Friday, May 25, 2018

அனில் அகர்வால் எப்படியாப்பட்டவர்

அனில் அகர்வால் எப்படியாப்பட்டவர் என்று எதாவது தெரிந்து கொள்ள அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்களைப் பார்த்தேன்.
கேபிள் கம்பிகள் ஸ்கிராப் எடுத்து விற்கும் செய்யும் தொழிலை செய்த குடும்ப பிஸினஸை செய்ய ஆரம்பித்தவர் அதில் லாபம் இல்லை என்று அலுமினியம், காப்பர், ஸின்க், லெட் வெட்டி எடுத்து உருக்கி தயார் செய்யும் தொழிலுக்கு வந்திருக்கிறார். சுரங்க தொழிலுக்கும் வந்த முதல் தனியார் முதலாளியும் இவரே.
“இந்தியாவில் நிறைய கனிம வளம் இருக்கிறது. அதையெல்லாம் எடுத்து உபயோகிக்க வேண்டியதுதான். இந்தியா இதில் அசட்டையாக இருக்கிறது. வெளியே இருந்து இறக்குமதி செய்கிறது. அரசாங்கம் இதற்குரிய சுரங்க பாலிசியை இன்னும் வசதியாக செய்து தர வேண்டும். சுரங்க பிஸினஸ் மேலும் தனியார்மயம் ஆகவேண்டும். இன்னும் பத்து பதினைந்து தனியார் கம்பெனிகள் வர வேண்டும்” என்று கேஸுவலாக இந்திய நிலங்களில் மக்களே இல்லாமால் காலியாக இருப்பதாக கற்பனை செய்து பேசுகிறார்.
டிப்பிகல் ஈவு இரக்கமில்லாத முதலாளிதான் அவர்.
இவை அனைத்துக்கும் காரணம் சுரங்க தொழிலில் அரசு தாராளமய கொள்கையை பின்பற்றி தனியாருக்கு திறந்துவிட்டதுதான் என்று தெரிகிறது.
இந்த கொள்கையை அரசு மாற்றாமல் இதை தடுக்கவே முடியாது.
மறுபடியும் சுரங்கத்தில் வெட்டி எடுப்பது முழுக்க முழுக்க அரசு கையிலேயே இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் தொழில்வளர்ச்சி என்ற நல்ல எண்ணத்துக்கு காங்கிரஸ் இதை செய்திருந்தாலும் இப்போது தனியார்கள் மக்களின் உணர்வை மதிக்காமல் அவர்கள் உடல்நலம், நிலநலம், சுற்றுசூழல் கண்டுகொள்ளாமல் இருக்கும் போது மிக ஆபத்தான தளர்வு இது என்று தெரிகிறது.
சுரங்கம் கனிமவள தொழிலில் இந்த தாராளமயத்தை நிறுத்தியே ஆகவேண்டும்.
இல்லாவிட்டால் வேதாந்தா போல் பத்து கம்பெனிகள் இந்தியாவை ஆட்சி செய்யும். ஏராளமான பணத்தோடு அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்.
தனுஷ்கோடி ஆதித்தனை எதிர்த்து ராமராஜன் எப்படி ஜெயித்தார். யார் ராமராஜனை ஜெயிக்க வைத்தார்கள். அது போல தமிழகத்தில் யாரை முதல்வராக்கும் என்று அந்த பத்து கனிமவளம் சார்ந்த கம்பனிகள்தான் முடிவெடுத்து காய் நகர்த்தி வெற்றி பெறும் சூழல் வரும்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இந்த சுரங்க கொள்கை பற்றி பா.ஜ.க. காங்கிரஸ். கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கவனம் கொள்ளுமாறு இப்போதே அடையாளப் போராட்டம் மூலம் வலியுறுத்த ஆரம்பிக்க வேண்டும்.
இந்த பண வெறி பிடித்த முதலாளிகளிடமிருந்து இனிமேல் தப்ப முடியுமா என்று யோசித்தாலே அயர்ச்சியாக இருக்கிறது.
சிம்பிளா இப்படி நினைச்சி வெச்சிக்கோங்க.
”அரசாங்கம் தவிர வேற யாரும் கனிமம் எடுத்து உருக்கக் கூடாது. அப்படி ஒரு கொள்கையை கொண்டு வர்ற கட்சிக்கு என் ஒட்டு” இப்படி ஒரு பேச்சை மெல்ல பேச ஆரம்பியுங்கள்.
இது சம்பந்தமாக கூகிள் போட்டு படித்து அறிவை வளர்த்து சிறு சிறு அளவில் பிரச்சாரம் செய்யுங்கள்.
பஸ்ஸில் உங்கள் பக்கத்து சீட்டுக்காரருக்கும் மெல்லிய குரலில் சொன்னால் அதுவும் ஒருவகை பிரச்சாரம்தான்.
சினிமாவில் இந்த டாப்பிக்கை சேர்த்து பேசுங்கள். படைப்புகளில், சிறுகதை,நாவல்,கவிதைகளில் பேசுங்கள். எழுதுங்கள்.
ஆசியராக இருந்தால் உங்கள் வேலைக்கு பிரச்சனை வராமல் நைசாக மாணவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
விழிப்புணர்வு உண்டு பண்ணுங்கள்.
நாமளே நாம முழிச்சிகிட்டாத்தான் உண்டு...

No comments: