள் 'ஆகம விதி' ?

இருமுடி கட்டிய பின் 'சென்று வருகிறேன் ' என்று கூட சொல்லக் கூடாது , என்ற உங்களது ஆகம விதி எவ்வாறு Android phone களை அனுமதிக்கிறது ?

இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் உங்களது "ஆகம விதி" பெண்களை மட்டும் அனுமதிக்காது என்றால் ஒன்று மட்டுமே எண்ணத் தோன்றுகிறது....
உங்களது கடவுளர்களுக்கு பெண்கள் ஏற்புடையவர்கள் அல்லவெனில்
எங்களது தமிழ்ச் சமூகத்திற்கே எந்தக் கடவுளர்களும் தேவையே இல்லை!

போங்கய்யா!
நீங்களும் உங்க மத நம்பிக்கைகளும்!

போங்கய்யா..!
உங்க எல்லா கடவுளர்களும்,
கூடவே உங்க செல்லரித்துப்போன அனைத்து வகையான
மத நம்பிக்கைகளும்...!

ஆகமவிதி ஆகாதவிதி
இனியாவது திருந்துங்கப்பா!

பாரதி"யார்"?

பாரதி"யார்"?

“பாரதி கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, ‘பாரதி நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என்ன?’ என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே, ‘கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வையுங்கள். அதன்பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்’ என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச் சேர்ந்தார். அப்போது காலை 11 மணி இருக்கும்.

நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்க ஊரார் பயப்படுவார்கள். மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தன் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார். வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம், “உன் போன்ற மானங்கெட்டவர்களின் செய்கையால் தானே நாராயணப் பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று” என்று சொல்லி அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்து விட்டார்.

அர்ச்சகர் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப் பிள்ளைக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி பாரதியின் மைத்துனர் அப்பாத்துரையை வரச் சொன்னார்.

பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியை கடையத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக் கட்டிவிடப் போவதாக எச்சரித்தார் பிள்ளை. பாரதி வீட்டில் ஒரே குழப்பம். முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2.30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள்.

பாரதி புறப்பட்டு வரும் செய்தி சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி அய்யங்காருக்கும், நண்பர் வக்கீல் எஸ்.துரைசாமி ஐயருக்கும் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது.” எனப் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள ரா.அ.பத்மநாபன் கூறியுள்ளார்.

பார்ப்பனப் பெண்கள் சாதி கலப்பு ஏற்பட்டு விடக்கூடாதென்பதில் பாரதி மிக கவனமாகவே இருந்தார் என்பதுதான் ஓர் செய்தி!

பாரதி சென்னைக்கு வந்தது கூட ஒரு விபத்துதான். அரசியல் நடத்த அவர் சென்னைக்கு வரவில்லை என்பது இதிலுள்ள இன்னொரு செய்தி!

PALEO / LCHF பேலியோ பற்றி பெரியார்.😍

PALEO / LCHF பேலியோ பற்றி பெரியார்.😍

⚫ நம் மக்களுக்கு அரிசிச்சோறு தேவையற்றதும் பயனற்றதுமாகும்; பழக்கமற்றதுமாகும். நம்வயல்கள் எல்லாம் சமீபத்தில் ஓராயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் உண்டாக்கப்பட்டவைதான்.

⚫ நாம் மாமிசம் சாப்பிடுவதைவிட்டு, காய்கறிப் பண்டங்களைஉண்பதும் நமக்குக் கேடான பழக்கமாகும். இவைகளும் அரிசிக்குப் பின் உண்டாக்கப்பட்டவைகளே.

⚫ நாட்டுக் குழந்தைகள் பெரிதும் உரம் பெற முடியாமல் தேவாங்குகளாகவே வளரவேண்டியதாகி விட்டன. மற்றும், சத்துள்ள தயிர், மோர், நெய் ஒரு சிலருக்குத் தான் கிடைக்கிறது.

⚫ அனாவசியமாகச் சத்தற்ற காய்கறிகள் உண்ணும் வழக்கம் வளர்ந்து, வேளாண்மைக் கேடும், பயனற்ற உணவு வளர்ச்சியும், ஏற்பட்டுவிட்டது.

⚫ இவைகளின் பயனாய் மனிதனின் உணவுச் செலவு, அதுவும் சத்தற்ற உணவுக்குச் செலவு 100-100 விகிதம் ஆகப்பெருகி, வாழ்க்கைச் செலவுக்குப் பணம் போதாத நிலையே வளர்கிறது.

⚫ மாற்றம் அவசியமே: இவைகளில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது கடவுள், மதம், வேதம் விஷயத்தில் மாற்றம் ஏற்படுவதைவிட மிகக் கஷ்டமான காரியமாகவே இருக்கின்றது.

⚫ மாட்டிறைச்சி அதிகம் கிடைக்க வழி செய்க: ஆடு, கோழி, பன்றி முதலிய மாமிசம் சாப்பிடும் மக்களை மாட்டிறைச்சியும் சாப்பிடும்படிச் செய்து, அது எளிதாய்க் குறைந்த விலைக்குக் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். மேல்நாடுகளைப் போல் மாட்டுப்பண்ணைகளை வைத்துக் கொள்ளவேண்டும். பசு மாடுகளைப் பால் கறவைக்கு வைத்துக் கொள்ளவேண்டும். மேல்நாடுகளைப் போல் விவசாயத்துக்கு மாடுகளே தேவையில்லாமல் எந்திரங்களைப் பயன்படுத்தச் செய்ய வேண்டும்.

⚫ உணவுப் பக்குவ முறை: உணவுப் பக்குவ முறையும் - சுத்த சோம்பேறிகள், உடல் நலுங்காமல் ஊரார் உழைப்பில் உயிர்வாழும் சோம்பேறிகளால் திட்டப்படுத்தப்பட்ட முறையாதலால், நம் உணவு முறை நம் மக்களுக்குப் பெரிய பாரமாக இருக்கிறது. பகலில் சோறு, குழம்பு, ரசம், பொறியல்(ஒரு காய் ), மோர். காலையில் இட்லி அல்லது தோசை, உப்புமா, காபி அல்லது டீ. இரவிலும் இவையோ,இவற்றில் ஏதாவது ஒன்று, எவ்வளவு வருமானம் குறைந்த சமுதாயமும் இவற்றும் ஏதாவது ஒன்றைத்தான் குறைத்துக் கொள்வார்களே தவிர முறையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

⚫ உணவுப் பஞ்சம் போக்க வழி : விவசாயத் துறையில் இன்று நடைபெறும் வயல்பரப்பிலும் முயற்சியிலும் பாதி நேரத்தைக் குறைத்துக் கொண்டு அந்த நேரத்தில் ஆடு. மாடு, கோழி, பன்றி, மீன், வளர்ப்பில் கவனம் செலுத்தி நல்ல அளவுக்குப் பெருக்குவோமானால் - காபியையும் தடைப்படுத்தி விடுவோமானால் உணவுப் பஞ்சம் என்கின்ற சொல் அகராதியில் கூட இல்லாத அளவுக்கு ஒழித்துவிடலாம்.

⚫ ஆடு, மாடு, பன்றி, மீன் முதலிய இறைச்சிகளையும் தேவையான அளவுக்கு குறைந்த செலவில் உற்பத்தி செய்து எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்வது அவசியமாகும். இதைக்கண்டு நமது நாட்டு மக்கள் என் மீது ஆத்திரப்படுவார்கள் அவர்களுக்கு நான் கூறும் பதில், மற்ற நாட்டுக்காரர்களையும் நம் மக்களையும் பாருங்கள் என்பது தான்.

-தந்தை பெரியார்

நூல்: -கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தொகுத்த "பெரியார் ஒரு வாழ்க்கைநெறி" பக்கம் 3-7

எப்படி இறந்தார்கள்? யார் சுட்டது?

1.எப்படி இறந்தார்கள்?

துப்பாக்கிச் சூட்டில்

2.யார் சுட்டது?

MGR' அரசின் காவல்துறை

3.என்ன கோரிக்கை?

பிற்படுத்தப்பட்டவர்களை விட மோசமான நிலையில் இருக்கிறோம். எனவே தனி இடஒதுக்கீடு வேண்டும்.

4.கோரிக்கையை யார் நிராகரித்தது?

MGR

5.யார் தீர்த்து வைத்தது?

கலைஞர்

6.எப்படி தீர்ந்தது வைத்தார்?

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (MBC) எனும் பட்டியலை உருவாக்கி வன்னியர் உட்பட 108சாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

400 BC - அப்போது இங்கே வாழ்ந்த மனிதர்கள் எந்த சாமியை கும்பிட்டார்கள்?!!!

400 BC

அதாவது கிருஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னால். ( கிமு கணக்கு ரிவர்ஸில் நகரும், உதாரணம்: 10,000 முதல் 1வரை.  கிபி ஆண்டுகள் முன்னோக்கி நகரும். உதாரணம் 1ரிலிருந்து 2019 வரை)

மஹாவீரர் அப்போது பிறந்திருக்கவில்லை.
புத்தரும் அப்போது பிறந்திருக்கவில்லை.
அப்போது சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர் மாதிரியான தெய்வங்கள் இல்லை

அப்படியானால் இந்த மும்மூர்த்திகள்? சிவா, விஷ்ணு, பிரம்மா.....
அப்புறம் அந்த முப்பெரும் தேவியர்? பார்வதி, லஷ்மி, சரஸ்வதி?
இவர்கள் எல்லாம் அலெக்ஸாண்டர் இந்தியாவை கைபற்றிய போது கிரேக்க புராணங்களை தழுவி, இங்கே இறக்குமதி செய்யப்பட்ட கதைமாந்தர்.

கிரேக்கத்தில் ஸீயஸ், அவன் மனைவி ஹீரா. அவள் தான் வீரத்தின் தெய்வம். அப்ரதைத்தி: கடல் அலையிலிருந்து உதித்த அழகின் தெய்வம். அர்டெமிஸ் வெண் தாமரையில் வீற்றிருக்கும் அறிவின் தெய்வம்.....

இவர்களை எல்லாம் அப்படியே காபி பேஸ்ட் செய்து, அந்த காலத்தில் செய்த போட்டோஷாப் வேலைபாடு தான், மலைமகள், அலைமகள், கலைமகள் கதைகள்.....
Judgment of Paris எனும் ஒரு கிரெக்க தொன்மைகதை உண்டு. பாரிஸ் எனும் இளைஞனிடம் ஒரு ஞானபழம் கிடைக்கும். அதன் மேல் “கலிஸ்டி” என்று போட்டிருக்கும், அதாவது....”அழகில் சிறந்தவருக்கு”. உடனே ஹீரா, அப்ரதைதி, அர்தெமிஸ் மூவருக்குள்ளூம் “யார் பெரிய அழகி” என்ற போட்டி எழும் .....எங்கோ கேட்ட கதை மாதிரியே இல்லை? அதே தான், நம்ம “சரஸ்வதி சபதம்” + பழனி உண்டான கதையின் ஒரிஜினல் மிக்ஸ்!!

ஆனால் கிமு 400 தில் அலெக்சாண்டரே இன்னும் பிறந்திருக்கவில்லை.... ஆக இந்த கிரெக்க தொன்மங்கள் இன்னும் இறக்குமதி ஆகாத காலம்!!

அப்போது இங்கே வாழ்ந்த மனிதர்கள் எந்த சாமியை கும்பிட்டார்கள்?!!!

பகவத் கீதை ஏன் வேண்டாம்

*பகவத் கீதை ஏன் வேண்டாம்*

அது தான் என்னை கீழ்ஜாதி என்றது
அது தான் என்னை சூத்திரன் என்றது
அது தான் என்னை வேசிமகன் என்றது
அது தான் என் தாயை வேசி என்றது
அது தான் என்னைப் பஞ்சமன் என்றது
அது தான் என்னை தீண்டத்தாகதவன் என்றது
அது தான் என்னை தொட்டால் தீட்டு என்றது
அது தான் என்னை பார்த்தால் பாவம் என்றது
அது தான் என் நிழல் பட்டால் தோஷம் என்றது
அது தான் என்னை காலில் செருப்பு போடாதே என்றது
அது தான் என்னை தோளில் துண்டு போடாதே என்றது
அது தான் என்னை வீதியில் நடக்காதே என்றது
அது தான் என்னை கோயிலுக்கு போகாதே என்றது
அது தான் என்னை கடவுளை வணங்காதே என்றது
அது தான் என்னை கடவுளைத் தொடாதே என்றது
அது தான் என்னை நல்ல சோறு திண்ணாதே என்றது
அது தான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
அது தான் என்னை நல்ல வீடு கட்டிக் கொள்ளாதே என்றது
அது தான் என் பாட்டானை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
அது தான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
அது தான் என் பாட்டானை முண்டாசு அணியாதே என்றது
அது தான் என் பாட்டானை முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
அது தான் என் பாட்டானை முடி வளர்க்காதே என்றது
அது தான் என் பாட்டானை முடி வளர்த்தற்கும் வரி போட்டது
அது தான் என்னை கிணற்றில் நீர் எடுக்காதே என்றது
அது தான் என்னை படிக்காதே
அது தான் என்னை படித்ததை கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்றது
அது தான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
அது தான் என்னை திறமை இல்லாதவன் என்றது
அது தான் என்னை மலம் அள்ளு என்றது
அது தான் என்னை காதலிக்காதே என்றது
அது தான் என்னை மீறி காதலித்தால் வெட்டுவேன் என்றது
அது தான் இரத்தக்கலப்பு வேண்டாமென்றது
அது தான் என்னை விலங்கை விட கேவலமானவன் என்றது
அது தான் எனக்கு இரட்டைகுவளை என்றது
அது தான் உனக்கு எதுக்கு நிலம் என்றது
அது தான் என்னை அடிமை என்றது
அது தான் பெண்களை மேலாடை அணியாதே என்றது
அது தான் பெண்களை மேலாடை அணிந்தால் வரி என்றது
அது தான் பெண்களின் மார்புக்கு வரி என்றது
அது தான் பெண்களை இழிவு என்றது
அது தான் பெண்களை காமம் மட்டுமே என்றது
அது தான் பெண்களை ஆணின் உடைமை என்றது
அது தான் பெண்களை பாவ யோனியில் பிறந்தவர் என்றது
அது தான் என்னை மனிதனை மனிதனாக பார்க்காதே என்றது...

அந்தக் காலத்து பார்ப்பனர்களைப் போல இந்தக் காலத்து பார்ப்பனர்கள் புத்திசாலிகள் இல்லை

அந்தக் காலத்து பார்ப்பனர்களைப் போல இந்தக் காலத்து பார்ப்பனர்கள் புத்திசாலிகள் இல்லை. அந்தக் காலத்தில் சமஸ்கிருதம் புனிதமானது எனச் சொன்னார்கள். ஆனால் யாரையும் படிக்கவிடவில்லை. அதேபோல் பகவத் கீதையில் அது இருக்கிறது, இது இருக்கிறது, பகவத் கீதைதான் உலகின் மிகப்பெரிய தத்துவம் என்றெல்லாம் அளந்தார்கள். ஆனால் அதையும் யாரையும் படிக்கவிடவில்லை. ஏன்?
சமஸ்கிருதத்தை எல்லோரும் படித்தால் அதில் புனிதத்தன்மை எல்லாம் ஒன்றுமில்லை என்பது தெரிந்துவிடும். அதைப்படித்தாலும்கூட வாய் மணத்துக்கிடக்காது, காலையில் பல் துலக்கித்தான் ஆகவேண்டும் என்பது புரிந்துவிடும். 

கீதையை எல்லோரும் படித்தால் அதில் மனித இனத்தின் ஒற்றுமைக்கு, சகோதரத்துவத்துக்கு, சமூகநீதிக்கு, மனிதாபிமானத்துக்குத் தேவையான தத்துவமெல்லாம் எதுவுமே இல்லை என்பதும் அது வெறும் வர்ண பேத, சாதி பேத ஆண்-பெண் பேத, பாவ-புண்ணிய கர்மக் கதைகளைத் தலையில் கட்டும் நூல் என்பது புரிந்துவிடும். அதனால்தான் மறைத்துவைத்து ஒளித்துவைத்து பில்டப்பை மற்றும் சத்தமாகக் கொடுத்துவந்தார்கள். நம் முன்னோர்கள் "அப்படிங்களா சாமி. ஆகட்டும் சாமி," போட்டு வாழ்ந்தார்கள்.

திராவிட இயக்கத்தினர்தான் அதையெல்லாம் எடுத்துப் படித்து பொதுமக்களிடம் அதன் உண்மைத்தன்மையை கொண்டுபோனார்கள். கம்பரசம், ஆரியமாயை, கீதையின் மறுபக்கம், கடவுளர் கதைகள் என திராவிட இயக்கத்தின் நூல்கள்தான் இந்தக் கதைகளை எல்லாம் புட்டுப்புட்டு வைத்தது. அதைப் படித்தவர்கள், புரிந்தவர்கள் "இதுக்காடா இவ்ளோ பில்டப் கொடுத்தீங்க... அட அயோக்கிய ராஸ்கல்களா.." எனத் தெளிந்தார்கள், நிமிர்ந்தார்கள்.

இப்போதும்கூட நேரலை விவாதங்களில் சுபவீ, அருள்மொழி போன்றவர்கள் ராமாயணத்தைப் பற்றி, கீதையைப் பற்றி, புராணங்களைப் பற்றி புட்டுபுட்டு வைக்கும்போது பாஜக/RSS சங்கிகள் போலீசிடம் மாட்டிய வடிவேலு போல திருட்டுமுழி முழிப்பதைப் பார்க்கலாம்.

ஆக ஒரு தரப்பு மட்டுமே படித்து, தெளிந்து மற்றவர்களுக்கும் புரியவைத்துக் கொண்டிருந்த விஷயங்களை நேரடியாக மக்களிடமே கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையில் இந்தக் கால RSS பார்ப்பனர்கள் இறங்கிவிட்டார்கள். அதாவது கட்டுச்சோத்தை கூட்டத்தில் அவிழ்க்கும் வேலையில் இறங்கியுள்ளார்கள். அதனால்தான் இவர்களுக்கு புத்திசாலித்தனம் மிகவும் கம்மி என்கிறேன்.

முன்பெல்லாம், அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு 'இந்தி' குறித்த விவாதம் சமூகதளங்களில் எழும்போதெல்லாம் அது ஏன் தேவையில்லாத ஆணி என்பதைப் புரியவைக்க மிகவும் கஷ்டப்படுவோம்.  ஒரு நாலு பேர் காட்டுக்கத்தலாக கத்திக்கொண்டிருப்போம்.

ஆனால் இன்று பாஜக வெறித்தனமாக இந்தியைத் திணிப்பதால் இந்தி ஏன் அவசியமில்லை என்கிற புரிதல் பட்டிதொட்டிவரைக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இதே நிலைதான் பகவத்கீதைக்கும் ஏற்படப்போகிறது. தேமே என ஓரமாகக் கிடந்த பர்னிச்சரை எடுத்து தமிழக இளைஞர்கள் கையில் கொடுத்துள்ளது பாஜக. தாறுமாறாக உடைபடப்போவது உறுதி. ஏனெனில் திணித்ததை எல்லாம் திங்க இது வடநாடு இல்லை. தமிழ்நாடு! 

காக்கின்ற கேடயம் அரண் திராவிடம் மட்டுமே

*100 வருடங்களுக்கு முன்பு கல்லூரிகளின் வாயில்  முன்பு

*இங்கு சூத்திரனுக்கும், நாய்களுக்கும் இடமிமில்லை" ..
.............என்று எழுதி வைத்தவர்கள் யார்?

*ஆண்ட தமிழன் யாரால் அடிமையானான்??

*2600 வருடங்களுக்கு முன்பு தமிழர்களிடம்  மதம் சார்ந்த எந்த வழிபாடும் இல்லை என்று உறுதியாகியுள்ள நிலையில், தமிழன் தலையில் மதத்தையும், கற்பனை கடவுள்களையும் விதைத்தவர்கள் யார்?

*தலையில் பிறந்தவன் உயர்ந்தவன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்று தமிழனை சாதியால் பிரித்து #மனு_சாஸ்த்திரம் எழுதியது யார்?

*2600 வருடங்களுக்கு முன்பு இல்லாத மனு சாஸ்த்திரம் இடையில் எப்படி முளைத்தது??

*இன்றைக்கும் மனு சாஸ்த்திரம் நூலகத்தில் இருக்கின்றது..! இதற்கு எந்த சக்தி காரணம்?

*2600 வருடங்களுக்கு முன்பே படித்த தமிழகத்தில் ஏன் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடந்தது??

*திராவிட இயக்கம் இல்லையென்றால் 69% இட ஒதுக்கீடு கிடைத்திருக்குமா???

*இந்த மண்ணில் இந்தியை நுழைத்து தமிழை அழிக்கத் துடிக்கும் சக்தி எது??

*தமிழன் கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழுக்கே இடமில்லையே ஏன்? யாரால்??

*தஞ்சை கோயிலை கட்டிய  இராசராசன் சிலையை கோயிலுக்குள் அமைக்கக்கூடாது என்று எந்த சக்திகள் தடுத்தது???

*எம் தமிழச்சிகளிடம் முலைவரி வசூலித்தது யார்?

0*எம் தமிழக பெண்களை கோயிலுக்கு தாசிகளாக்கியது யார்??

*1200க்கு 1190 மதிப்பெண்கள் பெற்ற எம் தங்கை அனிதாக்கள் தூக்கில் தொங்கி செத்து சீரழிய யார் காரணம்??

*இன்றைக்கும்  தமிழகத்தின் கல்வி, வேலை, உரிமைகள் அனைத்தும் சூறையாடப் படுகின்றதே இதற்கு யார் காரணம்????

எந் நேரமும்  திராவிடத்தை வசைபாடும் மன நோயாளிகளே இதற்கு பதில் கூறுங்கள்....

எம் இனம், மொழி, கலாட்சாரம்,பண்பாடு, நாகாரீகம், சுயமரியாதையை காக்கின்ற கேடயம் அரண் திராவிடம்  மட்டுமே......
அன்றும்... ..இன்றும்... ...என்றும்......

ஔவையார் vs விவேகசூடாமணி

//அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது//
- இது ஔவையார் தனிப்பாடல் திரட்டு.

//ஜன்தூனாம் நரஜன்ம துர்லபமத: பும்ஸ்த்வம் ததோ விப்ரதா//
உயிரினங்களில் மானிடராய் பிறத்தல் அரிது, அதனின் அரிது ஆண் பிறப்பு (பெண் இழிபிறவி), அதனின் அரிது அந்த ஆண் பிராமணனாய் பிறப்பது.
-இது ஆதிசங்கரர் எழுதிய விவேகசூடாமணி.

அண்ணா பல்கலைக்கழகத்தில் philosophy பாடத்தில் விவேகசூடாமணியும் இடம் பெற்றுள்ளது. நல்ல பாடம், நல்ல philosophy.

காந்தியாரை புறந்தள்ளிவிட்டால் RSS ன் கையில் தான் இருப்பார்.

காந்தியாரை விமர்ச்சிகலாம்... ஆனால் புறந்தள்ளிவிட்டால் RSS ன் கையில் தான் இருப்பார். படேல் , அம்பேத்கர், பகத்சிங் இவர்களை ஏற்கனவே RSS அபகரித்துவிட்டது... படேலை புறக்கணித்ததன் விளைவுதான் இன்று RSS ன் முக்கிய கொ. ப. செ வாக படேல் இருக்கிறார். அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை உள்வாங்காமால் இருந்ததால் RSSன் பேரணிகளில் அண்ணலின் படங்கள் (உஷாராக கருத்துக்களை பரப்பவுவதில்லை). இதே நிலைதான் பகத்சிங்கிற்கும்... RSS ன் கூட்டங்களில் போட்டோவாக வலம் வருவார். ஆனால் 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்' என்ற அவரின் புத்தகத்தை மருந்துக்கு கூட உச்சரிக்க மாட்டார்கள்... அண்ணல் அம்பேத்கர் தோழர் பகத்சிங் அளவிற்கு காந்தியாரை வைத்து பார்க்க அவசியம் இல்லையென்றாலும் அவரை அரவணைத்துக்கொள்வோம்..

கீதை - ‘விஜயபாரதம்!'

கீதை - ‘விஜயபாரதம்!'

- மயிலாடன் -

கேள்வி : பொறியியல் படிக் கும் மாணவனுக்கு ‘கீதை' தேவையா?

பதில் : வயது முடிந்த வயதானவர்களுக்கு போகும் வழியில் புண்ணியம் தேட சொல்லப்பட்ட தல்ல கீதை; வாழ வேண்டிய வாழ்க்கையோடு, போராட வேண் டிய ஒரு பொறுப்புள்ள இளை ஞனுக்குச் சொல்லப்படுவது தான் கீதை.

- ‘விஜயபாரதம்', ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 18.10.2019, பக்கம் 35

அப்படியா கதை?

இந்து  மதச் சித்தாந்தத்தை அமெரிக்காவரை சென்று பரப்பிய பெரும் பேச்சாளர் என்று தம் பட்டம் அடிக்கப்படும் விவேகா னந்தர் கீதைபற்றியும், கிருஷ் ணன்பற்றியும் என்ன சொல்லுகிறார்?

‘‘கீதை என்ற நூல் மகா பாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதன்முதலில் மகாபாரதத் தின் ஒரு பகுதியாக அதாவது வேத வியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?

இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?

மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?

நான்காவதாக அர்ஜுனனும், ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானோ? என்பன.

கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி குருசேத்திர யுத்தம் நடை பெற்றது என்பதற்கு எந்த ஆதா ரமும் இல்லை. யுத்தத்தில் கிருஷ் ணன் அர்ஜுனனுடன் எல்லை யற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக் கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜுனன் ஏனையப் பெயர் கள் பயன்படுத்தப்பட்டு உள்ள னவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.''

- விவேகானந்தர் ‘கீதையைப் பற்றிய கருத்துகள்' என்ற நூலில்,
ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய ‘பகுத்தறிவுச் சிகரம் பெரியார்' என்ற நூல், பக்கம் 117

கீதை வாழவேண்டிய வாழ்க்கை முறையைப் பேசுகிற தாம், போராட வேண்டிய பொறுப்பை இளைஞர்களுக்குக் கூறுகிறதாம் - எழுதுகிறது ‘விஜய பாரதம்.'

பிறக்கும்பொழுதே பேதம் கற்பிக்கும் இந்நூல் எந்த வாழ்க்கை முறையைச் சொல்லிக் கொடுக்கப் போகிறது?

சொந்த ஜாதி தர்மக் கடமை அல்லது தொழில்களை ஒருவர் அரைகுறையாகச் செய்வது மற்ற வர்களுக்குரிய சுவதர்மத்தை ஜாதி தர்மக் கடமை அல்லது பணி களை முழுமையாகச் செய்வதைக் காட்டிலும் நல்லதாம். (கீதை, அத்தியாயம் 3; சுலோகம் 33).

ஜாதி, அதன் வழி குலத் தொழில் செய்வதுதான் கீதை கூறும் வாழவேண்டிய வாழ்வியலாம்!

இந்தப் பதிலை எழுதும் ‘விஜயபாரத'த்தின் ஆசிரியர் தன் ஜாதித் தொழிலைத்தான் செய்து கொண்டு இருக்கிறாரா?

‘‘கீதையைப் படிப்பதைக் காட்டிலும் கால்பந்து விளையாடக் கற்றுக் கொள்'' - இதுவும் விவேகானந்தர் கூற்றுதான்.

என்ன ‘விஜயபாரதமே' சரிதானா?

நன்றி : "விடுதலை" நாளேடு 17.10.2019

கலாம் ஒரு கட்டமைக்கப்பட்ட பிம்பம்

ஜனாதிபதியாக #KRநாராயணன் பதவி வகித்த காலத்தில், #சாவர்க்கர் படத்தை பாராளுமன்ற மைய மண்டபத்தில் வைக்கவும் அனுமதிக்கவில்லை, சாவர்க்கர் பெயரை பிஸ்மில்லா கானுடன் பாரத் ரத்னா விருதுக்கு #வாஜ்பாய் அரசு பரிந்துரைத்ததையும் கண்டு கொள்ளவில்லை.

#2002குஜராத் கலவரங்களுக்கு பிறகு #ஜனாதிபதி பதவிக்கு "கொண்டுவரப்பட்ட" #கலாம் வந்தவுடனேயே சாவர்க்கர் படத்தை திறந்து வைத்தார், அதுவும் காந்தியின் படத்திற்கு நேர் எதிரியே. நாக்பூர் #RSS தலைமையகத்திற்கு சென்று, RSS founder கெட்ஜ்வரின் படத்திற்கு மரியாதை செய்தார். RSS யை வளர்த்து விட்ட பெரும் பங்கு #MuSanghi கலாமுடையது.

ஜனாதிபதியாக இருந்த கலாம் தனது பதவிக்காலத்தில், தான் சார்ந்த தமிழர் நலனுக்கோ, தன் தாய்மொழி தமிழுக்கோ, தன் குலத் தொழிலான மீனவ சமூகத்திற்கோ, தான் சார்ந்த மதமான இசுலாமிய சமூகத்திற்கோ செய்த ஏதாவது ஒரு நல்ல காரியம்!?

இவ்வளவு ஏன்... இந்தியா 2020 ல் வல்லரசாக ஆக கனவு காணுங்கள் என கல்விக்கூடங்களாக ஏறி இறங்கிய கலாம் தாய்மொழிவழிக் கல்விக்கோ, கல்விக் கட்டண கொள்ளைகளை தடுக்கவோ செய்த ஒரு நல்ல காரியம்!?

கலாம் ஒரு கட்டமைக்கப்பட்ட பிம்பம்

சென்னை உயர்நீதி மன்றம் - பார்ப்பன ஆதிக்கமும் சமூகநீதியும்

"சென்னை உயர்நீதி மன்றம். பார்ப்பன -
              - ஆதிக்கமும் - சமூகநீதியும் "
                     
             (1861 - 1973 = 112)...!

             *தோழர்களே வணக்கம்...!!

*சென்னை உயர்நீதி மன்றம் 1861 இல் துவங்கி 1948 வரை 87 ஆண்டுகள் வரும் வரையிலும் - நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும் வரையிலும் நீதிபதிகளாக இருந்தவர்கள்

1)டி.முத்துசாமி அய்யர்.
2) சுப்பிரமணிய அய்யர்.
3)பாஷ்யம் அய்யங்கார்.
4)எ.ஏம். குமாரசாமி சாஸ்திரி.
5)வி. கிருஷ்ணசாமி அய்யர்.
6)ஏ.சுந்தரம் அய்யர்.
7)டி.சதாசிவ அய்யர்.
8)டி.வி.சேசாஸ்திரி அய்யர்.
9)எஸ்.வரதாச்சாரி.
10)எஸ்.கிருஷ்ணசாமி அய்யர்.
11) பதஞ்சலி சாஸ்திரி.
12)எம்.சந்திரசேகர் அய்யர்.
13)டி.எஸ்.வெங்கட்ராம அய்யர்.
14)எஸ்.பஞ்சாப கேசு அய்யர்.
15).வி.இராஜ கோபால் அய்யர்‌.
16)பி. பாலகிருஷ்ண அய்யர்.
17)ஏ.எஸ். பஞ்சாகேச அய்யர்‌.
18)பி.எஸ். இராமசாமி அய்யர் ‌.
19)என். இராஜகோபால அய்யங்கார்.
20) குப்புசாமி அய்யர்.
21) அனந்த நாராயண அய்யர்‌.
22)ஜெகதீஸ் அய்யர்.
23) சீனிவாச அய்யர்.
24) இராமகிருஷ்ண அய்யர்.

*87 ஆண்டுகள் மக்கள் தொகையில் 3%
மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் (அய்யர்- அய்யங்கார்- சாஸ்திரி - சர்மா என ) மிகப்
பெரும் எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்தனார்.

*1948 இல் சென்னை மாகாண அரசை காங்கிரஸ், ஓமந்தூர் இராமசாமி ரெட்டி
யார் முதலைச்சைராக ஆண்டு வந்தது.
அவர் சமூக நீதியில் ஆழ்ந்த பற்றும்,
பார்ப்பனர் அல்லாத மக்கள் உயர்ந்த
பதவிகளுக்கு வர வேண்டும் என்று
விருப்பம் கொண்டிருந்தவர். அப்போது
சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு நீதிபதி காலியானது.

*அந்த இடத்தில் சிதம்பரம் (சைவப்பிரிவு)
- பிரபல குற்றவியல் வழக்குரைஞர் நாக
- பூசனம் சோமசுந்தரம் (பிள்ளை) என்ற முற்ப்படுத்தப்பட்ட சமூகத்தை தமிழரை
நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்தார்.

தோழர்களே! கவனியுங்கள்;
ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப்
பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து கூட அல்ல..!
ஒரு முற்படுத்தப்பட்டவரைத்தான் ,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு
முதலமைச்சர், நியமன பரிந்துரை செய்ய அதிகாரம் உள்ளவர், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

* அன்று மத்தியில் நேரு பிரதமர்.சர்தார்
வல்லபாய் பட்டேல் ‌உள்துறை அமைச்சர்.
இந்த சூழிலில் மத்திய அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த குலக்கல்வி சூதுமதிபடைத்த குல்லகபட்
டர் இராஜகோபால ஆச்சாரியும், - இன்னொரு பாதுகாப்புத்துறை அமைச்சரும், நேருவின் நெருங்கிய நண்பருமான கோபால்சாமி அய்யங்கார்
மருமகனான வீ.கே. திருவேங்கடாச்சாரி
யைமீண்டும் நீதிபதியாக , நியமனம் செய்ய வேண்டும் என்றும் சிபாரிசு செய்கிறார்கள்.

*பிரதமர் நேரு ஒருதலைப்பட்சமாக
முதலமைச்சரை அழைத்து; " நீங்கள் பிராமணர் அல்லாதார் அரசை ஜாதி
அடிப்படையில் நடத்ப்பார்கிறீர்கள் என்று
உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல்
முன் கண்டிக்கிறார். இராஜகோபால ஆச்சாரியின் பரிந்துரையை ஏற்க முயல்
கிறார் நேரு..

*முதலமைச்சர் ஓமந்தூரார் பிரதமர் நேருவிடம் இரண்டு வெள்ளைத்தாள்
களைக் கேட்டு வாங்கி, ஒன்றில் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சராகிய நான் பரிந்துரைத்த
நாகபூசனம் சோமசுந்தரத்தின் நியமனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்...!

* இல்லையென்றால் என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்கி-றேன் என்று இரண்டு கடிதங்களை  கொடுத்தார்...

*உடனிருந்து உள்துறை அமைச்சர் பட்டேல் நேருவிடம்; "இந்த இராஜினாமா
வை ஏற்றால் , சென்னை மாகாணத்தில்
பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மிகப்பெரிய
எழுச்சியை காங்கிரஸின் மத்திய,மாநில
அரசுகளுக்கு எதிராக தோற்றுவிப்பார்" என எச்சரித்தார். அதனை ஏற்று நேரு நியமனத்திற்கு ஒப்பதல் அளித்தார்.

*ஒரு முற்ப்படுத்தப்பட்ட தமிழர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வருவதற்கு முதலமைச்சர் தன் பதவியை ராஜினாமா
 செய்யகிற எல்லை வரை போய்தான் இந்த பதவி தமிழருக்கு வந்தது.!

*அப்படி என்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எப்படி இது போல் உயர்பதவிக்கு வர முடிந்தது என்பதை நாளை பதிவில்....

#தொடரும்......!

*இந்த முதல் பகுதி பதிவுக்கு உதவிய சான்று ஆவணங்கள் நன்றியுடன்...!

1) உயர்நீதிமன்ற நீதிபதிகளின்    பெயர்கள் பொறித்த கல்வெட்டு

2) அன்றைய திராவிடர் கழகப்பிரச்சாரச்
       செயலாளர்;"சொல்வேந்தர்" திருச்சி
         நீ.செல்வேந்திரன் அவர்களின்
        உரைகளின் தொகுப்பு-( C.D.கள்)

3) " மார்க்ஸிஸ்ட்கள் சிந்தனைக்கு" -
      தோழர் மின்சாரம் அவர்கள் எழுதிய
       திராவிடர் கழக வெளியீடு-நூல்.

தெரிந்துக்கொள்வீர் சூத்திர இந்துகளே

பார்ப்பனர்கள் நலனுக்காகவும் அவர்களின் அடிவருடிகளாக இருக்கவும் தான் இந்து இயக்கங்கள் வேலை செய்கிறதா? பொள்ளாச்சியில் ஆளும்கட்சி பிரமுகர்களால்  பாதிக்கப்பட்ட இந்து பெண்களுக்காவும் எந்த இந்து இயக்கங்களும் போராடவில்லை சிதம்பரம் கோயிலில் தீட்சிதரால தாக்கப்பட்ட இந்து பெண்ணிற்காகவும் எந்த இந்து இயக்கமும் குரல் கொடுக்கவில்லை. இந்து முன்னணி சந்து முன்னணி என பெயர் வைத்துக்கொள்வதை விடுத்து பார்ப்பனிய முன்னணி என வைத்துக்கொள்ளட்டும் இப்படி நவதுவாரங்களையும் மூடிக்கொண்டிருப்பதற்கு?

இதுவே மற்ற மதத்தினர் கூட வேண்டாம் மற்ற சாதி இந்துகளில் யாராவது ஒருவர் ஒரு பார்ப்பானை பார்ப்பனத்தியை இதேபோல கன்னத்தில் அறைந்திருந்தால் இந்நேரம் இப்படி கள்ள மவுனம் சாதித்திருப்பார்களா?

தெரிந்துக்கொள்வீர் சூத்திர இந்துகளே..!!! இந்துத்துவா சித்தாந்தமும் அதன் இந்து இயக்கங்களும் பார்ப்பனிய நலனுக்காக மட்டுமே இயங்குகின்றன என்ற உண்மையை உணருங்கள் இனிமேலாவது...இந்துத்துவாவின் பின் செல்வதை தவிர்த்திடுங்கள் அவர்களின் அடியாட்களாக இருந்தது போதும். சுயநினைவுக்கொள் மானமுள்ளவர்களே!!!

இந்து மதம் ஒரு கேலிக்கூத்து

இந்து மதம் !

காஞ்சி கோவிலின் உள்ளேயே சங்கரராமன் என்ற அந்தணன் வெட்டி கொல்லப்பட்டதற்காக கோவிலை மூடவில்லை?

அதே ஊரில் இன்னொரு அந்தணன் கோவில் கருவறையில் பக்தையுடன்
காம களியாட்டம் ஆடியபோது அந்த கோவில் மூடப்படவில்லை?

காஷ்மீரில் ஏழு வயது சிறுமியை எட்டு மனிதநாய்கள் எட்டு நாட்கள் வைத்து கற்பழித்துக் கொன்ற கோவில் மூடவில்லை!

ஆனால் அய்யப்பனை வணங்குவதற்காக கோவிலுக்குள் பெண்கள் சென்றதால் கோவில் மூடப்படுகிறதாம் சபரிமலைக்கோவில்?
கருமம் இவனுங்க செய்றது மார்க்கமும் இல்லை... மதமும் இல்லை....

பாபா சாகேப் சொன்னது போல...
இந்து மதம் ஒரு கேலிக்கூத்து

இதான் சபரிமலை உண்மை

இதோ
சபரிமலை செல்லாத பெண்கள் பாத்துக்கோங்க!

இதான் சபரிமலைக் கருவறை
மூல விக்ரஹ அய்யப்பன் சிலை!

ஒட்டமொத்த சபரிமலையே காட்டுத்தீயில் எரிந்து போயிற்று!
ஸ்வாமியாவது? மாமியாவது? எ. பார்ப்பான்கள் Escape!😂

அப்போது திராவிட இயக்க முன்னோடி PT ராஜன் தான், அய்யப்பனை மீள் கட்டிக் கொடுத்தார்!



1950, மொத்த சபரிமலையும் சாம்பல்!
அய்யப்ப விக்ரஹம் அம்பேல்!
பார்ப்பான்கள், ஸ்வாமியை விட்டே ஓடிவிட்டார்கள்!

அப்போது "திராவிட இயக்க முன்னோடி" PT ராஜன்
பெருந்தொகை கொடுத்து மீள்கட்டியதே சபரிமலை!
கருவறை மூலவர் சிலை, உட்பட!

இதோ காண்க!
மீண்டும் பணம் வந்ததும், பார்ப்பான் வந்துவிட்டான்😂


இதோ.. சபரிமலை ஐயப்பன் மூல விக்ரஹம்!

பெண்கள் பார்க்கவே படாது-ன்னு கதை வுட்டவன்
இப்போ என்ன செய்வான், இணையத்தில்?:)

அறிக: அய்யப்பன்= புராண ஹரி ஹர சுதன் அல்ல!
அய்யப்பன்= அய்யனார்! தமிழ் ஆசீவக அய்யனார்!


சபரிமலை அய்யப்பன்
*பழைய கல்சிலை, தீயில் நாசம் ஆனது
*புதிய உலோகச் சிலை, மீள் நிறுவப்பட்டது
திராவிட இயக்க PT ராஜன் கொடையால்!

எங்கே போனது ஆகமம்?
நகராத கல்சிலையை மாற்றி
நகரக் கூடிய உலோகச் சிலை எப்படி நிறுவினார்கள்?

பார்ப்பான் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டான்!:)
மக்கள் நிறுவினார்கள்!



சபரிமலை தீப் பிடிக்கும் முன் மாளிகைப்புரத்து அம்மன் சன்னிதியே கிடையாதே? எப்படி முளைத்தது பிறகு மட்டும்? அப்போ எங்கே போனது ஆகமம்? அறிக: பார்ப்பானுக்கு வசதி எனில், ஆகமம்! இல்லையேல் ஆகமம் ஆவது? பூகமம் ஆவது? பழங்குடி நாகர்கள், ஆசீவகம் இதை ஸ்வாஹா செய்ததே= இன்றைய பார்ப்பன சபரிமலை!


இன்று.. ஈழம் கதிர்காமத்தில்
பழங்குடி வேடர்களின் கந்தவேளை, எப்படிச் சிங்களன் ஸ்வாஹா செய்தானோ..

போலவே சபரிமலையில்
பழங்குடி ஆசீவக அய்யப்பனை, பார்ப்பான் ஸ்வாஹா செய்தான்!

வேதங்களில் அய்யப்பன் எ. பேர் உண்டா?:) இல்லை!
ஆனாலும் புலி, பால் குடுத்த புருடா கட்டி விட்டான்ல?😂

*சபரி மலை= தமிழ்ப் பேரு
*அய்யப்பன்= தமிழ்ப் பேரு
*சாத்தன்= தமிழ்ப் பேரு (சாஸ்தா அல்ல)

அப்பறம் என்ன மயி***க்கு "தத்வமஸி"?

எங்கே சாம வேதத்தில் வரும் தத்வமஸி Pageல
அய்யப்பன் எ. சொல்லைக் காட்டு பார்ப்போம்?

திராவிட மக்கள் கட்டிக் கொடுத்த கோயிலுக்கு
எதுக்குடா ஆரிய Label ஒட்டுனீங்க?

இனி, உரக்கச் சொல்லிக் கொண்டே இருங்கள்!

சபரிமலை அய்யப்பன் கருவறையில் உள்ள
மூல விக்ரஹத்தைத் தந்ததே..
"திராவிட இயக்க முன்னோடி" தான்!

இதோ, இவர் தான் அவர்! Sir PT Rajan!

நீதிக் கட்சி/ Non Brahmin Movement முன்னோடி!
பொதுப்பணித் துறை அமைச்சர்
4 மாதங்களுக்கு மதறாஸ் மாநில முதலமைச்சர்!

இணையம் பூரா..
இன்று பார்ப்பான் பொய் எழுதி வச்சிருக்கான்!

1950 சபரிமலைத் தீ= கிறித்துவர்கள் வைச்சாங்கன்னு!

இதோ ஆவணம்!
Sabarimala Temple Case
Enquiry Report of Kesava (Menon), Special Branch CID

ஹிந்து எ. பொதுப் பேரில்,
பார்ப்பனீயத்தில் அறியாமல் உழன்றாலும்,

பழங்குடித் தமிழ்த் தொன்மம், இறைத் தொன்மம்
காத்துக் கொடுத்தது = "திராவிட இயக்கம்" தான்!

மதம் = போலி என்றாலும், அதில் மக்கள் உழல்வதால்
அதற்குச் சமூகநீதி
மக்களாட்சி (ஜனநாயகம்) ஏற்படுத்திக் கொடுத்ததும்
திராவிட இயக்கமே!


அறிக: So called இந்துக்களே!

*பார்ப்பான் உங்களுக்கு, கோயில் நுழைய உரிமை கொடுக்கவில்லை!
*உங்களுக்கு, கோயில் உரிமை பெற்றுத் தந்தது= சீர்திருத்த/ திராவிட இயக்கங்களே!

இன்றும், நீங்கள்.. கருவறைப் பூசகர் ஆகமுடியாது, அதற்குப் படித்திருந்தாலும்:(( தடுப்பதும் பார்ப்பான் தான்!


தான் இறையை நம்பாவிட்டாலும்..
நீங்கள் நம்புகிறீர்கள் எ. ஒரே காரணத்துக்காக..

உங்களுக்குச் "சமநீதி" பெற்றுத் தந்த
திராவிட இயக்கம் மேல்..
"நன்றி" எ. ஒரு சொல்லுக்கு உரியவராய் இருங்கள்!

அதுவே இறையழகு! இறையறம்!

போலி Senti பக்தியில் இருந்து விலகி,
"இயற்கை இறை"யில், தோயப் பழகுவோம்!


பிளேபாய் கிருஷ்ணரின் பொண்டாட்டிகளின் பெயர்கள் பின்வருமாறு...👇

பிளேபாய் கிருஷ்ணரின் பொண்டாட்டிகளின் பெயர்கள் பின்வருமாறு...👇

ருக்மணி
சத்யபாமா
ஜாம்பவதி
நக்னசித்தி
மித்திரவிந்தை
இலக்குமணை
காளிந்தி
பத்திரை ஆகியோர்.

இதேபோக எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸாக👇

தேவேந்திரனின் பொண்டாட்டி இந்திராணி
ஆண்டாள்
ராதை
பூமாதேவி

மற்றும் இது போதாதென்று

ஒரு லட்சம் கோபிகையர்களும்...

இதெல்லாம் பத்தாது னு கடைசியா

சிவன் கூட மேட்டர் பண்ணி ஐயப்பனையும்

நாரதர் கூட மேட்டர் பண்ணி அறுபது பேரையும் பெத்து தள்ளிருக்காரு.

இதுல கிருஷ்ணனுக்கு ஜெயந்தி வேற😝😝😝😝

ஐயர் ஐயங்கார் டெக்னாலஜியின் கதை - வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொள்கிறோம்....இது 'பெரியார் மண்' என்று

ஐயர் ஐயங்கார் டெக்னாலஜியின் கதை !!

இம்முறை ஐயர் ஐயங்கார் டெக்னாலஜியின் ( I.I.T) மானம் கப்பலேறுவதை தடுப்பது சற்றுக்  கடினம்தான். காரணம்,  கொல்லப்பட்டது, இளிச்சவாய தமிழ்நாட்டு மாணவரல்ல. போராட்டக்குணமுள்ள கேரள மண்ணின் மாணவி. ஐ.ஐ.டி மற்றும் அதனை ஆதரிக்கும் சங்கிகளுக்கு  கூடுதல் தலைவலி ....கொல்லப்பட்டவர் முஸ்லிம்.

1992 முதல் சென்னை ஐ.ஐ.டியின் முகத்திரையைக் கிழித்தது இரண்டே இதழ்கள்தான். ஒன்று 'நக்கீரன்' மற்றொன்று உங்கள் 'தாகம்'.

ஐ.ஐ.டி நிறுவனத்தால் பழிவாங்கப்பட்ட கணித மேதை  பேராசிரியர் வசந்தா  கந்தசாமி அம்மாவை நான் 'நக்கீரன்' அலுவலகம் அழைத்துச்சென்றேன். அவர் பட்ட துன்பங்களைக் கேட்ட அண்ணன் நக்கீரன் கோபால், அண்ணன் லெனினை உடனே தன் அறைக்கு அழைத்தார். 'தம்பி ...கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. நீங்கள் அம்மாவிடம் பேசுங்கள் ' என்றார்.

அந்த வார 'நக்கீரன்' அட்டைப்படக் கட்டுரை வசந்தா கந்தசாமி அம்மாதான். 'நக்கீரன்' கடைக்கு வந்தவுடன், அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வந்த முதல் தொலைபேசியின் குரல் அவரை இப்படி மிரட்டியது...." என்ன கோபால்...யார் மேல கை வைக்கறீங்க? ஐ.ஐ.டி கோபால்  !! " மிரட்டியவர்......மாலன் !!

அந்தத் தொலைபேசி வரும்போது நான் அண்ணன் அறையில் இருந்தேன். 'இந்து' ராம் தொடங்கி பல முன்னணி பத்திரிகையாளர்கள் அவரிடம் பேசியபடியே இருந்தனர். அண்ணன் சிரித்தபடி அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தார். " நக்கீரன் " தந்த பலத்த அடியில்....ஆடிப்போனது ஐ.ஐ.டி 'அவாள்' கூடாரம்.

அடுத்த இரண்டாண்டுகளுக்கு 'தாகம்' இதழில், 'ஐ.ஐ.டி எனும் மர்ம தேசம்'  தலைப்பில் பேராசிரியர் வசந்தா கந்தசாமி தொடர் கட்டுரை எழுதினார்.  கட்டுரை வாங்க நான் ஒவ்வொரு முறை அம்மாவை சந்திக்க  ஐ.ஐ.டி உள்ளே நுழையும்போதும் கடுமையாக மிரட்டப்படுவேன். எச்சரிக்கப்படுவேன். கிண்டி முதல் அடையாறு வரை ஒட்டப்படும் 'தாகம்' இதழின் சுவரொட்டிகளை ஐ.ஐ.டி நிர்வாகம் சம்பளத்துக்கு ஆள் வைத்து கிழிக்கும். அப்பகுதி கடைகளுக்கு 'தாகம் ' வந்த அடுத்த நொடி, மொத்த இதழ்களையும் ஒரு ஜீப் வந்து பணம் கொடுத்து அள்ளிச்சென்று தீ வைத்துக் கொளுத்திவிடும்.

இன்று உள்ளது போல் அன்று சமூக வலைதளங்கள் இல்லை. ஐ.ஐ.டி செய்தியை வெளியிட அத்தனைப் பத்திரிகைகளும் மறுத்துவிடும்.

'தாகம்' இதழில் வந்த பேராசிரியர் வசந்தா கந்தசாமியின் கட்டுரையைக் கண்டித்து Hindu frontline கட்டுரை எழுதியது. Thirdrate filthy magazine Thaagam என்று நமக்குப் பட்டம் சூட்டியது.  ' ஏன் முதல்வர் ஜெயலலிதா இதுபோன்ற தீவிரவாத பத்திரிகைகளை தடை செய்யாமல் விட்டுவைத்து இருக்கிறார் ' என்று கேள்வியும் எழுப்பியது.  frontline ஆசிரியர் 'இந்து' ராம்.

அப்போது நான் 'நந்தன்' இதழிலும் உதவி ஆசிரியராக பணியாற்றினேன். ஐ.ஐ.டியை அதிலும் வெளுத்தோம்.

அடையாறு முதல் என் சொந்த ஊரான புதுச்சத்திரம் வரை என்னை ஐ.பி பின்தொடரும். உபயம் ஐ.ஐ.டி.

வெறும் செய்தி வெளியீட்டால் ஐ.ஐ.டியை வெல்ல முடியாது என்று முடிவு செய்தேன். வசந்தா அம்மாவை அண்ணன் வைகோவிடம் அழைத்துச்சென்றேன். ஐ.ஐ.டி அக்கிரமங்களை கேட்டவர் அதிர்ந்தார். ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் வசந்தா அம்மாவுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். ஐ.ஐ.டி நிர்வாகத்தைக் கண்டித்துப் பேசினார்.

அடுத்து நான் அம்மாவை அழைத்துச் சென்றது அண்ணன் திருமாவளவனிடம். சைதாப்பேட்டை முதல் ஐ.ஐ.டி வரை விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தமிழ் அமைப்புகள் நடத்திய பிரம்மாண்ட முற்றுகைப்போராட்டத்தால் ஐ.ஐ.டி இயக்குநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

' தாகம் ' இதழில் வெளிவந்த ஐ.ஐ.டி தொடரை கலைஞர் தொடர்ந்துப்படித்து வந்ததின் விளைவு....தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கலைஞர் பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களுக்கு 'கல்பணா சாவ்லா' விருதை அறிவித்தார்.

அதன் பிறகுதான் ஊடகங்கள் அவர் குறித்த செய்திகளை வெளியிட தொடங்கின....

நேற்று வசந்தா அம்மாவிடம் பேசினேன்....' அவனுங்க(ஐ.ஐ.டி) திருந்தமாட்டானுங்கடா தம்பி ! ' என்றார் கோபமாக.

இன்னும் எத்தனை மாணவர்களை கொல்லப்போகிறோம்.....ஐ.ஐ.டியை என்று வெல்லப்போகிறோம் தோழர்களே?

வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொள்கிறோம்....இது 'பெரியார் மண்' என்று . அது உண்மை என்றால் இன்நேரம் ஐ.ஐ.டி இயக்குநர் சிறையில் இருப்பானே!!

- தாகம் செங்குட்டுவன்

நாங்கல்லாம் ஆண்ட பரம்பற...

இந்தியால அதிக மருத்துவ படிப்பு எந்த ஸ்டேட்ல இருக்கு..??
தமிழ் நாட்ல.

அதிக எஞ்சினியரிங் படிப்பு எங்க இருக்கு?
தமிழ் நாட்ல..

அதிக சுகாதார நிலையம் எங்க இருக்கு??
தமிழ் நாட்ல..

அதிக அரசாங்க வேலை வாய்ப்பு எங்க இருக்கு??
தமிழ் நாட்ல..

விவசாயத்துக்கு இலவச மின்சாரம் எங்க இருக்கு??
தமிழ் நாட்ல

ஆசியால பெரிய இலவச நூலகம் எங்க இருக்கு
தமிழ்நாட்ல..

முதல் தலைமுறை பட்டதாரிக்கு இலவச உயர்கல்வி எங்க இருக்கு???
தமிழ் நாட்ல

அதிக அளவில் பாலங்கள் போக்குவரத்து வசதி எங்க இருக்கு??
தமிழ் நாட்ல..

பெண்ணுக்கு சொ‌த்துரிமை திட்டம் எங்க இருக்கு??
தமிழ் நாட்ல

இதெல்லாம் பண்ணது யாரு ?

கலைஞர் மு.கருணாநிதி.

சரி இருந்தும் அவர ஏன் குறை சொல்ற??

அவரு விபூதி வச்சுக்கல..
அப்புறம்??
பண்டிகைக்கு வாழ்த்து சொல்லல...
ம்ம் அப்பறம்,???
எல்லா மக்களும் ஒண்ணுனு மாத்த பாக்கறாரு..

ஏன் இல்லையா..???
நாங்கல்லாம் ஆண்ட பரம்பற...

போடா லூசு........ ..!!!!!

முத்துராமலிங்கர் - புனிதர் போன்ற எந்த அடையாளமும் தேவை அற்றது

முத்துராமலிங்கர் என்ற மனிதர் சுதந்திர போராட்ட வீரர் மட்டுமே.....அதற்கு மேல் புனிதர் போன்ற எந்த அடையாளமும் தேவை அற்றது ....சில சமூக வரலாற்று உண்மைகளை தெளிவு படுத்திகிறேன்...

1..இன்னும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பிராமணர்கள் அதிகம் இருந்த அன்றய காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு பல வருடங்களாக அந்த சட்டத்தை நீக்கும் செயல்பாடு இவரிடம் தீவிரமாக இல்லாது இருந்தது கடுமையான விமர்சினம் இன்றும் உண்டு....அதில் இவரின் சிறிய பங்கை மட்டுமே பெரிதாகி பலரின் பெரும்பங்கை பங்களிப்பை மூடி மறைத்து விடும் பார்பனியசூழ்ச்சியை அப்டியே விடமுடியாது....1937 ஆம் ஆண்டு தேர்தலில் குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வையும் அவர்களது வாழ்வில் புரட்சிகர மாற்றங்களையும் உண்டாக்கிய நீதிக்கட்சியின் வேட்பாளராக இராமநாதபுரம் ராஜாவான சண்முக இராஜேசுவர சேதுபதி களத்தில் நின்றார். அவரை எதிர்த்து குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்காத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார்.

முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக அவரது தந்தையார் உக்கிரபாண்டித் தேவரே நேரடியாக பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் ஏன் செய்தார் என்று உண்மையை புரிந்தால் அனைத்தும் தெளிவாகும்...ஆனால் தேர்தலில் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இராஜாஜி பார்ப்பனர் முதல்வரானார். அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ஒழிப்பேன் என்று சூளுரைத்தவர்கள் அந்த அடக்குமுறைச் சட்டங்களை முன்பைவிட மிகக் கடுமையாக மக்களிடம் செயல்படுத்தத் தொடங்கினர். தேவர் வேடிக்கை பார்த்தார்.

2. பெரியாரின் குடிஅரசு 02.10.1938 அன்றய பத்திகையில் -->நீதிக்கட்சி அரசுகளால் தோற்றுவிக்கப்பட்ட 2000 பள்ளிகளை 1938 இல் இராஜாஜி தனது ஆட்சியில் இழுத்து மூடினார். 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். மூடப்பட்ட பள்ளிகளில் படித்த ஆயிரக்கணக்கான கள்ளர், தேவர் சாதியைச் சார்ந்த மாணவர்களும் தமது எதிர்காலத்தை இழந்தனர். இக்கொடுமையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. அதனை அடக்க பிரிட்டிஷ் அரசின் கிரிமினல் திருத்தச் சட்டத்தை ஏவினார் இராஜாஜி. இதில் நூற்றுக்கணக்கான கள்ளர்கள் தேவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர். அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார் தேவர். பெரியாரும் இக்கொடிய சட்டத்தில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

சங்கரலிங்கனார் ஏன் உயிர் துறந்தார்?

சங்கரலிங்கனார் ஏன் உயிர் துறந்தார்?

கோரிக்கைகள் 3-12 படித்துப் பாருங்கள்.

1. மொழிவழி மாநிலம் அமைத்திட வேண்டும்
2.சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிட வேண்டும்.
3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்ய வேண்டும்.
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு மட்டுமே அளித்திட வேண்டும்.
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிய வேண்டும்.
6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும்.
7. தேர்தல் முறையில் மாறுதல் செய்திட வேண்டும்.
8. தொழிற் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
9. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை விளைச்சலில் வாரம் அளித்தல் வேண்டும்.
11. மத்திய அரசு இந்தியை மட்டுமே பயன்படுத்தக் கூடாது.
12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்திட வேண்டும்

ஏன் கீழடியை இழுத்து மூட முயற்சிக்கிறார்கள்

எனக்கு பலவருடங்களாக இருந்த சந்தேகம், சில வருடங்களுக்கு முன்பு முகநூலிலும் கேட்டதாக ஞாபகம். அதற்கான பதில் கீழடியில் கிடைத்தது.

மேற்கே ஆப்கானிஸ்தானில் இருந்து கிழக்கே அஸ்ஸாம் வரையும் வடக்கே காஷ்மீரில் இருந்து தெற்கே ஆந்திரா வரையும் ஆட்சி செய்த சந்திரகுப்த மௌரியர்கள் தமிழகத்தை மட்டும் விட்டு வைத்ததின் மர்மம் என்ன?

வட்டெழுத்திற்கு முந்தைய தமிழின் எழுத்து வடிவத்திற்கு பிராமி என்று யார் எப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை. இதற்கு முன்புவரை வட இந்தியாவில் கிடைத்த ஆகப் பழைய எழுத்து வடிவம் 2300 ஆண்டுகளுக்கு முந்தையது மட்டுமே. தமிழின் எழுத்து வடிவங்கள் அதற்கு முந்தையது கிடைக்க வில்லை.

ஏன் கீழடியை இழுத்து மூட முயற்சிக்கிறார்கள் என்பதற்கான காரணம், அறிவியல் ரீதியாக கீழடியில் கிடைத்த எழுத்துக்கள் 2600 வருடங்களுக்கு முந்தையவை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

வட இந்தியாவில் கிடைத்த பிராகிருதம் இன்று அழிந்துவிட்டது. ஆனால் கீழடியில் கிடைத்த ஆதன் என்ற பெயரை இன்று வரை நம் குழந்தைகளுக்கு சூட்டுகிறோம்.

எழுத்து முறை தமிழகத்திலிருந்துதான் வட இந்தியாவிற்கு சென்றது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அறிவிலும் நாகரிகத்திலும் வட இந்தியர்களைவிட நாம் பல மடங்கு முன்னேறியிருந்தோம் என்பதற்குமான ஆதாரம் கீழடி.

பத்ரி சேஷாத்திரியிலிருந்து பக்‌ஷிராஜன் வரை பதறியடித்து கீழடியை ஏளனம் செய்வதற்கான காரணம் அது இந்தியாவின் உண்மையான வரலாற்றை ஆதாரப்பூர்வமாக நிறுவியிருப்பதுதான்.

அறிவிலும் நாகரிகத்திலும் இவ்வளவு முன்னேறியிருந்த சமூகம் என்பதால், நம்மிடமிருந்து எழுத்து முறையை கற்றுக்கொண்டவர்கள் நம்மீது படையெடுக்காமல் இருந்திருக்கலாம்.

அசல் மனுதர்ம சாஸ்திரம் 1919ன் பதிப்பு :

அசல் மனுதர்ம சாஸ்திரம் 1919ன் பதிப்பு :
   🤔பிராமணன் எந்தத் தவறு செய்தாலும் தண்டனை கூடாது😁
     பிரம்ம ஹத்தியை விட அதிகமான பாவம் உலகத்தில் கிடையாது. ஆதலால் பிராமணனை கொல்ல வேண்டும் என்று அரசன் மனதிலும் நினைக்கக் கூடாது. மனு.அதி8:சுலோ 381.

     பிரமணன் எல்லா பாவஞ்செய்தாலும் அவனைக் கொல்லாமல் காயமின்றி,அவன் பொருட்களுடன் ஊரை விட்டு துரத்த வேண்டியது.மனு அத் 8; சுலோ 380:

     பிரமணனை தலை மொட்டை செய்வது கொலைத் தண்டனையாகும்.மற்றவருணத்தாருக்கு😫 கொலை தண்டம் உண்டுமனு 8: சுலோ 379(என்ன அநீதி பாருங்கள்.மனுநீதி சட்டப்படி பாவம் செய்த பிராமணனுக்கு கொலை தண்டனை என்பது மொட்டையடிப்பதாம்.அவன் என்ன கொடுமை செய்தாலும் காயம் எதுவும் படுத்தாமல் அவனுடைய எல்லாப் பொருட்களையும் கொடுத்து வெளியே அனுப்பி விட வேண்டுமாம்⁉

     பிராமணனை கொல்ல வேண்டுமென்று நினைத்து தடி முதலான ஆயுதத்தை ஓங்கினால் நூறு வருஷம் வரையிலும்,அதினால் அடித்தால் 1000 வருஷம் வரையிலும் நரகத்தில் வாசம் செய்வான்.மனு11 சுலோ 206:

      பிராமணன் சரீரத்தில் ஏற்பட்ட இரத்தம் பூமியில் விழுந்து எவ்வளவு பரமாணுக்கள் நனைகிறதோ அவ்வளவு ஆயிரம் வருஷம் நரகத்தில் வாசம் செய்வான்(வேறு வருணத்தார்)மனு 11 சுலோ 207 ;

      பிராமணனை புசிப்பித்ததாலும் பூரணமான பலன் உண்டாகிறது.மனு 3 / 129.அதாவது பிராமணனை தின்று கொழுக்க உணவு கொடுத்து மற்றவர்கள் பூசைகளில் தர வேண்டும்;

       பிராமணர்கள் புசிக்கும் போது சண்டாளன் உயிர்ப் பன்றி,கோழி,நாய்,மாதவிடாயான ஸ்திரிபார்க்காமல் இருக்க செய்ய வேண்டும்,மனு 3/239;

      பெண்கள் விஷயத்தில் பிராமணனுக்கு சலுகை❓பிராமணனுக்கு தன் சாதியிலும் மற்ற மூன்று சாதியிலும் விவாகம் செய்துக்கொள்ளலாம். மனு.2/13;

      பிராமணனுக்கு விவாகம் செய்துக்கொண்ட வைசிய மனைவியிடத்தில் பிறந்தவன்"அம்பஷ்டன்" என்றும்,அவ்விதம் சூத்திர மனைவியிடத்தில் பிறந்தவன்"நிஷாதன்" என்றும் சொல்லப்படுகிறான்.மனு 10/8;

      உலகத்தில் நான்கு வருணத்தாருக்கும் சங்கர சாதியில்(கலப்பு) பிறந்தவர்களில் சிலர் மிலேச்ச பாஷை (தமிழ் உட்பட)உள்ளவர்களாயும், சிலர் சமஸ்கிருத போன்ற உயர்ந்த பாஷை உள்ளதுர்களாயும் இருக்கிறார்கள்.ஆகிலும் அவர்கள் தஸ்யூக்கள் என்று சொல்லப்படுவார்கள்.மனு 10/45;

      உயர்ந்த சாதி கன்னிகையை புணர்ந்த தாழ்ந்த சாதியானுக்கு மரணம் வரையில் சிட்சையை விதிக்க வேண்டியது.மனு.8/366;(பிராமணனுக்கு எந்த சாதியினரையும் விவாகம் செய்ய தடையில்லை.ஆனால் பிறக்கும் குழந்தைகளின் நிலைகளில் தான் மாறுபாடுகள்).

      👺இப்படி பிராமண மனு தர்மத்தில் சட்டம் இருக்க ஆரிய-பிராமண இந்துத்துவாவாதிகள் கிறிஸ்தவர்களும்,இஸ்லாமியரும் தான் சாதியை கொண்டு வந்தார்கள் என்று வரலாற்று பொய்யை பொய்யர்கள் கூறுகிறார்கள்.இப்படி கூறுகிறவர்கள் யார்? திராவிட  காட்டிக் கொடுக்கும்🚩வந்தேறி கூட்டத்தாரின் கைக்கூலிகள்.
    
      அறிவுள்ளோர் சிந்திப்பது நல்லது. தொடர்ந்து பிராமண மனுதர்ம சட்டம் அறிவோம்.

காஞ்சிக் காமக்கோடிப் பீடச் சங்கராச்சாரியாரின் கரைகடந்த தமிழ் வெறுப்பு

சில ஆண்டுகட்கு முன், இற்றைக் காஞ்சிச் சங்கராச்சாரியார், ஆண்டாள் திருப்பாவையின் "செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்" என்னும் அடியிலுள்ள தீக்குறளை சென்றோ தோம்" என்னும் தொடருக்கு, தீய திருவள்ளுவரின் குறளை யாங்கள் ஓத மாட்டோம் என்று ஆண்டாள் சொன்னதாகப் பொது மேடை யிற் பொருள் கூறி, தம் தமிழிலக்கண அறியாமையையும் தமிழ் வெறுப்பையும் வடமொழி வெறியையும் ஒருங்கே காட்டினார்.

    ஆட்சிமொழிக் காவலர் திரு. கீ. இராமலிங்கனார் ஆச்சாரி யார் மடத்திற்குச் சென்று இதுபற்றி வினவியபோது, ஆச்சரியார் நேரடியாகத் தமிழில் விடையிறுக்காது. தம் அணுக்கத் தொண்டர் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு சமற்கிருதத்திலேயே விடை கூறினாராம். "சுவாமிகளுக்கு நன்றாகத் தமிழ் தெரியுமே! தமிழிலேயே எனக்கு நேரடியாய் விடை கூறலாமே!" என்று ஆட்சி மொழிக் காவலர் சொன்னதற்கு, "சுவாமிகள் பூசை வேளையில் நீச பாஷையில் பேசுவதில்லை" என்று அணுக்கத் தொண்டர் மறு மொழி கூறினாராம். எது நீச மொழி என்பதை, 'எது தேவமொழி?' என்னும் பகுதியிற் காண்க.


இந்து மதம் என்பது ....

1. "இந்து மதம் என்பது சரியில்லாத பெயர்"
- காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி
"Hinduism is a later, incorrect appellation"
- Indian express dated December 8 1981, page 5

2. "இந்து என்னும் பதத்தை (மதத்திற்கு) வழங்க எனக்கு இஷ்டமில்லை"
- சுவாமி விவேகானந்தர், நூல்: ஸ்ரீ விவேகானந்த விஜயம், மகேஷ் குமார் சர்மா, பக்கம் 26

3. "இந்து என்ற சொல் ஒரு முறையான சமயக் கோட்பாடு அல்லது கடவுள் பற்றின ஒருமைப்பட்ட அமைப்பு என எவரையும் நினைக்க வைக்கலாம் எனினும் இந்து என்பது ஒரு மதம் அன்று"
-சுவாமி தர்ம தீர்த்தா
"The word Hindu might lead one to think that the unity is one creed of faith. Hinduism is not a religion"
book: The menace of Hindu imperialism, page 194

4. "இந்து மதம் என்பது ஒரு அண்மைக்கால புதிய பெயர்" - சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி
"Hinduism is a modern word":  Hinduism-Doctrine and way of Life, page 15

5. "இந்து மதம் என்பது யாது?
- இந்து எனும் சொல் நமது பழமையான இலக்கியங்களில் காணப் பெறவில்லை. கடவுள் நம்பிக்கை (மதம்) என்ற வகையில் இந்து இயல் என்பது தெளிவற்றது. ஒழுங்கான உருவமைப்பு பெறாதது. பல்வகை தோற்றக்கூறுகள் உடையது. எல்லா மக்களுக்கும் எல்லா செய்திகளும் என்பதான தன்மை படைத்தது. அதை வரையறை செய்வதோ அல்லது அது வழக்கிலுள்ள கருத்தின்படி ஒரு மதமா இல்லையா என மெய்யாகவே உறுதிமொழி இயலும் செயலன்று" - ஜவகர்லால் நேரு
"What is Hinduism?
The word Hindu does not occur at all in our ancient literature. Hinduism, as a faith, is vague, amorphous, many sided, all things to all men. it is hardly possible to define it or indeed to say definitely whether it is a religion or not in the usual sense of the word"
Jawaharlal Nehru
Book: Discovery of India, page 108

6. "வடமொழி அகரமுதலி களிலும் இக் காலம் வரையிலான வடமொழி இலக்கியம் அனைத்திலும் ஹிந்து, ஹிந்த், இந்துஸ்தான், என்ற சொல் எதுவும் கிடையாது
- "மகாமகோபாத்தியாய பண்டித ராஜ்"  ஷியாம்குமார் ஆச்சார்யா
"There is no such word as Hindu, hind, Hindustan in any of our Sanskrit dictionaries and the entire Sanskrit literature up to date.
Book: Danger to Bharat - Freedom, page 84

7. "இந்து என்ற சொல் எந்த காலத்தில் வந்தது என்ற ஆராய்ச்சி எனக்குத் தேவையில்லை என்றாலும் அது பிற்காலத்தில் வந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்துக்கள் ஆயினர்.
- கவிஞர் கண்ணதாசன்
நூல்: அர்த்தமுள்ள இந்து மதம், பகுதி 2, பக்கம் 50

8. "இந்து யார் என்று தெரியவில்லை. இந்து மதத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது கவலையும் ஏமாற்றமும் ஏற்படுகின்றது இது புராதன காலமாக நம் நாட்டில் கைக்கொள்ளப்பட்டு வரும் கொள்கையா அல்லது ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டு இருப்பது தான் இந்து மதமா? எது இந்துமதம்? ஒன்றுமே புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே புரியவில்லை. இந்து என்ற பதம் நம் நாட்டை சேர்ந்த தில்லை"
பேசியவர்: TSS இராஜன்
இந்து மதாபிமான சங்க விழா
காரைக்குடி
12.10.1934

9. "இந்து மதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. இந்து என்ற பெயர் நமக்கு அந்நியர் கொடுத்ததேயாகும்"
- பேசியவர்: வீ. பாஷ்யம் ஐயங்கார்,
ஆரியர் மாநாடு,
மணி ஐயர் மண்டபம், திருவல்லிக்கேணி
ஆதாரம் : "Madras Mail" dated 10.12.1940

முதலில் கங்கைக் கரையில் திருவள்ளுவர்சிலையை வச்சிருடா!

எங்கள் மண்ணில் வடவன் விவேகானந்தனை காலடியில் மிதித்தவனை!



இந்து துறவினுத் தூக்கிட்டுப்போனான் தருண்விஜய் !
குமரியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதன் திறப்பு விழா, ஹரித்துவாரில்  நடக்க இருந்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலையை, கங்கை கரையோரம் நிறுவ அங்குள்ள இந்து சாதுக்கள் திருவள்ளுவன் தாழ்த்தப்பட்டவன் அவன்சிலையை புனிதமானக்கங்கையில் வைக்கவிடமாட்டோமென்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமான இந்துக்கள் கங்கை கரையில் குவிந்ததால், பதற்றம் நிலவியது. பாதுகாப்பு கருதி ஏராளமான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, கடைசி நேரத்தில் உத்தரகாண்ட் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியையும் உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத், ஆளுநர் கிருஷண் காந்த் பால் ஆகியோர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது!

இவனுகதான் திருவள்ளுவரை இந்துனுத் தூக்கிட்டு வாரானுக!

இராஜா முதலில் கங்கைக் கரையில் திருவள்ளுவர்சிலையை வச்சிருடா!அப்புறம் காவியா கருப்பானுப் பார்ப்போண்டா!

நவம்பர் 7 வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள்.

நவம்பர் 7 வரலாற்றில் மறைக்கப்பட்ட  பக்கங்கள்.

பெருந்தலைவர் காமராஜர் வீட்டிற்கு தீவைத்து, கொலை செய்ய முயன்ற இந்துத்வா சக்திகள்..

காலம் : 7 - 11 - 1966
இடம் : புது தில்லி

அன்று தான் இந்தியப் பாராளுமன்றத்தின் மீது சங்கராச்சாரியார்களின் தலைமையில் சாதுக்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்வோர் தாக்குதல் நிகழ்த்துகின்றனர்...

 ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்கம் போன்ற மத அமைப்புகளின் துணையுடன் (அட காந்தியைக் கொன்ற அதே கூட்டம் தான் கருப்புக் காந்தியையும் கொலை செய்ய முயன்று இருக்கின்றன).

தாக்குதலுக்கு பெரிய காரணம் என்று ஒன்றும் இல்லை... 'பசு வதைத் தடுப்புச் சட்டத்தினை' இந்திய நாட்டில் சட்டமாக அமுலாக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையே ஆகும். இந்தக் கோரிக்கையினை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் உறுப்பினர்களை வேண்டியே தில்லியின் வீதிகளில் சூலாயுதங்கள், பெட்ரோலில் நனைக்கப்பட்ட துணிகளோடு இன்னும் பல ஆயுதங்களுடன் 'அமைதியான' நிர்வாண சாமியார்கள் கூட்டம் அன்றுக் கூட்டம் போடுகின்றது.

ஒரு சனநாயக நாட்டினில் சட்டத்தினை கொண்டு வருவதற்கு ஆயுதங்கள் எந்தளவு பயன்படுத்தப்படும் என்று எனக்குத் தெரியவில்லை...ஆனால் அன்றைக்கு சாதுக்கள் ஆயுதங்களுடன் தான் களம் இறங்கி இருக்கின்றனர்....அதனுடையே வானொலி நிலையத்தினை தாக்குவது, தபால் நிலையத்தினை கொளுத்துவது, பாராளுமன்றத்தின் மீது கல் எரிந்துத் தாக்குவது, பேருந்துக்களை எரிப்பது போன்ற செயல்களையும் அவர்கள் செய்து இருக்கின்றனர்.

ஆனால் பசுவதைக்காக அவர்கள் ஏன் இந்தளவு ஆர்ப்பாட்டம் பண்ணினர் என்பது தான் புரியாதப் புதிராக இருக்கின்றது. காரணம் அவர்கள் புனிதமாக கருதும் வேதங்களிலேயே பசுவினைக் கொன்று விருந்து நடத்தி அதன் மாமிசத்தினைப் புசித்த பகுதிகள் எல்லாம் இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது இவர்கள் ஏன் திடீர் என்று பசுவின் மேல் இத்தனைப் பாசம் கொண்டு எழுந்து இருக்கின்றனர் என்பதும் சிந்திக்கத்தக்கதான ஒன்றாக இருக்கின்றது.

இவை அனைத்துடனே அவர்கள் செய்த மற்றுமொரு விடயம் பாராளுமன்றத்தில் இருந்து விலகி இருந்த காமராசரின் இல்லத்தில் அவர் உள்ளே இருக்கும் பொழுதே தீ வைத்து தாக்குதல் நிகழ்த்தியது தான். மதிய உணவினை அருந்தி விட்டு காமராசர் ஓய்வு எடுக்கும் பொழுது அந்தத் தாக்குதல் நிகழ்ந்து இருக்கின்றது. அதில் மயிரிழையில் உயிர் பிழைத்து இருக்கின்றார் காமராசர்.

இந்த சம்பவத்திற்கு முன்னர் அவர் ஆற்றிய உரைகளில் நாட்டின் சில பணக்காரர்களுக்கும் மத அமைப்பாளர்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்றும் கூறி இருக்கின்றார்.

"பணக்காரனும் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களும் தான் சோசியலிசத்திற்கு எதிரிகள். பிறப்பால் உயர்ந்தவர்கள் ஏன் சோசியலிசத்தை எதிர்கின்றார்கள் தெரியுமா? பணக்காரர்களோடு சேர்ந்து சோசியலிசத்தை வர விடாது தடுத்து விட்டால் தங்களுடைய சாதியின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டிக் கொள்ளலாம் என்று நினைகின்றார்கள். நாம் விட்டு விடுவோமா என்ன?" - நவசக்தி (3-11-1966)

பின்னர் அவர் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்திற்கு பின்னர் சேலத்தில் ஆற்றிய உரையில்,

"குறிப்பாக அவர்களுக்கு பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமராஜ் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல்கின்றான். அவன் தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைகின்றார்கள். என் வீட்டுக்கு தீ வைக்கின்றான். ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்..." -

 11-12-1966 சேலம் பேரூரை - நவசக்தி - 15-12-1966..

நன்றி..

காமராஜர் கொலைமுயற்சி சரித்திரங்கள்.

இந்த வரலாறு தெரியாமல், காமராஜரை கொலை செய்ய முயன்ற சக்திகளுக்கு ஆதரவளிக்கும் சகோதரர்கள் புரிந்து கொள்ளட்டும்