Saturday, February 18, 2017

... ம.நடராசனின் மறுபக்கம்.........*** - ஒரு வாட்ஸாப் பகிர்வு

சசிகலாவின் கணவன் ம.நடராசனின் வாழ்க்கை வரலாறு நமக்கு தேவையற்றது எனும் போதிலும், அரசியலில் எந்தெந்த வகையில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிந்து கொள்வது அவசியம். ஏற்றிவிட்ட ஏணிகளான கலைஞர், ஜெயலலிதா, சந்திரலேகா மற்றும் பொதுமக்கள் என்று அனைவருக்கும் துரோகத்தையும், வஞ்சத்தையும் பரிசாக தந்த உத்தமன் இந்த நடராசன் என்பதை விளக்கவே இந்த தொகுப்பு.

1967இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவராய் இருந்த காலத்தில் பங்கெடுத்திருக்கிறார் தஞ்சையில் (மாணவர் தலைவராய் தலைமை தாங்கியதாக கூட கதைகள் உண்டு), இதற்கு பிற்பாடு சில ஆண்டுகளுக்கு பின் ஆர்.டி.ஓ. வேலைக்கு தேர்வெழுதி தோல்வியுறுகிறார்,

 (பின்னாளில், அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, "மகளிர் மேம்பாட்டில் இதழ்களின் பங்கு" என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெறுகிறார்😝). இதனிடையே,  ஆர்.டி.ஓ. வேலை கேட்டு எஸ்.டி.சோமசுந்தரம் மூலமாக முயற்சி செய்கிறார், முடியாமல் போகவே எல்.கணேசன் மூலமாக முயற்சி செய்கிறார், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர் என்பதால், ஆட்சியர் அலுவலகத்தில் பி.ஆர்.ஓ.என்ற பதவியை முதல் முறையாக உருவாக்கி, ஆர்.டி.ஓ. 90 பேருடன், பி.ஆர்.ஓ. என்ற பொறுப்பில் நடராசன் உட்பட்ட 11பேரை கலைஞர் மு.கருணாநிதி எழுபதுகளின் தொடக்கத்தில் நியமிக்கிறார்.

பின்னர் நடராசனுக்கும் சசிகலாவுக்கும் கலைஞரே தலைமை தாங்கி திருமணம் முடித்து வைத்தார். கடலூர் மாவட்டத்தில் அப்பொழுது ஆட்சித்தலைவர் சந்திரலேகா அவர்கள். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருகிறார் 77ல் வந்ததும் முதல் கையெழுத்து நடராசன் உள்ளிட்ட 11பேரின் பி.ஆர்.ஓ.பதவி நீக்க கோப்பில் தான்.  இதனால் சந்திரலேகா நடராசன் குடும்பத்தின் மேல் அனுதாபப்படுகிறார்.

பிழைப்புக்கு வழி தெரியாமல், வீடியோ கேசட்டுகளை சென்னையின் முக்கிய பணக்கார தெருக்களில் வீடு வீடாக மாலையில் கொடுத்து காலையில் வாங்கி பிழைப்பு நடத்த துவங்குகிறார் சசிகலா.

 நடராசனோ நீக்கப்பட்ட மீதமுள்ள 10பேரிடமும் பணம் வாங்கிக் கொண்டு, ஸ்டேட் ட்ரிப்யூனலில் வழக்கு தொடுக்கிறார். வழக்கில் ஆஜராகும் வக்கீலின் வீட்டு அவுட் ஹவுஸில் தங்கி, அவருக்கு குமாஸ்தாவாக காலம் கழிக்கிறார். இதுவே இந்த தம்பதியினர் சென்னை வந்ததற்கான காரணம்.

1981ல் சந்திரலேகாவை சந்தித்து உதவி கேட்கிறார்கள், அரசு விழாக்களின் வீடியோ உரிமையை பெற்றுத் தரக் கோரி. தனக்குக் கீழ் பணி செய்து வேலையிழந்தவர் என்ற அனுதாபம் இருக்கவே, எம்.ஜி.ஆரிடம் இன்னாரின் மனைவி என்று சொல்லாமல் விசயத்தை சொல்கிறார்.

 எம்.ஜி.ஆரோ, "இது கொ.ப.செ. ஜெ. முடிவெடுக்க வேண்டிய ஒன்று" என்று கூறி ஜெ.விடம் அனுப்பி வைக்கிறார். இப்படியாக ஜெ.யிடம் செல்ல, ஜெ. வீட்டுக்கும் தான் வீடியோ கேசட்டை செக்யூரிட்டியிடம் கொடுக்கும் விவரத்தை தெரிவிக்கிறார் சசிகலா.  பரிதாபப்பட்டு வீட்டுக்குள்ளேயே வந்து கொடுக்க அனுமதித்து, தினமும் பேச்சுத் துணையாக சசிகலாவை வைத்திருந்து  திரும்ப அனுப்பியவர், ஒரு தருணத்தில்  வீட்டிலேயே சேர்த்தும் கொண்டார்.

இவர்களின் ஓதுதல் கேட்டே எம்.ஜி.ஆருக்கு எதிராக சில வேலைகளை செய்தார், இந்தத் தகவல் எம்ஜிஆருக்கு தெரியவந்தவுடன் கட்சியிலிருந்து ஒதுக்கியும் வைக்கப்பட்டார் ஜெயலலிதா.

*ஜெயலலிதா கொடுத்த குடைச்சலாலும், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமானதாலும், திமுகவோடு கட்சியை இணைத்து விடும் முயற்சியை எம்.ஜி.ஆர் எடுத்ததாகவும், அதை ஆர்.எம்.வீ., சோலை உள்ளிட்டவர்கள் தடுத்ததாகவும், அவர்களே நக்கீரன் தொடரில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு சூழல் வருமென்று தெரிந்திருந்ததால் தான், அன்றே அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆரே கலைத்துவிடவும் முடிவெடுத்தார்.

 தடுத்தவர்கள் பின்னாட்களில் வருந்த வேண்டி வந்தது...* எம்.ஜி.ஆரின் இறப்புக்கு பின், ஏற்பட்ட வெற்றிடத்தை பயன்படுத்தி மீண்டும் இழந்த செல்வாக்கை பெறலாம் என்று ராஜீவ் காந்திக்கு இங்குள்ள சிலர் தூபம் போட, ஜானகி தலைமையிலான ஆட்சி கலைக்கப்படுகிறது (அன்று ஆட்சிக் கலைப்பு சாதாரணமான நிகழ்வு, கலைஞர் ஆட்சி இரு முறையும், எம்.ஜி.ஆர். ஜானகி ஆட்சி தலாஒரு முறையும் கலைக்கப்பட்டிருக்கிறது).

1989 தேர்தலில் திமுக கூட்டணி 165 தொகுதிகளில் வென்றது, ஜானகி அணியுடன் கூட்டணி சேர்ந்த காங்கிரசின் திட்டம் பலிக்கவில்லை வெறும் 35தொகுதிகளையே வென்றது. இந்த வேளையில் ஜானகி அரசியலை விட்டு விலகி,  ஜெ.வுக்கு கட்சிக்குள் ஓரளவு செல்வாக்கு பெருகி, இரட்டை இலைச் சின்னமும் கிடைத்தது.

 வரவு செலவு கணக்குகளை பார்த்த ஜெயலலிதா உறைந்து போய், கோவத்தின் உச்சிக்கே சென்றார். பாதிக்கும் மேற்பட்ட பணம் கையாடப்பட்டிருந்தது நடராசனால். இதனால் கோவமுற்று, அரசியலை விட்டு விலகிப் போகப் போவதாக தெரிவித்து நடராசனையும் கார்டனை விட்டு விரட்டியடித்தார், எனினும் சசிகலா தொடர்ந்து அவருடனேயே இருந்தார்.

மிக மிக முக்கியமான காலகட்டம் இது தான், இந்த காலகட்டத்தில் தான் இலங்கை சென்ற அமைதிப்படை சென்னை வந்திறங்கி, டெல்லி சென்றது. மரபுப்படி, கலைஞர் அமைதிப் படையை வரவேற்க வேண்டும், இலங்கையில் அவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரவேற்க கலைஞர்  செல்லவில்லை.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள எண்ணிய நடராசன், இதைச் சொல்லியே ஜெ. மனதை கரைத்தார்.

நடராசனுக்கு யோசனை உதித்தது, ஏற்கனவே கோவத்தில் உள்ள விடுதலைப் புலிகளை வைத்து செய்தால் என்ன என்று. இது வெறும் அனுமானமல்ல, சந்திரலேகா மூலமாக சு.சாமியிடமும்(ப்ராஜெக்ட் ப்ரோக்கர்), நெடுமாறன் மூலமாக விடுதலைப் புலிகளுடனும், ஜெ.வை ஆட்சிக்கு வர வைத்து, நேரடியாக ஆதாயம் பெறப் போகும் ஆள் தான் தான் என்ற முறையிலும், மூவருடனும் தொடர்புடைய ஒரே ஆள் நடராசன் மட்டுமே.

இதற்கான பிரதி உபகாரமாக தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பு செய்ய வேண்டும் என்ற உடன்படிக்கையுடன் துவங்கியது ப்ராஜெக்ட்.

*ஆட்சி கலைப்பு, விடுதலை புலிகளுக்கு (திமுகவின் நிதியை வாங்க மறுத்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பது குறிப்பிடத்தக்கது) இரகசியங்களை தாரை வார்க்கின்றது திமுக தலைமையிலான அரசு என்ற சப்பையான காரணத்தை வைத்து நடத்தப்பட்டது.

மீதி திட்டங்களை எல்லாம் வகுத்து, விடுதலைப் புலிகளை அணுகி கொலைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு, ராஜீவையும் தமிழகம் வரவைத்தாயிற்று. திட்டம் குறித்து நாட்டில் பலருக்கும் இரகசியம் கசிந்திருந்த பொழுதும், யார் எதற்காக செய்யப் போகின்றார்கள் என்று அறியாததால், வதந்தி என்றே எண்ணியிருந்தனர்.*

ராஜீவின் வருகையை அன்றைய தமிழக ஆளுனர் பீஷ்ம நாராயண் சிங் தடுத்துப் பார்த்தார், உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி. பின்னாளில், பாதுகாப்பு சரியாக இருந்ததாகவும், அதனை காங்கிரசாரே உடைத்தாகவும் தெரிவித்தார் அன்றைய ஆளுனர். மேடையில், முக்கிய புள்ளிகள் எவருமில்லை, எல்லோருக்குமே ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதாக தெரிந்திருந்தது, என்ன, எப்படி என்று மட்டும் தெரிந்திருக்க வில்லை. இதன் தீவிரத்தையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

அந்த கருப்பு தினமும் வந்தது, கொலைக்கு முன்னதாகவே அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரையும் தொடர்பு கொண்ட நடராசன், "இன்று இரவு திமுகவினர் அனைவருடைய இல்லங்களையும் (குறிப்பாக திமுக வேட்பாளர்களின் இல்லங்களை) இரவோடு இரவாக முற்றுகையிட வேண்டும்" என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார். இல்லையெனில், விடிவதற்குள்ளாகவே ராஜீவை கொலை செய்த பழி திமுக மீது எப்படி விழுந்திருக்கும்????

😭கொலையாளிகள் தேன்மொழி ராஜரத்தினம் என்கின்ற காயத்ரி மற்றும் தாணு இணைந்து மேடையேறி குண்டை வெடிக்கச் செய்தனர்.

அய்யகோ, நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் 14அப்பாவிகள் கருகிச் சிதறினர். நோக்கம் ராஜீவ் காந்தியை மட்டும் கொல்வதாக இருந்திருக்குமேயானால் துப்பாக்கியால் சுட்டிருப்பார்கள். அவர்களது நோக்கம் பெருங்கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதாகவும் இருந்ததாலேயே தான் குண்டு வைத்துக் கொன்றனர்.

திட்டமிட்ட படி, திமுகவினரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன, திமுகவினர் தத்தமது குடும்பத்தினர், குழந்தைகள் உயிரை காப்பாற்ற ஓலமிட்டனர், கெஞ்சினர், கசியுமா வஞ்சகர்களின் மனது??? பெருங்கலவரம் மூண்டது. இத்தகைய கொடிய மனம் கொண்டவர் தான் நடராசன்.

இந்த கொலையில் தொடர்புடைய ம.நடராசன், சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி எல்லாம் விசாரணை வளையத்திற்குள் சிக்காதது, பெரும் விந்தை தான். நடராசன் பெயர் இதில் அடிபடக் கூட இல்லை.

நாடெங்கிலும் ராஜீவின் உடல் சிதறிய மற்றும் ஜெ.வின் தலைவிரி கோலமும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன, செய்யாத குற்றத்திற்காக தண்டனையும் பெற்றது திமுக. மக்கள் யோசிக்க தவறி விட்டார்கள், தேர்தல் வேளையில் எளிதில் ஆட்சியமைக்க இருக்கும் ஒரு கட்சி எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செய்யும் என்று. நடராசன் போட்டு வைத்திருந்த திட்டத்தின்படி அதிமுக வென்றது, ஹிட்லராட்சி துவங்கியது. நாமெல்லாம் எண்ணியிருக்கிறோம், நம்புகிறோம், ஜெ. தான் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொண்டிருந்தார் என்றும், சிலவற்றுக்கு காரணம் சசிகலா என்றும், அது தான் இல்லை. எல்லாமே கொலையரசன் நடராசனின் சதிச்செயல்.

1991 அதிமுக ஆட்சி அமைந்து ஆடிய ஆட்டம் மக்கள் அனைவருக்கும் தெரியும், எனினும், எப்படி எப்படியெல்லாம் அராஜகமாக நடந்து கொண்டார்கள் என்று விவரித்தால் தான் புரியும், நினைவுக்கு வரும். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் சொந்த பலத்தில் வென்றதாகவும், ராஜீவ் கொலை செய்யப்பட்ட அனுதாபத்தால் அல்ல என்றார் ஜெயலலிதா.

 இது ஜெ.வின் குரல் அல்ல, நடராசனின் குரலை ஜெ. ஒலித்தார். பிரதமர் நரசிம்மராவ் தான் கொள்ளையர்களை அனுப்பி தமிழக அரசின் நற்பெயரை கெடுக்கிறார் என்றார்.

கொலைகொலையா முந்திரிக்கா.... அதிமுக அரசு குறித்து விமர்சித்த தராசு பத்திரிகை ஊழியர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். திருச்சி விமான நிலையத்தில் ப.சிதம்பரத்தின் வாகனத்தை 400பேர் தாக்கினர் திருச்சியை சேர்ந்த இளவரசன் என்ற அதிமுக பிரமுகர் தலைமையில். எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க ஒரு பட்டியல் தயார் செய்து கொடுத்தார் நடராசன், அதன்படி ஒட்டுக்கேட்கப் பட்டது. இவ்விரு நிகழ்வையும் தோலுரித்து எழுதிய நக்கீரன் அலுவலகத்தில் ரைடு நடத்தி மிரட்டியது நடராசன் உத்தரவின் பேரில்.

வாட்டர் கேட் ஊழல் என்று தலையங்கமிட்டு எழுதிய நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட நக்கீரன் ஊழியர்கள் மூவரை கைது செய்தது ஜெநடராசன் போலீஸ்.
இது போல பல வழிகளில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டனர்.

இப்படி நடராசனால் செய்யப்பட்ட ஹிட்லர் ரூலிங், ஜெ.வின் ஸ்டைலாகவே மாறிப் போனது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆனந்தகிருஷ்ணனை வீடு புகுந்து தாக்கியது, திருத்துறைப்பூண்டி இ.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பழனிச்சாமியை தாக்கியது, அன்றைய பா.ம.க. எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரனை தாமரைக்கனியை விட்டு தாக்கியது, என்று பட்டியல் நீள்கிறது.

மன்னார்குடி மாஃபியா லிஸ்ட்--------- 1)சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம், மனைவி சந்தானலட்சுமி, பிள்ளைகள் அனுராதா(தினகரனின் மனைவி), டாக்டர் வெங்கடேஷ். 2) சகோதரி வனிதாமணி, கணவர் விவேகானந்தன், பிள்ளைகள் தினகரன், சுதாகரன்(ஜெ.வின் வளர்ப்புப் பிள்ளை), பாஸ்கரன். 3)அண்ணன் வினோதகன், மகன் மகாதேவன். 4)அண்ணன் ஜெயராமன், மனைவி இளவரசி, மகன் விவேக். 5)சசிகலா, கணவன் நடராசன், நடராசனின் தம்பி ராமச்சந்திரன். 6)தம்பி திவாகரன்........

இந்த கும்பல் வைத்தது தான் சட்டம், தாக்குதல் பட்டியலை தொடர்வோம். ஜெ.அரசின் நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்களின் மருமகன் மீது கஞ்சா வழக்கு. திமுகவினர் மீது தடா சட்டம், டி.என். சேஷன் மீது விமான நிலையத்திலும், தாஜ் ஹோட்டலிலும் தாக்குதல் நடத்தினர் ரவுடிகள்.

நன்றிகெட்ட தனத்தின் உச்சமாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் ஸ்பிக் நிறுவனத்தின் 26% பங்குகளை குறைந்த விலைக்கு, அதன் நிறுவனர்களான ஏ.சி.முத்தையா செட்டியார் மற்றும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் இருவருக்கும் கொடுப்பதை தட்டிக் கேட்ட, டிட்கோ தலைவர் சந்திரலேகா ஐ.ஏ.எஸ். மீது ஆசிட் வீச்சு (அழகுச் சண்டை வேறு காரணமாம்) இந்த முறைகேட்டால், அன்றே 40கோடி இழப்பு, அரசுக்கு. ஆசிட் வீசியது ரவுடி சுடலை என்கின்ற சுருளா, ஏவியது நத்தம் விஸ்வநாதன், நத்தத்தை ஏவியது திண்டுக்கல் சீனிவாசன், சீனிவாசனை ஏவியது மதுசூதனன், மதுசூதனனை ஏவியது சாட்சாத் நடராசனே தான். பின்னாளில் இந்த சுருளா, தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள, நீதிபதையையே தாக்கி, சிறைக்குள்ளேயே இருக்க முடிவு செய்கிறார்.

ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கை(காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர்) கைக்குள் போட்டுக் கொண்டு, அவர் தேவைகளை நிறைவு செய்ய, தேவாரத்தின் கீழ் பணிபுரிந்த பெண் காவலர் லால் என்பவரை நியமித்ருந்தனர். அதைக் காட்டி மிரட்டி வைத்திருந்தனர் 30/05/1993 வரை. 31/05/1993 அன்று சென்னாரெட்டி ஆளுநர் பொறுப்பை ஏற்றார், இவர்களுக்கு பெரும் குடைச்சலாக இருந்தார். ஊழல் வழக்கு தொடுக்கும் சு.சாமியின் மனுவுக்கு அனுமதி கொடுத்தார் சென்னாரெட்டி. சட்டசபையிலேயே ஆளுநர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று சொல்ல வைத்தனர்.

டான்சி வழக்கில் தங்களையும் பிரதிவாதியாக இணைத்துக் கொள்ள நீதிபதியிடம் திமுக கேட்க, அனுமதி வழங்கி விட்டார் நீதிபதி. இதற்காக இம்ப்ளீட் பெட்டிசன் தயார் செய்கின்றனர் அன்றைய மாநிலங்களவை உறுப்பினர் வக்கீல் சண்முகசுந்தரமும், இன்றைய மாநிலங்களவை உறுப்பினர் அய்யா ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி அவர்களும் தயார் செய்து முடித்துவிட்டு, பாரதி அய்யா வீடு திரும்பி விடுகிறார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆசைத்தம்பி என்கின்ற ரவடி தலைமையில் வந்த ரவுடி கும்பல் வக்கீல் சண்முகசுந்தரம் அவர்களை சரமாரியாக வெட்டிவிட்டு தப்புகிறது. பின்னர் அதிமுக ஆட்சியிலேயே, அந்த ரவுடி ஆசைத்தம்பி என்கவுண்டர் செய்யப்பட்டார் (விசயம் வெளியே தெரியக் கூடாதுல).

2012ம் ஆண்டு துவக்கத்தில் தமிழர் திருநாள் பண்டிகை கொண்டாடிய நடராசனின் பேச்சை இன்றைய அரசியல் நிகழ்வுடன் பொருத்திப் பார்த்தால், அதிமுகவினருக்கு கூட இவர் மேல் உள்ள சந்தேகம் வலுக்கும்.

அந்த பேச்சு:   [ இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். நீங்கள், “முடிவெடு" என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது (என்ன ஒரு பொதுநலம்).

என் மனைவி மீது வழக்கு உள்ளது;(இது தான் உங்கள் பொதுநலமா???)

அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம்.

மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் அவசரப்பட என்னால் முடியாது. “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!" ] இவ்வாறு நடராசன் பேசினார்.

இனி, சொந்த காரை பயன். படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, குமரி முதல் சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார் (இதுவரை, இந்த நான்கரை ஆண்டுகளில், அப்படி எதுவும் நமக்கு தெரிந்து நடக்கவேயில்லையே). தஞ்சை அருகே, விளார்(நடராசனின் சொந்த ஊர்) ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, தனது கைக்கடிகாரம், பழைய கார்கள் உள்ளிட்ட உடைமைகளை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணத்தை பழ.நெடுமாறனிடம் வழங்கினார். (ஏலம் விட்டதும் எடுத்ததும் நடராசனின் ஆட்களே....). முற்றம் தொடர்பான சிற்ப வேலைகள் செய்ய பணித்த திரைப்பட நடிகர் சைனி ஹீசைனியையும் கொன்று விடுவதாக மிரட்டினார், காவல்துறையில் புகார் கொடுத்து வைத்ததால் தப்பித்திருக்கிறார்.

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டிய பொழுது, குடும்ப மாநாடு நடத்தி, ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற முயற்சித்த துரோகி, தீயசக்தி தான் இந்த நடராசன்.

இன்றும் தஞ்சை உள்ளிட்ட நகரங்களில், "அதிமுக எனும் இராணுவ கட்டமைப்பு கொண்ட கட்சியை வழிநடத்த, தேவை இன்னொரு அம்மா, அது தான் எங்கள் சின்னம்மா" எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது போஸ்டர்களில். இதில் காசவளநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது 18கிராமங்களை உள்ளடக்கியது, இதில் தான் நடராசனின் சொந்த ஊரான விளார் கிராமமும் வருகின்றது.

இப்போ சொல்லுங்க இது யாருடைய வேலை????

அன்று முதல் இன்று வரை பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், நீதித்துறையினர்(ஆச்சார்யா உட்பட), பொதுமக்கள் என்று அனைவரும்,சொந்த நாட்டில் அடிமைகளாக கருத்து சுதந்திரம் இல்லாமல் வாழக் காரணம், இந்த நடராசன் வகுத்துத் தந்த பாதை தான்.

வேலை கொடுத்து திருமணம் செய்து வைத்த கலைஞருக்கும், இரக்கப்பட்டு ஜெ.விடம் அறிமுகப் படுத்திய சந்திரலேகாவிற்கும், ஆதரவளித்த ஜெ.விற்கும், இந்த பகட்டு வாழ்க்கை கிடைக்க காரணமான பொதுமக்களுக்கும், நடரசன் துரோகம் ஒன்றையே பரிசாக தந்திருக்கிறார்.

இந்த துரோகங்களுக்கு கிடைத்த தண்டனைகளாக, நடராசன் சிறைக் கம்பிகளை எண்ணியிருந்தாலும், இன்றளவும் ஈழ வியாபாரிகள், நெடுமாறன், வைகோ, சீமான், வேல்முருகன் போன்றவர்களை, அதிமுக சார்பு நிலைப்பாடு எடுக்க வைத்து, ஓரணியில் நிறுத்தியிருக்கிறார். இது மாபெரும் நாச வேலைக்கான, இனவாத அரசியலுக்கான அறிகுறி.

இப்படிப்பட்ட தீய சக்தி நடராசன் தான் கலைஞரை தீயசக்தி என்றும், ஜெயலலிதாவை சேடிஸ்ட் என்றும், மக்களை முட்டாள்கள் என்றும் கூறி வருகிறார்.

இப்போ சொல்லுங்க, இந்த நடராசன்(சசிகலா) கையில் அதிகாரம் செல்லலாமா???, 
 தமிழகத்தில் இவர்களுக்கு   எந்த அதிகாரமும் கிடைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

*இதனை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். *Share. செய்வதன் மூலம் அனைத்து தமிழக மக்களிடமும் இதனை கொண்டு சேருங்கள்...../ பகிர்வு.

ஜெயலலிதா - ஊழல் சாம்ராஜ்யம்? ஒரு வாட்ஸாப் பகிர்வு

விரைவில் தமிழகம் விற்கப்பட்டு விடும்.நீளமாக உள்ளதே என படிக்காமல் விட்டுவிடாதீர்கள்.ஒவ்வொரு தமிழ்குடிமகனும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழக நிர்வாகம்.

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மோசமான ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கி மன்னார்குடி கும்பலிடம் கொடுத்து விட்டு மறைந்து விட்டார்!
=============================================
தலைமைச் செயலகத்தில் வருமானவரித் துறை எடுத்த நட வடிக்கை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரவைத்திருக்கிறது. அரசியல் வாதிகளின் கமிஷன் ராஜ்ஜியம் அதிகாரிகளிடம் மாற்றிக் கொடுக் கப்பட்டதன் விளைவு ராமமோகன ராவ் சிக்கிக்கொண்டார் என்கின்ற ஐ.ஏ.எஸ்.வட்டாரம், ""தமிழக அரசை ஊழல்மயமாக்கியதில் அவருடன் இன்னும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பங்கு இருக்கிறது'' என்கின்றது கைமாற்றப்பட்ட கமிஷன் ராஜ்ஜியம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்த அந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நம்மிடம், ""2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பொதுப் பணி, நெடுஞ்சாலை, தொழில், சுகாதாரம், உயர்கல்வி, போக்குவரத்து, பத்திரப் பதிவு, எரிசக்தி (மின்சாரம்), மதுவிலக்கு ஆயத்தீர்வை, வணிகவரி, உள்ளாட்சி, வேளாண்மை, கூட்டுறவு, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை உள்பட 20-க்கும் மேற் பட்ட முக்கிய துறைகளின் அமைச்சர்களிடம், தினமும் 20 எல் கார்டனுக்கு வந்து விடவேண்டும் என எழுதப் படாத ஒரு சட்டத்தை அமல்படுத்தியிருந்தார். மற்ற துறைகளின் தன் மைக்கேற்ப தொகை தீர் மானிக்கப்பட்டிருந்தது.
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 14 பேரையும் கார்டனி லிருந்து ஜெயலலிதா வெளியேற்றியதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மீதும் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. அப் போதைய தலைமைச்செய லாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் தனது செயலாளர்களான ஷீலா ப்ரியா, ராமமோகனராவ், வெங்கட்ரமணன், ராம லிங்கம் ஆகியோரிடம் ஆலோசித்தார் ஜெய லலிதா. அதில், "ஒவ்வொரு அமைச்சரும் தினமும் கார்டனுக்கு தருவதைவிட இரண்டு மடங்கு சம்பாத் தியத்தைப் பார்க்கின்றனர். அவர்கள் அபரிமிதமான வளர்ச்சியடைவது பின் னாளில் உங்களுக்கு சிக்கலை உருவாக்கும்' எனச் சொல்லி, ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு கலெக்ஷன் புழங்குகிறது'' என்கிற புள்ளி விபரத்தை விவரித்தனர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். அதோடு, கமிஷனுக்கு சத வீதத்தை (பெர்சண்டேஜ்) முடிவு செய்யலாமென்ப தையும் எடுத்துச்சொன்னார் கள். அதனை வசூலித்து தரும் பொறுப்பையும் அதிகாரி களிடமே ஒப்படைத்தார் ஜெ.
ஆரம்பத்தில் 12% கடைசியில் 42%
ஒவ்வொரு துறையி லும் நிறைவேற்றப்படும் திட்டங்களில் 12 சதவீதம் என முடிவு செய்யப்பட்டது. இதில், 10 சதவீதம் கார்ட னுக்கு. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தலா ஒரு சதவீதம். அனைத்து துறை களுக்குமான திட்டங்களில் வரும் சதவீதத்தை ராமமோகனராவ் வசூலித்து கார்டனில் ஒப்படைத்து விட வேண்டும். டிசம்பர் 2012-ல் தலைமைச்செயலாளராகவும் பிறகு அரசின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், இந்த கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதேநேரத்தில், துறைரீதி யாக உள்ள நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாறுதல்கள் உள் ளிட்டவைகளை அந்தந்த அமைச்சர்களே கவனிக்க வேண்டும். அதில் நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை ஒவ்வொரு அமைச்சரிடமிருந்தும் வசூலித்து கார்டனில் ஒப்படைக்கும் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் தந்தார் ஜெயலலிதா. சசிகலா, மீண்டும் கார்டனுக்குள் வந்ததற்குப் பிறகு இந்த பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு மாற்றப்பட்டது. துவக்கத்தில் 12 சதவீதமாக இருந்த கமிஷன், கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்சம் 25 சதவீத மாகவும் அதிகபட்சம் 42 சதவீதமாகவும் உயர்ந்து நிற்கிறது'' என்று சுட்டிக்காட்டி னார் அந்த அதிகாரி.
ராமமோகனராவின் அடேங்கப்பா வளர்ச்சி
""அனைத்து துறைகளுக்குமான டெண்டர் விவகாரங்களை கவனிக் கும் மொத்தப் பொறுப்பும் ராமமோகனராவிடம் இருந்ததால், தொழி லதிபர்கள் அனைவரும் ராவை சந்தித்தே டீலை முடித்துக்கொள்வார்கள். டீல் விவகாரங்களை முடிவு செய்வதற்காகவே தாஜ் ஹோட்டலில் நிரந்தரமாக ஒரு ரூம் அவருக்கு இருக்கிறது. இரவு 11 மணிக்கு மேல்தான் ராவுடனான தொழிலதிபர்களின் மீட்டிங் நடக்கும். திட்டங்களின் மதிப்பீட்டுத் தொகைக்கேற்ப, நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தைத் தாண்டி தனக்கென 3 சதவீதத்தை அந்த மீட்டிங்கிலேயே முடிவு செய்துகொள்வார் ராவ்'' என்கிறார்கள் தமிழக தொழில்துறையினர். பொதுப்பணித்துறையில் மணல் காண்ட்ராக்ட் விவகாரம் தொடங்கி ஒவ்வொரு துறையிலும் இவர் கோலோச்சிய டெண்டர் விவகாரங்களை மத்திய அரசுக்கு சக அதிகாரிகளே போட்டுக்கொடுத்துள்ளனர். ஜெயலலிதா அரசில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் திட்டமிட்டு, அவைகளுக்கான ஆதாரங்களைத் திரட்டி அனுப்புமாறு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் சிலரை நியமித்தது பா.ஜ.க.டெல்லி தலைமை. அந்த வகையில், பொதுப்பணி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, எரிசக்தி, மதுவிலக்கு, வனத்துறை, தொழில்துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நடந்த டெண்டர் விவகாரங்களில் மட்டும் சுமார் ஆயிரம் கோடி லாபம் பார்த்திருப்பதாக ஆதாரப்பூர்வ தகவல்களை திரட்டியுள்ளதாம் டெல்லி.
கூட்டுப் பொறுப்பு
நம்மிடம் பேசிய புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் ஓய்வு பெற்ற அதிகாரியான புதுவை பாலு, ""ஜெயலலிதா நிர்வாகத்தில் தனி ஒரு அதிகாரி ஊழல் செய்திட முடியாது. ராமமோகனராவ் ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த போதும் சரி, தலைமைச்செயலாளராக இருந்த போதும் சரி ஆட்சியில் நடந்த ஊழல்களுக்கு அவர் மட்டும் பொறுப்பல்ல. அரசு ஆலோசகரான ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளர்களான வெங்கட்ரமணன், சிவ்தாஸ் மீனா, விஜயக்குமார், ராம லிங்கம் உள்ளிட் டோரின் கண்கா ணிப்பை மீறி எந்த ஊழலும் நடந்திருக்க வாய்ப்பில்லை.அப்படிப்பட்ட ஒரு செட்- அப்பைத்தான் ஜெயலலிதா உருவாக்கி வைத்திருந்தார். அவரை கண்காணிக்க இவரையும், இவரைக் கண்காணிக்க அவரும் என்கிற செட்-அப் அது. இவர்கள் தவிர ஒவ்வொரு துறையின் செயலாளர்களும் ஊழல்களில் பங்குதாரர்கள்தான். அதனால் இது ஒரு கூட்டுப் பொறுப்பு'' என்கிறார் மிக அழுத்தமாக!
ஊழல் ராஜ்ஜிய அதிகாரிகள்
ஜெயலலிதா அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நடத்திய ஊழல் கொள்ளைகள், ஆந்திரா, தெலுங்கானா, கேரள மாநிலங்களில் ரியல் எஸ்டேட்டு களாகவும் வெளிநாடுகளில் முதலீடுகளாகவும் விரிந்துகிடக் கின்றன. 200 கோடிகளுக்கு அதிகமான அரசு திட்டங்களுக்கான டெண்டர்களில் எடுக்கப்படும் முடிவுகளின்படி ஜெய லலிதாவை சுற்றியிருந்த அனைத்து உயரதிகாரிகளுக்கும் கமிஷன் சதவீதம் சரிசமமாகவே பிரித்து தரப்பட்டது என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, நெடுஞ்சாலைதுறை ராஜீவ் ரஞ்சன், பால்வளத்துறை நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால், முதல்வரின் செயலாளர்கள் விஜயக்குமார், சிவ்தாஸ் மீனா, வணிகவரித்துறை கமிஷனர் சந்திரமௌலி, பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.செல்வராஜ், கணிம வளத்துறை எம்.டி.வள்ளலார் உள்ளிட்ட 40 ஐ.ஏ.ஏஸ்.கள் ராமமோகனராவின் நேரடி கட்டுப்பாட்டில் நியமிக்கப் பட்டவர்கள்தான்.
டாஸ்மாக் கமிஷன் அம்மாடியோவ்
உள்துறைச்செயலாளர் அபூர்வ வர்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது டாஸ்மாக். தமிழகத்திலுள்ள மதுபான உற்பத்தி ஆலைகளிலிருந்து மாதத்திற்கு 80 லட்சம் கேஸ் (12 பாட்டில்கள் கொண்ட பெட்டி) லிக்கரும் 1 கோடி பியர் பாட்டில்களையும் கொள்முதல் செய்கிறது டாஸ்மாக் நிர்வாகம். ஒரு லிக்கர் பெட்டிக்கு 60 ரூபாயும், பியர் பெட்டி ஒன்றுக்கு 35 ரூபாயும் பிரிமியர் லிக்கர் பெட்டி ஒன்றுக்கு 10 ரூபாயும் மற்றவைகளுக்கு 2 ரூபாயும் கமிஷனாக அரசுக்கு தருகிறார்கள் ஆலை தொழிலதி பர்கள். இதில், கார்டனுக்கு 60 சதவீதமும், அதிகாரிகளுக்கு 35 சதவீதமும், மந்திரிக்கு 5 சதவீதமும் பகிர்ந்தளிக்கப் பட்டுவிடும்.நத்தம்விஸ்வநாதனுக்கு ஒரு அன்புநாதன் இருந்தது போல, அபூர்வ வர்மாவுக்கும் வட இந்திய அதிகாரிகளுக்கும் மேகநாதன் என்பவர்தான் ஃபைனான்ஷியல் புரோக்கராக இருக்கிறார். மது ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப் படும் சரக்குகளுக்கு 58 சதவீதம் வாட் வரி விதிப்பு செய்யப் படுகிறது. வணிகவரித்துறையின் விதிகள்படி இந்த வாட் வரியை பிடித்தம் செய்துகொண்டுதான் மது ஆலைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் பணத்தை செட்டில் செய்ய வேண்டும். ஆனா, வாட் வரியை பிடித்தம் செய்வதில்லை. இதனால் மாதத்திற்கு சுமார் 2,500 கோடி ரூபாய் வணிகவரித்துறைக்கு வருவாய் இழப்பு. இந்த பணத்தை 2 மாதம், 3 மாதம் ரொட்டேஷனில் விட்டுவிடுகிறார்கள் மதுபான ஆலை அதிபர்கள். இதற்காக சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை ஆலை அதிபர்கள் செமையாக கவனித்துவிடுகின்றனர். வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி, "எங்க டிபார்ட்மெண்டுக்கு வர வேண்டிய வரியை பிடித்தம் செய்யாமல் இருப்பது தவறு' என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
பொங்கும் பால்வளம்!
பால்வளத்துறையில், 2014-2016- க்கான ஃப்லிம் டெண்டர் ( பாலித்தீன் கவர் ) 250 கோடிக்கு விடப் பட்டது. கடந்த 30 வருடமாக, இந்த டெண்டரை ஓசூரில் இருக்கும் பத்மா பேக்கேஜ் மற்றும் ப்ளாசம் பேக்கேஜ் என்ற நிறுவனமே எடுத்து வருகிறது. மில்லர் தலைமையிலான போர்டில், அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டு கள் இருப்பதால் அவர்களுக்கு ஆர்ட ரை தரக்கூடாது என முடிவு எடுக் கின்றனர். அதனை சுனில்பாலிவால் நிராகரித்ததுடன், ஓப்பன் டெண்டரில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமே கலந்துகொள்ளும்படி சில நிபந்தனை களை மாற்றியமைத்து அவர்களுக்கே கொடுத்துள்ளார். இதில் மட்டும் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.ஷீலா பாலகிருஷ்ணனின் சப் போர்ட்டும் சுனிலுக்கு இருப்பதால் ஊழல்கள் தலைவிரித்தாடுகிறது. செங்கோட்டையன் அமைச்சராக இருந்த போது, அவரது உதவியாளராக இருந்த எழில் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். 2006-ல் தி.மு.க. ஆட்சியின் போது அவருக்கு செய்தித்துறையில் பணியிடம் தரப் பட்டது. 2014-ல் அவர் ரிட்டயர்டு ஆனபோதும் செய்தித்துறையின் கூடுதல் இயக்குநராக 2 வருடம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.2016-ல் அந்த நீட்டிப்பு முடிந்த போது மீண்டும் 5 வருடம் நீட்டிக்கப்பட்டது. எழிலுக்கு இதனை வாங்கித்தந்தவர் வெங்கட்ரமணன். இதன் பின்னணியில், மிகப்பெரிய தொகை கைமாறியது. கேபிள் டி.வி. நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் குமரகுருபரன், கேபிள் டி.வி.கனெக்ஷன் எண்ணிக் கையை குறைத்து காட்டி அரசுக்கு இழப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். இதன் பின்னணியில் விளையாடுவது சுமார் 90 கோடி! இப்படி மேலே குறிப் பிட்டுள்ள ஒவ்வொரு அதிகாரிகளும் அவர்கள் துறை சார்ந்த திட்டங் களில் குறைந்தது 100 கோடி ரூபாய் ஊழல்களின் பங்குதாரர்களாகவே இருக்கிறார்கள் என்று விவரிக்கிறது அதிகாரிகள் தரப்பு. 10-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளுக்கு தனிச்செயலாளரை நியமிக்காமல் ஒருவரிடமே பல துறைகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமும், கமிஷன் கலெக்ஷன்தான்.
கலெக்டர்களின் கஜானா
தமிழகத்திலுள்ள 32 மாவட்ட கலெக்டர் களில் கன்னியாகுமரி சஜன்சிங்சவான், திண்டுக்கல் வினய், பெரம்பலூர் நந்தகுமார், மதுரை வீரராக ராவ், திருவண்ணாமலை பிரசந்த் வாட்னேரே ஆகிய 5 கலெக்டர்கள் மட்டுமே நேரடி ஐ.ஏ.எஸ்.கள். மற்ற அனை வருமே கன்ஃப்ர்டு ஐ.ஏ.எஸ்.கள்.. இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த பட்சம் 3 வருடங்களும் அதிகபட்சம் 7 வருடங்களும் கலெக்டர்களாகவே இருக்கிறார்கள். ராமமோகனராவ், ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணனின் சிபாரிசுகளில் இவர்கள் கோலோச்சு கின்றனர். வருஷத்துக்கு சுமார் 2 முதல் 3 ஆயிரம் கோடிகளுக்கான நிதியை கையாளுகிறார்கள். இதில் 25 சதவீதம் கலெக்டர்களின் சொந்த கஜானாவுக்குச் சென்றுவிடுகிறது. அங்கிருந்து அவர்களை பாதுகாக்கும் உயரதிகாரிகளுக்குப் பத்து சதவீதம்.
கவர்னரிடம் புகார்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஊழல்கள் குறித்து கவர்னர் வித்யாசாகர்ராவுக்கு புகார் அனுப்பி யிருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன். அவரிடம் நாம் பேசியபோது, ""தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முக்கியத்துறைகள் ஒதுக்கப் படாமல் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் புரளும் முக்கியத்துறைகள் அனைத்திலும் வட மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளே நியமிக்கப்பட்டு ஊழல் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள்.தமிழகத்திற்கு சென்றால் தடையின்றி ஊழல் செய்யலாம் என்கிற மனநிலையிலேயே தமிழகத்தை தேர்வு செய்கின்றனர். இவர்களின் ராஜ்ஜியத்தை ஒழிக்காமல் ஊழல்களை ஒழிக்க முடியாது'' என்கின்றார் வேல்முருகன். மொத்த ஊழலில் கார்டனுக்கு 60% மந்திரிகளுக்கு 5%, அதிகாரிகளுக்கு 35% என பர்சண்டேஜ் பக்காவாக பங்கு வைக்கப்படுகிறது.