Friday, November 08, 2019

வீர் சாவர்க்கர் - 'வீர்'ன்னு அவருக்கு எப்படி பேர் வந்துச்சு தெரியுமா

எச்ச ராஜா வீர் சாவர்க்கர் வீடியோ ஒண்ணு ஷேர் பண்ணியிருக்காப்புல..
சரி 'வீர்'ன்னு அவருக்கு எப்படி பேர் வந்துச்சு தெரியுமா..
1926 'ல சித்ரகுப்தான்னு ஒருத்தரு 'Life of Barrister Savarkar' ன்னு ஒரு புத்தகத்துல சாவார்க்கரோட வீர சாகசங்கள்.. அவரோட தைரியம்.. போர் குணங்களை விலாவரியா புகழ்ந்து எழுதியிருந்தார்.. அதுலதான் சாவர்க்கர் க்கு 'வீர்'ன்னு ஒரு பட்ட பேரு கொடுத்து எழுதியிருந்தார்...
அப்புறம் சாவர்க்கர் செத்து பல வருஷம் அப்புறம் அந்த புத்தகத்தோட இரண்டாவது அச்சு 1986 'ல வெளியாச்சு.. அந்த புத்தகத்தை வெளியிட்ட 'வீர் சாவர்க்கர் ப்ரகாஷன்'ன்ற அமைப்பை சார்ந்த அதிகாரபூர்வ வெளியீட்டாளர் ரவீந்தர ராம்தாஸ் ஒரு தகவலை தன்னோட முன்னுரைல வெளியிட்டாரு..
அது என்னான்னா.. அந்த புத்தகத்தை எழுதுன சித்ரகுப்தரே 'சாவர்க்கர்'தான்... 😂😂😂😂
'வீர்' சாவர்க்கரை போற்றுவோம் ப்ரெண்ட்ஸ்..

ஏன் ப்ரோ நீங்க பாஜகவை ஆதரிக்குறீங்க?

ப்ரோ - ஏன் ப்ரோ நீங்க பாஜகவை ஆதரிக்குறீங்க?
சகோ - எனக்கு மோடிஜியை ரொம்ப பிடிக்கும்ங்க. பாஜகதான் ஒழுங்கான கட்சி, ஊழலில்லாத கட்சி, குடும்ப அரசியல் இல்லாத கட்சி. அதனாலதான்.
ப்ரோ - சூப்பர் ப்ரோ. அப்ப தமிழ்நாட்டுல நடந்த குட்கா ஊழல், சிபிஐ ரெய்டு, தலைமைச்செயலகத்துல நடந்த ரெய்டு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டையெல்லாம் பார்த்துட்டு நீங்களும் அதிமுகவை எதிர்க்குறீங்களா?
சகோ - ஐயய்யோ இல்ல சகோ. மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக ஆதரவு ப்ரோ நான்.
ப்ரோ - அது எப்படி ப்ரோ ஒரே நேரத்துல ஊழல் இல்லாத ஒழுங்கான கட்சியவும் ஆதரிக்கிறீங்க? ஊழலுக்காக 4 வாட்டி ஜெயிலுக்குப்போய், குற்றவாளியாகவே செத்துப்போன கட்சித்தலைவரையும் ஆதரிக்கிறீங்க?
சகோ - அவங்க ஒண்ணும் குற்றவாளி இல்ல சகோ. குற்றம் சாற்றப்பட்டவர் மட்டும்தான், அவங்க இறந்துட்டாங்க. அதனால அவங்க நிரபராதி.
ப்ரோ - அடடா. பின்றீங்க ப்ரோ. அப்ப இரண்டாம் குற்றவாளியா நிரூபிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலாவை ஆதரிக்கிறீங்களா?
சகோ - இல்ல சகோ. அவங்க குற்றவாளி, ஊழல் பேர்வழி. அவங்களை எதிர்க்கிறேன்.
ப்ரோ - அது எப்படி ப்ரோ? ஒரே குற்றம். முதல் குற்றவாளியை இரும்புப்பெண்மணின்னு ஆதரிக்கிறீங்க. இரண்டாம் குற்றவாளியை ஊழல்வாதின்னு எதிர்க்கிறீங்க? சரி, சசிகலாவை எதிர்த்தீங்கன்னா, சசிகலா கொண்டு வந்த முதல்வர்தான் இப்ப இருக்க எடப்பாடி பழனிச்சாமி அய்யா. அவரையும் எதிர்க்குறீங்களா?
சகோ - இல்லை சகோ, வாழும் கடவுள் எடப்பாடி அய்யாவை ஆதரிக்கிறேன்.
ப்ரோ - நீங்க சொல்றது ஒண்ணுமே புரியல ப்ரோ. எதையெல்லாம் நீங்க ஆதரிக்கிறீங்க ப்ரோ? எதையெல்லாம் எதிர்க்கிறீங்க? கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.
சகோ - பாஜகவை ஆதரிக்கிறேன். அதிமுகவை ஆதரிக்கிறேன். பாமகவை ஆதரிக்கிறேன். இந்து மத ஆர்வலர். எங்க ஜாதிச்சங்கத்துல முக்கியப்புள்ளி. முக்குலத்தோர், கொங்கு, வன்னியர் இப்படி மெஜாரிட்டி ஜாதில இருக்கவங்க எல்லாரையும் ஆதரிப்பேன். திருட்டு திராவிடர்களை எதிர்ப்பேன், ராமசாமியை எதிர்ப்பேன், திமுகவை எதிர்ப்பேன், காங்கிரஸை எதிர்ப்பேன், ஊழலை எதிர்ப்பேன், ஜாதிமறுப்பு பேசுறவங்கள எதிர்ப்பேன், இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறேன், விசிகவை எதிர்க்கிறேன், இன்னும் நிறைய. திராவிடத்தால்தான் நாம வீழ்ந்தோம் சகோ.
ப்ரோ - ரொம்ப நல்லது ப்ரோ. யூ பீப்புள் கண்டினியூ. 🙏🏽

திருக்குறளைப் பழித்தாரா பெரியார்?

கடந்த 24.05.2019 அன்று இந்து-தமிழ் நாளிதழுக்கு, துக்ளக் ஆசிரியர் திரு. எஸ். குருமூர்த்தி அளித்துள்ள பேட்டியில், ‘பெரியார் திருக்குறளை மலம் என்றார்’ என்று கூறியுள்ளார். தந்தை பெரியார் குறித்த இவ்விதமான அவதூறுகள் பல, காவிகளாலும், போலித் தமிழ்த்தேசியவாதிகளாலும் சமூக ஊடகங்களில் தொடந்து பரப்பப்பட்டு வருகின்றன. உண்மையில் திருக்குறள் குறித்துத் தந்தை பெரியார் கொண்டிருந்த பார்வை என்ன என்பதை நாம் சிறிது ஆராயலாம். பெரியாருக்குத் திருக்குறள் அறிமுகமானது எவ்வாறு?
திருக்குறளைத் தமக்கு அறிமுகம் செய்து வைத்ததாகத் தந்தை பெரியார் கூறும் நபர், பா. வே. மாணிக்கநாயக்கர் என்பவராவார். அடிப்படையில் பொறியியல் அறிஞரான இவர், தனித்தமிழ் இயக்கத்தின் புரவலராக விளங்கியவர். பெரியாரின் உற்ற தோழர். மாணிக்கநாயக்கர் மூலமாகவே குறளில் அடங்கியிருக்கும் பல கருத்துகளை அறிய முடிந்ததாகப் பல இடங்களில் குறிப்பிடுகிறார் பெரியார்.
திருக்குறள் – பொய்யுரையும் புனைவுகளும்
தொடக்கத்தில் இந்து மதப் புராண இதிகாசங்களில் உள்ள குற்றம், குறைகளை எடுத்துக் கூறி வருவது போல, குறளைப் பற்றியும் கூறி வந்தார் பெரியார். அதற்குக் காரணம், குறளுக்கு ஆரியரும், ஆரிய உணர்ச்சியுள்ள மதவாதிகளும் செய்த உரைகளை உண்மை என்று எண்ணியதே காரணமாகும். இதனைப் பெரியாரின் பேச்சின் மூலமாகவே அறியலாம்.
“புராணங்களைப் போலவே வள்ளுவர் குறளையும் பகுத்தறிவுக்கு ஏற்ற்தல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்’ என்று கேட்பார்கள். நான், ‘இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்துவிடு என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா’ என்று பதில் கூறுவேன்.
பிறகு நாளாக ஆக, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு, நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். நான் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே…. இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை, அது குறளாசிரியர் கருத்தல்ல என்று எடுத்துக் கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாஸ்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைத் தன்மையை எடுத்துச் சொன்னார்கள். அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன்”. (23.05.1950 அன்று பெங்களூர் திருவள்ளுவர் கழக ஆண்டு விழாவில் தந்தை பெரியார் பேசியது)
பரிமேலழகரின் உரையை மனுதர்மத்தின் மறுபதிப்பு என்று விமர்சிக்கும் பெரியார், குறளின் உண்மைத்தன்மை மறைக்கப்பட்டதற்குக் காரணம் இவைபோன்ற உரைகளே என்கிறார். இத்தகைய உரைகளைக் கொண்டு குறளின் உண்மைத் தத்துவங்களை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும் என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்.
தந்தை பெரியாரின் பார்வையில் குறளுக்குக் கேடு விளைவித்தது தவறான உரை மட்டுமல்ல, வள்ளுவர் குறித்த பொய்யான புராணக் கதைகளும்தான். வள்ளுவரின் பிறப்பைக் குறித்தும், வள்ளுவரின் மனைவியாகக் கூறப்படும் வாசுகியின் கற்புத்தன்மை குறித்தும் சொல்லப்படும் புனைவுகள் பல. சான்றாதாரங்கள் இல்லாத இவையனைத்தும் வழிவழியாக வாய்மொழியாகச் சொல்லப்படுவன.
“குறள் பாடிய வள்ளுவனாரை எங்கோ நள்ளிரவில் ஒரு சத்திரத்தில் ஒரு புலைச்சிக்கும், ஒரு பாப்பானுக்கும் நேரிட்ட கள்ளப் புணர்ச்சியில் பிறந்த பிள்ளையாக்கி, அதன்மூலம் அவரை ஒரு சண்டாளராக்கி, அவருடைய வாக்கிற்கு மதிப்பில்லாதபடி செய்துவிட்டார்கள்” என்று விமர்சிக்கும் பெரியார், இதற்கான தீர்வையும் முன்வைக்கிறார்.
“குறளை யார் எழுதியது, அவர் காலமென்ன என்ற கவலையை எல்லாம் ஆராய்ச்சி வல்லுநர்களான சரித்திரப் பேராசிரியர்களுக்கே விட்டுவிட்டு, நாம் குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மட்டுமே ஆராய்ந்து பார்த்து அவற்றின்படி நம் வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும்”. (விடுதலை 17.01.1949)
குறள் பரவாமைக்குக் காரணம் என்ன?
குறளைச் சிறப்பித்துக் கூறும் அதே வேளையில், பெரிய புராணம், இராமாயணம், மகாபாரதம், கீதை, மனுதர்மம் என அத்தனை நூல்களையும் குறளுக்கு எதிராக முன்னிறுத்துகிறார், தந்தை பெரியார். திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனுதர்மத்தைக் கண்டிப்பதற்காகவே எழுந்த கண்டன நூல் என்கிறார்.
பக்தி இயக்கத்தின்போதும், அதற்குப் பின்னரும் தோன்றிய இலக்கியங்கள் பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்துள்ளன. அதே நேரம், பக்தி இயக்கம் தோன்றுவதற்குச் சில நூறாண்டுகளுக்கு முன்பே தோன்றிய திருக்குறள் மக்களிடம் பரவாததற்குக் காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பி, அதற்குப் பெரியாரே விடை தருகிறார்.
“எந்த ஒரு நூலும் பார்ப்பனக் கூட்டத்தால் புகழப்பட்டால்தான் அவற்றிற்குப் புகழ் ஏற்படும். இன்றேல் புகழ் கிடையாது. இதுதான் இன்றைய நிலை. பழைய கால நிலையும் அதுதான்”. (விடுதலை 25.03.1948)
“எவ்வளவோ ஆபாசமான நூல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமையில் நூறில் ஒரு பங்கு பெருமைகூட நமது திருக்குறளுக்குக் கொடுக்கப்படுவதில்லை”. (விடுதலை 25.03.1948)
“திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிடநாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது இராமாயணம் அடியோடு கெடுத்து விட்டது. (விடுதலை 05.11.1948)
எனவே, குறளைப் பரப்பும் முயற்சியில் இரண்டு விதமான செயல்பாடுகளைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். ஒன்று, குறளைப் பரப்பும் ஆக்கவேலை. மற்றொன்று, குறளின் கருத்துக்கு எதிரான நூல்களை மறையச் செய்யும் அழிவு வேலை.
“ஒரு காரியத்திற்காக ஆக்க வேலையும், அழிவு வேலையும் ஒரு உடலுக்கு இரண்டு கைகளைப் போன்றதாகும். குறள் விஷயத்தில் குறளைப் பிரச்சாரம் செய்து மக்களிடையே பரப்புவது, குறள் நிர்மாண, ஆக்க வேலைகளாகும். குறளுக்கு எதிரான கருத்துகளை, காரியங்களை, நூல்களை மறையச் செய்வது என்பது குறள் ஆக்கத்திற்காகச் செய்யப்படும் அழிவு வேலையாகும்”. (விடுதலை 13.01.1951)
மனுதர்ம – இந்துமத எதிர்ப்பு நூல் திருக்குறள்
”திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச் செய்ய, அக்கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன்” என்கிறார் பெரியார். (விடுதலை 25.03.1948)
குறள் இந்துமதக் கருத்தியலுக்கு எதிரானது என்பதைக் குறளிலிருந்தே அடுக்கடுக்கான சான்றுகளைக் கொண்டு நிறுவுகிறார்.
“பார்ப்பனர்கள் எதை எதை உயர்வு என்று கருதி தங்கள் பெருமையை வெளிப்படுத்தினார்களோ, அவைகளை எல்லாம் ஒழித்துக் கட்டவே இக்குறளை வள்ளுவர் இயற்றி இருக்கிறார்.
பார்ப்பனர்கள் கலப்பையைத் தொட்டால்கூட பாவம். உழுவது என்பது பாவம். கலப்பையைத் தொடக்கூடாது என்று எழுதி வைத்து, உழைக்காமல் உண்ணும் வழியைத் தேடிக் கொண்டார்கள். (மனுதர்மத்தில் உழவுத்தொழில் பாவகரமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது). ஆனால் வள்ளுவர் இதை எதிர்த்துக் கூறி இருக்கிறார். உலகத்திலேயே உழவுத்தொழிலுக்கு ஈடு இணையான தொழில் கிடையாது என்று கூறியுள்ளார்.
”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
என்று கூறுகிறார்”.
“குடிசெய்வார்க் கில்லை பருவம்” (குறள் 1028). (பொருள்: குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை). ஒரு காரியத்தை ஒரு மனிதன் எப்பொழுது செய்ய வேண்டும் என்று தீர்மானித்தானோ, எண்ணினானோ உடனேயே அதைச் செய்திட வேண்டும். அதற்காக ராகு காலம், எமகண்டம், குளிகை பார்க்க வேண்டியதில்லை. இந்தக் காலங்களை எதிர்நோக்கிக்கொண்டு சோம்பலாய் இருந்தால் காரியம் கைகூடுவது கடினம் தான். ஆகையால்தான் காலத்தை எதிர்பாராமல் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறார். (விடுதலை 11.09.1951, 12.09.1951). எந்த ஒரு செயலையும் நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்க வேண்டும் என்னும் இந்து மத சடங்கிற்கு நேரெதிர்க் கருத்தை முன்வைப்பது இக்குறள்.
”தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்”
என்ற குறளில், ’பூஜையின்றேல் மழையில்லை, தானமின்றேல் மழையில்லை’ என்ற ஆரியக் கருத்தை அப்படியே மறுத்திருக்கிறார். மக்களுக்கு தெய்வத்தினிடம் பக்தி இல்லையென்றால், மக்களுக்கு ஒழுக்கம் இல்லையென்றால் மழை பெய்யாது என்று ஆரிய நீதி கூறுகிறது. மழையில்லை என்றால் மக்கள் பக்திசெய்ய மாட்டார்கள்; ஒழுக்கமாகவும் இருக்க மாட்டார்கள் என்று கூறுகிறார் வள்ளுவர்.
மனுதர்மம் மாமிசம் சாப்பிட வேண்டும். யாகம் செய்ய வேண்டும். அதில் ஆடு, மாடு, குதிரை முதலியவைகளைப் பலி தர வேண்டும் என்கிறது. திருக்குறள் ஜீவ இம்சையே கூடாது. மாமிசம் சாப்பிடக் கூடாது. யாகம் கூடாது என்கிறது.
”கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”.
பார்ப்பனர்களுடைய கொள்கை, வேள்வி-யாகம் செய்ய வேண்டும் என்பதாகும். அதுமட்டுமல்ல, வேள்வியைச் செய்யாதவர்கள், வெறுக்கிறவர்கள், கண்டிக்கிறவர்கள் எல்லாம் சூத்திரர்கள் – சண்டாளர்கள் – அரக்கர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த யாக வேள்வியைப் பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார்.
”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று”
(பொருள்: நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது)
”இந்த ஒரு குறளே, இது கண்டன நூல் என்பதைத் தெரிவிக்கவில்லையா? கண்டன நூல் என்றால், ஆரியத்தை – ஆரியப்பண்பை – அதிலுள்ள உண்மை ஒழுக்கத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்காத ஆபாச மூடப் பழக்கவழக்கங்களைக் கண்டிக்கும் கண்டன நூல் என்றே எண்ணலாம்”. (விடுதலை 25.03.1948, 8-11.11.1949) குடிஅரசு 07.05.1949)
இவ்வாறு இந்துமத எதிர்ப்புக்கான பல்வேறு சான்றுகளைத் திருக்குறளிலிருந்தே எடுத்தாளும் பெரியார், திருக்குறளின் அடிப்படையாகப் பல்வேறு இடங்களில் முன்வைப்பது, நால்வருணத்தை வலியுறுத்தும் மனுதர்மத்திற்கு மாற்றான, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் திருக்குறளைத்தான்.
பெரியார் முன்வைத்த விமர்சனங்கள்
“ஓர் இலக்கியம் எந்தக் காலத்தில் எழுதப்படுகிறதோ, அந்தக் காலகட்டத்தின் சூழலில் நின்றுதான் விமர்சனம் செய்ய வேண்டுமேயல்லாது, இருபது நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்து நின்று கொண்டு அதனை இன்றைய நிலையோடு ஒப்பிட்டு ஆய்வு செய்வது பொருத்தமாக இருக்காது” என்கிறார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன். (குறள் வானம், பக்கம் 67). இதைத்தான் பெரியாரும் கூறுகிறார்.
”திருவள்ளுவர் நல்ல அறிவாளி. ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக்கொள்ள முடியும். அந்தப்படியிருக்க 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகத் திருவள்ளுவர் சொன்னவை எல்லாம் அப்படியே இன்றைக்கும் ஏற்றதாக இருக்க முடியுமா?”.
திருக்குறளைச் சிறப்பித்துக் கூறும் அதே வேளையில், தமக்கு ஏற்பில்லாத கருத்துக்களை விமர்சிக்கவும் தவறவில்லை பெரியார். “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று வள்ளுவரே கூறியிருக்கிறார் அல்லவா!
“நான் குறளின் மேம்பாட்டைப் போற்றுவதன்மூலம், குறள் முழுவதையும் ஒப்புக் கொண்டவன் என்றோ, குறளின்படி நடக்கிறவன் என்றோ யாரும் கருதி விடாதீர்கள். எனக்கு/எங்களுக்குப் பொருந்தாத குறளுமிருக்கலாம். அதாவது எங்களால் பின்பற்ற முடியாத குறளுமிருக்கலாம். ஆனால் எனக்கு/எங்களுக்கு வேண்டியவைகள் மீதம் அதில் இருக்கின்றன” (குடிஅரசு 07.05.1949) என்பதுதான் பெரியாரின் நிலைப்பாடாக அறிய முடிகிறது.
குறளில் ‘வாழ்க்கைத் துணைநலம்’ மற்றும் ‘பெண்வழிச் சேரல்’ ஆகிய இரண்டு அதிகாரங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவற்றில் மிகவும் அடிமைத்தன்மை புகுத்தப்பட்டிருப்பதாகவே பெரியார் கருதுகிறார்.
சான்றாக ஒரு குறளைக் காணலாம்.
”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”. (குறள் 55)
(பொருள்: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு, தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்).
”ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். அதுதான் சம உரிமை என்பது. இருபாலர்க்கும் சமநிபந்தனை குறளில் இல்லை”. (குடிஅரசு 12.02.1928)
திருவள்ளுவர் ஓர் ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறளை எழுதியிருப்பாரானால் இம்மாதிரி கருத்துகளைக் காட்டியிருப்பாரா என்று பெரியார் கேட்கும் கேள்வி நியாயமானதுதானே?
“குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியோர்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றபடி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள்.
ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக்காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும் ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமேயானால், ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால், நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு விலக்குவதை விலக்கலாம்” என்கிறார் பெரியார். (குறள் மாநாடு நடத்துவது குறித்துத் தந்தை பெரியாரின் அறிக்கை, விடுதலை, 10.01.1948)
திருக்குறளைப் பரப்பிய பெரியார்
”புலவர்கள் வீட்டுப் புத்தக அலமாரிகளில் புதைந்திருந்த திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் பெரியார்” என்கிறார் ஆசிரியர் வீரமணி.
1929 ஆம் ஆண்டிலிருந்தே பெரியார், திருக்குறளை எழுத்துகள் வாயிலாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும் மக்களிடையே தீவிரமாகப் பரப்பினார். 1949 ல் சென்னையில் மிகப்பெரிய முதல் திருக்குறள் மாநாடு நடத்தினார். 'திருக்குறள் நாள் ' கொண்டாடச் செய்தார். 1952 ல் 10000 திருக்குறள் புத்தகங்களை அச்சடித்து நான்கு அணா விலையில் தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்.
இதன் விளைவாக, தமிழகப் பள்ளிகளிலும், மேடைகளிலும், பத்திரிகைகளிலும், நூல்களிலும் திருக்குறள் சிறந்த செல்வாக்கு பெற்றது.
திராவிடர்களின் நீதிநூல் - திருக்குறள்
திருக்குறளைத் திராவிடர்களுக்கான ஒரே நீதிநூல் என்று குறிப்பிடும் பெரியார், குறளை ஆதரிக்கவேண்டிய இடத்தில் ஆதரித்தும், விமர்சிக்க வேண்டிய இடத்தில் விமர்சித்துமிருக்கிறார். திருக்குறளைத் திராவிட இயக்கத்தவரிடமிருந்தும், தந்தை பெரியாரிடமிருந்தும் அந்நியப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இன்றைய சூழலில் அம்முயற்சிகளை முறியடிப்பது நமது தலையாய கடமையாகும்.

திருவள்ளுவர் நாத்திகரா

திருவள்ளுவர் நாத்திகராக இருக்க முடியாதாம்.....
ஹலோ நாத்தீகம்னா என்னனு தெரிஞ்சிகிட்டு பேசுங்க.
நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு என்று நாமாகவே தவறாக புரிந்துக்கொள்கிறோம்.
கடவுள் மறுப்புக்கு வேறு பெயர் உண்டு: நிரீஷ்வர்வாத்.
நிர்+ஈஷ்வர்+வாத்.

அப்படியானால் நாத்திகம் என்றால் என்ன?
நாத்திகம் = வேத மறுப்பு.
“நாஸ்தீக வேத நிந்திதஹ” என்றே குறிப்பிடுகிறார்கள்.
தட் மீன்ஸ், “உன் உடான்ஸ் வேதத்தை நான் மதிக்கல போடா!” என்கிற மனிதர்கள் = நாஸ்திகர்கள்.
Why take this stand?
Because வேதம்= பிறப்பின் அடிப்படைவாதம்.
உயர் தாழ்வு, ஜாதி, privilege, entitlement, Supremacy மாதிரியான விஷயங்களை கறாராக சொல்கிறது. நம்ப வைக்க முயல்கிறது. இத்தகைய மக்கள் விரோத அம்சங்களை ஏற்காதவரை வேதம் தண்டிக்க முற்படுகிறது.
எட்டாம் நூற்றாண்டின் classification படி ஆதிக்க மதங்கள்: சைவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம், வைணவம். இவை எல்லாமே சதுர் வர்ணமெனும் racist கோட்பாட்டை ஏற்றவை.
அதே கிளாஸிபிகேஷன் படி நாத்தீக மதங்கள்: சார்வாகம், ஆசீவகம், பௌத்தம், ஜெய்னம். இவை எல்லாவற்றுக்குமான பொது அம்சம்: வேதம் விட்ட நான்கு வகை சமூக அந்தஸ்து கப்ஸாவை நம்பாமல் சொந்த அறிவை பயன்படுத்தியவர்கள். இதில் ஜயினர்கள் பிறவி, மறுப்பிறவி, மாதிரியான கருத்துக்களை வைத்திருந்ததால் அவர்கள் கொஞ்சம் வைதீகத்தோடு ஒத்துப்போனார்கள்.
ஆனால் ஆசீவர்கள் ஒரு போதும் ஒத்து போகவேயில்லை.
ஆதி தமிழரது மதம் ஆசீவகம்.
திருவள்ளுவர் ஆசீவக மதத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும்.
ஆசீவகர்களை சமணர் என்று அழைப்பர்.
இவர்கள் தத்துவம், வானியல், மருத்துவம் ஆகியவற்றில் ஜித்தர்கள். ஜித்து=சித்து.
திருநாவுக்கரசருக்கு சூளை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்தவர் ஆசீவக துறவியர். இந்த துறவியரை தான் பிறகு சைவர்கள் கழுவில் ஏற்றி கொன்றார்கள்.
இவர்கள் தீவர வேத எதிர்ப்பாளர்கள், அதனால் நார்தீகர்கள்!!
One lineல சொல்லணும்னா:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
vs
சதுர்வர்ணம் மயா சிருஷ்ட்டம்.
நீங்கள் எந்த பக்கம்?