Sunday, July 16, 2023

சர்க்காரியா கமிஷன் என்னும் புஸ்வானம்

 ஏறத்தாழ நாற்பத்தி ஐந்து  ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட  அவதூறு ஒன்று  திமுகவையும் கலைஞரையும்  தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.  அது  கலைஞர் கருணாநிதி விஞ்ஞானப்பூர்வ ஊழல் செய்தார் என சர்க்காரியா கமிஷன் கூறியிருக்கிறது என்கிற அவதூறுதான். இந்த விமர்சனம் வைக்கும் பலருக்கும் சர்க்காரியா கமிசனில் என்ன ஊழல் குறித்து விசாரிக்கப்பட்டது என்பதெல்லாம் தெரியாது. கலைஞரையும் திமுகவினரையும் ஊழல்வாதிகளாக சித்தரிக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் கட்டப்படும் பொய் இது. சர்க்காரியா கமிசனிலும் சரி, 2ஜி வழக்கிலும் சரி, ஊழல் நடைபெற்றதாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் பொய் மூலம் திமுகவைக்  களங்கப்படுத்தும் முயற்சி மட்டும் விடாமல் நடந்து வருகிறது. இதற்கு ஒருபடி மேலே போய் சர்க்காரியா கமிசன் விசாரித்த ஊழல் புகாரால்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள். முதலில் சர்க்காரியா கமிஷனில் விஞ்ஞானப்பூர்வ ஊழல் என்கிற வார்த்தையே இல்லை. இது எம்ஜிஆர் திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் பயன்படுத்திய வார்த்தை. அக்காலத்தில் மக்களுக்கு விஞ்ஞானம் பற்றிய அறிவு குறைவு என்பதால் விஞ்ஞான விசயங்களை புரிந்துகொள்ள முடியாமல் இருந்தனர். உதாரணத்திற்கு ஸ்விட்ச் போட்டால் ரேடியோவில் எப்படிப்  பாட்டு கேட்கிறது என்று, அன்றைய பாமர மக்களுக்குப் புரியாது  .கிட்டத்தட்ட விஞ்ஞானத்தை ஒரு மாயமந்திரமாக பார்க்கும் போக்கு மக்கள் மத்தியில் இருந்தது. இந்தப் போக்கை திமுக மீது அவதூறு சொல்வதற்குப் பயன்படுத்திக் கொண்டார் எம்ஜிஆர். திமுகவின் ஊழல் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்வதற்குப் பதிலாக,யாரும் புரிந்துகொள்ளமுடியாதபடி விஞ்ஞானப் பூர்வ ஊழல் செய்துவிட்டார் கலைஞர் என்று பொய்யைப் பரப்பி விட்டார். ஒரு விசயம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே விஞ்ஞானப் பூர்வமானது என்று ஒப்புக்கொள்ளப்படும் என்பதெல்லாம் அன்றைக்கு இருந்த பாமர மக்களுக்கு தெரியவில்லை. அதனால் நிரூபிக்க முடியாத ஊழல் குற்றச்சாட்டை விஞ்ஞானப் பூர்வமான ஊழல் என நம்பத் தொடங்கினர். ஊழலே நடைபெறவில்லை என்றால் கமிசன் எப்படி அமைக்கப்பட்டது? ஏன் அமைக்கப்பட்டது?. திமுகவில் இருந்து விலகுவது என முடிவு செய்துவிட்ட பின் எம்.ஜி.ஆர். பொதுவெளியில் கணக்கு கேட்டார் அதனால் திமுக அவரை விலக்கிவைத்துவிட்டது என்கிற தகவல் பெரும்பாலானோருக்கு தெரியும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எம்ஜிஆர் வருமானக் கணக்கு கேட்ட போது அவர்தான் கட்சியின் பொருளாளர். கட்சியின் பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கிறது என்றால் அது அவருக்குத்தான் முதலில் தெரிந்திருக்கும். அவர் மூலம்தான் நடைபெற்று இருக்க முடியும். ஆனால் விநோதமாக கட்சியின் மற்ற உறுப்பினர்களிடம் கணக்கு கேட்டார் எம்.ஜி.ஆர். அத்தோடு நிற்காமல், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் , திமுகவின் பதினெட்டாயிரம் கிளைச் செயலாளர்கள் வரை அனைவரும் தங்களது சொத்துக் கணக்கையும் தங்களது குடும்பத்தினரின் சொத்துக் கணக்கையும் கொடுக்கவேண்டும் என்று கூறினார். எம்.ஜி.ஆர். ஏன் இப்படிச் செய்தார்?.  அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி தரவில்லை என்பதற்காக இப்படிச் செய்தார். ஆனால் அதுமட்டும் காரணமல்ல.  2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்ததற்கு காரணம்  தன்னுடைய முதலைமைச்சர் பதவி பறிக்கபடப்போகிறது என்பது மட்டுமல்ல தனக்குப் பின்னால்  மத்திய அரசின் ஆட்சியில் இருக்கும் பாஜக இருக்கிறது என்பதும் தான். அதேதான் எம்ஜிஆருக்கும் நிகழ்ந்தது. திமுகவும் கலைஞரும் மிகப்பெரும் சக்தியாக தமிழ்நாட்டில் உருவாகி வருவதைப் பொறுக்க முடியாமல் , அன்றைய இந்திரா காந்தி அரசு எம்ஜிஆரை கைப்பாவையாக்கி திமுகவை உடைக்க முயன்றது.  ஓபிஎஸ் எப்படி ஒரு ஆணையம் அமைத்து ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைத் தீர்க்கவேண்டும் என்று கோரினாரோ அதே போல எம்ஜிஆரும்  திமுகவிற்கு எதிரான ஊழல் புகார் குறித்து விசாரிக்க, ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரினார்.  அதன்பிறகு எப்படி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு விசாரணையில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் மறுத்தாரோ அதே போல சர்க்காரியா கமிசன் விசாராணைக்கு எம்ஜிஆர் வர மறுத்தார்.   இத்தனைக்கும் 32 புகார்கள் அடங்கிய பட்டியலை எடுத்துக் கொண்டு அப்போதைய கவர்னர் கே.கே.ஷாவிடம் ஊர்வலமாகச் சென்று கொடுத்தார் எம்.ஜிஆர். இந்தப் புகார் பட்டியலை அப்போதைய முதல்வர் என்பதால் கலைஞர் கருணாநிதிக்கு அனுப்பப்போவதாக கவர்னர் தெரிவிக்க , புகாரை எடுத்துக் கொண்டு திரும்பிவிட்டார்.

அதன்பிறகு குடியரசுத் தலைவர் வி.வி கிரியை 1972 நவம்பர் 5-ஆம் தேதி சந்தித்து அதே புகார் பட்டியலை அனுப்பினார்.  அவர் அதைப்  பிரதமர் அலுவகத்திற்கு அனுப்ப, பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டு அதே புகார்களை மீண்டும் கலைஞர் கருணாநிதிக்கே அனுப்பியது.   நவம்பர் 15 ஆம் தேதி வந்த விளக்கம் கேட்ட நோட்டீஸுக்கு விரிவான விளக்கத்தை டிசம்பர் 14 ஆம் தேதி அனுப்பினார் கலைஞர். அத்தோடு எல்லா புகார்களுக்குமான விளக்கங்களை சட்டசபையிலேயே விளக்கமாகத் தெரிவித்தார்.  கலைஞர் அளித்த விளக்கத்தில் என்ன குறைபாடு என்று சொல்லாமல், விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டும் என்று மட்டும் கோரிக்கை விடுத்தார் எம்ஜிஆர். இதெல்லாம் மத்திய அரசும் எம்ஜிஆரும் சேர்ந்து,  திமுக ஆட்சியைக் கலைக்க நடத்தும் நாடகம் என்று சூசகமாக குற்றம்சாட்டி 1973 மே 28 ஆம் தேதி கடிதம் ஒன்றை இந்திராகாந்திக்கு அனுப்பினார் கலைஞர்.  அதன்பிறகு குடியரசுத் தலைவர் வி.வி கிரியை 1972 நவம்பர் 5-ஆம் தேதி சந்தித்து அதே புகார் பட்டியலை அனுப்பினார்.  அவர் அதைப்  பிரதமர் அலுவகத்திற்கு அனுப்ப, பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டு அதே புகார்களை மீண்டும் கலைஞர் கருணாநிதிக்கே அனுப்பியது.   நவம்பர் 15 ஆம் தேதி வந்த விளக்கம் கேட்ட நோட்டீஸுக்கு விரிவான விளக்கத்தை டிசம்பர் 14 ஆம் தேதி அனுப்பினார் கலைஞர். அத்தோடு எல்லா புகார்களுக்குமான விளக்கங்களை சட்டசபையிலேயே விளக்கமாகத் தெரிவித்தார்.  கலைஞர் அளித்த விளக்கத்தில் என்ன குறைபாடு என்று சொல்லாமல், விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டும் என்று மட்டும் கோரிக்கை விடுத்தார் எம்ஜிஆர். இதெல்லாம் மத்திய அரசும் எம்ஜிஆரும் சேர்ந்து,  திமுக ஆட்சியைக் கலைக்க நடத்தும் நாடகம் என்று சூசகமாக குற்றம்சாட்டி 1973 மே 28 ஆம் தேதி கடிதம் ஒன்றை இந்திராகாந்திக்கு அனுப்பினார் கலைஞர்.  இந்தப்  புகார்களுக்கு எல்லாம் ஏற்கனவே தெளிவாக சட்டமன்றத்தில் விளக்கம் கொடுத்திருந்த கலைஞர் சர்க்காரியா கமிசனை வரவேற்றார். விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கங்களும் கொடுத்தார். விசாரணைக்கு எம்ஜிஆர் அழைக்கப்பட்டார்.  எப்படி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சமூக விரோதிகள் இருக்காங்க என்று பேசிவிட்டு விசாரணை ஆணையத்தில் ஆஜராக ரஜினி மறுத்தாரோ அதே போல ஊர்வலமாகச் சென்று ஊழல் புகார் எல்லாம் கொடுத்துவிட்டு, எம்ஜிஆர் விசாராணைக்கு வர மறுத்துவிட்டார். புகார்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது, சேலம் கண்ணன் என்கிற வழக்கறிஞர் கொடுத்த புகாரைத்தான்  கொடுத்தேன் என எழுத்துமூலம் ஆணையத்தில் பதிலளித்தார். இதை சர்க்காரியா கமிசன் விசாரணையில் உதவியாக இருந்த மத்தியப் புலனாய்வுக் குழு தலைவர் இராஜகோபாலன் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.    இப்படி எம்ஜிஆரே சாட்சி சொல்ல வரமறுத்த மொன்னையான புகார்கள்தான் சர்க்காரியா கமிசனால் விசாரிக்கப்பட்டன.  கலைஞர் எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பே வாங்கிவிட்ட கோபாலபுரம் இல்லம் கூட முதல்வரான பிறகு ஊழல் செய்து வாங்கினார் என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது. இலண்டனில் முதல்வர் என்பதற்காக கலைஞர் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட டிராக்டரை காட்டூரில் தனது சொந்த நிலத்தை உழுவதற்கு  பயன்படுத்தினார் என்று ஒரு புகார் இருந்தது. காட்டூரில் கலைஞருக்கு சொந்த நிலமே இல்லை , அந்த டிராக்டர் எப்போதோ வேளாண் கல்லூரிக்கு வழங்கப்பட்டு அது பத்திரிகைகளில் செய்தியாகவும் வந்திருந்தது. இவை எல்லாம் விசாரிக்கத்தக்கவை என்று எடுத்துக் கொண்ட புகார் என்றால், விசாரிக்கத் தகுதியற்ற எத்தனைப்  போலியான புகார்களை எம்ஜிஆரும் அதிமுகவினரும் கொடுத்திருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.  சர்க்காரியா கமிசன் விசாரணை முடிவடையும் முன்பே  தேர்தல் வந்து இந்திரா காந்தியின் ஆட்சி கவிழ்ந்தது. திமுக அங்கம் வகித்த ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. 1977 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். சர்க்காரியா கமிசன் விசாரணை நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நிறுத்தப்படவில்லை. காரணம் கலைஞருக்கு மடியில் கனமில்லை அதனால் பயமில்லை. முழு விசாரணையும் முடியட்டும் என்று காத்திருந்தார் கலைஞர். இதன் பிறகு மீண்டும் 1980 ல் ஒரு நாடாளுமன்ற தேர்தல் வந்தது. அதில் திமுகவுடன் கூட்டணி வைத்த இந்திரா தமிழகத்திற்கு வந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.  மீண்டும் பிரதமரானார் . இப்போதும் சர்க்காரியா கமிசனுக்கு எதிராக கலைஞர் கருணாநிதி எதுவும் கூறவில்லை. ஆனால் இந்திராகாந்தி தானே முன்வந்து சர்க்காரியா கமிசன் மூலம் போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற்றுக் கொண்டார். இந்திரா காந்தி தான் செலுத்திய விஷத்தை தானே எடுத்துக் கொண்டார் என்று பின்னாளில் பேட்டியளித்தார் கலைஞர் கருணாநிதி.

இப்படிப் போலியாக கட்டமைக்கப்பட்ட ஒரு ஊழல் புகார். அதுவும் புகார் அளித்தவரே சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். விசாரணை ஆணையம் அமைத்தவர் தானே வழக்குகளைத் திரும்பப்பெற்றார். இவற்றுக்கெல்லாம் பிறகுதான்  திமுகவை ஊழல் குற்றம்சாட்டுகிறார்கள். ஊழலுக்காகத்தான் ஆட்சி கலைக்கப்பட்டது என்று நாக்கூசாமல் பொய் சொல்கிறார்கள். சர்க்காரியா கமிசன் பற்றிய பொய்களை சங்கிகளும் அதிமுக அடிமைகளும் நிறுத்தப்போவதில்லை. அவர்கள் நிறுத்தாத வரையில் நாமும் உண்மையைச் சொல்லாமல் விடப்போவதில்லை.