Tuesday, July 20, 2021

காமராசர் கொலை முயற்சி...

 07 நவம்பர் 1966,டெல்லியில் காமராசர் வீட்டின் மீது இந்துத்துவக் கும்பல் கல்வீசத் தொடங்கினார்,
அவர் இருக்கும் அறை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது.
அடுத்தடுத்த நிமிடங்களில் காமராசர் இருந்த வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
மிகுந்த கவனத்தோடு காமராசர் அங்கிருந்து வெளியேறி எம்.பி.க்கள் குடியிருப்புப் பக்கம் சென்று தப்பினார்.

எரித்து கொலை செய்யுமளவு என்னதான் பேசினார்..
"என்ன இப்போ,
பசுவுக்காக இவங்க ரொம்ப வருத்தப் படறாங்கன்னேன்,
மனுசனுக்குக் குந்த குடிசையில்ல,
கட்டத் துணியில்ல,
அடுத்த வேளை சோத்துக்கு ஆலாப் பறக்கிறான்,
ஆனா இவுங்க பசு மாட்ட வச்சி பாலிடிக்ஸ் பண்ணப் பாக்குறாங்க,
அட.. மாட்டுக்கு கொடுக்கிற மரியாதையை மனுசனுக்குக் கொடுக்கக் கூடாதான்னேன்,
இவங்க பூர்வீகக் கதை நமக்குத் தெரியாதான்னேன்,
இந்த வன்முறைக் கும்பல்தானே தேசப்பிதா காந்தியடிகள் உயிரையே குடிச்சது,
இன்னும் யார் யார் உயிரைக் குடிக்க அலையிறாங்க,
எத்தனைப் பிரச்சனை நம்ம கண்ணு முன்னாலே கெடக்கு,
நாம இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு,
இந்த நிலைமையில இந்த ஜனசங்க ஆசாமிங்க நம்மை, காட்டுமிராண்டி காலத்துக்கு இழுத்துக்கிட்டுப் போறான்னேன்...
-காமராசர்..

அவர் மீது கடும் ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல்,
பசுவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரக்கோரி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் பூரி சங்கராச்சாரி என்று அறிவித்து,
நாடாளுமன்றத்தைத் தாக்க ஆள் சேர்த்தனர்,
ஆர்.எஸ்.எஸ்.சின் பசுமாட்டுப் பாதுகாப்புப் பிரிவாக தொடங்கப்பட்ட சர்வதலியா கோ ரக்ஷா மகா அபியான் சமிதி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
1966 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு நாடு முழுக்க இருந்து ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம் என்று சொல்லியிருந்த கூட்டம் நாடாளுமன்றத்தைத் தாக்க விரைந்தது.
ஆனால் அவர்களின் முக்கியமான இலக்கு பெருந்தலைவர் காமராசர்.
சமதர்மப் பாதையில் இந்தியா செல்ல வேண்டும் என்று சொன்னவர், அதனால்தான் அவரைத் தான் கொல்லத் திட்டமிட்டார்கள்,
பசுவதைத் தடை என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்களை நடத்துவதற்கு எதிராக இருந்த நேரு இல்லை, மிச்சம் இருப்பது காமராசர்தான்,
இவரும் விரைவில் காணாமல் போய்விடுவார் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் இதழ் வெளிப்படையாகவே படம் வரைந்து மிரட்டியது,
புதுதில்லி நகர வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான நிர்வாணச் சாமியார்களோடு சேர்ந்துகொண்டு ஒட்டு மொத்த இந்துத்துவாவும் நிர்வாண வெறியாட்டம் போட்டது,
சாலைகளில் வன்முறையை நிகழ்த்தியபடி விரைந்த கும்பல் காமராசர் வீட்டின் மீது கொலை வெறித் தாக்குதல் தொடுத்தது,
அதிகாரிகளின் முயற்சியினால் உயிர் பிழைத்தார்,
உலகம் முழுக்க இருந்த பத்திரிகைகள் இந்த நிகழ்வுகளையெல்லாம் பதிவு செய்து,
இந்துத்துவாவின் கோர முகத்தை அம்பலப்படுத்தின,
இது யாரோ சிலரால் நடத்தப்பட்டது என்றெல்லாம் கூட இவர்களால் கழன்று சென்றுவிட முடியாது என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளன,
கலவரம் நடப்பதற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியவர்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸ்.சின் விஷவித்துகளான ஜனசங்கம், விஷ்வஹிந்து பரிசத், கோரக்சா சமிதி, அகில பாரதிய சாதுக்கள் சங்கம் மற்றும் நேரடியாக ஆர்.எஸ்.எஸ்,சையும் சேர்ந்தவர்கள்.

அன்று கண்டித்த ஒரே பத்திரிகை விடுதலை, கண்டன அறிக்கை பெரியார்.