Sunday, May 20, 2018

சொந்த மக்களையே திட்டமிட்டு பலி கொடுத்து யார்

சற்று சிந்தித்துப் பாருங்கள் ?
பள்ளிக்கூட பிள்ளைமுதல் , பல்லுப்போன கிழவிவரை , கைகளில் ஆயுதம் கொடுத்து அதை இணையத்தளத்தில் ஏற்றி
ரனுவத்திடம் காட்டிக்குடுத்தது யார் ?
குறிப்பிட்ட நிலப்பரப்புக்கள் வீழ்ச்சி அடைந்ததும் மக்களை சுயமாக செயல்ப்பட
வீடாது மக்களை இறுதிவரை தங்களது பாதுகாப்பரணகா முள்ளி வாய்க்கால் வரை கொண்டு சென்றது யார் ?
மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள் என்று ஒட்டு மொத்த மக்களையும் ஆயுததாரிகளாக்கி அதை இணையத்தளங்களில் ஏற்றி காட்டிக்கொடுத்து சொந்த மக்களையே திட்டமிட்டு பலி கொடுத்து யார் ?
இதற்க்கெல்லாம் காரணமானவர்கள் புலிகளும் அதன் ஆதரவாளர்களும்
இப்படியானவர்களே இன்று முள்ளி வாய்க்காலில் நீலக்கண்ணிர் வடிக்கின்றார்கள்.
இந்த முள்ளி வாய்க்கால் நினைவு தினங்களை செய்ய தகுதியானவார்கள் உறவுகளை இழந்த உறவுகள் மட்டும்தான்.
மற்றும்படி எந்த அரசியல் கட்ச்சிக்கோ
பல்கலை கழகத்திற்க்கோ எந்தவித தகுதியும் இல்லை.
உண்மையிலேயே உறவுகளை இழந்த உறவுகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.


சிங்களவன் கொல்வதற்கும் சொந்த இனம் கொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள், இனக்கலவரங்களின்போது சிங்களப் பகுதிகளில் மட்டும்தான் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பிரபாகரன் போராடிய காலத்தில் தமிழர்களின் சொந்த வீடுகளிலும் , தெருக்களிலும் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.


ஈழவிடுதலை போராட்டம் ஆரம்பித்த நாள்முதல்
இலங்கை இந்திய ஒப்பந்தம்வரை ஏற்பட்ட இழப்புக்கள் 600.

இந்த 600 பேருடைய இழப்புக்களுமே பேரிழப்பாக எண்ணி இதற்க்குமேற் இழப்புக்கள் ஜீரணிக்க முடியாது என்று இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற ஒரு பொன்னான வாய்ப்பை பலர் ஏற்றுக்கொண்டமைக்கு
பல காரணங்களில் இதுவும் ஒன்று.

அன்று பலராலும் ஏற்றுக்கொண்ட அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்லாமல்.ஏதிரியான சிங்களவனுடன் இணைந்து துரோகத்தையும் செய்தார்கள்.

ஈழ விடுதலைப்போராட்டத்தில்
இலங்கை ரானுவத்துடன் சேர்ந்தியங்கிய முதல் இயக்கம் புலிகள்.

அப்போதெல்லாம் மாற்றியக்கங்கள் புலிகளை தேசத்துரோகி என்றே பகிரங்கமாக குறிப்பிட்டார்கள்.

அண்று முடிந்திருக்க வேண்டிய பிரச்சனையை
இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டவர்களை எந்தப் பட்டியலில் இடுவது என்பதை நீங்களே முடிவெடுங்கள்



1987 October இல் IPKF கொக்குவில் பிரம்படியில் சரியாக செயற்பட்டு பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால்;
1. IPKF பிரசன்னத்துடன் அதிகாரமிக்க இணைந்த வடகிழக்கு மாகாண சபையினை பெற்றிருப்போம் .
2.முள்ளிவாய்கால், நவாலி, செம்மணி பேரவலங்கள் மற்றும் 1995 உட்பட பல அவலமான
மக்கள் இடப்பெயர்வுகள் தடுக்கப்பட்டிருக்கும்.
3.இந்தியாவில் தமிழ் நாடு போன்று வடகிழக்கு மாகாணமும் அபிவிருத்தியடைந்திருக்கும்.
4.அமிர்தலிங்கம், நீலன் , உமாமகேஸ்வரன் போன்ற தலைவர்களை இழந்திருக்க மாட்டோம் .



No comments: