Thursday, May 24, 2018

காங்கிரஸும் பாஜகவும் ஒன்றா?

காங்கிரஸும் பாஜகவும் ஒன்றா?
முதலில் இந்திய தேசிய அரசியல் கட்சிகளை புரிந்துகொள்ள RSS வரலாறை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.
காங்கிரஸில் ப்ராஹ்மண கோட்பாடுகள் உள்ளதா ?
நிச்சயமாக உள்ளது !
அப்படியென்றால் ஏன் ப்ராஹ்மணர்கள் காங்கிரெஸ்ஸை ஆதரிக்காமல் பாஜகவிற்கு இரவு பகலாக மூச்சு முட்ட ஆதரவளிக்கின்றனர் ?
இங்குதான் வருகிறது RSS. RSS இயக்கமாக 1930பதுகளில் மாறுகிறது பிறகு 1964ல் VHP ஆரம்பித்தவுடன் வலுப்பெறுகிறது ஆனால் ஒரு இயக்கமாக வலுப்பெற்றாலும் நேரடி அரசியல் பலம் அவர்களுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் அப்போது இருந்த பலம் பொருந்திய கட்சி காங்கிரஸ் மட்டுமே அதற்க்கு மாற்றாக வலுவில்லையென்றாலும் ஒரு சிறு மாற்று கட்சியாக கம்யூனிஸ்ட் இருந்தது. இந்த இரு கட்சிகளிலுமே ப்ராஹ்மணர்களே நிரம்பி இருந்தனர். இதை பயன்படுத்திகொண்டு இந்த இரு கட்சிகளிலும் RSS சித்ததந்தவாதிகள் ஊடுருவினர். அப்போதும் கூட RSSன் நோக்கம் தனக்கென்று ஓர் பலம் பொருந்திய நேரடி அரசியல் கட்சி வேண்டும் என்பதே. அது வரை காங்கிரஸில் இருந்துகொண்டே என்னனென்ன அவர்கள் அளவில் செய்ய முடியுமோ அதை செவ்வனே செய்துகொண்டு இருந்தனர். இதனால் தான் இந்திரா காந்தியின் emergencyயை RSS ஆதரித்தது.
பிறகு ஜன சங் என்ற கட்சி வருகிறது. RSSன் நேரடி கட்சி ! ஆனால் இந்திரா காந்தி இருக்கும் வரை இவர்களால் பெரிதாக ஆட்டம் போட முடியவில்லை. இந்திரா காந்தி மரணத்தின் போது நடந்த பஞ்சாப் கலவரத்தில் பல பஞ்சாபியர்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர்.
இது காங்கிரஸ் தொண்டர்காளால் நடத்திய படுகொலை. இந்த இனப்படுகொலையை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஏனினில் பஞ்சாப் இனபடுகொலை என்பது யாருக்கும் யாருக்கும் நடந்தது ?
பஞ்சாபியருக்கும் இஸ்லாமியருக்குமா ? இல்லை !
பஞ்சாபியருக்கும் கிருத்துவர்களுமா ? இல்லை !
பஞ்சாபியருக்கும் பௌத்தர்களுமா ? இல்லை !
பிறகு பஞ்சாபியர்கள் யாரால் இனப்படுகொலை செய்ப்பட்டனர் ?
முழுக்க முழுக்க உயர் சாதி ஹிந்துக்களால்.
பஞ்சாபியர்கள் சிறுபான்மையினர்.. பொதுவாக சிறுபான்மையினர் உயர் சாதி ஹிந்துத்தக்களால் கலவரத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டால் எந்த இயக்கம் அதில் மிக தீவிரமாக ஈடுபட்டுஇருக்கும் ?
நீங்கள் நினைத்தது சரி ! RSS.
பஞ்சாபிய எழுத்தாளர் குஷ்வாந்த் சிங் இவ்வாறு விவரிக்கிறார்.
"பஞ்சாப் இனப்படுகொலை என்பது இந்திரா காந்தியின் மரணத்தை பயன்படுத்தி கொண்டு எங்களுக்கு எதிராக RSS நடத்திய வன்முறை வெறியாட்டம்."
குஷ்வாந்த் சிங்க்ன் "RSS role in Punjab Riots" தேடி படிக்கவும்.
பிறகு 1987ல், பாஜக என்கிற தாமரை மெல்ல மெல்ல மலர தொடங்கியது.
RSS ஆட்களுக்கு ஓர் நேரடி அரசியல் பிரவேசம் கிடைச்சாச்சு.
பாபரி மசூதி இடிப்பு பாஜவிற்கு ஒரு அசுரர் பலத்தை கொடுக்கிறது.
இன்னொன்றை சொல்ல விரும்புகிறேன்.
காங்கிரஸ் உத்தம கட்சியா ? இல்லை.
ஆனால் காங்கிரஸ் ஒரு தவறு செய்தால் அதன் அரசியல் அதிகாரத்தை பிடிங்கிவிட்டால் அதனால் ஒன்றும் செய்ய முடியாது.
உதாரணத்துக்கு காங்கிரஸ் எப்போது எல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்போது மட்டுமே அதை நாம் எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வரும். இன்னும் சொல்லப்போனால் ஆட்சியில் இல்லாத போது அது செய்திகளில் கூட வருவது சிரமம். 2006-2011ன்றை எடுத்துக்கொள்வோம். அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் 34 லு MLA களை வைத்து இருந்தது. அதுபோக மத்தியில் ஆட்சியிலும் இருந்தது. இப்போது ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாத பாஜக தலைவர்கள் தமிழகத்தில் பேசுவதுபோல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசி கேட்டு இருக்கிறார்களா ? இன்னும் சொல்லப்போனால் ஒரு சில தலைவர்களை தவிர மற்றவர்களை யார் என்றே நமக்கு தெரியாது.
ஆனால் தமிழகத்தில் எந்த baseசும் இல்லாத பாஜகவிற்கு எங்க இருந்து வந்தது இந்த அடாவடித்தனம் ?
1984ல் இந்திரா காந்தி சுட்டு கொல்லப்பட்டபின் ஏற்பட்ட சீக்கிய இனப்படுகொலையை "ஒரு ஆழ மரம் வீழ்ந்தால் நிலம் அதிரதான் செய்யும்" என்று ராஜிவ் காந்தி சொன்னார். பெற்ற அம்மாவை இழந்த மகனாக அவர் அப்படி சொல்லி இருக்கலாம் ஆனால் ஒரு இனமே வன்முறை வெறியாட்டத்துக்கு உள்ளாகும் போது
அப்படி சொல்வது மிக பெரிய அயோக்கியத்தனம். ஆனால் அவர் இன்று உயிரோடு இல்லை. அந்த சீக்கிய படுகொலைக்கு அவரது மகன் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுவிட்டார். சென்ற காங்கிரஸ் பிரதமர் மன்மோஹனும் மன்னிப்பு கேட்டுவிட்டார்.
எந்த காங்கிரெஸ்க்காரக்ளும் தலைவர்களும் சீக்கிய படுகொலையை நியாயப்படுத்தி பேசி நாம் பார்க்க முடியாது. ஆனால் 2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலையை இன்றளவும் அனைத்து பாஜகவினரும் பிரதமர் மோடி உட்பட நியப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர். இதில் இன்னும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று ... காங்கிரஸ் அல்லது நாமோ மோடியை குஜராத் கலவரத்துக்கு குற்றம் சாட்டும்போது பாஜகவினரும் பக்தாலும் எதிர்வினைக்கு சீக்கிய படுகொலையை சொல்லி காமிக்க மாட்டார்கள் ஏனினில் அந்த படுகொலையை நடத்தியவர்களை ஆதரப்பவ்ரகளும் அவர்களே ! மாறாக காஷ்மீர் பண்டிட்களை மட்டுமே இழுப்பார்கள். இப்போது கூட பாஜக நினைத்தால் சீக்கிய படுகொலைக்கு காங்கிரெஸ்ஸை பழிவாங்கலாம் ஆனால் ஏன் வாங்குவது இல்லை ? குறிப்பாக கனடாவின் மினிஸ்டர் ஒரு சீக்கியர் அவர் சீக்கிய படுகொலைக்கு நியாயம் கேட்டபோது பாஜக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மோடி அவரை சந்திக்க மறுக்கிறார், கனடாவிற்கு மோடி அதிகார பூர்வமாக தன் அதிருப்தியை தெரிவிக்கிறார். இதுதான் RSS !
2014ல் பாஜக ஆட்சிக்கு வருகிறது ஆனால் மாற்று கட்சி ஆட்சியில் இருந்தாலும் எப்போதும் ஊடகத்தில் செய்தியாகவும் பல இடங்களில் அதிகாரம் செலுத்தும் ஒரே கட்சி பாஜக மட்டுமே ! ஏன் என்றால் ஆட்சியே போனாலும் ஒரு வலுப்பெறும் இயக்கமாக கலவரங்களிலும் அதிராகத்திலிலும் RSS இருந்துகொண்டே இருக்கும். இது டிசைன் வேறு கட்சிக்கும் பொருந்தாது !
நீங்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள் !
பாஜகவும் காங்கிரஸும் ஒன்று என்றால் பக்தால்கள் ஏன் காங்கிரசை தேச துரோக இயக்கமாகவும் ராகுல் சோனியாவை வாடிகன் கைக்கூலிகளாகவும் சித்தரிக்க வேண்டும் ?
ஒன்றை நாம் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும் !
காங்கிரஸ் என்பது ஒரு கட்சி மட்டுமே !
அது ஒரு சித்தாந்தமோ அல்லது ஒரு இயக்கமோ கிடையாது.
அது தவறு செய்தால் அதை அரசியல் ரீதியாக நாம் எளிதில் வீழ்த்திவிட முடியும் போன தடவை அதுதான் நடந்தது. இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸில் இருக்கும் மல்லிகா அர்ஜுன் கார்கே பாராளுமன்றத்தில் மோடி முன் "நாங்கள் திராவிடர்கள் பூர்விக குடிமக்கள், நீங்கள் ஆரியர்கள் வெளி இவர்ந்து வந்தவர்கள்" என்று முழக்கமிட்டார். இது காங்கிரஸில் மட்டுமே சாத்தியம். மல்லிகா அர்ஜுன் கார்கே மாறி ஒரு தலைவர் வந்துவிட்டால் காங்கிரஸின் சித்தாந்தம் கூட மாறிவிடும்.
ஆனால் தலித்தை குடியரசு தலைவராக அமர்த்திவிட்டோம் என்று மார்தட்டிக்கொண்டு பிறகு சுப்ரமணிய ஸ்வாமிகளை விட்டு அவரை ப்ராஹ்மணராக ஏற்றுக்கொண்டோம் என்று சொல்லுவது பாஜக.
மல்லிகா அர்ஜுன் கார்கேகல் காங்கிரஸ் தலைவர்கள் ஆனால் காங்கிரஸ் சித்தாந்தமே கூட மாறி விடும் ஆனால் குடியரசு தலைவராகவே இருந்தாலும் பாஜகவில் ராம்நாத் கோவிந்கள் ராம்நாத் கோவிந்களாகவே கூட இருக்க முடியாது.
இன்னும் 8 மாதங்களே தேர்தலுக்கு இருக்க.. இப்போதே பாஜகவே தேர்தல் மெஷின் தயாராகி வருகிறது.
கடந்த தேர்தலில் ஊழல் ஒழிப்பு வசதி பிரச்சாரம் இந்த நாலு வருடம் மோடி ஆட்சிக்கு பிறகு செய்வது கடினம்.
அதனால் நடுநிலையாளர்களும் சாதிபாசமற்ற ப்ராஹ்மணர்களும் ''பாஜகவும் காங்கிரஸும் ஒன்று'' பிரச்சாரத்தை ஆரம்பிக்க தொடங்குவார்கள் ஆனால் இந்த நல்லவர்கள் போன தேர்தலில் மோடிக்கு நேரடியாக ஆதரவளித்தவர்களாகவே இருப்பார்கள்.
இது இல்லாமல் உண்மையாகவே மாற்றம் வரவேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு அவர்களும் கூட
பாஜகவும் காங்கிரஸும் ஒன்று என்று சொல்லக்கூடும்.
ஆனால் நடைமுறை தேர்தல் அரசியலில் மக்களுக்கு பயன்படாத உங்கள் நேர்மை அயோக்கியர்களையே ஆட்சியில் அமர்த்தும்.
மீண்டும் மோடியை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று நேரடியாக சொல்வதற்கு வெக்கப்பட்டு மாற்றுவார்த்தையாக சொல்லும் வாக்கியமே "பாஜகவும் காங்கிரஸும் ஒன்னு".
அப்பறோம் என்ன.. பாஜகவும் காங்கிரஸும் ஒன்னு ஆனால் போன தேர்தலில் மோடிதான் என் கண்ணு... வாங்கித்தின்னு பன்னு !
ஏனினில் அதுதான் RSS 🚩🚩.

No comments: