Thursday, October 12, 2017

அறிவியற் கண்டுபிடிப்புகள் - பிற்காலத்தில் கற்பனை பீதியை உண்டாக்கும்

கேள்வி: இயல்பாக நடக்கும் அறிவியற் கண்டுபிடிப்புகள், அதன் பயன்பாடுகள், தொழிற்புரட்சியின் தாக்கம், வணிகம், தொழில் போட்டி, தேசபக்தி, அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை பிற்காலத்தில் கற்பனை கலந்து பீதியை உண்டாக்கும் வண்ணம் பரப்ப இயலுமா? மக்கள் அதை நம்புவார்களா?
பதில்: நீங்கள் திருப்பூரில் ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்துவதாகவும் உங்கள் சகோதரர் கோவையில் ஒரு ஃபவுண்ட்ரி ஆலை நடத்துவதாகவும் வைத்துக்கொள்வோம். உறவினர்கள், நண்பர்களின் சின்னச்சின்ன யூனிட்கள் மூலம் ஜாப் ஒர்க் செய்து பிழைப்பு நடத்தி வருகிறீர்கள். திடீரென இந்தியாவுக்கும் பக்கத்து நாட்டுக்கும் போர் மூள்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாடே பரபரப்பாக யுத்தத்தை கவனிக்கிறது, குடிமகன்கள் எல்லோரும் தன்னாலான உதவிகளை செய்வதன் மூலம் தாய்நாடு போரில் வெற்றிபெறவேண்டும் என துடிக்கிறார்கள். அந்த நேரத்தில் இராணுவ வீரர்களுக்கு போர்க்கள உடைகளைத் தைக்கும் வசதி உங்கள் ஆயத்த ஆடை நிறுவனத்தில் இருப்பதால் இராணுவத்தினர் உங்களுக்கு பெரிய ஆர்டரைத் தருகிறார்கள். போருக்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை என்றாலும் நெஞ்சில் தேசியக்கொடியைக் குத்தியவாறே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இராணுவம் கேட்டதைவிட அதிக தரத்தில் ஆடைகளை தயாரித்து அனுப்பி வைக்கிறீர்கள். உங்கள் ஊழியர்களும் காலை மாலை ஒரு மணிநேரம் கூடுதலாக உழைத்து தேசத்தற்கு தங்களாலான சேவையை நல்குகிறார்கள்.
ஆடை தயாரிப்பில் மிச்சம் விழும் கட்டிங் வேஸ்ட் துணிகளைக்கூட இராணுவம் தளவாடங்களைத் துடைக்கப் பயன்படும் என வாங்கிச் செல்கிறது. உங்களது சகோதரர் நடத்தும் பவுண்ட்ரியும் போர்க்கருவிகளின் உதிரி பாகங்களை தயாரித்து இராணுவத்துக்கு அனுப்பி யுத்தத்துக்கு உதவுகிறது. நாடு போரில் வெல்கிறது. போருக்கு உதவிய நிறுவனங்கள், வங்கிகள், அரசாங்க & தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் எல்லோரும் பெருமிதத்துடன் கர்வத்துடன் மிடுக்காக வலம் வருகிறார்கள். இராணுவ ஆர்டர் கிடைத்த நிறுவனங்கள் பெருநிறுவனங்களாகின்றன. நாட்கள் மகிழ்ச்சியாக செல்கின்றன. ஊடகங்கள் மக்கள் மகிழும்வண்ணம் செய்திகளை வெளியிட்டவாறே இருக்கின்றன.
யுத்தம் நடக்கும்போது இராணுவத்துக்கு சப்ளை செய்யமுடியாது என்று நீங்கள் மறுப்பதாக வைத்துக்கொள்வோம். மறுநாளே தேசத்துரோகி, அந்நிய நாட்டு கைக்கூலி என்று முத்திரை குத்தப்படுவீர்கள். வழக்கமாக நடக்கும் அத்தனை அரசாங்க நெருக்கடிகளும் தரப்படும். தேசத்துரோகி என்பதால் உங்களது சப்ளையர்கள், வாடிக்கையாளர்களே விலகுவார்கள். அல்லது ஒருகட்டத்தில் நிறுவனம் அரசுடைமையாக்கப்பட்டுவிடும். உங்களை ஆதரிப்பவர் யாருமின்றி அநாதையாக சொந்த நாட்டிலேயே சாக நேரிடலாம். நடைமுறை என்னவோ இப்படித்தான் இருக்கும்.
ஆனால் பின்னாளில் வரும் அரைகுறை அறிஞர்கள் நீங்களும் உங்கள் சகோதரரும் யுத்தத்துக்குத் தேவையான நாசகார பொருட்களை தயாரித்து இராணுவத்துக்கு வழங்கி பல இலட்சம் அப்பாவி மக்களை அண்டை நாட்டில் படுகொலை செய்ய துணைபோனதாகவும், கட்டிங் வேஸ்ட் துணிகளைக்கூட விற்று காசு பார்த்ததாகவும், ஊழியர்களை மனசாட்சியே இல்லாமல் ஓவர்டைம் பார்க்க வைத்ததாகவும், உங்களது நிறுவனத்துக்குத் தேவையான ஜாப் ஒர்க் ஆர்டர்களைக்கூட உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி கொள்ளை இலாபம் பார்த்ததாகவும், இதற்கு பல வங்கி அதிகாரிகள் துணைநின்றதாகவும், பின்னாளில் அவர்களும் பதவி உயர்வு பெற்று பெருவாழ்வு வாழ்ந்ததாகவும் எழுதுவார்கள்.
பிற்காலத்தில் இதை மல்லாக்கப் படுத்துக்கொண்டு வாட்சப்பில் படிப்பவர்களுக்கு இரத்தம் கொதிக்கும். இன்னொருவாட்டி படித்துப் பார்த்து இனப் படுகொலைக்கு துணைபோன இலுமினாட்டி என்று ஓலமிடுவார்கள்.
காற்றில் 78% நைட்ரஜன் இருந்தாலும் தாவரங்களால் அதை நேரடியாக கிரகிக்க இயலாது. விலங்குகளின் செல்களில் உள்ள புரதத்துக்கும் நைட்ரஜன் அடிப்படை. மக்கள்தொகை பெருக ஆரம்பித்ததால் வேட்டையாடி உண்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதால் விவசாயம் செய்து தானியங்களை சேமித்துவைத்து உண்ணவும், வியாபாரம் செய்யவும் ஆரம்பித்தார்கள். தொடர்ந்து விவசாயம் செய்ததால் மண்ணில் நைட்ரஜன் குறைய ஆரம்பித்தது. சாணங்களாலும், தாவரக் கழிவுகளாலும் நைட்ரஜன் எடுக்கப்படும் வேகத்துக்கு திருப்பியளிக்க முடியவில்லை.
அந்த காலகட்டத்தில் சிலி நாட்டில் அடகாமா பாலைவனத்தின் மணலில் சோடியம் நைட்ரேட் படிவுகள் இருந்ததால் கப்பல் கப்பலாக மணலை அள்ளிச் சென்றார்கள். சில வருடங்களில் மணலே இல்லாத பாலைவனமாகிவிடுமோ என்று பூகோளவியலாளர்கள் கவலைப்பட்டார்கள். அங்கிருந்த மக்கள், சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு உண்டாகும் என அஞ்சினார்கள்.
அந்நேரத்தில் குறைவான வினைபடுதிறன் கொண்ட நைட்ரஜனை ஹைட்ரஜனுடன் வினைபுரிய வைத்து அம்மோனியாவை செயற்கையாக உண்டாக்குகிறார் ஃப்ரிட்ஸ் ஹேபர் என்ற விஞ்ஞானி. இதற்காக 1918-இல் நோபல் பரிசு பெறுகிறார். இதனடிப்படையில் Haber - Bosch process உருவாகிறது. காலங்காலமாக இருந்து வந்த அம்மோனியா, நைட்ரேட் தேவையை Haber Bosch process மூலமாக நிறைவேற்ற பல ஆய்வகங்கள் முற்பட்டன. தொடர்ந்து பல மூலக்கூறுகளை, ஆய்வு முறைமைகளை ஃப்ரிட்ஸ் ஹேபர் தலைமையிலான குழு கண்டறிகிறது.
BASF, Bayer, Hoechst போன்ற நிறுவனங்களின் இணைப்பில் உருவான IG Farben கம்பெனி, சயனைடு அடிப்படையில் ஃப்ரிட்ஸ் ஹேபர் கண்டுபிடித்த Zyklon B எனும் இரசாயனத்துக்கு தானிய கிட்டங்கிகளில் பூச்சிகளைக் கொல்லும் fumigant-ஆக பயன்படுத்த காப்புரிமை வாங்கி வைத்துக்கொள்கிறது. ஹேபர் ஆரம்பித்த Degesch என்ற கம்பெனியே கடைசியில் IG Farben நிறுவனத்திடம் Zyklon Bயைப் பயன்படுத்த லைசன்ஸ் வாங்கி அமெரிக்காவில் கப்பல்களில் வரும் தானியங்களுக்கு fumigation செய்ய சப்ளை செய்கிறது. பின்னாளில் IG Farben கம்பெனி BASF, Bayer நிறுவனங்களுக்குள் கரைந்துபோனது. அதன் தலைமை அலுவலக கட்டிடம் இன்று University of Frankfurtஇன் நிர்வாக கட்டிடமாக மாறி ஆராய்ச்சிகளைத் தொடர்கிறது. அந்த காலகட்டத்தில் ஐரோப்பாவில் பல விஞ்ஞானிகள் நோபல் பரிசுகளைக் கூடையில் அல்லாத குறையாக வாங்கிக் குவிக்கிறார்கள்.
உலகப்போர் நடக்கும்போது ஹிட்லரின் இராணுவத்தினர் இந்த Zyklon Bயை பெருமளவில் வாங்கி யூதர்களின் முகாம்களில் விஷவாயுவாக செலுத்தி படுகொலை செய்கிறார்கள். ஹேபரின் Degesch கம்பெனியும் கரைந்துபோனது. போருக்கு உதவ மறுத்த பல விஞ்ஞானிகள் காணாமல் போனார்கள். சிலர் அமெரிக்கா ஓடிப் போனார்கள்.
அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் விதைகளை அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகளிடம் விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். வியாபாரம் நன்றாக இருந்ததால் Queeny Monsanto என்ற அந்த பெண்மணியின் பெயரிலேயே மான்சாண்டோ என்ற பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து விதை வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். பின்னாளில் அது ஒரு பெரிய நிறுவனமாகிறது. அந்நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த களைக்கொல்லியின் விற்பனையும் அமோகமாக நடந்து வந்தது.
அப்போது வியட்நாம் போர் வருகிறது. கொரில்லா தாக்குதலில் அனுபவம் இல்லாத அமெரிக்கப் படை பலத்த அடி வாங்குகிறது. எப்படி தேடினாலும் வியட்நாம் வீரர்களை நெருங்க முடியவில்லை. ஒரு தளபதிக்கு புதிய யோசனை வருகிறது. மான்சான்டோவின் களைக்கொல்லியை பெரிய பேரல்களில் வரவழைத்து ஹெலிகாப்டர் மூலமாக காடுகளின்மீது தெளிக்கிறார்கள். சில நாட்களில் இலைகள் உதிர்ந்த பின்னர் வியட்நாமிய வீரர்களின் முகாம்களின் மீது வான்வழித் தாக்குதல் நடத்துகிறார்கள். அப்போது ஆரஞ்சு நிற பேரல்களில் வரவழைக்கப்பட்ட களைக்கொல்லியானது ஏஜென்ட் ஆரஞ்சு என்றே அழைக்கப்பட்டது.
எல்லாப் போர்களும், இன அழித்தொழிப்புகளும், காலனிகளும் குரூரமானவையே. போர் என்று வந்துவிட்டால் எல்லாவிதமான போர் முறைகளும் நியாயப்படுத்தப்படும். அதில் உயிரோடு மீண்டு இருப்பது மட்டுமே வரலாறாகக் கருதப்படும். யுத்தத்தை ஆதரித்து உயிரோடு இருக்கவேண்டும், இல்லாவிட்டால் சாகவேண்டும். தேசபக்தி என்பது அவ்வாறுதான் பயிற்றுவிக்கப்படும். போரை எதிர்க்கும் தனிநபர்கள் தினசரி நடவடிக்கைகள்கூட யுத்த ஆதரவு செயலாகவே முடியும்.
இயல்பாக நடந்துவரும் அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் எல்லாமே நாடுகளால் தேச பாதுகாப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அணு ஆராய்ச்சி, தொலைத் தொடர்புக்கருவிகள் முதல் தானியங்கள்வரை அத்தனையும் தேச நலனுக்காகவே அர்ப்பணிக்கப்படும். அதில் இராணுவம், போர் என்பதும் ஓர் அங்கம்.
அம்மோனியா, நைட்ரேட் போன்றவை வெடிமருந்துக்கு பயன்பட்டதோடு விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. போர்களில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளைவிட பாறைகள், மலைகளை உடைத்து சாலைகள், தண்டவாளங்கள், பாலங்கள், அணைகள், குடியிருப்புகள் அமைக்க பயன்படுத்தப்பட்டவையே உலகளவில் அதிகமான ஒன்றாகும். ஆனாலும் வெடிமருந்து என்றாலே ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது வீசவே தயாரிக்கப்படுவதாக கற்பிதம் செய்யப்படுகிறது.
உலகம் அறிவியல் கண்டுபிடிப்புகள், வர்த்தகம், நாடு பிடிக்கும் போட்டிகள் என வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருந்தபோதும் இந்தியாவில் ஓடுகிற ஆற்றுநீரில் குளித்தாலே, வீதியில் நடந்து சென்றாலே தீட்டுப்பட்டுவிடும் என்ற அளவில் வாழ்ந்துகொண்டிருந்தோம். ஆங்கிலேயர் காலனி வருகைக்கு முன் பஞ்சமே வந்த்தில்லை என இன்றும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு தானியங்களை, எண்ணையை மற்றும் பலவற்றை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.
வெடிமருந்தை விவசாயத்துக்கு விற்ற வெள்ளைக்காரத் துரோகியே என திண்ணைகளில், சாவடிகளில் உட்கார்ந்து அறைகூவல் விடுக்கிறோம். இரண்டாயிரம் வருடத்துக்கும் மேலான வேளாண் வரலாறு கொண்ட சமூகம் ஏன் எலிக்கறி தின்று, அம்மணமாக நின்று வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லி கையேந்துகிறது என்று சிந்திக்க மறுக்கிறோம். சங்க இலக்கியத்தில் சொட்டுநீர்ப்பாசனம் குறித்த தகவல் இருக்கிறது என்கிறோம்; ஆனால் சொட்டுநீர்க்குழாய்க்கான sand filter தொழில்நுட்பம் இஸ்ரேலிலிருந்து வர வேண்டியிருக்கிறது. இதன் பின்னாடி இலுமினாட்டி இருக்கிறான் என்கிறோம், மெக்காலே கல்வியால் கெட்டது என்கிறோம், அந்நிய சக்தி என்கிறோம்.
எல்லாம் தெரிந்திருந்தும் பகுத்தறிவுக்கு முரணான முடிவுகளை ஏன் எடுக்கிறோம் என்பதைச் சொல்லி இந்த ஆண்டு ஒரு அறிஞர் நோபல் பரிசு வாங்குகிறார். இங்கே நாம் technical fault என்று சொல்லி பசப்புகிறோம். பின்னாளில் இந்த இரண்டு நிகழ்வுகளையும் வாசிக்கும் சமூகம் இன்றைய சமூகத்தைப் போலவே ஏதேதோ கற்பனைகளில் மிதக்கவே செய்யும்

Monday, October 09, 2017

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

டவுள் இல்லை என்பவர்களுக்கு எங்கள் கோவிலில் என்ன வேலை", "கடவுளே இல்லைன்ற பகுத்தறிவாளர்கள், இயக்கங்களெல்லாம், ஏன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக விடணும்ன்னு சொல்றாங்க..?", "சாமிதான் இல்லன்னு சொல்லறாங்களே, அப்றம் இத பத்தி அவங்க ஏன் பேசறாங்க..?"
-- சாதி வெறியும், மத வெறியும் கொண்ட சிலர், தாங்கள் என்னவோ சாமர்த்தியமாய் பேசுவதாய் நினைத்துக் கொண்டு இப்படியொரு முட்டாள்தனமான கேள்வியை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.....
கடவுள் இல்லை என்றவர்கள் தான் எல்லா சாதியினருக்கும் கோவிலுக்குள் நுழையும் உரிமையைப் போராடிப் பெற்றுத்தந்தார்கள்.
கடவுள் இல்லை என்றவர்கள்தான் சாமியின் பெயரில் நரபலி கொடுக்கும் - எளியவர்களைக் கொலைசெய்யும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.
கடவுள் இல்லை என்றவர்கள்தான் பெண்களை தேவடியாக்களாய் கோவிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை சட்டம் போட்டு தடுத்தார்கள்...
கடவுள் இல்லை என்றவர்கள் தான் சதி என்ற பெயரில் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடுத்து நிறுத்தினார்கள்.
கடவுள் இல்லை என்கிறவர்கள் தான், தமிழ் மொழியிலும், கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் உரிமையை சட்டத்தின் அளித்தார்கள்...
கடவுள் இல்லை என்கிறவர்கள் தான், கோயில் சொத்துக்களும், நிலங்களும் கொள்ளைபோவதை தடுக்க, ஹிந்து அறநிலையத்துறையை ஏற்படுத்தி அவற்றை பாதுகாத்தார்கள்.
இப்படி ஒவ்வொரு காரியம் செய்யும் போதும் " கடவுள் உண்டு" என்றவர்கள், மதவெறி கொண்டு, மூர்க்கமான வெறித்தனத்துடன் அத்தனை நல்ல காரியத்தையும் எதிர்த்தார்கள்.
எல்லா சூழலிலும் அவர்கள் உச்சமாய் கத்திய ஒரு சங்கதி என்னவென்றால் "சாமி இல்லை என்பவனுக்கு எங்கள் கோவிலில் என்ன வேலை", "கடவுளை மறுக்கும் பகுத்தறிவு இயக்கங்களுக்கு இதில் என்ன அக்கறை" என்பதுதான்.
எல்லாக் கால கட்டத்திலும் இந்த மதவெறியர்களை, சாதிவெறியர்களை மீறித்தான் இதுபோன்ற காரியங்களை, மக்கள் சமத்துவ செயல்களை, சாதித்திருக்கிறார்கள் கடவுள் மறுப்பாளர்கள். அது போலவே, முறையான பயிற்சி முடித்தவர், எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும், கோயில் அர்ச்சகர் ஆகுவதையும் சாதிப்பார்கள்.....

பேய்படங்கள்

Annabelle என்றொரு பேய்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நான் இன்னும் இந்த படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு பேய்படங்கள் மீது ஒருவித ஆழ்ந்த அவநம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
அவநம்பிக்கை என்று இங்கே நான் literal sense சில் சொல்லவில்லை. பேய்படங்கள் அவற்றுக்கு உண்டான பவிசை இழந்துவிட்டன என்று சொல்ல வருகிறேன்.
அந்த காலத்தில் பேய் சினிமா என்றாலே அது ஒருவித கிளுகிளுப்பைத் தரும். காரணம் அவ்வளவு அட்டகாசமான கவர்ச்சி அதில் இருக்கும். ஈவில் டெட் படத்தில் கூட எந்த எந்த டைம்மில் எந்த கிளுகிளு சீன் வரும் என்று என்னால் இப்பவும் சொல்ல முடியும். பேய், ஆவிகள் என்று ஹாலிவுட் படம் வந்தாலே ஒரு மின்சாரம் பாயும் உடலில்.
இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஃபீலிங்கை Late 80 s and Early 90 s சில் பேய் சினிமா பார்த்த ஆட்களால் ஆத்மார்த்தமாக உணர முடியும் என்று நம்புகிறேன்.
நமது ஆட்கள் இன்னும் ரசனையானவர்கள்..
பேயைப் பார்த்தால் பயம் வருகிறதோ இல்லையோ...அவசியம் மூடு வரும். அந்த அளவுக்கு பேயை எக்ஸ்போஸ் செய்வார்கள்.தமிழ் படத்தில் வரும் பேய்கள் பெரும்பாலும் Seducing ஜானரில் வரும் பேய்கள் தான். எப்படியும் அந்த பாழாப்போன பேயை முன் ஜென்மத்தில் / அல்லது 30 வருடம் முன்பு வில்லன் கெடுத்து கொன்றிருப்பான். அவனை பழிவாங்க வரும் பேய்கள் எல்லாம் இளம் ஃபிகர்களாக வந்து கிழடு தட்டிய அந்த ஆட்களை Seduce செய்யும். அப்படியே கில்மா சீன் போகும் நேரத்தில் பேய் தனது மேக்கப் கலைத்து கோர முகம் காட்டும்.....அப்புறம் வில்லன் சாவார் ... இது ஒரு டெம்ப்ளேட்.. அந்த வில்லன் சாவு சீன் வரும் முன்புவரை பக்கா Softcore கில்மாவுக்கு உத்திரவாதம்.
வெள்ளையுடை பேய் , சன்சில்க் ஷாம்பு போட்ட பேய் என்று ஜில்ல்ல்ல்ல் பேய்கள் தமிழ் சினிமாவில் அலாதி.
இப்படி பொதுப்படையாக பேசுவதனால் பேய் படத்தின் இன்னொரு தாக்கத்தை சொல்லப்படாமல் போய்விடக்கூடாது. அந்த காலத்தில் இத்தகைய படங்கள் தான் சிறுவர்கள் - இளைஞர்கள் இருவரையும் இணைக்கும் ஒரு பாலமாக இருந்தன என்றால் அது மிகை இல்லை.
சிறுவனாக இருப்பதனால் வெளிப்படையாக சைட் அடிக்க முடியாது. இளைஞர்கள் என்னதான் ஆசைப் பட்டாலும் வீட்டில் பொதுவில் உக்காந்து அழகிய பேய்களை ரசிக்க இயலாது..
இப்படி ஒரு இறுக்கமான சூழலை உடைக்க வந்த ஒரு பேராயுதம் தான் கில்மா பேய்கள்.
"சித்தப்பா/மாமா இன்னைக்கு கேபிள் ல பேய் படம் போடுறோம்னு எழுத்து ஓடுச்சி ..பாப்போமா...எனக்கு பயமா இருக்கும்..நைட்டு துணைக்கு கூட பாக்குறீங்களா " என்று பீடிகை ஆரம்பம் ஆகும்.
"டேய் ..பேய் எல்லாம் இல்லடா...அது பொய்.. சரி..நான் வேணும்னா துணைக்கு இருக்கேன் " என்று சொல்லி அவர்களும் சைக்கிள் கேப்பில் என்ஜாய் செய்துவிடுவார்கள். இப்படி இரு தலைமுறைக்கு இடையில் ஒரு WIn-Win ரெலேஷன்ஷிப் ஏற்படுத்தியது கில்மா பேய்கள் என்றால் அது மிகையில்லை.
வா அருகில் வா , ராசாத்தி வரும் நாள், மை டியர் லிசா ,யார் ,உருவம் , ஜமீன் கோட்டை என்று படத்தில் ஏதாவது ஒரு கிளுகிளு சீன் இருந்து வயிற்றில் பாலை வார்க்கும்.
இது மட்டுமா ?..பேய் போதாது என்று இச்சாதாரி பாம்புகள் கூட இச்சையைத் தூண்டும் நம்ம சினிமாவில். நீ யா ? ஒரு டிரென்ட் செட்டர் என்றால், மனைவி ஒரு மாணிக்கம் எல்லாம் கல்ட் மூவி....! ராதா இல்லாத படம் சாதா என்று இளைஞர்கள் தூக்கத்தில் பினாத்தும் அளவுக்கு இம்பாக்ட் ஏற்படுத்திய படம் . உருவம் பல்லவியை எத்தனைப் பேர் மறந்திருப்பார்கள் ??
"அங்க ஜில்பான்சி காட்டுறது ஒரு Reptile ..Freaking Reptile..Snake " என்று புத்தி சொன்னாலும் மனசு , பாம்பு ஆடும் பெல்லி டான்ஸ் மீது லயித்துவிடும்...மேஜிக்கல் ரியலிசம் எல்லாம் அப்பொழுதே கற்றுத் தந்தவை கில்மா பேய்கள் / கில்மா பாம்புகள்.
இதன் தாக்கத்தில் தான் "ஜென்மம் எக்ஸ் " தீம் சாங்கில் கூட Silhouette டில் அழகிய பெண் பேய்கள் சுடுகாட்டில் ஆடும்.
ஆனால் ஏதோ ஒரு யுகப்பிறழ்வு ஏற்பட்டு மெல்லமெல்ல கில்மா Quotient குறைந்து சீரியல் கூட சப்பையாக போனது.. உடல் பொருள் ஆனந்தி, கொலையுதிர் காலம் என்று கில்மா கம்மியான பேய்கள் தான் வரத்தொடங்கின..எப்படி இது நேர்ந்தது ?.இப்படிப்பட்ட ஒரு சமூக வீழ்ச்சியை ஏன் மணிரத்னம், பாரதிராஜா எல்லாம் தடுக்கவில்லை என்று மனம் அடித்துக்கொள்கிறது. பாலுமகேந்திரா மட்டும் பேய் படம் எடுத்திருந்தால் நிச்சயம் பேய் ஒரு சீனிலாவது பேன்ட் போடாமல் சுடிதார் டாப்ஸ் மட்டும் போட்டு வந்திருக்கும். பாலசந்தர் பேய் படம் எடுத்திருந்தால் ஆண்களை துக்கமாக மதிக்கும் பேய் , மகனை பழிவாங்க அப்பாவை கல்யாணம் செய்யும் பேய் வந்திருக்கும் . பாரதி ராஜா படத்தில் ஜாக்கெட் இல்லாத பேய் , பாக்கியராஜ் படத்தில் முருங்கை சூப் குடித்துவிட்டு மூடு ஏறி அலையும் பேய் , விசு படத்தில் "உமா " என்ற பெயருடைய பேய். இப்படி எத்தனை பேயை மிஸ் செய்துவிட்டோம் ? சிலுக்கை எல்லாம் பேயாக நடிக்க வைக்காத பாவத்தை தமிழ்சினிமா எங்கே போய் கழுவும் ?
பேய் படத்திற்கு என்று இருந்த அழகியலை சீர்குலைத்துவிட்டு அரண்மனை மாதிரி கில்மாவே இல்லாத பேய் படம் எடுக்கும் சமூகமாக அல்லவா மாறியிருக்கிறோம் ?
"உருவம் " என்று கரடுமுரடு பெயர் இருந்தாலும் , பல்லவி என்ற அழகிய பேய் இருக்கும் அந்த காலத்தில்..
இப்போது "காஞ்சனா " என்ற அழகிய பெயர் இருந்தாலும் லாரன்ஸ் , அண்டர்வேர் தெரியும் ராஜ்கிரண் தான் அதில் பேய்கள் என்றால் அது எவ்வளவு பெரிய கில்மா வீழ்ச்சி?
எங்கே போனது நமது கில்மா Quotient ?
சாரு நிவேதிதா சொல்லும் கலாச்சார சுரணையற்ற Philistine சமூகம் தான் இப்படி கில்மா பாரம்பரியத்தை சீர்குலைக்கும்.
ச்சே...ஆயாசமாக இருக்கிறது...
மீண்டும் Annabelle படத்துக்கே வருகிறேன் .
Annabelle படத்தில் பேய் யார் என்று கேட்டால் , ஒரு பொம்மை தான் பேய் என்கிறார்கள். என்ன அபத்தம் இது ? காமத்தை தணித்துக்கொள்ள தற்போதெல்லாம் சிலர் பிளாஸ்டிக் பொம்மைகளை தான் நாடிப்போகிறார்கள் என்று சேலம் வைத்தியர் ஒரு பக்கம் கண்ணீர் வடிக்கிறார். அவர் கூற்றை மெய் ஆக்குவதைபோல் இன்று ஒரு பொம்மையை பேய் ஆக்கி அழகு பார்க்கிறது இந்த அவல சமூகம்.
சத்தியமாய் உலகம் சீக்கிரம் அழிந்துவிடவவேண்டும் ..

ஏன் பிரிட்டிஷாரை எதிர்த்தார்கள்?

200 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!
ஏன் 150 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ மிஷனரிகளை,பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?
1200 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், பெரும்பான்மை மக்களை அடிமைபடுத்திய இந்து மனுதர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்.
அவை நாம் என்னவென்று பார்ப்போம்...
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனு தர்ம்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக்கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில் 1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு சட்டத்தை எழுத தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
1804யில் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது
1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது
பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும் (இந்து மனு சட்டம் VII 374, 375), ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் பிணம் போன்றதேயாகும். (இந்து மனு சட்டம் IX 178) பிராமணன் தப்புசெய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் - - -
பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது.
சூத்தர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.
பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த இந்து சட்டத்தை 1835 ஆண்டு லாட் மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளிவிட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835-ல் பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
1835 ஆண்டு சூத்திரர்கள் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டுவரப்பட்டது.
1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.
இந்தியாவை மட்டும் பிரிடிஷார்கள் ஆளவில்லை ,மிஷனரிகள் வரவில்லை என்றால், சூத்திரர்களுக்கு கல்வி இல்லை,
கல்வி இல்லை என்றால் அம்பேத்கார் இல்லை, அம்பேத்கார் இல்லை என்றால் நாம் இல்லை.
சூத்திரனின் அடிமை சங்கிலியை உடைத்த கிறிஸ்தவபிரிட்டிஷார் மற்றும் மிஷனரிகளின் நற்பணிகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்