Tuesday, October 05, 2021

வாலி சுக்கிரிவன் உண்டான கதை

 *"அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை"!*

இராமாயணத்திலிருந்து ஒரு அத்திப்பழம்

பிரம்மா ஒருநாள் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த போது அவனுடைய கண்களிலிருந்து வீரியம் பெருகியது. அவன் அதை கைகளில் ஏந்தி பூமியில் விட்ட பொழுது பிறந்தவன் தான் "ரிட்சரஜஸ்". ஒரு நாள் அவ்வானரன் மேரு மலையிலிருந்த ஒரு நீரோடையில் மூழ்கி எழுந்தபொழுது அழகிய பெண்ணாக மாறிவிட்டான். பிரம்மாவை கண்டு பேசிவிட்டு வான்வழியாக திரும்பிக் கொண்டிருந்த இந்திரனும் சூரியனும் இக்கன்னியைக் கண்டு கீழ் இறங்கினர். தேவேந்திரனுடைய வீரியம் அக்கன்னியின் வால் பகுதியில் விழுந்ததால் "வாலி" உண்டானான். சூரியனுடைய வீரியம் அவளுடைய கழுத்தில் விழுந்ததால் "சுக்கிரிவன்" உண்டானான். பிரம்மனிடம் சென்று அப்பெண் முனையிட்டாள். அவர் அதைக் கேட்டு சிரித்து, "நீ இக்குழந்தைகளுடன் இதோ இங்குத் தோன்றும் ஏரியுள் மூழ்கு வாயாக"என்றான். அவள் அவ்வாறே மூழ்கி எழுந்தவுடன் மீண்டும் பழைய வானர வடிவைப் பெற்றாள்.

(யுத்த காண்டம், சருக்கம் 67)

👉 கண்ணில் காம நீர் வடியுமா?
👉 நீரோடையில் குளித்தெழுந்தால் ஆண் பெண்ணாக மாறிவிடுவானா?
👉 கழுத்திலும் வாலிலும் ஏன் வீரியத்தை விடனும்?
👉 கழுத்திலும் வாலிலும் விழந்த வீரியத்தால் குழந்தைகள் பிறக்குமா?
👉 தேவர்களுக்கெல்லாம் அரசனான தேவேந்திரனின் ஒழுக்கம் இது தானா?
👉 சூரிய பகவானின் யோக்கியதை இதுதானா?
👉 களவுக் காமத்திலும் கூட்டா? என்றெல்லாம் உங்கள் சிந்தனை வேலை செய்கிறதா?
👉ஆபாசம்; அநாகரிகம்; அபத்தம் என்கிறீர்களா?