Thursday, May 24, 2018

பாஜக அரசு என்பது இப்பொழுது குஜராத் வியாபாரிகளுக்காக உழைக்கும் அரசாக மாறிவிட்டது

"அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னொரு நாட்டை பார்த்து பாவிகளா நீங்கள் எல்லாம் கொலையாளிகள்.." என சொன்னால் வாய்விட்டு சிரிக்க மாட்டோமா?
அப்படித்தான் இப்பொழுது பொன்னார் என்பவரும் திமுக, காங்கிரஸ் எல்லாம் கொலைகார கட்சி என சிரிக்காமல் சொல்லியிருக்கின்றார்
இந்தியாவிலே ஒரு கட்சி பல வன்முறைகளை நிகழ்த்தி பெரும் கொலைகளை செய்திருக்கின்றது என்றால் சந்தேகமே இல்லாமல் அது பாஜக எனும் ஒரு கட்சிதான்
காந்தி கொலை தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு, மும்பை குஜராத் கலவரம், மாட்டுகறி சர்ச்சையில் கொலை , பலாத்கார கொலை என அவர்கள் கட்சி சிக்காத கொலை இல்லை
தமிழகத்தில் கூட கன்னியாகுமரி மண்டைக்காடு கலவரம் முதல் கோவை சம்பவம் வரை பல இடங்களில் இவர்கள் கரங்கள் உண்டு
பொதுவாக மதகலரங்களில் எங்கெல்லாம் சாவு நடக்குமோ அங்கெல்லாம் பிஜ்பி இருக்கும்
அப்படிபட்ட கட்சியில் இருந்து கொண்டு பொன்னார் திமுக,காங்கிரஸ் எல்லாம் கொலைகார கட்சி என்கின்றார்
ஆக சிரித்து தொலைப்போம், போலிஸ் தேடும் எஸ்.வீ சேகர் அருகில் இருந்தாலும் "அவரை பிடித்து கொடுப்பது என் வேலை அல்ல" என கொஞ்சமும் சிரிக்காமல் சொன்ன பொன்னாருக்கு இதெல்லாம் சாதாரணம்
இதற்கு நீண்ட நேரம் சிரித்து முடித்தால் தமிழிசை அடுத்த சிரிப்பு காட்சியினை தொடங்கிவிட்டார், சில நாட்களாக சும்மா இருந்த அம்மணி இப்பொழுது தன் கலகல வாயினை திறந்து "ஸ்டெர்லைட்டுக்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை" என்கின்றது
என்ன நடந்தது?
காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுசுழல் சட்டங்கள் இறுக்கபட்டன, இதனால் ஸ்டெர்லைட் அதன் விரிவாக்கபணி மற்றும் அதன் ஒப்பந்த புதிப்பிப்பு போன்ற விஷயங்களில் சிக்கியது,
நிச்சயம் அது சிக்கி இருந்தது, அத்தோடு மூட்டை கட்டும் நிலைக்குத்தான் அது வந்திருந்தது
பொதுமக்கள் கருத்து கூட்டம் நடத்தாமல் இனி ஆலை விரிவாக்கம் செய்ய முடியாது என்ற இறுக்கமான சட்டத்தை காங்கிரஸ் விதித்திருந்தது
ஆனால் மோடி வந்து இனி தொழிற்சாலைக்கே முன்னுரிமை, மக்கள் கருத்து, சுற்றுசூழல் எல்லாம் தேவை இல்லை என விதிகளை தளர்த்தினார்
இதில்தான் மறுபடியும் ஸ்டெர்லைட் மீண்டும் நங்கூரமிட்டு விரிவாக்க பணிகளை தொடர்ந்தது, ஆக காரணம் மோடி அரசே
இன்னும் ஏராளமான சட்ட தளர்வுகளை மோடி அரசு தொழிலதிபருக்காக செய்தது , ஸ்டெர்லைட் அதை பயன்படுத்தியது
ஏன் தளர்த்தியது பாஜக?
சில தரவுகள் படி 2013 2014ல் வெளிநாட்டில் இருந்து நிதிபெற்ற கட்சிகளில் பாஜக முதலிடத்தில் இருக்கின்றது,இந்த ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவணம் பல கோடிகளை பகிரங்கமாக கொடுத்திருக்கின்றது
மறைவாய் கொடுத்தது எவ்வளவோ?
எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் ஸ்டெர்லைட்டினை மீண்டும் அமர்த்தியதும் அதனை விரிவாக்க முழு ஒத்துழைப்பு கொடுத்ததும் மோடி அரசே
இதனால்தான் பாஜக தூத்துகுடி கொடூரங்களை கண்டிக்க தயங்குகின்றது, துப்பாக்கி சூட்டை நியாயபடுத்துகின்றது
மோடி இன்னும் துப்பாக்கி சூட்டில் செத்த மக்களுக்கு இரங்கல் கூட சொல்லாமல் கோலியுடன் விளையாடும் மர்மம் இதுதான்
மோடி அம்பானிக்கும், அதானிக்கும் ஆட்சி செய்கின்றார் எனும் வரியில் இனி அனில் அகர்வாலுக்கும் சேர்த்து ஆட்சி செய்கின்றார் என திருத்திகொண்டது தேசம்
பாஜக அரசு என்பது இப்பொழுது குஜராத் வியாபாரிகளுக்காக உழைக்கும் அரசாக மாறிவிட்டது
குஜராத் வியாபாரிகளுக்காக தேசத்தை திறந்துகொடுத்து மக்களை கொல்வேன், உலகெல்லாம் சென்று தரகு வேலைபார்ப்பேன் என சொல்லிகொள்ளும் நபர் எப்படி நல்ல பிரதமராக இருக்க முடியும்?
சரி அவ்வளவு உத்தமர்கள் என்றால் காங்கிரஸ் ஆட்சியில் வந்த ஸ்டெர்லைட் பாஜக ஆட்சியில் தடை செய்யபடும் என சொன்னால் என்ன?
செத்தாலும் சொல்லமாட்டார்கள்
இதற்கு மேலும் மாரிதாஸ் அதை சொன்னார், மயி..டி இதனை சொன்னார் என எவனாவது வந்தால் பிய்த்துவிடுவேன் ஜாக்கிரதை
13 பேர் செத்தும் வாய்திறக்கா பிரதமர் மோடியினை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள என்ன மீதமிருக்கின்றது?

No comments: