Tuesday, May 22, 2018

அவர்கள் தமிழ்நாட்டை தான் குறி வைத்தார்கள்

அவர்கள் தமிழ்நாட்டை தான் குறி வைத்தார்கள்
குறிவைத்து அடிக்கும் ஆட்டம் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது.முதல்வராக இருந்த போது நூற்றுக்கணக்கான கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு மருத்துவமனையை அருமை நண்பர் அதானி தனியார் மருத்துவ கல்லூரி துவங்க தாரை வார்த்தவர் ,அரசு மருத்துவமனைகளை,சுகாதார நிலையங்களை தனியார் கீழ் விடும் முயற்சியை துவக்கியவர் ஆட்சியில் வெறியும் குறியும் தமிழ்நாட்டை நோக்கி தானே இருக்க முடியும்
அரசு பள்ளிகளை நடத்த கூடாது,கல்லூரிகளை நடத்த கூடாது,மருத்துவமனைகளை நடத்த கூடாது .இவற்றை தனியார் தான் செவ்வன நடத்த முடியும் என்று நிரூவ முயற்சிக்கும் போது தமிழ்நாடு இலவசங்கள் கொடுத்து, இலவச கல்வி,அரிசி, உணவு ,இலவச சைக்கிள்,பஸ் பாஸ் கொடுத்து நாட்டிலேயே கல்லூரி சேரும் மாணவ மாணவிகள் சதவீதத்தில் முதலிடத்தில் இருக்கிறதே ,அதனை பின்பற்ற கூடாதா என்ற கேள்வி எழுவதற்கு கிடைக்கும் பதில் இது
கட்டாய இந்தி வேண்டாம்,கட்டாய இந்தி திணிப்பு இருந்தால் நவோதயா வேண்டாம்,நியூட்ரினோ வேண்டாம்,நீட் வேண்டாம்,நச்சு ஆலைகள் வேண்டாம் என்று போராடும் அளவுக்கு முன்னேறி விட்டீர்களா என்பதற்கான பதில் இது
எனக்கா கருப்பு கொடி.கருப்பு பலூன் என்று தூத்துக்குடியின் இஸ்ரத் ஜெஹானை வேட்டையாடி குஜராத் மாடலை ,ஓரிடம் கூட இல்லாத மாநிலத்திலும் சிறிது கூட சுயமரியாதை அற்ற அடிமையாக இருப்பதை பெருமையாக எண்ணி வாழும் ஆட்சியாளர்கள் மேலேறி நின்று சுட்டு காட்டுவதே இந்த கொடூரம்.
ஆர் எஸ் எஸ் வெறுக்கும் மக்களில் முதலிடம் நமக்கு தான்.மற்ற சூழ்ச்சிகள் ஒவ்வொன்றாக மண்ணை கவ்வுவதால் வஞ்சாராக்கள் வழி நடைமுறைக்கு வருகிறது.
எப்படி எதிர்கொள்ள போகிறோம்

No comments: