Tuesday, March 26, 2019

#திராவிடம் அறிவோம் (84)

அரசு ஊழியர்கள் ஏன் திமுக விற்கு வாக்களிக்க வேண்டும் ?

1972-ஆம் ஆண்டுக்கு முன்னர், அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் நடத்தை பற்றிய இரகசியக் குறிப்பேடு முறை இருந்து வந்தது. இதன் மூலம் தனக்கு வேண்டாதவர்களைப் பற்றி கண்டதையும் எழுதி பலரது பதவி உயர்வைத் தடுக்க இக் குறிப்பேட்டு முறை பயன்பட்டது. (அந்நாளில் அரசுப் பணிகளில் பெரும்பான்மையாக இருந்த பார்ப்பனர்கள் இதைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் பதவி உயர்விற்கு வருவதைத் தடுத்தனர்). இந்த இரகசியக் குறிப்பேட்டு முறையை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்தது. அக்கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் கலைஞர் இரகசியக் குறிப்பேட்டு முறையை நீக்கி 1972 ஏப்ரல் முதல் வாரத்தில் ஆணை பிறப்பித்தார்.


அரசு அலுவலர்கள் பணிக் காலத்தில் இறந்துவிட்டால், அவர்கள் குடும்பத்திற்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ. 10,000 வழங்க ஆணையிட்டவர் முதல்வர் கலைஞர்.

மேலும், அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறந்தால், அவர்கள் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் திட்டத்தை 1972-ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் கலைஞர் தொடங்கி வைத்தார்.


இவையெல்லாம், அரசு அலுவலர்கள் நலன் கருதி, இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் முதன்முதலாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும்.

#திராவிடம் அறிவோம் (83)

1966-இல் கல்லூரியில் புதுமுக வகுப்பு வரையில் மட்டுமே தமிழ் பயிற்றுமொழியாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்புதான் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு ஆகியவற்றிலும் தமிழ் பயிற்றுமொழியாக்கப்பட்டது.


பொறியியல் பட்டப் படிப்பிலும் தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு வந்தது தி. மு. க. ஆட்சிதான்.


1996-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக ஓர் அமைச்சகத்தை உருவாக்கியது தி. மு. க. அரசு.


2006-ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிச் சட்டம் இயற்றியதும் தி. மு. க. அரசுதான்.

திமுகவும் தமிழும்...

திராவிடம் அறிவோம் (82)

ஆங்கிலேயர்கள் வெளியேற வேண்டும் என்பதில் பெரியார் இயக்கத்திற்கு இரண்டு கருத்துகள் ஒருபோதும் இருந்ததில்லை.

“அவர்களின் இடத்தை நிரப்பப் போவது யார்?” என்பதுதான் அவர்களது முதன்மையான அக்கறையாக இருந்தது.

திராவிடம் அறிவோம் (81)

திராவிடம், திராவிடர், திராவிட நாகரிகம் என்பன தமிழர்களால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட மொழி, பண்பாடு, சமூக, அரசியல் குறிப்புச் சொற்களே. அவை இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலகட்டத்தில் முகிழ்த்த தமிழ்தேசிய அரசியலுக்கான குறிப்புச் சொல்லாக அமைந்தன.

அத்தமிழ்த் தேசிய அரசியலுமே ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகாலம் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களின் அளவு ரீதியான வளர்ச்சி, பண்பு ரீதியான பாய்ச்சலாக மாறியதன் வெளிப்பாடே என்பதும், தமிழர்களின் சுய அடையாளத்தையோ, தேசிய உணர்வையோ நசுக்குவதற்காக நீதிக்கட்சியில் இருந்த பிற மொழியினரால் உருவாக்கப்பட்டவையல்ல என்பதும் தெளிவு.