Sunday, May 20, 2018

தவறான தலமைகளின் வளிநடத்தலே இன்றைய இன்நிலமைக்கு காரணமே தவிர சாதாரண போராளிகள் அல்ல.

ஆயுதத்தால் மட்டுமே சகலதையு ஆளுமை செய்தவர்கள் புலிகள்.
சகோதர இயக்கங்களை தடை செய்து தங்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆயுதத்தால் பதில் சொன்னவர்கள் புலிகள்.
ஜனனாயக வளிக்குவந்தால் தங்களுடைய சர்வதிகாரநிமித்தம் மக்களால் ஓரங்கட்டப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தம்முதல் அதற்க்கு பிற்ப்பட்ட காலப்பகுதியில் கிடைத்த சகல சமாதான சந்தர்ப்பங்களையும் தட்டிக்களித்தவர்கள் புலிகள்.
அரக்கன் என்று கருதிய சிங்கள ரானுவத்துக்கு எதிராக பலதடவைகள் ஆர்ப்பாட்டம் செய்த எமது மக்கள் புலிகளை எதிர்த்து சத்தமாக பேசமுடியாது சுவருக்கும் காதிருக்கென்று கூறி தமது இரும்புக்கரத்தால் அடக்கி வைத்திருந்தவர்கள் புலிகள்.
இவ்வாறு இருந்த புலிகள் என்று ஆயுதம் இல்லாமல் நிற்க்கிறார்களோ அன்று மக்களிடம் இருந்து விரட்டப்படுவார்கள் என்று பலர் அண்று கூறியது.
இன்று நிறைவேறியது.
ஏற்க்கனவே முகாமில் இருந்த மக்களால் புலிகள் தாக்கப்பட்டதும் ரானுவம் வந்து தலையிட்டு புலிகளை வேறு இடங்களுக்கு மாற்றியமைத்ததுமான வேடிக்கையான சம்பவங்கள் அனேகர் அறிந்ததே.
அதன்பிறகு முன்னாள் போராளிகள் என்ற காரணத்தால் சமூகத்தில் இருந்து ஒரங்கட்டப்பட்ட சம்பவங்களும் நிறையவே உண்டு.
இன்று அதையும் தாண்டி உச்சக்கட்டமாக
புலிகள் இறுதியாக களமாடி தங்கள் தலைவரை இழந்த இடத்திலேயே முன்னாள்
புலிகளை முதுகில் கை வைத்து வெளியேற்றியமையானது பெரும் அதிர்ச்சியே.
தவறான தலமைகளின் வளிநடத்தலே இன்றைய இன்நிலமைக்கு காரணமே தவிர சாதாரண போராளிகள் அல்ல.
எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்.
மண்மீது பற்றுக்கொண்டு களமாடிய சாதாரண போராளிகளை நாம் ஓரம் கட்டுவது முறையல்ல.



No comments: