Friday, May 25, 2018

அனில் அகர்வால் எப்படியாப்பட்டவர்

அனில் அகர்வால் எப்படியாப்பட்டவர் என்று எதாவது தெரிந்து கொள்ள அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்களைப் பார்த்தேன்.
கேபிள் கம்பிகள் ஸ்கிராப் எடுத்து விற்கும் செய்யும் தொழிலை செய்த குடும்ப பிஸினஸை செய்ய ஆரம்பித்தவர் அதில் லாபம் இல்லை என்று அலுமினியம், காப்பர், ஸின்க், லெட் வெட்டி எடுத்து உருக்கி தயார் செய்யும் தொழிலுக்கு வந்திருக்கிறார். சுரங்க தொழிலுக்கும் வந்த முதல் தனியார் முதலாளியும் இவரே.
“இந்தியாவில் நிறைய கனிம வளம் இருக்கிறது. அதையெல்லாம் எடுத்து உபயோகிக்க வேண்டியதுதான். இந்தியா இதில் அசட்டையாக இருக்கிறது. வெளியே இருந்து இறக்குமதி செய்கிறது. அரசாங்கம் இதற்குரிய சுரங்க பாலிசியை இன்னும் வசதியாக செய்து தர வேண்டும். சுரங்க பிஸினஸ் மேலும் தனியார்மயம் ஆகவேண்டும். இன்னும் பத்து பதினைந்து தனியார் கம்பெனிகள் வர வேண்டும்” என்று கேஸுவலாக இந்திய நிலங்களில் மக்களே இல்லாமால் காலியாக இருப்பதாக கற்பனை செய்து பேசுகிறார்.
டிப்பிகல் ஈவு இரக்கமில்லாத முதலாளிதான் அவர்.
இவை அனைத்துக்கும் காரணம் சுரங்க தொழிலில் அரசு தாராளமய கொள்கையை பின்பற்றி தனியாருக்கு திறந்துவிட்டதுதான் என்று தெரிகிறது.
இந்த கொள்கையை அரசு மாற்றாமல் இதை தடுக்கவே முடியாது.
மறுபடியும் சுரங்கத்தில் வெட்டி எடுப்பது முழுக்க முழுக்க அரசு கையிலேயே இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் தொழில்வளர்ச்சி என்ற நல்ல எண்ணத்துக்கு காங்கிரஸ் இதை செய்திருந்தாலும் இப்போது தனியார்கள் மக்களின் உணர்வை மதிக்காமல் அவர்கள் உடல்நலம், நிலநலம், சுற்றுசூழல் கண்டுகொள்ளாமல் இருக்கும் போது மிக ஆபத்தான தளர்வு இது என்று தெரிகிறது.
சுரங்கம் கனிமவள தொழிலில் இந்த தாராளமயத்தை நிறுத்தியே ஆகவேண்டும்.
இல்லாவிட்டால் வேதாந்தா போல் பத்து கம்பெனிகள் இந்தியாவை ஆட்சி செய்யும். ஏராளமான பணத்தோடு அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.
தனுஷ்கோடி ஆதித்தனை எதிர்த்து ராமராஜன் எப்படி ஜெயித்தார். யார் ராமராஜனை ஜெயிக்க வைத்தார்கள். அது போல தமிழகத்தில் யாரை முதல்வராக்கும் என்று அந்த பத்து கனிமவளம் சார்ந்த கம்பனிகள்தான் முடிவெடுத்து காய் நகர்த்தி வெற்றி பெறும் சூழல் வரும்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இந்த சுரங்க கொள்கை பற்றி பா.ஜ.க. காங்கிரஸ். கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கவனம் கொள்ளுமாறு இப்போதே அடையாளப் போராட்டம் மூலம் வலியுறுத்த ஆரம்பிக்க வேண்டும்.
இந்த பண வெறி பிடித்த முதலாளிகளிடமிருந்து இனிமேல் தப்ப முடியுமா என்று யோசித்தாலே அயர்ச்சியாக இருக்கிறது.
சிம்பிளா இப்படி நினைச்சி வெச்சிக்கோங்க.
”அரசாங்கம் தவிர வேற யாரும் கனிமம் எடுத்து உருக்கக் கூடாது. அப்படி ஒரு கொள்கையை கொண்டு வர்ற கட்சிக்கு என் ஒட்டு” இப்படி ஒரு பேச்சை மெல்ல பேச ஆரம்பியுங்கள்.
இது சம்பந்தமாக கூகிள் போட்டு படித்து அறிவை வளர்த்து சிறு சிறு அளவில் பிரச்சாரம் செய்யுங்கள்.
பஸ்ஸில் உங்கள் பக்கத்து சீட்டுக்காரருக்கும் மெல்லிய குரலில் சொன்னால் அதுவும் ஒருவகை பிரச்சாரம்தான்.
சினிமாவில் இந்த டாப்பிக்கை சேர்த்து பேசுங்கள். படைப்புகளில், சிறுகதை,நாவல்,கவிதைகளில் பேசுங்கள். எழுதுங்கள்.
ஆசியராக இருந்தால் உங்கள் வேலைக்கு பிரச்சனை வராமல் நைசாக மாணவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
விழிப்புணர்வு உண்டு பண்ணுங்கள்.
நாமளே நாம முழிச்சிகிட்டாத்தான் உண்டு...

Thursday, May 24, 2018

காங்கிரஸும் பாஜகவும் ஒன்றா?

காங்கிரஸும் பாஜகவும் ஒன்றா?
முதலில் இந்திய தேசிய அரசியல் கட்சிகளை புரிந்துகொள்ள RSS வரலாறை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
காங்கிரஸில் ப்ராஹ்மண கோட்பாடுகள் உள்ளதா ?
நிச்சயமாக உள்ளது !
அப்படியென்றால் ஏன் ப்ராஹ்மணர்கள் காங்கிரெஸ்ஸை ஆதரிக்காமல் பாஜகவிற்கு இரவு பகலாக மூச்சு முட்ட ஆதரவளிக்கின்றனர் ?
இங்குதான் வருகிறது RSS. RSS இயக்கமாக 1930பதுகளில் மாறுகிறது பிறகு 1964ல் VHP ஆரம்பித்தவுடன் வலுப்பெறுகிறது ஆனால் ஒரு இயக்கமாக வலுப்பெற்றாலும் நேரடி அரசியல் பலம் அவர்களுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் அப்போது இருந்த பலம் பொருந்திய கட்சி காங்கிரஸ் மட்டுமே அதற்க்கு மாற்றாக வலுவில்லையென்றாலும் ஒரு சிறு மாற்று கட்சியாக கம்யூனிஸ்ட் இருந்தது. இந்த இரு கட்சிகளிலுமே ப்ராஹ்மணர்களே நிரம்பி இருந்தனர். இதை பயன்படுத்திகொண்டு இந்த இரு கட்சிகளிலும் RSS சித்ததந்தவாதிகள் ஊடுருவினர். அப்போதும் கூட RSSன் நோக்கம் தனக்கென்று ஓர் பலம் பொருந்திய நேரடி அரசியல் கட்சி வேண்டும் என்பதே. அது வரை காங்கிரஸில் இருந்துகொண்டே என்னனென்ன அவர்கள் அளவில் செய்ய முடியுமோ அதை செவ்வனே செய்துகொண்டு இருந்தனர். இதனால் தான் இந்திரா காந்தியின் emergencyயை RSS ஆதரித்தது.
பிறகு ஜன சங் என்ற கட்சி வருகிறது. RSSன் நேரடி கட்சி ! ஆனால் இந்திரா காந்தி இருக்கும் வரை இவர்களால் பெரிதாக ஆட்டம் போட முடியவில்லை. இந்திரா காந்தி மரணத்தின் போது நடந்த பஞ்சாப் கலவரத்தில் பல பஞ்சாபியர்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர்.
இது காங்கிரஸ் தொண்டர்காளால் நடத்திய படுகொலை. இந்த இனப்படுகொலையை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஏனினில் பஞ்சாப் இனபடுகொலை என்பது யாருக்கும் யாருக்கும் நடந்தது ?
பஞ்சாபியருக்கும் இஸ்லாமியருக்குமா ? இல்லை !
பஞ்சாபியருக்கும் கிருத்துவர்களுமா ? இல்லை !
பஞ்சாபியருக்கும் பௌத்தர்களுமா ? இல்லை !
பிறகு பஞ்சாபியர்கள் யாரால் இனப்படுகொலை செய்ப்பட்டனர் ?
முழுக்க முழுக்க உயர் சாதி ஹிந்துக்களால்.
பஞ்சாபியர்கள் சிறுபான்மையினர்.. பொதுவாக சிறுபான்மையினர் உயர் சாதி ஹிந்துத்தக்களால் கலவரத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டால் எந்த இயக்கம் அதில் மிக தீவிரமாக ஈடுபட்டுஇருக்கும் ?
நீங்கள் நினைத்தது சரி ! RSS.
பஞ்சாபிய எழுத்தாளர் குஷ்வாந்த் சிங் இவ்வாறு விவரிக்கிறார்.
"பஞ்சாப் இனப்படுகொலை என்பது இந்திரா காந்தியின் மரணத்தை பயன்படுத்தி கொண்டு எங்களுக்கு எதிராக RSS நடத்திய வன்முறை வெறியாட்டம்."
குஷ்வாந்த் சிங்க்ன் "RSS role in Punjab Riots" தேடி படிக்கவும்.
பிறகு 1987ல், பாஜக என்கிற தாமரை மெல்ல மெல்ல மலர தொடங்கியது.
RSS ஆட்களுக்கு ஓர் நேரடி அரசியல் பிரவேசம் கிடைச்சாச்சு.
பாபரி மசூதி இடிப்பு பாஜவிற்கு ஒரு அசுரர் பலத்தை கொடுக்கிறது.
இன்னொன்றை சொல்ல விரும்புகிறேன்.
காங்கிரஸ் உத்தம கட்சியா ? இல்லை.
ஆனால் காங்கிரஸ் ஒரு தவறு செய்தால் அதன் அரசியல் அதிகாரத்தை பிடிங்கிவிட்டால் அதனால் ஒன்றும் செய்ய முடியாது.
உதாரணத்துக்கு காங்கிரஸ் எப்போது எல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்போது மட்டுமே அதை நாம் எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வரும். இன்னும் சொல்லப்போனால் ஆட்சியில் இல்லாத போது அது செய்திகளில் கூட வருவது சிரமம். 2006-2011ன்றை எடுத்துக்கொள்வோம். அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் 34 லு MLA களை வைத்து இருந்தது. அதுபோக மத்தியில் ஆட்சியிலும் இருந்தது. இப்போது ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாத பாஜக தலைவர்கள் தமிழகத்தில் பேசுவதுபோல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசி கேட்டு இருக்கிறார்களா ? இன்னும் சொல்லப்போனால் ஒரு சில தலைவர்களை தவிர மற்றவர்களை யார் என்றே நமக்கு தெரியாது.
ஆனால் தமிழகத்தில் எந்த baseசும் இல்லாத பாஜகவிற்கு எங்க இருந்து வந்தது இந்த அடாவடித்தனம் ?
1984ல் இந்திரா காந்தி சுட்டு கொல்லப்பட்டபின் ஏற்பட்ட சீக்கிய இனப்படுகொலையை "ஒரு ஆழ மரம் வீழ்ந்தால் நிலம் அதிரதான் செய்யும்" என்று ராஜிவ் காந்தி சொன்னார். பெற்ற அம்மாவை இழந்த மகனாக அவர் அப்படி சொல்லி இருக்கலாம் ஆனால் ஒரு இனமே வன்முறை வெறியாட்டத்துக்கு உள்ளாகும் போது
அப்படி சொல்வது மிக பெரிய அயோக்கியத்தனம். ஆனால் அவர் இன்று உயிரோடு இல்லை. அந்த சீக்கிய படுகொலைக்கு அவரது மகன் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுவிட்டார். சென்ற காங்கிரஸ் பிரதமர் மன்மோஹனும் மன்னிப்பு கேட்டுவிட்டார்.
எந்த காங்கிரெஸ்க்காரக்ளும் தலைவர்களும் சீக்கிய படுகொலையை நியாயப்படுத்தி பேசி நாம் பார்க்க முடியாது. ஆனால் 2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலையை இன்றளவும் அனைத்து பாஜகவினரும் பிரதமர் மோடி உட்பட நியப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். இதில் இன்னும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று ... காங்கிரஸ் அல்லது நாமோ மோடியை குஜராத் கலவரத்துக்கு குற்றம் சாட்டும்போது பாஜகவினரும் பக்தாலும் எதிர்வினைக்கு சீக்கிய படுகொலையை சொல்லி காமிக்க மாட்டார்கள் ஏனினில் அந்த படுகொலையை நடத்தியவர்களை ஆதரப்பவ்ரகளும் அவர்களே ! மாறாக காஷ்மீர் பண்டிட்களை மட்டுமே இழுப்பார்கள். இப்போது கூட பாஜக நினைத்தால் சீக்கிய படுகொலைக்கு காங்கிரெஸ்ஸை பழிவாங்கலாம் ஆனால் ஏன் வாங்குவது இல்லை ? குறிப்பாக கனடாவின் மினிஸ்டர் ஒரு சீக்கியர் அவர் சீக்கிய படுகொலைக்கு நியாயம் கேட்டபோது பாஜக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மோடி அவரை சந்திக்க மறுக்கிறார், கனடாவிற்கு மோடி அதிகார பூர்வமாக தன் அதிருப்தியை தெரிவிக்கிறார். இதுதான் RSS !
2014ல் பாஜக ஆட்சிக்கு வருகிறது ஆனால் மாற்று கட்சி ஆட்சியில் இருந்தாலும் எப்போதும் ஊடகத்தில் செய்தியாகவும் பல இடங்களில் அதிகாரம் செலுத்தும் ஒரே கட்சி பாஜக மட்டுமே ! ஏன் என்றால் ஆட்சியே போனாலும் ஒரு வலுப்பெறும் இயக்கமாக கலவரங்களிலும் அதிராகத்திலிலும் RSS இருந்துகொண்டே இருக்கும். இது டிசைன் வேறு கட்சிக்கும் பொருந்தாது !
நீங்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள் !
பாஜகவும் காங்கிரஸும் ஒன்று என்றால் பக்தால்கள் ஏன் காங்கிரசை தேச துரோக இயக்கமாகவும் ராகுல் சோனியாவை வாடிகன் கைக்கூலிகளாகவும் சித்தரிக்க வேண்டும் ?
ஒன்றை நாம் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் !
காங்கிரஸ் என்பது ஒரு கட்சி மட்டுமே !
அது ஒரு சித்தாந்தமோ அல்லது ஒரு இயக்கமோ கிடையாது.
அது தவறு செய்தால் அதை அரசியல் ரீதியாக நாம் எளிதில் வீழ்த்திவிட முடியும் போன தடவை அதுதான் நடந்தது. இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸில் இருக்கும் மல்லிகா அர்ஜுன் கார்கே பாராளுமன்றத்தில் மோடி முன் "நாங்கள் திராவிடர்கள் பூர்விக குடிமக்கள், நீங்கள் ஆரியர்கள் வெளி இவர்ந்து வந்தவர்கள்" என்று முழக்கமிட்டார். இது காங்கிரஸில் மட்டுமே சாத்தியம். மல்லிகா அர்ஜுன் கார்கே மாறி ஒரு தலைவர் வந்துவிட்டால் காங்கிரஸின் சித்தாந்தம் கூட மாறிவிடும்.
ஆனால் தலித்தை குடியரசு தலைவராக அமர்த்திவிட்டோம் என்று மார்தட்டிக்கொண்டு பிறகு சுப்ரமணிய ஸ்வாமிகளை விட்டு அவரை ப்ராஹ்மணராக ஏற்றுக்கொண்டோம் என்று சொல்லுவது பாஜக.
மல்லிகா அர்ஜுன் கார்கேகல் காங்கிரஸ் தலைவர்கள் ஆனால் காங்கிரஸ் சித்தாந்தமே கூட மாறி விடும் ஆனால் குடியரசு தலைவராகவே இருந்தாலும் பாஜகவில் ராம்நாத் கோவிந்கள் ராம்நாத் கோவிந்களாகவே கூட இருக்க முடியாது.
இன்னும் 8 மாதங்களே தேர்தலுக்கு இருக்க.. இப்போதே பாஜகவே தேர்தல் மெஷின் தயாராகி வருகிறது.
கடந்த தேர்தலில் ஊழல் ஒழிப்பு வசதி பிரச்சாரம் இந்த நாலு வருடம் மோடி ஆட்சிக்கு பிறகு செய்வது கடினம்.
அதனால் நடுநிலையாளர்களும் சாதிபாசமற்ற ப்ராஹ்மணர்களும் ''பாஜகவும் காங்கிரஸும் ஒன்று'' பிரச்சாரத்தை ஆரம்பிக்க தொடங்குவார்கள் ஆனால் இந்த நல்லவர்கள் போன தேர்தலில் மோடிக்கு நேரடியாக ஆதரவளித்தவர்களாகவே இருப்பார்கள்.
இது இல்லாமல் உண்மையாகவே மாற்றம் வரவேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு அவர்களும் கூட
பாஜகவும் காங்கிரஸும் ஒன்று என்று சொல்லக்கூடும்.
ஆனால் நடைமுறை தேர்தல் அரசியலில் மக்களுக்கு பயன்படாத உங்கள் நேர்மை அயோக்கியர்களையே ஆட்சியில் அமர்த்தும்.
மீண்டும் மோடியை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று நேரடியாக சொல்வதற்கு வெக்கப்பட்டு மாற்றுவார்த்தையாக சொல்லும் வாக்கியமே "பாஜகவும் காங்கிரஸும் ஒன்னு".
அப்பறோம் என்ன.. பாஜகவும் காங்கிரஸும் ஒன்னு ஆனால் போன தேர்தலில் மோடிதான் என் கண்ணு... வாங்கித்தின்னு பன்னு !
ஏனினில் அதுதான் RSS 🚩🚩.

பாஜக அரசு என்பது இப்பொழுது குஜராத் வியாபாரிகளுக்காக உழைக்கும் அரசாக மாறிவிட்டது

"அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னொரு நாட்டை பார்த்து பாவிகளா நீங்கள் எல்லாம் கொலையாளிகள்.." என சொன்னால் வாய்விட்டு சிரிக்க மாட்டோமா?
அப்படித்தான் இப்பொழுது பொன்னார் என்பவரும் திமுக, காங்கிரஸ் எல்லாம் கொலைகார கட்சி என சிரிக்காமல் சொல்லியிருக்கின்றார்
இந்தியாவிலே ஒரு கட்சி பல வன்முறைகளை நிகழ்த்தி பெரும் கொலைகளை செய்திருக்கின்றது என்றால் சந்தேகமே இல்லாமல் அது பாஜக எனும் ஒரு கட்சிதான்
காந்தி கொலை தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு, மும்பை குஜராத் கலவரம், மாட்டுகறி சர்ச்சையில் கொலை , பலாத்கார கொலை என அவர்கள் கட்சி சிக்காத கொலை இல்லை
தமிழகத்தில் கூட கன்னியாகுமரி மண்டைக்காடு கலவரம் முதல் கோவை சம்பவம் வரை பல இடங்களில் இவர்கள் கரங்கள் உண்டு
பொதுவாக மதகலரங்களில் எங்கெல்லாம் சாவு நடக்குமோ அங்கெல்லாம் பிஜ்பி இருக்கும்
அப்படிபட்ட கட்சியில் இருந்து கொண்டு பொன்னார் திமுக,காங்கிரஸ் எல்லாம் கொலைகார கட்சி என்கின்றார்
ஆக சிரித்து தொலைப்போம், போலிஸ் தேடும் எஸ்.வீ சேகர் அருகில் இருந்தாலும் "அவரை பிடித்து கொடுப்பது என் வேலை அல்ல" என கொஞ்சமும் சிரிக்காமல் சொன்ன பொன்னாருக்கு இதெல்லாம் சாதாரணம்
இதற்கு நீண்ட நேரம் சிரித்து முடித்தால் தமிழிசை அடுத்த சிரிப்பு காட்சியினை தொடங்கிவிட்டார், சில நாட்களாக சும்மா இருந்த அம்மணி இப்பொழுது தன் கலகல வாயினை திறந்து "ஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை" என்கின்றது
என்ன நடந்தது?
காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுசுழல் சட்டங்கள் இறுக்கபட்டன, இதனால் ஸ்டெர்லைட் அதன் விரிவாக்கபணி மற்றும் அதன் ஒப்பந்த புதிப்பிப்பு போன்ற விஷயங்களில் சிக்கியது,
நிச்சயம் அது சிக்கி இருந்தது, அத்தோடு மூட்டை கட்டும் நிலைக்குத்தான் அது வந்திருந்தது
பொதுமக்கள் கருத்து கூட்டம் நடத்தாமல் இனி ஆலை விரிவாக்கம் செய்ய முடியாது என்ற இறுக்கமான சட்டத்தை காங்கிரஸ் விதித்திருந்தது
ஆனால் மோடி வந்து இனி தொழிற்சாலைக்கே முன்னுரிமை, மக்கள் கருத்து, சுற்றுசூழல் எல்லாம் தேவை இல்லை என விதிகளை தளர்த்தினார்
இதில்தான் மறுபடியும் ஸ்டெர்லைட் மீண்டும் நங்கூரமிட்டு விரிவாக்க பணிகளை தொடர்ந்தது, ஆக காரணம் மோடி அரசே
இன்னும் ஏராளமான சட்ட தளர்வுகளை மோடி அரசு தொழிலதிபருக்காக செய்தது , ஸ்டெர்லைட் அதை பயன்படுத்தியது
ஏன் தளர்த்தியது பாஜக?
சில தரவுகள் படி 2013 2014ல் வெளிநாட்டில் இருந்து நிதிபெற்ற கட்சிகளில் பாஜக முதலிடத்தில் இருக்கின்றது,இந்த ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவணம் பல கோடிகளை பகிரங்கமாக கொடுத்திருக்கின்றது
மறைவாய் கொடுத்தது எவ்வளவோ?
எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் ஸ்டெர்லைட்டினை மீண்டும் அமர்த்தியதும் அதனை விரிவாக்க முழு ஒத்துழைப்பு கொடுத்ததும் மோடி அரசே
இதனால்தான் பாஜக தூத்துகுடி கொடூரங்களை கண்டிக்க தயங்குகின்றது, துப்பாக்கி சூட்டை நியாயபடுத்துகின்றது
மோடி இன்னும் துப்பாக்கி சூட்டில் செத்த மக்களுக்கு இரங்கல் கூட சொல்லாமல் கோலியுடன் விளையாடும் மர்மம் இதுதான்
மோடி அம்பானிக்கும், அதானிக்கும் ஆட்சி செய்கின்றார் எனும் வரியில் இனி அனில் அகர்வாலுக்கும் சேர்த்து ஆட்சி செய்கின்றார் என திருத்திகொண்டது தேசம்
பாஜக அரசு என்பது இப்பொழுது குஜராத் வியாபாரிகளுக்காக உழைக்கும் அரசாக மாறிவிட்டது
குஜராத் வியாபாரிகளுக்காக தேசத்தை திறந்துகொடுத்து மக்களை கொல்வேன், உலகெல்லாம் சென்று தரகு வேலைபார்ப்பேன் என சொல்லிகொள்ளும் நபர் எப்படி நல்ல பிரதமராக இருக்க முடியும்?
சரி அவ்வளவு உத்தமர்கள் என்றால் காங்கிரஸ் ஆட்சியில் வந்த ஸ்டெர்லைட் பாஜக ஆட்சியில் தடை செய்யபடும் என சொன்னால் என்ன?
செத்தாலும் சொல்லமாட்டார்கள்
இதற்கு மேலும் மாரிதாஸ் அதை சொன்னார், மயி..டி இதனை சொன்னார் என எவனாவது வந்தால் பிய்த்துவிடுவேன் ஜாக்கிரதை
13 பேர் செத்தும் வாய்திறக்கா பிரதமர் மோடியினை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள என்ன மீதமிருக்கின்றது?

எது நம் மண்? யார் நம் சகோதரர்? எது நம் தேசம்? அகர்வால்களின் நிலம் இது, நம் நிலம் அன்று!

அகர்வால்களின் நிலம் இது, நம் நிலம் அன்று!
நாம் என்னவாக மாறினாலும், படைப்பாளிகளாக, மருத்துவர்களாக, சமூகப்பொறியாளர்களாக, அரசியல் வல்லுநர்களாக, ஊடகவியலாளர்களாக, சமூகச் சீர்திருத்தவாதிகளாக என்னவாக மாறினாலும், நம் முதுகை அழுத்தும் சாதிய இருள் புழுதியினை உதறி எழுந்து நம்மை என்னவாக மாற்றிக்கொண்டாலும், இது அகர்வால்களின் நிலம் தான், மக்களே!
நான் அடிக்கடி சொல்வதுண்டு, கல்யாணத்திற்கெல்லாம் பணத்தை விரயமாக்காமல் செல்வம் சேர்த்துக்கொண்டு எப்படியாவது வேறு நாடுகளில் சென்று படியுங்கள் என்று. இரண்டு வகைகளில் இது நம்மை மாற்றும். ஒன்று, நம் சாதி சார்ந்த அழுத்தங்களையும், சமூகம் நம்மிடம் எதிர்பார்க்கும் சாதிய வழக்கங்களையும் உதறிவிட முடியும். இன்னொன்று, இங்கேயே இருந்து நான்கு முழம் ஏறி இரண்டு முழம் சறுக்காமால் ஒவ்வொரு கட்டமாக நிரந்தரமான முன்னேற்றத்தை அடைய முடியும்.
இந்த தேசத்தில் இருந்தால், நாம் யாராக மாறினாலும், அவர்கள் பார்வையில் கருப்பர்கள் தாம், தீண்டத்தகாதவர்கள் தாம். கண்டால், சுடத்தான் செய்வார்கள். நம் முன்னேற்றத்தை, முற்போக்கைச் சகித்துக் கொள்ளமுடியாத வெறுப்புணர்வைக் கசிய விட்டுக் கொண்டே தான் இருப்பார்கள்.
இது நம் மண் இல்லையா? நாம் இந்த மண்ணின் மக்கள் இல்லையா? இந்தக் கேள்விகளை நாம் உதறிவிடவேண்டுமா? என்று கேட்டால், தூத்துக்குடி படுகொலைகளுக்குப் பிறகும், நமது இயலாமைகளுக்குப் பிறகும், நம் சகோதரர்களை விட்டே நம் கண்களைக் குத்திய அவலத்திற்குப் பிறகும் எது நம் மண்? யார் நம் சகோதரர்? எது நம் தேசம்? எல்லாம் மாயையான கயிறுகள்.
இங்குள்ளவர்களுக்கும், அகர்வால் போன்றோருக்கு அடிமை வேலை செய்வதில் தான் குஷி. அவர்கள் கொடுக்கும் துப்பாக்கியை எடுத்து நம்மைச் சுடுவதில் கொஞ்ச நேரம் அதிகாரப்பசியையும், சுயவெறுப்பையும் மற்றவர்கள் மீது சுட்டுச் சுட்டுத் தீர்த்துக்கொள்வார்கள்.
நம் மரபணுக்களில் ஏறிய அடிமை உணர்வை உதறவும், அகர்வால்கள் போன்றோருக்குச் சமத்துவம் கற்பிக்கவும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள், நம் மக்களைப் பூண்டோடு அழித்துவிடுவார்கள். நம் மக்களின் பொருளாதார நிலை ஓங்காதவரை, இங்கிருக்கும் இயற்கை வளங்களைப் பேணும் பொறுப்புணர்வை, தகுதியை நாம் கையில் எடுத்துக் கொள்ளாதவரை இது தான் நிலை.
படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான் என்று சொல்வார்கள். உண்மையில், சமூகநிலையில் உயர்ந்த நம் மக்களே, சமூகப்பொறுப்பின்றி ஆகிவிடுவதால் தான் சமூகத்தில் ஒரு பாதி அவர்களுக்காகவெல்லாம் சேர்த்துப் போராடி உயிரை விடுகிறார்கள்.
நாம் உண்மையில் யார் மீது கோபப்படவேண்டும்?

மக்களின் உரிமைக்குரல் "அவாளின் ஸங்கீத ஸாதகத்திற்கு" இடையூறாகத் தெரிகிறது

முடியாட்சி காலம் தொட்டு எத்தனையோ போர்கள் இந்த மண்ணில் நடைபெற்றிருந்தாலும் எந்த மண்ணனும் அக்ரகாரத்தின் அமைதியை குலைத்ததில்லை.
எனவேதான் இன்று ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைக்குரல் கூட "அவாளின் ஸங்கீத ஸாதகத்திற்கு" இடையூறாகத் தெரிகிறது.
என்ன செய்வது? பார்ப்பனர்கள் ஒரு ரூபாய் வெள்ளைத் தாளில் உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு கச்சிதமாக முடித்துக் கொள்ளும் காரியத்தைக் கூட நாம் வீதிக்கு வந்து போராடி, குழந்தை குட்டிகளுடன் நின்று குரல் எழுப்பி, தெருநாய்களைப் போல் சுடப்பட்டு, அழுது அரற்றி, கதறித் துடித்து, புலம்பித் தவித்துதானே செய்து கொள்ளமுடிகிறது?
இதுவரை அக்ரகாரத்தினர் தடதடக்கும் பூட்ஸ் ஒலிகளையும், படபடத்து வெடிக்கும் துப்பாக்கிகளையும், அலறிக் கொண்டு விரையும் அவசர ஊர்திகளையும் அவர்கள் கண்டதில்லை.
அக்ரகாரத்தின் இந்த அமைதியை கெடுக்க வேண்டுமென்பது நமது நோக்கமல்ல...
எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் இதேபோல அமைதியாக வாழவிடுங்கள் என்றுதான் போராடுகிறோம்.
இது இனத் துவேஷமோ,
பார்ப்பனத் துவேஷமோ அல்ல...
இதன் பெயர் சமத்துவம்.

மனுதர்ம சாஸ்திரம்

``பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது’’
- மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 11 சுலோகம் 65
`படுக்கை, ஆசனம், அகங்காரம், காமம், பொய், துரோகச் சிந்தனை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்’’
- மனுதர்மம் சாஸ்திரம் அத்தியாயம் 9 சுலோகம் 17
``பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், பௌவனத்திரி கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல், ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது’’
-மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 148
(இதன்மூலம் பெண் என்பவர் தன் சொந்த அறிவைப் பயன்படுத்தக் கூடாது; அடுத்தவர்கள் ஆணையின்கீழ் அடங்கிக் கிடக்க வேண்டும் என்று பெறப்படுகிறது.)


அரசின் போலீஸ் அராஜகங்கள்

மாஞ்சோலை எஸ்டேட் போராட்டம் தூத்துக்குடி போராட்டம் போல கலெக்டர் ஆஃபீஸ் முற்றுகை போராட்டம் .அங்கே சுடும் ஆர்டர் யாருக்கும் வழங்கப்படவில்லை.பிரச்சினையை மாவட்ட ஆட்சியரும் ,காவல்துறை எஸ் பியும் தான் ஹாண்டில் செய்தார்கள்.
மக்களை அழைத்து சென்ற போராட்டத்துக்கு தலைமை தங்கியது தமாகவின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சோ பாலகிருஷ்ணன் .அவர்கள் திமுகவின் கூட்டணி கட்சியாக இருந்து சில மாதங்களுக்கு முன்பு தான் எதிர் அணியானவர்கள் .
இதில் நேரடியாக முதல்வர் கலைஞர்,திமுக அரசை முக்கிய குற்றவாளிகளாக காட்டுவது சரியான ஒன்றாக தெரியவில்லை.படுகொலைகளுக்கு காரணமாக இருந்த அதிகாரிகளை காப்பாற்றினார் மற்றும் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர தவறி விட்டார் என்பதில் நியாயமும் அர்த்தமும் உண்டு
திமுக அரசு காவல்துறையினரை செயல்பட விடாத அரசு என்று தான் பெரும்பாலான காவல்துறையினரே பேசுவர்.இது உண்மையும் கூட
போலீஸ் அராஜகம் பற்றி வரும் குறிப்புக்கள் ,பதிவுகள் சில மாஞ்சோலை எஸ்டேட் இல் இருந்து துவங்குகின்றன .சில பதிவுகள் விவசாயிகளை எம் ஜி ஆர் அரசு சுட்டு கொன்றதில் இருந்து துவங்குகின்றன .சில இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வெறியாட்டம் ஆடிய பக்தவச்சலம் அவர்களின் தலைமையிலான காங்கிரஸ் அரசின் போலீஸ் அராஜகங்களில் இருந்து துவங்குகின்றன
எதிலும் எம் ஜி ஆர் காலத்தில் தான் மிக அதிக அளவில் போலீஸ் கொலைகள் நிகழ்ந்ததையோ .நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நக்சலைட் என்று போர்வை போர்த்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதோ,.
இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் போலீசால் சுட்டு கொல்லப்பட்ட 21 பேர் நிகழ்வு சேர்த்து சொல்லப்படுவதில்லையே ?
என்ன காரணம்

ஒரு பில்லியனர் இப்போதைக்கு ப்ரேக் எடுத்துக் கொள்கிறோம் என்று சொன்னால், அதன் அர்த்தம்

Read between the lines.
அனில் அகர்வால் இருக்கும் உயரத்திற்கு, அவர் ரெகுலர் மெயிண்டெனென்ஸ் வேலைகளுக்காக ஆலையை மூடுகிறோம் என்கிற ஸ்டேட்டஸ் அப்டேட் எல்லாம் சொல்லத் தேவையில்லை. இதை சொல்ல வேண்டியது, ஸ்டெர்லைட்டின் Infrastructure VP.
ஒரு பில்லியனர் இப்போதைக்கு ப்ரேக் எடுத்துக் கொள்கிறோம் என்று சொன்னால், அதன் அர்த்தம்
‘முட்டாப்பயல்களே, உங்களை நம்பி (Modi & Co, EPS & Co and others) தானே இவ்வளவு பணத்தையும் கொடுத்தேன், கடைசியில் மூட வைத்து விட்டீர்களே. இப்போது வழக்கும் போட்டு, அது ஏகப்பட்ட துறைகளுக்கு ரவுண்டும் அடித்து வரும். இதற்கு நடுவில், சர்வதேச சந்தையில் என் பெயரை நாரடிக்க விட்டு விட்டீர்களே, இந்த 3000 கோடி ரூபாய்க்காக காத்துக் கொண்டு இருந்தால், மற்ற நாடுகளில் நான் போட்டிருக்கும் பல்லாயிரம் கோடிகள் நக்கிக் கொண்டுப் போய் விடும். இப்போதைக்கு சட்டையில் மண் ஒட்டவில்லை என்று கிளம்புகிறோம்’
என்றுப் பொருள். They are heading for a total shutdown but will sue Tamilnadu Government. Before that, we should sue them in London.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு.
மக்களே இத நம்பாதீங்க.
சட்டசபையில் முறையாக விவாதிக்கபட்டு
தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை நகலையும் இணைத்து மத்திய அரசுக்கு அனுப்ப பட வேண்டும்.
மத்திய அரசும் இந்த அறிக்கையை பெற்றுக்கொண்டு (அப்பொழுது சுற்றுசூழல் அமைச்சர் அந்த அறிக்கை எங்கள் கைகளுக்கு கிடைக்கவே இல்லை என்று நிர்மலா சீதாராமன் போல் சொல்லாமல் இருக்க வேண்டும்) அதை மத்திய சுற்று சூழல் துறைக்கு அனுப்பி அறிக்கை கேட்கும். இந்த ஆலையை தொடர்ந்து நடத்தலாமா? வேண்டாமா என்று.
மத்திய சுற்றுசூழல் நேரடியாக ஸ்டெர்லைட் கம்பெனியில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும்.பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கின்றதா? இல்லையா என்று...?
அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் மத்திய அரசே எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும்.
எங்கே மத்திய சுற்றுசூழல் அமைச்சர் டாக்டர்.ஹர்சவர்தன் அவர்களை கூப்பிட்டு ஒரு அறிக்கை விட சொல்லுங்கள் பார்ப்போம்.
மக்களே நீட் தேர்வில் எவ்வாறு ஏமாற்றப்பட்டோமோ அதே போன்று தான் இதுவும்.

பாஜக சங் பரிவார கும்பல் ஐஎஸ் தீவிரவாதிகளை விட மகா கொடுமையானவர்கள்

தூத்துகுடியில் 13 பேர் உயிரை கொடுத்து தமிழகத்திற்கு சொல்லியிருக்கும் செய்தி இதுதான்
இந்த பாஜக சங் பரிவார கும்பல் ஐஎஸ் தீவிரவாதிகளை விட, நிபா வைரஸை விட மகா கொடுமையானவர்கள், இவர்களை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் வளர அல்ல நுழையவே விட கூடாது என்பது
தும்பிகளாவது சாவில் அழுவார்கள், இவர்கள் அவர்களை விட மகா கொடுமையான பாதக கும்பல்
கொஞ்சமேனும் மனித தன்மையோ, இரக்கமோ சக மனிதன் சாவில் கண்ணீர்விடும் இயல்பான மானிட குணமோ கொஞ்சமுமில்லை
மனம் முழுக்க கொடூரம், வஞ்சகம், சக மனிதனை குறைந்தப்ட்சம் உயிரினமாக கூட நினைக்கா ஒரு குரூர மனம்
செத்தது எதிரி என்றாலும் ஓடி சென்று அஞ்சலி செலுத்தி அழுவதும், மரண வீட்டில் ஜென்ம எதிரி என்றாலும் அமைதி காப்பது தமிழர் பண்பாடு
இந்த சனியன்களுக்கு அதுவும் தெரியவில்லை, பண்பாடோ, நாகரீகமோ சுத்தமாக இல்லை. இவர்கள் காட்டுமிராண்டியிலும் வடிகட்டிய காட்டுமிராண்டிகள்
இவர்கள் இப்படித்தான் இவர்களை ஒருகாலமும் ஆதரிக்காதீர்கள் என சொல்லி உயிரிவிட்டிருக்கின்றார்கள் அந்த தியாகிகள்
மரணம் எல்லோருக்கும் பொதுவானது, இன்னொருவன் மரணத்தில் மகிழ்பவன் மன்னிப்பே கிடைக்காத கொடிய பாவி
அப்படிபட்ட மாபாவிகளை அடையாளம் காட்டிவிட்டு அந்த தியாகிகள் விடைபெற்றிருக்கின்றார்கள்
அந்த ரத்த சாட்சிகள் தியாகம் வீணாகாது, இந்த கும்பல்கள் தமிழகத்திலிருந்து அல்ல இந்தியாவிலிருந்தே களையபட வேண்டும்
நிச்சயம் பூண்டோடு களையபட்டு அகற்றபடும்

Wednesday, May 23, 2018

பாஜகவினரிடம் பரவியிருக்கும் கொலைவெறி, இனவெறி, பாசிசம்

Naziக்கள் ஞாபகம் இருக்கிறதா?? தம்மை ஆரியர்கள் என்று பிரகடனப்படுத்தி யூத இன அழிப்பில் ஈடுபட்டவர்கள்.
ஹிட்லர் தொடங்கி அதன் கட்சித்தொண்டன் வரைக்கும் ஒருவித கொலைவெறி, இனவெறி, பாசிசம் பரவியிருக்கும். பாஜகவினரிடம் அதை அப்பட்டமாகக் காண்கிறேன். முன்பெல்லாம் ஹிட்லருடன் மோடியை ஒப்பிடும்போது சற்று மிகைப்படுத்துகிறோமோ என்று தோன்றும்.
கிடையாது, மிகச்சரி என்பதை நிரூபிக்கிறார்கள். இங்கே 30க்கும் மேற்பட்ட உயிர்களை அரசே முன்நின்று கொன்றிருக்கிறது. வட இந்திய மீடியாக்கள் கண்டுகொள்ளவில்லை. தமிழக மீடியாக்கள் “மாவோயிஸ்டுகள்”, “கலவரக்காரர்கள்” என்கிறது. திரும்பத்திரும்ப உயிர்கள் பறிக்கப்படுகின்றன, அதைப்பற்றி எள்ளிநகையாடுதல் இதே நாசகாரக்கூட்டத்தால் செய்யப்படுகிறது.
கையாலாகாதத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறேன், அழுதாயிற்று, புலம்பியாயிற்று, இனி வேடிக்கை பார்த்து இன்னும் ரணப்படுவதில் மட்டுமே மௌனித்துக் கிடக்கப்போகிறோமா??

ஆயுத வன்றமுறைப் போராட்டங்களை முன்மொழிபவர்கள் எவருமே களத்திற்கு செல்வதில்லை

ஆயுத வன்றமுறைப் போராட்டங்களை முன்மொழிபவர்கள் எவருமே களத்திற்கு செல்வதில்லை. பதிவிட்டு தூண்டி விடுவதோடு சரி, தங்களது அன்றாட வேலையை கவனிக்க சென்று விடுவர்.
என்ன, அதிர்ச்சியாக இருக்கிறதா?
பிபி மாத்திரை சாப்பிடுங்கள்.
இந்த போராட்டமே வாழ்வாதாரத்துக்கான போராட்டம், உரிமைக்கான போராட்டம். வாழ வேண்டும் என்கிற ஆசைக்காகவே மக்கள் போராடுகிறார்கள்.
அங்கே யாரும் martyrdom அடைவதற்காகாே, ஒரு சிலையாகவே, நினைவுத்தூணாகவோ நிற்பதற்காக போராடவில்லை. எல்லாேருக்கும் உயிர் மீது ஆசை இருக்கும்.
பெரியார் போராடச் சாென்னார், இங்கே அதே காெள்கையின் பேரில் அறவழிப்போராட்டமே சரியான அணுகுமுறை, அதுவே தமிழ்நாட்டை நல்வழிப்படுத்தியிருக்கிறது முன்னேற்றி இருக்கிறது, பல விஷயங்களை பெற்றும் தந்திருக்கிறது.
அரசு நம்மை விட வலிமையானது, எடப்பாடியின் இந்த பினாமி அரசு மக்கள் பக்கம் நிற்பதற்கான வாய்ப்பே இல்லை. வன்முறையை கையில் எடுத்தால், முடிவு நம் கையில் இல்லை, எதாவதொரு எஸ்எல்ஆர் அசால்ட் ரைஃபிளின் முனையில் நம்ம உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும். அந்த ரைஃபிளின் முனை, வன்முறையை தூண்டி விடுபவர்கள் மீதே திரும்பும் பொழுதுதே அந்த வலியும் வேதனையும், இவர்களுக்கும் இவர்களை நம்பியிருக்கும் குடும்பத்திற்கும் புரியும்.
போராடவே வேண்டாம் என்கிறீர்களா என்றாெரு கேள்வி எழுகிறதா?
நிச்சயம் எழும், அதை செவிலில் தட்டி உட்கார வையுங்கள்.
இங்க சில பிரபலங்கள் தூண்டிவிடுகிற மாதிரி வன்முறையாக போராட வேண்டாம் என்று தான் கோருகிறேன், போராடவே வேண்டாம் என்று கூறவில்லை.
நம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்புக்காக வன்முறையை கையாள்வது வேறு, அதே சமயத்தில் போராட்ட முறையாக வன்முறை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. வேண்டுமென்றால், பதிவிட்டவர் எந்தெந்த வன்முறை போராடங்களில் முன் நின்று கலந்து கொண்டார் என்பதை கேளுங்களேன்...
அடுத்த முறை நாமும் அவர் தலைமையிலேயே ஆயுதங்களுடன் கலந்து காெள்ளலாம். குறைந்தபட்சம் அவர் கோலோச்சும், ரவுடியிஸம் செய்து தன் கட்டுக்குள் வைத்திருக்கும் வடசென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கும் எஸ்பி.மகேந்திரனை நேரில் சென்று கேள்வி கேட்கட்டுமே, ஒத்துக்கொள்கிறேன் பெரிய புரட்சிப்புடுங்கியாக.

ஜெர்மனியின் யூத இன அழிப்பை அரிசி சேவை சாப்பிட்டுக்கொண்டே ரசித்தவர்கள் பார்ப்பனர்கள்

நண்பர்கள் நிறைய பேர் பார்ப்பனர்களையும், பார்ப்பனர்களிடம் கழுவிக்குடிக்கும் சூத்திர அடிமைகளையும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவர்கள் பேசும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பு வாதத்திற்காக unfriend செய்தபடி இருக்கிறார்கள்.
பலபேர் காலம் வரும்போது தான் உணர்வீர்கள், இதைத்தான் எல்லா பொழுதுகளிலும் சொல்லி வருகிறோம். இன்னமும் இந்த நாட்டில் எஞ்சிருக்கிற அரசியலமைப்பு சட்டம் தான் நம்மை காப்பாற்றி வருகிறது. பார்ப்பனர்களின் மனுநீதி அடிப்படையில் இந்த நாடு இயங்க ஆரம்பித்தால், அப்படியான கொடுங்கோல் ஆட்சியையும், வன்முறையையும், குரூர பாசிச முகத்தையும் உலகத்தின் எந்த பகுதியிலும் நீங்கள் பார்க்க முடியாது.
ஜெர்மனியின் யூத இன அழிப்பை அரிசி சேவை சாப்பிட்டுக்கொண்டே ரசித்தவர்கள் பார்ப்பனர்கள், ஹிட்லரின் கை ஓங்கினால் உருவி பிழைத்துக்கொள்ளலாம் என்று ஜெர்மன் மொழியை கற்க தயரானவர்கள் பார்ப்பனர்கள்.
வெளிச்சத்தை பார்க்கும் கருப்பான் பூச்சிகளை போல, சோப்பு நுரைக்கு முகம் சுளிக்கும் கழிவறை இடுக்குகளில் வாழும் நுண் கிருமிகளை போல பார்ப்பனர்களிடம் அஞ்சி ஓடும் ஒரு தன்மை உண்டு. அது அவர்களின் முகத்தை தோலுரிப்பதே. உண்மையை உள்ளது உள்ளபடி சொன்னால் பார்ப்பனர்களால் பொறுத்துக்கொள்ளவே முடிவதில்லை, பொய் புகழ்ச்சிக்கும், குறுக்கு வழியில் சோறு தின்று குறுக்கு வழியில் உடல் வளர்த்து ஊளைச்சதையில் திளைப்பவர்களால் நிஜத்தை உள்வாங்கவே முடிவதில்லை .
நீங்கள் அதை பேச ஆரம்பித்தால் தானாகவே ஓடுவார்கள், இடுக்குகளில் ஒளிவார்கள், எந்த பார்பனரையும், பார்பனீயவாதிகளையும் நான் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியதேயில்லை.
காலத்தால் அவர்களே ஓடினார்கள், ஒருநாள் கூத்தல்ல இது. ஆயிரம் வருஷமா நடக்குற கூத்து. ஸ்டெர்லைட் வரை பேசிவிட்டு பார்ப்பனியத்தின் எல்லா அக்கிரமங்களையும் வருடம் முழுவதும் ஏற்கத்தயாரான உங்கள் நிராகரிப்பில் அவர்கள் வாழ்கிறார்கள்.
ஆகையால், அவர்கள் பேசுவதினால் நீங்கள் விலக கூடாது, இந்த தளமானாலும் இந்த மண்ணானாலும் அக்கறையோடு அறச்சீற்றமடையும் நீங்கள் தான் இங்கே இருக்கவேண்டியவர்கள், ஒட வேண்டியது அவர்கள்.
நாம் பேசித்தான் அவர்களை ஓட்டமெடுக்கச்செய்ய வேண்டும்.

உலக வர்த்தக அரசியலில் முதல் உயிர் எழுத்து

ஸ்டர்லைட்
நமக்கு
தெரிந்த
போராட்டம்
துப்பாக்கி சூடு
(படு கொலை)

இவற்றுக்கு பின்னால் இருக்கும் இயக்கும் அரசியல் ! ! !
இந்த போராட்ட களத்தில் நம்மை எதிர்த்து நிற்பது
மத்திய மாநில
முதலாளித்துவ அரசியலை தாண்டி
உலக வர்த்தக அரசியலும் இதில் விதிவிலக்கு அல்ல
ஆம்
முக்கிய உற்பத்தி பொருளாக இவர்கள் தயாரிக்கும் *காப்பர்*
ஒரு சிறந்த மின் மற்றும் வெப்பம் கடத்தும் உலோகம்
இவற்றை கொண்டே அதீத ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன
இந்தியாவின் கிட்டதட்ட 33% காப்பர் உற்பத்தி பங்கு ஸ்டர்லைட் ஆலையை நம்பி மட்டுமே இயங்குகிறது
மீதம் உள்ள 67%
உற்பத்தியின் பங்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய படுகிறது அதற்காக வேண்டி இவர்கள் தேர்வு செய்ய இடமே
கடலை மையமாக கொண்டு வர்த்தகம் செய்யும் தூத்துக்குடி
இந்த உற்பத்தி தடை வந்தால் உலக காப்பர் வர்த்தகத்தில் பெரும் மாற்றம் ஏற்படும்
இயந்திர வாழ்கையில் தன்னை ஆட்படுத்திக்கொண்ட
உலக வளர்ந்த நாடுகளின்
இயந்திர பொருட்களில் *நாம் சுவாசிக்கும் காற்றில் விஷத்தை கலந்த காப்பர்* அவர்களின் வாழ்கையில் கலந்த ஒன்று
என்னை அழித்தால்
மட்டுமே அவர்களின் சொகுசு வாழ்வு கிடைக்கும் என்பதே
உலக வர்த்தக அரசியலில் முதல்
உயிர் எழுத்து
இதை நாம் தகர்த்து எரிந்தால் வீழ்வதது வேதாந்தா
அனில் அகர்வால் மட்டும் அல்ல உலக வர்த்தக அரசியலுமே
- மண்ணை காப்பாற்ற சொந்த மண்ணை விட்டு சென்ற 11 போராளிகளுக்கும்
ஆழ்ந்த இரங்களுடன்
இக்
கட்டுரையை பகிர்கி்றேன்

அப் கீ பார்.... . . . . .

ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக்கொள்ளலாம். நாம் எல்லாரும் 1930களில் ஜெர்மனியில் வாழ்கிறோம். நமது தலைவராக ஹிட்லர் இருக்கிறார். ஜெர்மனியிலும் ஹிட்லரை எதிர்க்கும் சிறுபான்மை கும்பல் ஒன்று இருக்கிறது. பெரும்பான்மையான ஜெர்மன் மக்களுக்கு ஹிட்லர் என்பவர் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லக்கூடிய திறன் வாய்ந்தவர் என்பது ஹிட்லரின் பிரச்சாரக் குழுவால் நன்றாக பிரச்சாரம் செய்யப்பட்டு எல்லாரின் மூளையிலும் அழுத்தமாகப் பதிய வைக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த சிறுபான்மை கும்பல் மட்டும் விடாமல் ஹிட்லரின் இன அழித்தொழிப்பு பற்றி கூவிக்கொண்டே இருக்கிறது. இதற்கு நியாயம் வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. ஹிட்லருக்கு இதெல்லாம் கவலை இல்லை. நாட்டு மக்களான பெரும்பான்மையினரும், 'நாட்டுக்கு ஒரு சர்வாதிகாரி கிடைத்துவிட்டார்; இனி bus சரியான நேரத்துக்கு வரும்; லஞ்சம் இருக்காது; பால் பாக்கெட் லேட்டாகப் போடுபவர்களை ஜெயிலில் தள்ளிவிடலாம்; கேபிள் டிவியில் புதிய படம் வராவிட்டால் ஹிட்லரிடம் புகார் கொடுத்துவிடலாம்' என்றெல்லாம் அவர்களின் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள்.
ஹிட்லர் செய்த genocides போலவே பக்கத்தில் இன்னொரு நாட்டில் இன்னொரு தலைவர் செய்திருக்கிறார். அவரை இதுவரை ஹிட்லர் எதிர்க்கவில்லை. ஹிட்லருடன் கூட்டணி சேர்ந்த கட்சித் தலைவர்கள், 'ஹிட்லர் பதவிக்கு வந்ததும் இதைப்பற்றி யோசித்து நல்ல முடிவு எடுப்பார்' என்றெல்லாம் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். ஆனால் ஹிட்லர் ஒரு வேலையைச் செய்கிறார். பதவிக்கு வந்ததும், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அந்தத் தலைவருக்கும் அழைப்பு விடுக்கிறார். இதுவரை பக்கத்து நாட்டின் இன அழித்தொழிப்பு பற்றிப் பொங்கிக்கொண்டிருந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இப்போது கப்சிப். ஹிட்லருக்கு ஆதரவு கொடுத்த பெரும்பான்மை மக்களோ, 'இதெல்லாம் எனக்கெதுக்கு? ஆனா பால் பாக்கெட் மட்டும் சரியான நேரத்துக்கு வராட்டி ... கபர்த்தார்.. தலீவர் ஹிட்லர் கிட்ட புகார் கொடுத்துருவேன்' என்று அவர்களின் வேலையில் குறியாக இருக்கிறார்கள்.
ஹிட்லருக்கு எதிரான சிறுபான்மை கும்பலுக்கு, ஹிட்லருக்கு ஓட்டுப்போட்ட மக்கள் மீதும், ஹிட்லருக்கு ஆதரவு கொடுத்த கட்சித் தலைவர்கள் மீதும் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை. 'இதெல்லாம் ஒரு ஆரம்பம் பிரதர்ஸ்.. இன்னும் ஹிட்லர் என்னல்லாம் செய்யப்போறாரோ' என்ற கவலை அவர்களுக்கு.
அப் கீ பார்.... . . . . .

நாளைக்கு உங்களையும் ஹிந்துத்துவம் வீழ்த்த ஆரம்பிக்கும். இப்போதே விழித்துக் கொள்ளுங்கள்.

தமிழ் சாதீய சமூக அமைப்புகளில், நாடார் சமூகம் தான் பாஜகவினை முதலில் கையிலெடுத்தது. அதற்கான காரணங்கள் தெளிவானவை - தொழில். அதற்கு பின்னால், மேற்கு மண்டலம் பாஜகவை ஆதரிக்க ஆரம்பித்தது.
இன்றைக்கு நாடார் சமூகம் கோலோச்சிக் கொண்டிருக்கும் தூத்துக்குடியில் தான் இந்த கொடுங்கொலைகள் பாஜகவின் ஆணையின் படி, தமிழக அரசால், கார்ப்பரேட் நலன் கருதி நிறைவேற்றப் பட்டுக் கொண்டு இருக்கின்றன. கடும் உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்த சமூகம் நாடார்களுடையது. இன்றைக்கு உங்கள் மண்ணில் தான் ரத்தம் வழிந்தோடிக் கொண்டு இருக்கிறது.
இந்துத்துவம் தனக்கு தேவையானவற்றை தூக்கி வைத்துக் கொண்டுக் கொண்டாடும். காரியம் முடிந்தவுடன் கீழேப் போட்டு மிதிக்கும். அதிலும் கார்ப்பரேட் + வலதுசாரி + மதபோதை என்பது ஒரு heady cocktail. நீங்கள் ஏமாந்தது போதும், இனியாவது இந்த பாஜக மாயையிலிருந்து வெளியேறுங்கள். நல்லபாம்பு குட்டிகள் கூட பார்க்க அழகாகவும், கவர்ச்சியாகவும் தான் இருக்கும். ஆனால் அவற்றை துணையாக வளர்த்தால் ஒரு நாள் உங்களையே கொத்தும். பாம்பிற்கும், பாஜகவிற்கும் ஒரு வேறுபாடும் கிடையாது.
மேற்கு மண்டல தொழில்துறை நண்பர்களுக்கு,
இன்றைக்கே தமிழர்களின்றி வட மாநில, வட கிழக்கு மாநில தொழிலாளர்களை வைத்து தான் தொழில் அங்கு நடக்கிறது. படிப்பறிவற்ற, ராம் நாம் சத்ய ஹே, ஜெய் ஸ்ரீராம் கோஷங்களில் எளிதில் மயங்கக் கூடிய இந்த பணியாளர்கள் தான் பாஜகவின் நேரடி டார்க்கெட். நாளைக்கு உங்களையும் ஹிந்துத்துவம் வீழ்த்த ஆரம்பிக்கும். இப்போதே விழித்துக் கொள்ளுங்கள். மதபெரும்பான்மை அடிப்படைவாதத்தினை ஆதரித்த எவரும் நிம்மதியாக வாழ்ந்ததாக உலகெங்கிலும் சான்றுகள் இல்லை. இந்த rabbitholeக்குள் சிக்கிக் கொண்டால் கதை முடிந்து விடும்.
இவர்கள் உங்களைக் காக்கும் வேலிப்போல முதலில் இருப்பார்கள். ஆனால் இது அரணல்ல. வேலியே பயிரை மேய்ந்த, சீரழித்த கதை தான் எல்லா இடங்களிலும். பார்த்துக் கொள்ளுங்கள். இனியாவது இந்த சங்காத்தத்தை விட்டொழித்து விட்டு, விழித்துக் கொள்ளுங்கள்.

எய்தவன் இருக்க அம்பை மட்டும் நோவதேன்

ஆங்கிலேய வல்லாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களை ஒடுக்க தமிழக காவல்துறை தான் பயன்படுத்தப்பட்டனர். ஒன்றிரண்டு ஆங்கிலேய ஜெனரல்கள் உயரதிகாரிகள் மட்டுமே அவர்களை இயக்குவார்கள்.
தமிழன் மீது விழுந்த அடியை எல்லாம் பிரிடிஷ் அடித்த அடியாகத் தான் பார்க்கப்பட்டது. தமிழனை தமிழன் உதைத்தான் அய்யகோ என்று எதிர்ப்புக்குரலை மடைமாற்றிவிடும் வேலையை யாரும் செய்யவில்லை.
மாறாக ஆங்கிலேயர்களை எதிர்க்க மேலும் மேலும் குரல் வலுப்பெற்றது.
ஆனால் இப்பொழுது திட்டமிட்டு லாவகமாக போலீஸ் ஒருவரின் ஃபோட்டோ பகிரப்பட்டு வருகிறது. சுட்டது அவர் தான். ஆனால் என்னவோ இது முழுவதையுமே அவர்மட்டும் திட்டமிட்டு செயல்படுத்தியதைப் போல் ஒரு பிம்பம் நிறுவப்படுகிறது.
எய்தவன் இருக்க அம்பை மட்டும் நோவதேன்?
தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுகள், வஜ்ரா வாகனம் ரப்பர் தோட்டாக்கள் அதன் பின்னர் தான் துப்பாக்கிச் சூடு என "protocol" இருக்கையில் திடுமென துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் பாய்வதை எப்படி அந்த ஒற்றை போலீஸ்காரர் திறனாக்கம் செய்திருக்க இயலும் என்பது இங்கே தொக்கி நிற்கும் கேள்வி.
"ஒருத்தனாவது சாவனும்" என்ற குரல் கேட்கும் ஒலி/ஒளித்துணுக்கு வெளியாகிறது. காவலர்கள் ஏறி நின்று குறிப்பார்த்து சுடுகிறார்கள். சிறுமி ஒருவர் பலியாகிறார். முழங்காலுக்கு கீழ் எல்லாம் சுடாமல் முகம், மார்பு பகுதிகளில் குறிவைக்கப்படுகிறது. தோட்டா பாய்கிறது. ரத்த பிசுபிசுப்பு அந்த உடல்களில் காய்வதற்கு முன்னரே "நீ எல்லாம் 10 லட்சத்துக்கு தான் வொர்த்து " என்று கெக்கிலி கொட்டி கொக்கரிப்புடன் நீலிக்கண்ணீர் சிந்தி ஒரு அறிக்கை வருகிறது. ஆளும் கட்சியை "வைத்திருக்கும்" தேசிய கட்சியில் ஒருவர் இதை தவிர்க்க முடியாது என்று துள்ளலும் எள்ளலும் கலந்து பதிவிடுகிறார். அடுத்த நாளே இன்னொரு இளைஞர் சுடப்படுகிறார்.
மேலும் கருப்பு சட்டை அணிந்த காரணத்திற்காகவே போராட்டத்துக்கு கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாத ஒருவர் சுடப்படுகிறார். காவல்துறை மருத்துவமனைகளில் புகுந்து வெறியாட்டம் ஆடுகிறது.
தூத்துக்குடியை பரமகுடி 2.0 ஆக்கியதைத் தொடர்ந்து நடுகுப்பம் 2.0 ஆக்குகிறது காவல்துறை.
நாளை இன்னும் எத்தனை உயிர்கள் போகும் என்று தெரியாத நிலையில் இணைய சேவையை தூத்துக்குடி, கன்னியாரியில் துண்டிக்க சொல்கிறார் இ.அ.ப நிரஞ்சன் மார்டி. ( காஷ்மீரில் இணையம் துண்டிக்கப்பட்டபோதும், தொலைதொடர்பு வசதி நிறுத்தப்பட்டபோதும் ஏன் இவ்வளவு புலம்புகிறீர்கள் என்று அங்கலாய்த்தவர்கள் இஃதை உற்றுநோக்கவும்).
சொல்லி வைத்ததாற்போல் தினமலர், வேதவிற்பன்னர்கள் இதை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நமது பெயர் இருக்குமா தெரியாது. ஆனால் நாளை பாயப்போகும் தோட்டாக்களில் வெனஸ்டா, காலியப்பன், அனிதா, லூர்துமேரி என ஏதாவது ஒரு பெயர் இன்றே எழுதப்பட்டிருக்கும் என்பது திண்ணம்.
இதை எல்லாம் கிடுகிடுவென ஒருமுறை யோசித்துப் பாருங்கள். அந்த ஒற்றைப் போலீஸ்காரரோ, அல்லது 10 பேர் கொண்ட குழுவோ இதையெல்லாம் செயல்படுத்தவில்லை. லகான் உண்மையில் யார் கையில்?
திட்டமிட்டு இது போலீசாரின் சதி மட்டுமே என்று பரப்பும் போக்கை யார் துவங்கியிருப்பார்கள்?
இது தான் தமிழகத்தில் போலீஸ் செய்யும் முதல் கொலையா?
கர்த்தாக்களை விட்டுவிட்டு ஏன் கருவிகளை மட்டும் சாடிக்கொண்டிருக்கிறோம்?
இதற்கு Red herring fallacy என்று தலைப்பிடலாம் அல்லது எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு வாக்கியத்தை வைத்துக்கொள்ளலாம்.
யாருடைய சோதனைச்சாலை எலிகள் நாம்?
யாரை நோக்கி குற்றம்சாட்ட கைகள் நீளவேண்டும் என்றுகூட தெரியாத "ஆஃபாயில்" சந்ததியா நாம்?.
சமூக வலைதளம் இல்லாததால் விடுதலைப் போராட்டம் வென்றது.
இனி இங்கே வரப்போகும் எந்த போராட்டமும் வெல்லாமல் வீணாய் போவதற்கான காரணமும் சமூக வலைதளமாகத்தான் இருக்கும்.
ஏனெனில் அரச பயங்கரவாதம் என்ற மலையை நம் கண்ணிலிருந்து மறைக்க காவலாளி ராஜ் திலீபன் என்ற தூசு மட்டுமே போதுமானதாய் இருக்கிறது..
மீண்டும் கேட்கிறேன்.
யாருடைய சோதனைச்சாலை எலிகள் நாம்?

உண்மையறியும் குழு என நான்கைந்து நபர்கள் வந்து விசாரித்து அறிக்கை அளிப்பதைக்கூட விரும்பாத வேதாந்தா

இதுவரை இச்சம்பவத்தை நான் பொதுவெளியில் எழுதவோ பேசவோ இல்லை. இன்றைக்குப் பேசியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
மேட்டூரில் ஒரு தொழிற்சாலை உள்ளது. மால்கோ என்றுபெயர். வேதாந்தாவுக்கு சொந்தமான நிறுவனம் அது. அந்த நிறுவனம் வெளியேற்றும் கழிவுகளாலும் புகையினாலும் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் புற்றுநோய் உட்பட பல தோல் நோய்கள் உண்டாக்கி மக்கள் அவதியுறுகின்றனர். இக்கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் பேச உண்மை அறியும் குழுவின் ஒரு நபராக நானும் சென்றிருந்தேன். அது 2013. அக்கிராமங்களில் மக்கள் படும் அவதியை நேரில் பார்த்தோம். பொதுவாக உண்மை அறியும் குழு பாதிக்கப்பட்டவர்களை மட்டும் பார்க்காது. அது தொடர்புடைய அதிகாரிகளையோ அல்லது மக்கள் யாரால் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களையும் சந்தித்துப் பேச முயல்வது வழக்கம். அந்த வகையில் நாங்கள் மால்கோ நிறுவனத்துக்குச் சென்றோம். அங்கு பொறுப்பில் இருந்த ஒருவரிடம் பேசினோம். அவர் இன்முகத்தோடு எங்களை வரவேற்றுப் பேசினார்.
"நாங்கள் அக்கிராமங்களுக்குச் சென்று மாதமொரு முறை மருத்துவ முகாம்கள் நடத்துகிறோம்" என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அதாவது இவர்களுடைய தொழிற்சாலையால்தான் மக்களுக்கு நோய்களும் வருகின்றன. இவர்களே மருத்துவமும் பார்ப்பார்களாம். பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவார்களாம். அவருடைய பதிலை பதிவு செய்துகொண்டு திரும்பினோம். திரும்பும் வழியில் பொங்குமாங்காவிரிக்கு அருகே சிறிது நேரம் நின்று அதை ரசித்துவிட்டு காரில் ஏறி ஒரு சாலையில் பயணித்தோம்.
ஆளரவமற்ற சாலை அது. எங்கள் வாகனம் செல்லும் வழியில் இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனம் ஒன்றின் அருகில் நின்றுகொண்டிருந்தனர். அருகே செல்லச் செல்ல ஏதோ விபரீதமாய்ப் பட்டது. ஆனால் எனன்வென்று விளங்கவில்லை. ஒரு நபர் கையில் பெரிய கல் இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அது எங்கள் வாகனத்தை நோக்கி வந்தது. குறி தப்பி வாகனத்தின் மேற்கூரையில் விழுந்தது. அந்தச் சத்தத்தில் அனைவரும் அதிர்ந்துபோனோம். அது ,மட்டும் கண்ணாடியைத் தாக்கி இருந்தால்...நினைத்தே பார்க்கமுடியவில்லை. எல்லோரும் பதட்டமாகி ஒருவரையொருவர் காப்பாற்றுவதற்காக 'குனிங்க...ஒளிஞ்சுக்கோங்க...குனிங்க' என்று அலறினோம். நான் முன்சீட்டில் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். டிரைவரிடம் 'வேகம் வேகம். நிற்காம ஓட்டுங்க.. " என்று நான் கத்தினேன். ஆனால் மீண்டும் மீண்டும் கற்கள் வந்து தாக்கின. கண்ணாடிகள் உடைந்தன. பின்னால் அமர்ந்திருந்த தோழர் ஒருவரின் தலையை உரசிக்கொண்டு ஒரு கல் வந்து விழுந்தது. அன்றைக்கு ஓட்டுநர் கொஞ்சம் சாமர்த்தியமாகவும் வேகமாகவும் இல்லையெனில் எல்லோர் மண்டையும் உடைந்திருக்கும். மின்னல் வேகத்தில் அவர் வாகனத்தை ஓட்ட, இரு சககர வாகனத்தில் கற்களை எரிந்துகொண்டே அவர்கள் துரத்தினர். ஆனால் காரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை அவர்களால். மிக வேகமாக பிரதான சாலையை எங்கள் கார் தொட்டுவிட அங்கே மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் அதிகமிருக்கவே அந்த நபர்கள் எங்களை அதன் பின் தொடரவில்லை.
நாங்கள் காவல் நிலையத்துக்குச் சென்று வண்டியை நிறுத்தி புகாரளித்தோம். தோழர் கொளத்தூர் மணியிடம் தகவல் சொல்லவும் அவர் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை உடனே அனுப்பி வைத்தார். உடனடியாக செய்திச் சேனல்களில் அது செய்தியானது. குறிப்பாக புதிய தலைமுறையில் அதுகுறித்து விரிவாக செய்தி வெளியிட்டதாக நினைவு. அதன் பின் அந்த நபர்கள் யாரென விசாரித்ததில் அது வேதாந்தாவைக் காக்க மால்கோவால் ஏற்பாடு செய்யப்பட்ட நபர்கள் என்று தெரிந்தது. இன்னமும் வழக்கு இருக்கிறது.
ஆக ஓர் உண்மையறியும் குழு என நான்கைந்து நபர்கள் வந்து விசாரித்து அறிக்கை அளிப்பதைக்கூட விரும்பாத வேதாந்தா, ஸ்டெர்லைட்டுக்காக இத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் போராடுவதை எப்படி விரும்பும்? நான்கைந்து பேருக்கு தாக்குதல் என்றால் ஆயிரக்கணக்கானோருக்கு துப்பாக்கிச்சூட்டை அளித்திருக்கிறது வேதாந்தா நிறுவனம். காவல்துறை,அரசு, அதிகாரிகள் என எல்லோரும் துணை நின்று இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தி உயிர்குடித்திருக்கிறார்கள்.
எங்களைத் தாக்க திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அடியாட்களுக்கும், இந்த அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. வயிறு எரிகிறது வேதாந்தாவுக்கு அடியாள் வேலை செய்யும் இந்த அரசுகளின் கீழ் இருப்பதே ஒவ்வொரு நொடியும் நெருப்பில் நிற்பது போல் இருக்கிறது. அவமானமாகவும் இருக்கிறது. சொந்த மக்களை கொன்று குவிக்கும் இந்த அரசுகள் அழியட்டும்.
@kavin Malar

தமிழகத்தை இன்னொரு ஈழமாக மாற்ற முயல்வார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை

இலங்கை, இந்தியா-னு எங்க யார் என்ன பன்னாலும் பழி போட கலைஞரும் திமுகவும், அத நம்ப மக்களும் இருக்கும்போது எடப்பாடிகளும், மோடிகளும் ஏன் செல்லூர் ராஜூகளும் என்ன வேணா தைரியமா பன்னுவாங்க.. திமுகவும் எதிர்வினையாற்றாம இருக்கும், இவனுங்க இஷ்டத்துக்கும் அவதூறுகளை பரப்பி விடுவானுங்க,
மக்கள் வழக்கம்போல திமுக-வ திட்டிட்டு தேர்தல்ல அதிமுகவுக்கு ஓட்ட போட்டுட்டு, அவன் இந்த மாதிரி ஏதாவது படுபாதகமா பன்னும்போது மட்டும் திமுக வேஸ்ட்டு, ஸ்டாலின் வேஸ்ட்டு, ஆட்சிய கலைக்க கூட முடியல அப்றம் எதுக்கு எதிர்க்கட்சினு இருக்காங்கனு கேட்டுட்டு,
அப்டியே “நீ கற்பழிச்சா நானும் கற்பழிப்பேன்”, “பிரபாகரன் இருந்த இடத்தில் சீமான் இருந்திருந்தால் ஒரு சிங்களன் கூட உயிரோடு இருந்திருக்கமாட்டான்” “28 கிலோ ஆம கறி தம்பி, திருப்பி போட்டா படகு தம்பி” “நான் பேசுவதற்கு முன்பு வரை பிரபாகரனை அனைவரும் தீவிரவாதியாகத்தான் பார்த்தார்கள்” என்றெல்லாம் உளறிய சீமான்,
“பேரறிஞர் அண்ணா அன்று 1963-ல திராவிட நாடு கோரிக்கையை கைவிடாம இருந்திருந்தா தனி தமிழ்நாட்ட இன்னைக்கு போராடி 2018-ல வாங்கியிருக்கலாம்”, “ஈழப்போராட்டத்தின்போது மக்கள் போராட்டத்தை ஒடுக்கிய கருணாநிதியை விட எடப்பாடி எவ்வளவோ மேல்” என்றும் தற்போது நடைபெற்ற தூத்துக்குடி கலவரத்திற்கு கூட, காவலர்களையும், மாவட்ட ஆட்சியாளரையும் மட்டுமே கண்டித்து கண்டனத்தில் “முதல்வர்/எடப்பாடி” என்ற வார்த்தைகள் வராமல் எடப்பாடி மீதான தன்னுடைய பாசத்தையும், தனக்கு எலும்பிட்ட எஜமானுக்கு விசுவாசமாகவும் அறிக்கை விட்ட திருமுருகன் காந்தி,
கத்திப்பாரா பாலத்திற்கு பூட்டு போட்டு போராடிய மூதேவி, யார் எங்கு எதற்காக போராடினாலும் அங்கு சென்று உண்டியல் குலுக்கும் கேவளமான இழி பிறவி கௌதமன்,
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை எதிர்த்து போராடினார்கள், அப்போதும் போட்டியை காண வந்த தமிழக பெண்களின் டி-ஷர்ட்டுகளை கலைந்து விடுவோம் என மிரட்டிய, போட்டியை காணச்சென்ற இளைஞர்களை அடித்த குழுவிற்கு தலைமை தாங்கிய களஞ்சியம், பாரதிராஜா, அமீர்
போன்ற அடிப்படை அறிவோ, அரசியல் அறிவோ, வரலாற்று அறிவோ இல்லாமல் கண்டதை உளறிக்கொட்டி உண்டியல் குலுக்கும் நபர்கள் பின்னாடி போய்டுறாங்க.. அவர்களும் மக்களை உசுப்பேத்தி இது போன்ற தமிழகத்தில் இதுநாள் வரை ஏற்படாத பாதகங்களை ஏற்படுத்திவிட்டு அவர்கள் வழக்கம்போல கண்டனம், அகர்வால், மோடி உருவ பொம்மை எரிப்பு என்ற நிலையில் அடங்கிவிடுகிறார்கள்.!!
நேற்று நடைபெற்றவைகள் எல்லாம் குஜராத் மாடல் போன்று இருக்கிறதாம். தமிழகத்தை பாஜக ஆள்கிறதாம் உண்மை தான்.. ஆனாலும்,
“தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அவனே மாந்தன் முதலேடு
அளித்தான் உலகப் பண்பாடு
ஒன்றே குலமெனும் உயர்வோடு”
என்ற வரிகளுக்கேற்ப, அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்கள் என்பவர்கள் தான், தமிழர்கள், அது தான் தமிழ்நாட்டு மாடல், இதையெல்லாம் இன்று ஒழித்து, உணர்ச்சிவசப்பட வைத்து இத்தகைய நிலைக்கு தமிழகத்தை இட்டுச்சென்றவர்கள் விரைவில் தமிழகத்தை இன்னொரு ஈழமாக மாற்ற முயல்வார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. போராட்டத்தின்போது இவர்கள் எங்கே சென்றார்கள் ? என்ற கேள்வி எழுகிறதா ? இவர்கள் அனைவரின் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் என்றுமே ஜனநாயக ரீதியில் போராடுவது தான் சிறந்தது என்பது என் கருத்து.
அதிமுக ஏன் எப்போதும் போராடுவதே இல்லை, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஏன் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று ஜனநாயக ரீதியிலே போராடுகின்றன, என்பதையெல்லாம் தயவுசெய்து ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்..!! உயிர்க்கொடை விலைமதிப்பில்லாதது..!!

உண்மையான எதிரி யார்?

உண்மையான எதிரி யார்?
=====================
மோடி& அவரின் அடிவருடிகளால் திட்டமிட்டு எடப்பாடி & கிரிஜாவால் நடத்தப்பட்டு இருக்கிறது தூத்துக்குடி பயங்கரவாத படுகொலை.
இல்லைன்னா துணை ராணுவம் கேட்பதும் அதற்கு யூனியன் உள்துறை செயலாளர் 'உதவத்தயார்'னு சொல்றதும் இவ்வளவு விரைவாக நடக்காது. இங்கிருக்கும் பக்தாளின் குதூகலிப்பும் இதை உறுதிப் படுத்துகிறது.
இந்த சூழ்நிலையில் உண்மையான குற்றவாளி யார் என கண்டு கொள்வது மிக அவசியம்.
மோடி, பாஜக தலைவர்கள், இந்த ஆட்சியை கொண்டுவந்த ஜெயலலிதா, இப்போது நடத்துவதாக எண்ணிக் கொண்டு இருக்கும் எடப்பாடி, பன்னீர்
இவர்கள் எல்லாரையும் விட
கீழ்க்காணும் மனிதர்கள் தான் என்னைப் பொறுத்தவரை முக்கிய குற்றவாளிகள்.
1. நம் பக்கத்திலேயே இருந்து கொண்டு, பொய்யான ஊழலை ஒழிய குரல் கொடுப்பவன் ...
2. மற்ற நாடுகளை மேம்போக்காக சொல்லி நம்நாடு வளரவில்லை என்று‌சொல்பவன்
3. ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது சம்பந்தமே இல்லாமல் எதிர்க்கட்சியையும்‌ சேர்த்து குறை சொல்பவன்.
4. ஜல்லிக்கட்டு, ஐபிஎல் போன்ற‌ அற்ப விஷயங்களில் நம் கவனத்தை செலுத்த மெசேஜ் போடுபவன், டிவி ஷோவை நடத்துபவன்.
5. டிவில பாக்குற நியூஸின்‌ நம்பகத்தன்மை பற்றிய கவலை இல்லாதவன்.
6. ஆளுங்கட்சியின்‌ அடக்குமுறை, விலையேற்றம், பணமதிப்பு நீக்கம் மாதிரியான விரோத திட்டங்கள் கண்டு மனம் பதறாமல் தன் வேலை உண்டு என்று போய்க் கொண்டிருப்பவன்.
7. பார்ப்பன சக்திகளை அடையாளம் காணாமல் 'இப்பலாம் எந்த பார்ப்பான் ஆதிக்கம் பன்றான்?' என்று கடந்து போகிறவர்கள்.
இவர்களை விரோதிகளாக பார்க்க வேண்டாம்... ஏன்னா நம் வீட்டிலேயே கூட இந்த மாதிரி மனிதர்கள் இருக்கலாம்...
இவர்கள் சொல்வதை நம்பாமல் இருந்தாலே போதும்.
முடிந்தால் இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயல வேண்டும்.

கேள்வி பதில் - திமுக என்ன செய்ய முடியும்

கேள்வி: நாட்டில் இவ்வளவு கொடுமைகள் நடக்கிறதே? செயல் தலைவர் என்ன செய்யப் போகிறார்?

பதில்: ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு எதிர்க்கட்சி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பலாம். குண்டுக்கட்டாக அவையை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். விசாரிக்கவே மாட்டேன் என்கிறார்கள்.

#Gobackmodi என்று உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அறவழிப் போராட்டம் நடத்தலாம். நீட்டுக்கு நம் பிள்ளைகளை ஊர் ஊராக அலைய விட்டுப் பழி வாங்குகிறார்கள்.

எதிர்க்கட்சி என்பது ஏதோ திரைப்படங்களில் வருகிற நாயகனுக்கு உரிய சாகசத் தன்மை கொண்ட பதவி என்று சிலர் நினைக்கிறார்கள். அல்லது, அப்படி ஒரு எதிர்பார்ப்பைப் பரப்புவதன் மூலம் எதிர்க்கட்சி செயல் திறனற்றது என்ற தோற்றத்தைக் கட்டமைக்கிறார்கள். இதை விடக் கொடுங்கோன்மையான எம்.ஜி.ஆர். ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் செய்ய முடியாத எதையும் தற்போதைய செயல் தலைவர் செய்ய முடியாது.

இவை அனைத்தையும் தாண்டி ஒரு எதிர்க்கட்சி செய்யக்கூடியது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி தேர்தல் மூலம் ஆளும் கட்சியை அகற்ற முனைவது தான். அதனை மிகச் சரியாகவே செய்து வருகிறார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவடைவதைத் தடுக்க புரட்சி, போர், சிஸ்டம், மையம், தேர்தல் புறக்கணிப்பு என்று முனகும் புதிய காளான்களை மிதித்து,

படி. வேலைக்குப் போ. கோபத்தைத் தேக்கி வை.

வாக்களிக்கும் வரை காத்திரு!

கேள்வி: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினால் ஆட்சியைக் கலைக்கலாமே?

பதில்: டேய் நோட்டாவுக்குப் பிறந்த வாட்சாப்பு மண்டையா, வாயில நல்லா வருது. இருந்தாலும் பொறுமையா சொல்றேன். கேட்டுக்கோ.

எல்லா எதிர்க்கட்சி உறுப்பினரும் பதவி விலகினாலும் ஆட்சி கலையாது. அவற்றுக்கு மீண்டும் ஆறு மாதத்துக்குள் இடைத் தேர்தல் நடத்த வேண்டும். ஏற்கனவே 18 சட்ட மன்ற உறுப்பினர்களைப் பதவி விலக்கி ஆறு மாசம் ஆகியும் தேர்தல் வரவில்லை. நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிப்பது அவசரம் இல்லை என்கிறது. அப்படியே இடைத் தேர்தல் வந்தாலும் ஆளுங்கட்சி தில்லாலங்கடி வேலை பார்த்து இப்போது இருக்கிற இடங்களை விடக் கூடுதல் இடம் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெறும்.

அப்புறம், எதிர்க் கட்சிகள் பொறுப்பில்லாமல் பதவி விலகினார்கள்னு அதுக்கு வேற தனியா மீம்சு போடுவீங்க.

திமுகன்னா திட்டுறதுன்னு முடிவாகிடுச்சு. கொஞ்சம் லாஜிக்கோடவாவது திட்டுங்கடா. கர்நாடகத்தில் நடந்த கூத்தை எல்லாம் பார்த்த பிறகும் இப்படி எல்லாம் கேக்காதீங்கடா. எங்களைப் படிக்க வைச்சுத் தொலைச்சிட்டாங்க.

Tuesday, May 22, 2018

பொறுமை ஒருநாள் புலியாகும்... அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்

மராட்டியம், கோவா போன்ற மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்ட நச்சு ஆலைதான் நாசகார ஸ்டெர்லைட்...
ஒடிசா, ஜார்கண்ட் போன்ற கனிம வளம் மிகுந்த பகுதிகளில் பல்வேறு பாக்சைட் தாது மலைகளை கபளீகரம் செய்ய, மத்திய அரசோடு புரிந்துணர்வு செய்து கொண்டு, அங்குள்ள ஆதி வாசி மக்களை நர வேட்டையாடுகிற வரலாறும், ஸ்டெர்லைட் ஆலையை நடத்துகிற வேதாந்தா குழுமத்திற்கு உண்டு...
மத்திய நிதி அமைச்சராகும் வரை அக்குழுமத்தின் இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்து, கூலி வாங்கியவர் நமது செட்டி நாட்டு சீமான் என்கிற இன்னொரு வரலாறும் வேதாந்தா குழுமத்திற்கு உண்டு...
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இக்குழுமத்தின் தலைவர், அனில் அகர்வாலின் சட்டைப்பையில் நமது பல அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் அடக்கம்...
விதி மீறல்களுக்கும், சுற்றுப்புற சூழலை அழித்து காவு வாங்குவதற்கும் பெயர் பெற்ற இந்த நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்டு, உச்ச நீதி மன்றத்தாலும், 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட துமான அப கீர்த்தி இந்நிறுவனத்திற்கு உண்டு...
மன்னார் வளைகுடாவிலிருந்து தடை செய்யப்பட்ட எல்லைக்குள் இயங்கி வரும் இந்நிறுவனம் விரிவாக்கப் பணிகளுக்கு அரசு அனுமதி பெறவில்லை என்பதும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியும் பெறவில்லை என்பதும் எடப்பாடி உள்ளிட்ட எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்...
தினமும் நச்சுக் காற்றை சுவாசித்துக் கொண்டு, குழந்தைகளின் நுரையீரல் கந்தகத்தால் நிரப்பப்பட்டு புற்று நோயால் அவதிப்படும், தூத்துக்குடி சுற்றுப்புற மக்கள், கடந்த நூறு நாட்களாக, கிஞ்சித்தும் வன்முறைக்கு இடம் தராமல் அறவழிப் போரில் ஈடுபட்டிருந்தார்கள்...
போராட்டத்தின் நூறாவது நாளை ஒட்டி, அரசு விதித்த, நூத்தி நாப்பத்து நாலு குற்ற விசாரணை முறை சட்டப் பிரிவை மீறி ஆட்சியர் அலுவலகம் நோக்கித் திரண்டார்கள்...
ஆட்சியர் அலுவலகம் அருகில் வரை அனுமதித்து விட்டு, முறையான முன்னறிவிப்பின்றி, போராட்டத்தின் முன்னனி கள வீரர்கள் 11 பேரை, சுட்டு கொலை செய்து, முத்து நகரின் வரலாற்றில் ஒரு ஜனநாயகப் படுகொலையை, நிகழ்த்தி இருக்கிறது அரசு...
11 வயது மாணவி வாயில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்...
அரசு மீண்டும் ஒருமுறை தான் , நாசகார ஆலையின் முதலாளி பக்கமே என்று, மக்களின் இரத்தத்தில் தீர்ப்பெழுதியிருக்கிறது...
ஆனால் வரலாற்றுச் சக்கரம் இப்படியே இருக்காது....
வரலாற்றின் சிவந்த கண்கள், அப்பாவிகளின் குருதியை வெறித்துப் பாரத்துக் கொண்டே, தன் சொந்தத் தீர்ப்பை எழுதி முடிக்கும்....
பொறுமை ஒருநாள் புலியாகும்... அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்

நம் அரசர்கள் அவர்களின் அடிமையாக இருப்பார்கள். அவர்கள் ராஜகுருக்களாக இருப்பார்கள்

தமிழகம் வெறும் நூறாண்டுகள் தான் முற்போக்கு மண், பெரியாரிய மண் என்பதெல்லாம். தமிழகம் ஆயிரம் ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் மண் என்பதையும் மறந்துவிடக்கூடாது. இந்தியாவின் ஆர்எஸ்எஸ்சின் அடித்தளம் தமிழகம் தான், வடக்கல்ல. குப்தர்களின் ஆட்சிக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இங்கு நடந்த மன்னராட்சிகள். மனு தர்மமும், வர்ணாசிரமமும் தழைத்திருந்த மண் இது. அதன் எச்சங்கள் தான் நூறாண்டு சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு பிறகும் நம்மை விடாமல் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. காந்தியை கொல்ல திட்டம் தீட்டியது அன்றைய தமிழக ஆர்எஸ்எஸ்!
நிற்க!
இன்று நம் கண்ணுக்கு தெரிந்தும், கண்ணுக்கு தெரியாமலும் பல சதிகள் நடைப்பெறுகிறது. பல வழிகளில், பல வேலைகளை ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது. அது எல்லாமே அவர்களின் தொலை நோக்கு திட்டங்கள். இன்று அவர்கள் நோட்டாவிடம் தோற்கிறார்கள் என்று நாம் ஏளனம் செய்யலாம். ஆனால், வரலாறை படியுங்கள். அவர்கள் என்றுமே நம்மை நேரடியாக ஆட்சி செய்தது கிடையாது. அவர்கள் நம் கையை கொண்டே நம் கண்ணை குத்துபவர்கள். நம் அரசர்கள் அவர்களின் அடிமையாக இருப்பார்கள். அவர்கள் ராஜகுருக்களாக இருப்பார்கள். இன்று நடப்பதும் அது தான். அவர்களுக்கு இருப்பது நூறாண்டு பகை தமிழகத்தின் மேல். காத்திருந்து அழிக்கிறார்கள். பல நூற்றாண்டுகள் காத்திருந்து பௌத்தத்தை அழித்தவர்கள் அவர்கள். நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். இப்போதும் நாம், திராவிடம், தலித்தியம், தேசியம், கம்யூனிசம் என பிரிந்து கிடந்தால் நாம் இழப்பது மிக அதிகமாக இருக்கும். கை கோர்கும் காலமிது. ஒற்றை எதிரி ஆர்எஸ்எஸ் என மனதில் கொள்வோம். எல்லா இடத்திலும், ஒன்று சேர்ந்து போராடுவோம்!

தனக்கு வந்தால தான் தலைவலியும் காய்ச்சலின கொடுமை தெரியும்

இப்ப தெரியுதா விடுதலை சிறுத்தைககளின் அடங்க மறு அத்து மீறு - திமிறி எழு- திருப்பி அடி என்பது வன்முறை சொல்லல்ல -நன் முறை சொல் என்று????
------------------------------------------------------------------------------
144 தடையுத்தரவும் அரசு போடவில்“லை- போராட்ட நாளை பல நாட்களுக்கு முனபே அறிவித்து அரசு அனுமதித்த சாலை வழியாக வன்கொடுமை சட்டத்தை பாதுக்காக்க கவர்னரிடம் மனு கொடுக்க எங்கள் தங்க மகன் திருமா தலைமையில் பல பட்டியலின தலைவர்களும் லட்சக்கணக்கானபட்டியலின மக்களும் கலலெறிந்து வாகனங்களை கொழுத்தி பல உயிர்களுக்கும்- உடமைகளுக்கும் சேதம் விளைவித்து-நாடெங்கும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி- சென்னையை கலவர காடாக்காமல் அமைதியாக-எந்த சிறு அசம்பாவிதமோ செய்யாமல் பேரணியை அமைதியாக -ஜனநாயக விதிப்படி நடத்தியதற்கு என்ன சொன்னீர்கள் திருமதி நடிகை கஸ்துாரி அவர்களே??--45 நிமிடங்கள் என் கார் நினற இடத்திலேயே நின்றது-இதனால எத்தனை பாதிப்பு மக்களுக்கு என்றீர்களே-

----
துாத்துக்குடியில் மீன் விற்க சென்ற ஒன்று மறியாதஅப்பாவி ஏழை பெண்ணும் கலவரத்தில் சுட்டுக்கொல்ல பட்டிருக்கிறார்களே-போராட்டக்காரர்கள்-பல பேர் சுட்டுக் கொல்லபட்டுீருக்கிறார்களே-பல வாகனங்கள் தீ வைக்கபட்டிருக்கிறதே- இதற்கெல்லா ம் அறிக்கை விடாமல் பொத்திக கொண்டிருக்கிறீர்களே
--
பட்டியலின மக்களின் நேர் மையான போராட்டங்களை
பற்றி மட்டு்ட் உண்மைக்கு புறம்பாக
தெனாவெட்டாக இழிவாக பொய் குற்றச்சாட்டுகள் எதுவும் சொல்லலாம்- எதுவும் எழுதலாம்-- அப்படித்தானே??? சாதிவெறி பிடித்த உலக மகாஅயோக்கிய எத்துவாளிக்கூட்டங்களே --
--
இன்று பலபேர் காரணமில்லாமல்- திட்டமிட்டு கொல்ல பட்டது போலத்தானே பல போராட்டங்களில் பட்டியலினமக்கள் காரணமில்லாமல் திட்டமிட்“டு சுட்டுகுருவிகளை போல சுட்டு
வீழ்த்தினார்கள் ஆதுிக்க சாதிவெறி அயோக்கிய நா்ய்கள் - அப்போதெல்லாம் என்ன சொன்னீர்கள் அனைவரும்????பட்டியலினமக்கள் எல்லா ம் வன்முறையாளர்கள ்கலவரக்காரர்கள் -அறிவற்றவர்கள்- நாகரீகமற்றவர்கள்-பட்டியலினத்தலைவர்கள ்பட்டியலின மக்களை துாண்டிவிட்டு கலவரம் செய்கிறார்கள்-பட்டியலின இயக்கங்களை தடைசெய்ய வேண்டும் என்றெல்லாம் அத்தனை தவறுகளையும்பட்டியலின இயக்கங்கள் மீது சுமத்தி துப்பாக்கி சூடை ஆதரித்தீர்களே--
--
தனக்கு வந்தால தான் தலைவலியும் காய்ச்சலின கொடுமை தெரியும்-- இப்போது தெரிகிறதா???????
--
- விடுதலை சிறுத்ததைகளின் தாரகை மந்திரமான
-----------------------------------------------------------------------------
அடங்க மறு அத்து மீறு - திமிறி எழு- திருப்பி அடி
------------------------------------------------------------------------------
என்பது உலகத்தில் ஆதிக்கத்தால் அதாவது சாதி- மத- மொழி- நிற இன-ஆணாதிக்க-பணமாதிக்க-அதிகாரமாதிக்கத்தால்பாதிக்கபட்ட அனைவருக்கும் பொருந்தும் பொதுவான சொல் - இது அனைவருக்கும் பொதுவானது என்று எங்கள் தங்க மகன் திருமா
தொடர்ந்து சொன்ன போது என்ன சொன்னீர்கள்??
இது வன்முறையை துாண்டும் சொல்-திருமா பட்டியலின இளைஞர்களை வன்முறை பாதைக்கு அழைத்து செல்கிறார் என இது உலக மகா தவறு என புத்தி மதி மயிரெல்லா ம் காறி துப்ப வேண்டிய கச்சடா நா-----களெல்லாம் சொன்னார்களே---
-
இப்ப தெரியுதா???அடங்க மறு அத்து மீறு - திமிறி எழு- திருப்பி அடி என்பது வன்முறை சொல்லல்ல -நன் முறை சொல் என்று????

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு

எலைடிஸ்ட் 1:
காசு வாங்கிட்டு ஒட்டுப் போட்டவங்க தானே...சாகட்டும்!
எங்கே? நான் உனக்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு பண்றேன்...இதே மக்களிக்கிட்டே காசு கொடுத்து நீ ஜெயிச்சு காட்டு பார்க்கலாம்
எலைடிஸ்ட் 2:
அரசியல் கட்சிகள் எல்லாம் மோசம். மக்களே வீதிக்கு வாங்க!
மக்களுக்கு இது தான் வேலையா?
தன்னை சுற்றி இருக்கும் எல்லா பிரச்சனைக்கும் மக்களே வீதிக்கு வரனும் என்றால் தமிழத்தில் இருக்கும் எந்த நாலு வழி சாலையும் தாங்காது.
எலைடிஸ்ட் 3:
வன்முறை எதற்கும் தீர்வாகாது.
ங்கோத்தா வீட்டில் உட்கார்ந்து ஐபில் கிரிக்கெட் பார்த்தவன் தானே நீ! அப்படியே ஓடி போயிடு...வாழவோ சாவோ நாங்க பார்த்துக்கிறோம்
எலைடிஸ்ட் 4:
இது கிருஸ்துவ மிஷனரிகளின் சதி, இஸ்லாமியர்கள் வெறியாட்டம், மாவோயிஸ்ட் ஊடுருவல்
தெரியும்! இந்த மண்ணில் நடக்கும் எல்லா சதிகளுக்கும் கைபர் போலன் கணவாய் ஊடுருவிய அந்த 3% கூட்டம் தான் காரணம் என்று எங்களுக்கு நல்லாவே தெரியும்
எலைடிஸ்ட் 5:
திராவிட கட்சிகள் தான் எல்லா தப்புக்கும் காரணம்
இது சொன்னியே இதை ஒத்துக்குறேன். உங்களை எல்லாம் மொத்தமாக உயிரோடு வைத்து கொளுத்தாமல், தமிழ்நாட்டை விட்டே விரட்டி துரத்தி அடிக்காமல், அரசியல் அதிகாரம், சமூக நீதி, ஏற்றதாழ்வற்ற சமுதாயம் என என்றுமே அகிம்சை முறையில் போராடிய திராவிட கட்சிகள் தான் எல்லா தப்புக்கும் காரணம்.
அதனால தான் நீ இன்னைக்கு அடிமைகள் மூலம் அரசியல் அதிகாரம் கையில் வந்தவுடன் எங்களை எதிர்த்து துப்பாக்கி தூக்குகிறாய்.
2000 வருடமாக நடக்கும் சண்டை இது...
நீயும் விடமாட்டே, நாங்களும் விடமாட்டோம்.
குறள்:
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
பொருள்:
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

அண்ணா நாமம் வாழ்க, புர்ச்சி தலைவன் வாழ்க, புர்ச்சி தலைவி வாழ்க, எடப்பாடி சுவாமிகள் வாழ்க வாழ்க‌

ஸ்னைப்பர் எனப்படும் தொலைவில் இருந்து மிக சரியாக போராட்ட குழுவின் முன்னணிநபர்களை மண்டையில் சுடுவதெல்லாம் இஸ்ரேல் பாணி
சந்தேகம் வராமல் இருக்க சிலரை கூட சுடுவார்கள்
பாலஸ்தீனத்தில் அது அனுதினமும் இதைத்தான் செய்கின்றது
ஒருகாலமும் இந்த பூமியில் அச்சாயல் நடக்காது என இறுமாந்திருந்தோம்
இங்கெல்லாம் வானத்தை குறிபார்த்து சுடுதல், கண்ணீர் புகை வீசுதல், நீர் அடித்து கலைத்தல், முழங்காலுக்கு கீழ் சுடுதல் என்றுதான் விஷயம் இருந்தது. பொதுவான விஷயம் அதுதான்
அந்த நம்பிக்கை எல்லாம் தகர்கின்றன. ஸ்னைப்பர் என்பது போர்களங்களில் தளபதிகளை மிக குறிபார்த்து அடிக்கும் வகை, மக்கள் போராட்டங்களில் இஸ்ரேல் தவிர யாரும் பயன்படுத்துவதில்லை
ஆனால் முதன் முதலாக இந்தியாவிலே முதன் முறையாக மண்டையில் சுட்டு பலர்த்த அதிர்ச்சியினை தேசத்திற்கே கொடுத்திருக்கின்றார்கள்
இதெல்லாம் இங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக கூட நடக்காத விஷயங்கள், மும்பை தாக்குதலில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகளை இப்படி சுடவில்லை
இதெல்லாம் மகா அச்சமூட்டும் விஷயங்கள்
காவல்துறைக்கு வேறு ஏதோ சக்திகள் பயிற்சி அளிக்காமல் இதெல்லாம் சாத்தியமில்லை, எங்கோ உதைக்கின்றது
மிக கடுமையாக மாநில மக்களை மிரட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் மிக கொடிய பயிற்சிகளை ஏதோ ஒரு சக்தியிடம் இருந்து இவர்கள் பெற்றிருப்பது புரிகின்றது
இவ்வளவிற்கும் இது தீவிரவாதம், நக்சலைட்டு எல்லாம் உள்ள பகுதி அல்ல, பின் ஏன்?
மிகபெரும் அழிவுசக்தியினை திட்டமிட்டு தமிழக காவல்துறையில் சத்தமில்லாமல் புகுத்தியிருக்கின்றார்கள், ஏதோ பெரும் கணக்கு உள்ளது
காவல்துறை என்பது இனி மாநில அரசின் அடியாளாக இப்படித்தான் குதறிக்கொண்டிருக்கும்
பாலஸ்தீன கொடூர‌ காட்சிகளை நம் மண்ணில் காணும்பொழுது அதுகொடுக்கும் மனதளர்ச்சிக்கு வார்த்தை இல்லை
இனி விரைவில் ராணுவ டேங்குகளும், கப்பல் தகர்க்கும் ஏவுகனைகளும் தமிழரை குறிவைக்கும்
அடுத்த கட்டம் அதுதான்
அண்ணா நாமம் வாழ்க, புர்ச்சி தலைவன் வாழ்க, புர்ச்சி தலைவி வாழ்க, எடப்பாடி சுவாமிகள் வாழ்க வாழ்க‌

துப்பாக்கி சூடு கலாச்சாரம் யார் யார் ஆட்சியில்

துப்பாக்கி சூடு கலாச்சாரம் வெள்ளையனுக்கு பின் இங்கு பக்தவச்சலம் காலத்தில் வந்தது, திமுகவின் வீரம் செறிந்த போராட்டத்தை ஒடுக்க பக்தவச்சலம் துணை ராணுவபடையினை வரவழைத்தார்
கிட்டதட்ட 64 பேர் செத்தார்கள், தமிழகம் கண்ட மாபெரும் துப்பாக்கி சூடு அது. ஆனால் அதுதான் இங்கு இந்தியினை விரட்டியது. சந்தேகமில்லாமல் ஆட்சியினை மாற்ற திமுகவிற்கு உந்து சக்தி ஆனது. மக்கள் மனதில் திமுக இடம்பெற்றது அதில்தான்
அதன் பின் கலைஞர் ஆட்சியில் துப்பாக்கி சூடு எல்லாம் இல்லை, பொதுவாக எப்பிரச்சினை ஆனாலும் அவர் அலசி ஆராய்வார். துப்பாக்கி சூடு அவர் ஆட்சியில் இல்லை
இந்த கொடும் துப்பாக்கி சூடு எப்பொழுது வந்ததென்றால், பக்தவத்சலம் காலத்திற்கு பின் யார் கொண்டுவந்தாரென்றால் சாட்சாத் ராமசந்திரன்
ஆம் 1979ல் விழுப்புரம் பக்கம் 12 பேர் கொல்லபட்டு பெரும் சர்ச்சை வெடித்தது, அகில இந்திய அளவில் அது எதிரொலித்து மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பியது
அலறி அடித்து எழும்பிய ராமசந்தினுக்கு தான் முதல்வர் அல்லவா? என நினைப்பு வந்து தானே விசாரிப்பதாக சொல்லி குழுவினை திருப்பி அனுப்பினார்
அதன் பின் எந்த சர்ச்சை என்றாலும் கொடூரமாக போலிசை ஏவி சுட்டுகொல்லும் முடிவிற்கு அவர் வந்தார். அதாவது ஆட்சியினை காக்க யாரையும் கொல்ல அவர் முடிவு செய்தார்
சென்னை மெரீனாவினை சுத்தம் செய்கின்றேன் (அவருக்கும் ஜெயாவிற்குமான கல்லறைக்காக இருக்கலாம்) என மீணவர்களை அவர் விரட்ட, கலவரம் வெடிக்க பல மீணவர்களை அவர் அரசு சுட்டு கொன்றது
மண்டைக்காட்டு கலவரத்திற்கும் சுடும் உத்தரவை அவர் வழங்கினார், அங்கும் பலிகள் உண்டு
மீனாட்சிபுரம் கலவரங்களிலும் இதே உத்தரவினை கொடுத்தார்
துப்பாக்கி சூடு என்பது அக்கட்சியின் ஆயுதமானது இப்படித்தான், ஜெயா இன்னும் மேலே சென்றார். அவர் ஆட்சியின் என்கவுண்டர்கள் உலகறிந்தது
இன்று அதே ராமசந்திரன் பாணியில் இந்த அரசும் வந்து சுடுகின்றது, ஆச்சரியமில்லை
கவனித்தால் புரியும் விஷயம் ஒன்றுதான்
தமிழரின் நியாயமான போராட்டங்களுக்கு திமுகவும் முண்ணணியில் இருந்து போராடியது, உயிரை கொடுத்தது. பின் ஆட்சிக்கு வந்தபின் பல விவகாரங்களில் அது தமிழர் உயிரை காத்தது
அதனால் ஆட்சியினை இழக்கவும் அது தயங்கவில்லை
ஆனால் பக்தவச்சலம் முதல் ராமசந்திரன், ஜெயா, பழனிச்சாமி வரை டெல்லி அடிமைகள். அது என்ன சொல்லுமோ அதனை செய்வார்கள். சுடுகின்றாயா ஆட்சியினை பறிக்கட்டுமா என்றால் அலறி அடித்து சுடுவார்கள்
சுட்டு கொன்றுவிட்டு சட்டம் ஒழுங்கை நிறுத்திவிட்டோம், ஆட்சி கலைக்க வேண்டாம் என சொல்வது அவர்கள் வாடிக்கை
அந்த தொடர்ச்சித்தான் தூத்துகுடி படுகொலைகள், இப்பொழுதும் கவனியுங்கள், ஏதோ எல்லாம் சொல்லி மழுப்பும் பழனிச்சாமி ஸ்டெர்லைட் பற்றி ஒரு வார்த்தையும் சொல்ல காணோம்
இம்மாதிரி சிக்கல்களுக்கு முடிவு ஒன்றே
ஒன்று தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலக்கட்டும், இல்லை மாநில மக்களின் நலம் காக்கும் நல்ல அரசு அமையட்டும்
இம்மாதிரி அடிமைகள் இருந்தால் இந்த அவலமே தொடரும்
ராமசந்திரன் தொடங்கி வைத்ததை அப்படியே நிறுத்தாமல் கொன்று குவித்து ஆட்சி நடத்துகின்றார்கள். அதை விட்டால் அவர்களுக்கு என்ன தெரியும்?
என்றெல்லாம் டெல்லி அடிமை அரசு அமைகின்றதோ அன்றெல்லாம் துப்பாக்கி சத்தம் இங்கு கேட்கும், என்றெல்லாம் மாநில நலன் ஓங்கி நிற்குமோ அப்பொழுது கேட்காது
தமிழக துப்பாக்கி சூடு வரலாறு இப்படித்தான்.
உண்மையில் இங்கு சுடதெரியாமல் சுட்டவன் எம்.ஆர் ராதா. அந்த துப்பாக்கி சூடு ஒழுங்காக நடந்திருந்தால் இவ்வளவு சீரழிவு வந்திருக்காது

மக்களின் கோபம் வெல்லட்டும், நீதி தமிழக மக்களுக்கு கிடைக்கட்டும்

தூத்துகுடியில் நடந்து கொண்டிருக்கும் கொடூர நிகழ்விற்கு கலவரம் என்றும், அதை அரசு அடக்குகின்றது அதில் சிலர் பலி என செய்தி சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
திருத்தபட வேண்டிய வரி இது, மக்கள் தங்களுக்குள் அடித்தால் மட்டுமே அது கலவரம், இது ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற மக்களின் குரலுக்கு அரசு தன் ஆயுதபடை மூலும் அரக்கதனமாக தடை செய்யும் கொடூர சம்பவம்
அதாவது இது எங்களை கொல்லும் ஆலை என மக்கள் தடுத்தால், ஆலையால் சாவுங்கள் இல்லை தடுத்தால் நாங்கள் சுட்டுகொல்வோம் என மிக பகிரங்க கொலையினை செய்திருக்கின்றது அரசு
நிச்சயம் இதில் தவறு யார் பக்கம்? பழிபாவம் யார் பக்கம் என்றால் நிச்சயம் அரசின் பக்கம்
மக்கள் முதலில் அழுது கேட்டார்கள், மன்றாடி பார்த்தார்கள், அடிக்கடி பெரும் போராட்டம் எல்லாம் நடத்தினார்கள்
கத்தினார்கள், கதறினார்கள், கெஞ்சி கேட்டார்கள் இறுதியாக வேறு வழியின்றி கூடி வந்தார்கள். வந்து அடிபட்டு செத்திருக்கின்றார்கள்
ஒருவாரமாகவே பெரும் போராட்டம் நடத்த அவர்கள் தயாரானார்கள், உளவுதுறை மூலம் அரசுக்கும் செய்தி சென்றது ஆனால் கன்னட தேர்தலுக்கு வாழ்த்து பின் கவலை என இருந்த அரசு அதை கண்டுகொள்ளவில்லை
ஆனால் மக்கள் சொல்லிகொண்டேதான் இருந்தார்கள், மும்பையில் விவசாயிகள் திரண்டது போல பக்கத்து கிராமங்கள் சுமார் 50 கிராமம் திரண்டுவந்தது
சத்தியமாக திடீரென வரவில்லை, சொல்லிவிட்டுத்தான் வந்தார்கள்
அரசு முன்பே பேசியிருக்க வேண்டும் அல்லது வந்தவர்களிடம் சில உறுதிமொழிகளையாவது சொல்லியிருக்க வேண்டும்
மாறாக அடித்துவிரட்ட உத்தரவிட்டது பெரும் சாவில் முடிந்திருக்கின்றது
இதற்கு முழு காரணம் இந்த அரசு, இது ஒன்றே காரணம். இந்த ரத்தபழியும் அதன் பாவமும் கதறலும் அவர்களையே சேரும்
ஸ்டெர்லைட் வந்த நாள் முதலே சர்ச்சை, சரி 20 வருடம் முடிந்து சனியன் கிளம்பட்டும் என்றால் மறுபடியும் அது பிரமாண்டமாக வளர ஒப்பந்தம் நீட்டித்தால் யாருக்கு கோபம் வராது
அவர்கள் இந்நாட்டு மக்கள், இந்த அரசினை தேர்ந்தெடுத்த மக்கள் , அதனிடம் இந்த நாசகார ஆலை வேண்டாம் என சொல்ல வந்திருக்கின்றார்கள்
அரசு அவர்கள் கோரிக்கைக்கு செவிமடுத்திருந்தால் இச்சோகம் நடந்திருக்காது
நிச்சயம் ஸ்டெர்லைட் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்கு கொஞ்சமும் குறைவானதல்ல, அது ஒரே நாளில் கொன்றது, ஸ்டெர்லைட் கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றது
அவ்வளவுதான் விஷயம்
போபால் ஆலை மூடபட்டது என்றால் ஸ்டெர்லைட்டும் மூடபட்டே தீரவேண்டும்
இந்த தொழிற்ச்சாலைகள் தேவை சந்தேகமில்லை ஆனால் இப்படி அபாயகரமான தொழிற்சாலைகள் அமைவதில் இனி ஏகபட்ட கட்டுபாடுகளும் பல நிபந்தனைகளும் அமையபெற்று மக்கள் நலன் காக்கபட வேண்டும்
இந்த கொடூர சம்பவம், அரச அடக்குமுறை தமிழகமெங்கும் பெரும் கிளர்ச்சியினை ஏற்படுத்திற்று, ஆங்காங்கே மக்கள் கடும் கோபத்தில் சாலைக்கு வருகின்றார்கள்
இந்த ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கூட மக்களை காப்பாற்றமுடியாத, மாறாக கொல்ல துணியும் அரசு இனி எதற்கு
குருமூர்த்தி சொன்ன அந்த வார்த்தையின் அரசு , கையாலாத அரசு உடனே பதவி விலகட்டும். இப்படி மக்கள் மாள்வதற்கு ஒரு அரசா? அதற்கொரு முதலமைச்சரா?
அரசு பதவி விலகட்டும், நாசகார ஸ்டெர்லைட் நாசமாகட்டும்
தங்கள் மண்ணில் தங்கள் உரிமைக்காக தங்கள் அரசாலே செத்த அந்த மக்களுக்கு கண்ணீருடன் கூடிய ஆழ்ந்த அஞ்சலிகள்
அவர்கள் தியாகத்திற்கு ஈடாக அந்த ஸ்டெர்லைட் மூடபடட்டும், அதன் வாசலில் இவர்களுக்கு நினைவு சின்னம் எழும்பட்டும்
கொலைகார ஸ்டெர்லைட்டும், அந்த கொலைகார கூட்ட அடியாளாக உருவாகி நிற்கும் இந்த கூலிப்படை அரசும் ஒழியட்டும்
மக்களின் கோபம் வெல்லட்டும், நீதி தமிழக மக்களுக்கு கிடைக்கட்டும்
கூலிப்படை அரசு ஒழிக....

அவர்கள் தமிழ்நாட்டை தான் குறி வைத்தார்கள்

அவர்கள் தமிழ்நாட்டை தான் குறி வைத்தார்கள்
குறிவைத்து அடிக்கும் ஆட்டம் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது.முதல்வராக இருந்த போது நூற்றுக்கணக்கான கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு மருத்துவமனையை அருமை நண்பர் அதானி தனியார் மருத்துவ கல்லூரி துவங்க தாரை வார்த்தவர் ,அரசு மருத்துவமனைகளை,சுகாதார நிலையங்களை தனியார் கீழ் விடும் முயற்சியை துவக்கியவர் ஆட்சியில் வெறியும் குறியும் தமிழ்நாட்டை நோக்கி தானே இருக்க முடியும்
அரசு பள்ளிகளை நடத்த கூடாது,கல்லூரிகளை நடத்த கூடாது,மருத்துவமனைகளை நடத்த கூடாது .இவற்றை தனியார் தான் செவ்வன நடத்த முடியும் என்று நிரூவ முயற்சிக்கும் போது தமிழ்நாடு இலவசங்கள் கொடுத்து, இலவச கல்வி,அரிசி, உணவு ,இலவச சைக்கிள்,பஸ் பாஸ் கொடுத்து நாட்டிலேயே கல்லூரி சேரும் மாணவ மாணவிகள் சதவீதத்தில் முதலிடத்தில் இருக்கிறதே ,அதனை பின்பற்ற கூடாதா என்ற கேள்வி எழுவதற்கு கிடைக்கும் பதில் இது
கட்டாய இந்தி வேண்டாம்,கட்டாய இந்தி திணிப்பு இருந்தால் நவோதயா வேண்டாம்,நியூட்ரினோ வேண்டாம்,நீட் வேண்டாம்,நச்சு ஆலைகள் வேண்டாம் என்று போராடும் அளவுக்கு முன்னேறி விட்டீர்களா என்பதற்கான பதில் இது
எனக்கா கருப்பு கொடி.கருப்பு பலூன் என்று தூத்துக்குடியின் இஸ்ரத் ஜெஹானை வேட்டையாடி குஜராத் மாடலை ,ஓரிடம் கூட இல்லாத மாநிலத்திலும் சிறிது கூட சுயமரியாதை அற்ற அடிமையாக இருப்பதை பெருமையாக எண்ணி வாழும் ஆட்சியாளர்கள் மேலேறி நின்று சுட்டு காட்டுவதே இந்த கொடூரம்.
ஆர் எஸ் எஸ் வெறுக்கும் மக்களில் முதலிடம் நமக்கு தான்.மற்ற சூழ்ச்சிகள் ஒவ்வொன்றாக மண்ணை கவ்வுவதால் வஞ்சாராக்கள் வழி நடைமுறைக்கு வருகிறது.
எப்படி எதிர்கொள்ள போகிறோம்

ஆர்.எஸ்.எஸில் இரண்டு வகையினர்

ஆர்.எஸ்.எஸில் இரண்டு வகையினர். ஒன்று hardcore, மற்றொன்று softcore.
அசிஃபாவை பாலியல் வன்முறை செய்து கொன்றவர்களுக்காக ஊர்வலம் சென்ற அயோக்கியர்கள் hardcore RSS என்றால், அந்தநேரத்திலும் "இது கண்டிக்கப்படவேண்டியதுயான். ஆனால் ஒரு இந்துப் பெண்ணுக்கு இது நடந்திருந்தால், இதை இவ்வளவு பெரிதாக விவாதித்து இருப்போமா?" என்று விசயத்தை மென்மையாக மத ரீதியில் திசைத்திருப்பிய கயவர்கள் softcore RSS.
அதுப்போலவே இன்று வெளிப்படையாக போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை வரவேற்றும், கொண்டாடியும், போராளிகளை கிண்டல் செய்தும்வரும் கொலைக்கார சைக்கோ நாய்கள் hardcore RSS என்றால், நல்லவனைப் போல கண்டித்துவிட்டு இடையில், "போராட்டத்தில் ஊடுறுவிய சில கலகக்காரர்களால்தான் போராட்டம் திசை மாறி வன்முறையில் முடிந்தது" என்று கூசாமல் சொல்வதன் மூலம் ஒட்டுமொத்துப் பழியையும் போராடிய மக்கள் மீது போட்டுவிட்டு, பார்ப்பன கைக்கூலியான எடப்பாடி அரசை காப்பாற்றும் ஆர்.ஜே.பாலாஜி போன்ற சில்லறை லுச்சாக்கள் soft RSS.

வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக ஒரு தமிழக அரசு

தமிழக அரசியல் வரலாற்றில் மிக வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக ஒரு தமிழக அரசு தன் சொந்த மக்கள் மீதே நடத்தும் இரண்டாம் துப்பாக்கிச்சூடு இது!
இதற்கு முன்பு 1982ஆம் ஆண்டு மண்டைக்காடு கலவரத்தின்போது பார்ப்பன காவிகளுக்காக அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது எம்.ஜி.ஆர் அரசு.
ஆர்.எஸ்.எஸ் நடத்தும் 'விஜயபாரதம்' பத்திரிகையின் 21.10.2016 தேதியிட்ட இதழில், "எம்.ஜி.ஆர் போல ஹிந்துத்வ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையேவெளியாகும் அளவுக்கு அ.தி.மு.கவின் பார்ப்பனப் பாசம் ஊரறிந்தது.
ஆகவே, பார்ப்பனப் பெண்ணான ஜெயலலிதா அ.தி.மு.க தலைவரானதால் அந்தக்கட்சி பார்ப்பன அடிமையாகவில்லை என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ளவேண்டும். அது ஏற்கனவே பார்ப்பன அடிமையாக இருந்ததால்தான் ஜெயலலிதா எல்லாம் அதன் தலைவராக வரமுடிந்தது.
அதன் நீட்சியாகத்தான் அவரால் அண்ணாவின் பெயரில் ஒரு திராவிடக் கட்சியை நடத்திக்கொண்டே பாபர் மசூதியை இடிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் கரசேவைக்கு ஆட்களையும் அனுப்பமுடிந்தது.
தற்போது 'பொன்மனச்செம்மல்' எம்.ஜி.ஆர் ஜி, 'இரும்புப் பெண்மணி' ஜெ.ஜெயாலலிதா ஜி ஆகிய இருவரையே மிஞ்சும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜி அவர்கள் பார்ப்பன காவிகளின் ஆகச் சிறந்த அடிவருடியாகத் திகழ்கிறார்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர்

1) புதிய தலைமுறையில் காட்டப்படுவது Self Loading Rifle அல்லது INSAS Rifle போல் தெரிகிறது. கூட்டத்தைக் கலைக்க, நிலைமையைக் கட்டுக்குள் கொணர இந்த வகைத் துப்பாக்கிகளைத் தான் பயன்படுத்துவார்களா? Tear Gas, Riot Gun, Air Gun தானே கலவரங்களில் பயன்படுத்துவார்கள்?
2) இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் என்கிறார்கள். கலவரத்தை அடக்க நிகழ்த்தப்பட்ட ஒரு random துப்பாக்கிச்சூட்டில் எப்படிக் குறிப்பாய் போராட்டத்தின் முக்கியஸ்தர்கள் இறந்தார்கள்?
3) இறந்தவர்களில் பெரும்பாலானோர் நெஞ்சில் அல்லது தலையில் குண்டடி பட்டு இறந்திருக்கிறார்கள். இறப்பை உத்தேசித்த சுடுதலில் தான் இந்தத் துல்லியம் சாத்தியம். ஒன்றிரண்டு எனில் விபத்தாய்க் குறி பிசகி விட்டது எனலாம். இது மரணத்தைக் குறி வைத்தது போல் தானே இருக்கிறது?
4) சுட்டவர்கள் யார்? வழக்கமான காவல் துறையினரா அல்லது துப்பாக்கிச்சூட்டில் தேர்ந்தவர்களா? (பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளையும், குறியின் துல்லியத்தையும் நோக்குங்கால் அவர்கள் வழக்கமான போலீஸாராகத் தோன்றவில்லை.) இரண்டாவது எனில் அவர்கள் ஏன் வரவழைக்கப்பட்டார்கள்? எனில் தேர்ந்தெடுத்த போராட்டக்காரர்களைப் போட்டுத் தள்ளுவது தான் நோக்கமா?
5) மருத்துவமனையில், மீனவர் வீடுகளில் போலீஸ் தாக்குதல் நடந்தது என்கிறார்கள். இது எதற்கு? நிச்சயம் கலவரத்தை அடக்க அல்ல. ஒன்று பழி தீர்க்க. அல்லது இனிமேல் போராட்டம் கூடாது என்ற பயத்தை ஏற்படுத்த.
6) ஊடகங்கள் வீடியோ எடுக்க அனுமதிக்கப் பட்டதும் கூட இனி போராட்டம் செய்பவர்களுக்கு எச்சரிக்கையாகப் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கில் தானா? குறிப்பாய் புதிய தலைமுறை வீடியோ ஒரு மிருக வேட்டை போல் இருக்கிறது. அரசு தன் பிரஜைகளுக்கு இதன் மூலம் பயத்தை விதைக்க முயல்கிறது.

அரசுகளும் அதன் ஆயுதம் தாங்கி அமைப்புகளும் யாருக்கானவை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தின் நூறாவது நாளை உயிர்க்காவு வாங்கி நிறைவு செய்திருக்கிறது லாபவெறி முதலாளித்துவம்.
உண்மையில், அரசுகளும் அதன் ஆயுதம் தாங்கி அமைப்புகளும் யாருக்கானவை என்பதை, பொட்டிலடித்துக் கற்பித்திருக்கிறது தூத்துக்குடி.
அரச பயங்கரவாதம்,லாக்கப் கொலைகள்,துப்பாக்கிச் சூடுகள் உள்ளிட்டவை தலித் மக்களுக்கே அதிகம் பரிச்சயமானவை.
பரமக்குடியும், தாமிரபரணியும் அழியாது நினைவில் நிற்பவை.
பொதுச் சமூகமோ, முன்னணி ஹீரோக்கள் விறைப்பான காவல் அதிகாரிகளாக நடித்து, 'நான் போலிஸ் இல்ல பொறுக்கி'.. என வசனம் பேசுவதைக் கண்டு, கைதட்டிச் செல்வதாகவே இருந்தது.
இப்போது, காவல் துறை பொதுமக்களைச் சுட்டுத் தள்ளிய பிறகு,ஆவேசமும் ஆற்றாமையுமாக நிற்கின்றது.
ஆட்சி மட்டுமே பிரச்சினை என்பது போல பார்வைகளும் முன் வைக்கப் படுகின்றன.
ஆனால், கவனிக்க வேண்டியது காவல்துறை எனும் இயந்திரம் அடிப்படையிலேயே வன்முறைக் கருவியாகவே நிறுவப் பட்டது என்பதைத் தான்.
மேலும், வெறும் காவல்துறை எதிர்ப்புணர்ச்சியாக இதைக் குறுக்கிக் கொள்வது கூட போதாமை தான்.
முதலாளித்துவமும், பார்ப்பனீயமும், ஹிந்துத்துவா அடிப்படைவாத அரசியல் சக்திகளும் கைகோர்த்து இயங்குவதைக் கற்பிக்க வேண்டும்.
குறிப்பாக, தூத்துக்குடி தாக்குதல் என்பது, ஏற்கெனவே தமிழகம் சந்தித்து வரும் பல்முனைத் தாக்குதல்களின் ஒரு பகுதி மற்றும் நீட்சியே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிச்சயமாக, நாம் ஒரு இருண்ட காலத்தில் இருக்கிறோம்.
இதை, எப்படிக் கடக்கப் போகிறோம் என்பதில் தான் தமிழகத்தின் எதிர்காலம் இருக்கிறது.

அராஜகத்தை, அத்துமீறலை, துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு காரணம் தேடி அலைவதை தொடர்ந்து கொண்டிருக்கிறது நம் ஜனநாயக அரசு

வழக்கறிஞர் சு. கலைச்செல்வன்
இராமமூர்த்தியின் பதிவு #வதந்திகளுக்கு_முற்றுப்புள்ளிவையுங்கள்..
காலையில் பத்து மணி அளவில் போராட்டக் குழுக்கள் அனைவரும் தத்தமது போராட்டக் களத்திலிருந்து மிகவும்அமைதியான முறையில் ஒருங்கிணைந்து மாதா கோவில் வளாகத்தில் கூடிய பிறகு அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டோம்.. மாதா கோவிலுக்கு செல்லும் முன்னரே நாங்கள் சென்ற புதுத்தெரு போராட்டக் குழுவை தடுக்க முற்பட்டனர்.. வாக்குவாதம் செய்து முன்னேறினோம்..
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியெங்கும் பல காவல்துறை வாகனங்களை வைத்து தடுக்க முற்பட்டனர்.. அனைத்து தடைகளையும் தகர்த்துக் கொண்டே முன்னேறி சென்றோம் இளைஞர்கள், போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் அனைவரும்.. முக்கியமாக சில திருநங்கைகள் உட்பட..
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் பாதையில் இருக்கும் பாலத்திற்கு கீழே முதன்முதலில் பெட்ரோல் குண்டுகளை வீசியது காவல்துறை.., அதையும் மீறி முன்னேறினோம்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்ணீர் புகை குண்டுகளை தொடர்ச்சியாக வீசியதும் காவல்துறையே..
அதையும் மீறி போராட்டக்காரர்கள் கலெக்டர் ஆஃபீஸ் உள்ள போயிட்டாங்க., போனது மட்டும் தான் உண்மை, உள்ள ஒரு மிகப்பெரிய படையே காத்திருந்தது.. அங்கு கொளுத்தப்பட்டதாக கூறப்படும் வேன் மக்கள் கொளுத்தியது நிச்சயமாக அல்ல.. அரசே திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்க இவ்வாறு தீ வைத்துவிட்டு, துப்பாக்கி சூடு நடத்துவதற்கான காரணமாக அதை கூறி உயிர்ப்பலிகளுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது கையாலாக அரசு..
எத்தனை பெட்ரோல் குண்டுகள், எத்தனை கண்ணீர் புகை குண்டுகள், எத்தனையெத்தனையோ துப்பாக்கிச் சூடுகள் அத்தனையும் தாண்டி மீண்டும் மீண்டும் முன்னேறி உள்ளே சென்று மாண்டு மாண்டு வெறும் உடலாய் மட்டும் திரும்பினர் நம் உறவுகள்..
அவர்களிடம் இருந்த வலி, வேதனை, கையறு நிலை, ஆதங்கம், வெறுப்பு, ஸ்டெர்லைட்டை இழுத்து மூடியே ஆகனும்கிற வெறி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் கடைசி சொட்டு இரத்தம் வரை ஊறியிருந்ததை பார்க்க முடிந்தது..
பெண்களின் பாதுகாப்பு கருதி பெண்களை மட்டும் பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.. நாங்கள் திரும்பி வரும் வழியில் சந்தித்த அடக்குமுறைகளோ உட்சபட்சம்.. இரண்டு கிலோ மீட்டரில் சேர வேண்டிய இடத்திற்கு 8கிலோமீட்டர் அளவில் சுற்றி வந்தும், மெயின் ரோட்டிற்கு வந்தபோது, யதேச்சையாக வருவது போல் வந்து பெண்கள் என்றும் பாராமல் (வயதான பெண்கள், குழந்தைகள் உட்பட) கண்மூடித்தனமாக அடித்து விரட்டிய ஏவல்துறை..
இன்னும் அவர்களின் அராஜகத்தை, அத்துமீறலை, துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு காரணம் தேடி அலைவதை தொடர்ந்து கொண்டிருக்கிறது நம் ஜனநாயக அரசு..
மாண்டு போவோம், ஆனால் மீண்டு வருவோம்.. உங்கள் அடக்குமுறையாலும் ஒடுக்குமுறையாலும் எங்கள் உயிரை மட்டும் தான் எடுக்க முடியும்.. எங்களின் சந்ததியை காக்கும் போராட்ட வெறியை சிறு துளி கூட உங்களால் சீர்குலைக்க முடியாது..
பிகு: துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு நடந்த வாகனங்கள் மீது கல்லெறிந்தது உண்மைதான்.. அப்புறம் நீ துப்பாக்கி குண்டால எங்க மார்பை துளைச்சா உனக்கு பூவா பரிசளிப்போம்..