Sunday, May 20, 2018

புலிகளுக்கு எப்பொழுதுமே ஒரு தந்திரம் உண்டு

புலிகளுக்கு எப்பொழுதுமே ஒரு தந்திரம் உண்டு, சிங்களரை தாக்கிவிட்டு ஊருக்குள் ஓளிவது. புலிகளை தேடுகின்றோம் என வரும் ராணுவம் ஊரையே கொளுத்தும்
இதனால் பலர் பாதிக்கபட உடனே ராணுவத்தை எதிர்க்க எங்களோடு கிளம்புங்கள் என ஆள்சேர்ப்பர் புலிகள்
அவர்களின் எக்கால தந்திரமும் இதுவேதான்
இப்படித்தான் 1983ல் சிங்கள வீரர்களை கொன்று பெரும் கலவரத்தை ஏற்படுத்தி ஆள்பிடித்து இயக்கம் வளர்த்தனர்
இதற்கு அவர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா?
"அம்மை நோய்க்கு மருந்து செலுத்தும்பொழுது முதலில் காய்ச்சல் வரும், உடம்பு வலிக்கும் பின் சுகமாகும்
அப்படி மக்கள் இதனை பொறுக்க வேண்டும்"
எது? இவர்கள் சிங்களனை சுட்டுவிட்டு ஓடிவருவார்களாம் , மக்கள் அடிவாங்கி இவர்கள் பின்னால் வரவேண்டுமாம்
ஆதரவில்லா அபலைகள் வேறுவழியின்றி வந்தன, இதில் வெற்றிகண்ட புலிகள் தமிழகத்திலும் இதே பாணியினை தொடங்க நினைத்தன‌
அதற்கு ராஜிவ் கொலையினை பயன்படுத்த திட்டமிட்டனர்
ராஜிவினை கொல்லும் திட்டம் புலிகளுக்கு வந்தவுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் டெல்லி. ஆதிரை எனும் மனிதவெடிகுண்டு அங்குதான் அனுப்பபட்டாள்
ஆனால் இந்திராபடுகொலையினை தொடர்ந்து சீக்கியர் தாக்கபட்டது போல, தமிழரும் தாக்கபடுவர் அது கலவரமாகும் என திட்டமிட்டனர்
( ராஜிவ் செத்தவுடன் சு,சாமி எனும் சர்வதேச சக்திகளின் கைப்ப்பாவை தன்னையும் மீறி ராஜிவினை கொன்றது புலிகள் என கத்தியது இதனாலே
நிச்சயம் ராஜிவ் கொலை இங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை பல சக்திகளுக்கு இருந்தன, புலி அதில் ஒரு அடியாள், சு.சாமி இன்னொரு கையாள்..)
ஆனால் தமிழகத்திலே ராஜிவினை கொல்ல முடிவு செய்தனர் புலிகள் , அப்பொழுதுதான் தமிழகம் ஆர்பரித்து புலிகள் பின்னால் செல்லுமாம்
காரணம் இந்தியா முழுக்க தமிழரை அடிபபர்கள், தமிழகத்தார் இந்தியாவினை வெறுப்பார்கள. வைகோ பழநெடுமாறன் எல்லாம் கத்த தமிழ் இளைஞர்கள் ஓடி போய் பிரபாகரனே தஞ்சம் என நிற்பார்கள்
தமிழகத்தை சுடுகாடாக்கி இளைஞர்களை அள்ளிகொண்டு பலிகொடுக்கும் பெரும் திட்டம் புலிகளுக்கு இருந்தது, அதை எதிர்பார்த்தார்கள்
ஆனால் தமிழகம் தேசிய உணர்வோடு நின்றது. வைகோ இருந்த திமுகவினைத்தான் அடித்தார்களே தவிர மற்ற மக்கள் மேல் ஒரு கீறலில்லை
இந்திய மக்களும் சு.சாமி சொன்னதை நம்பி புலிகள் தமிழர்கள், புலிகளை வளர்த்தது தமிழகத்தார் என கலவரங்களில் இறங்கவில்லை
இந்த தேசம் அமைதி காத்தது, ஒரு கலவரம் வரவில்லை
நாடு தலைவனை இழந்தோம் என அழுததே தவிர தமிழன், வடக்கத்தவன் என்றெல்லாம் பார்க்கவே இல்லை
அன்றே மனதார செத்தான் பிரபாகரன்
ஆனால் கடைசியில் எப்படியாவது கட்டுகதைகளை அவிழ்த்துவிட்டு தமிழக இளைஞர்களை கொண்டு செல்லலாம் என 2006களில் திட்டமிருந்தது
தமிழக இளைஞர்கள் ஈழபோரில் பங்கேற்க வேண்டும் என பகிரங்கமாக பேசியவர் நெடுமாறன் எனும் துரோகி
ஆனால் இந்தியா அந்த ஆபத்துக்களை கடந்தது , தமிழகம் விடுபட்டது
இந்த நாள் தமிழக தமிழர்கள் இந்தியர்களாக நின்ற நாள். இந்தியா புலிகளின் பெரும் கனவில் மண் அள்ளி போட்ட நாள்
அந்த ஆன்ம வலியிலும் அமைதிகாத்து நின்றது இத்தேசம்...
அவ்வகையில் இத்தேசத்தை எண்ணி பெருமை அடைகின்றோம்

No comments: