Monday, October 09, 2017

பேய்படங்கள்

Annabelle என்றொரு பேய்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நான் இன்னும் இந்த படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு பேய்படங்கள் மீது ஒருவித ஆழ்ந்த அவநம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
அவநம்பிக்கை என்று இங்கே நான் literal sense சில் சொல்லவில்லை. பேய்படங்கள் அவற்றுக்கு உண்டான பவிசை இழந்துவிட்டன என்று சொல்ல வருகிறேன்.
அந்த காலத்தில் பேய் சினிமா என்றாலே அது ஒருவித கிளுகிளுப்பைத் தரும். காரணம் அவ்வளவு அட்டகாசமான கவர்ச்சி அதில் இருக்கும். ஈவில் டெட் படத்தில் கூட எந்த எந்த டைம்மில் எந்த கிளுகிளு சீன் வரும் என்று என்னால் இப்பவும் சொல்ல முடியும். பேய், ஆவிகள் என்று ஹாலிவுட் படம் வந்தாலே ஒரு மின்சாரம் பாயும் உடலில்.
இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஃபீலிங்கை Late 80 s and Early 90 s சில் பேய் சினிமா பார்த்த ஆட்களால் ஆத்மார்த்தமாக உணர முடியும் என்று நம்புகிறேன்.
நமது ஆட்கள் இன்னும் ரசனையானவர்கள்..
பேயைப் பார்த்தால் பயம் வருகிறதோ இல்லையோ...அவசியம் மூடு வரும். அந்த அளவுக்கு பேயை எக்ஸ்போஸ் செய்வார்கள்.தமிழ் படத்தில் வரும் பேய்கள் பெரும்பாலும் Seducing ஜானரில் வரும் பேய்கள் தான். எப்படியும் அந்த பாழாப்போன பேயை முன் ஜென்மத்தில் / அல்லது 30 வருடம் முன்பு வில்லன் கெடுத்து கொன்றிருப்பான். அவனை பழிவாங்க வரும் பேய்கள் எல்லாம் இளம் ஃபிகர்களாக வந்து கிழடு தட்டிய அந்த ஆட்களை Seduce செய்யும். அப்படியே கில்மா சீன் போகும் நேரத்தில் பேய் தனது மேக்கப் கலைத்து கோர முகம் காட்டும்.....அப்புறம் வில்லன் சாவார் ... இது ஒரு டெம்ப்ளேட்.. அந்த வில்லன் சாவு சீன் வரும் முன்புவரை பக்கா Softcore கில்மாவுக்கு உத்திரவாதம்.
வெள்ளையுடை பேய் , சன்சில்க் ஷாம்பு போட்ட பேய் என்று ஜில்ல்ல்ல்ல் பேய்கள் தமிழ் சினிமாவில் அலாதி.
இப்படி பொதுப்படையாக பேசுவதனால் பேய் படத்தின் இன்னொரு தாக்கத்தை சொல்லப்படாமல் போய்விடக்கூடாது. அந்த காலத்தில் இத்தகைய படங்கள் தான் சிறுவர்கள் - இளைஞர்கள் இருவரையும் இணைக்கும் ஒரு பாலமாக இருந்தன என்றால் அது மிகை இல்லை.
சிறுவனாக இருப்பதனால் வெளிப்படையாக சைட் அடிக்க முடியாது. இளைஞர்கள் என்னதான் ஆசைப் பட்டாலும் வீட்டில் பொதுவில் உக்காந்து அழகிய பேய்களை ரசிக்க இயலாது..
இப்படி ஒரு இறுக்கமான சூழலை உடைக்க வந்த ஒரு பேராயுதம் தான் கில்மா பேய்கள்.
"சித்தப்பா/மாமா இன்னைக்கு கேபிள் ல பேய் படம் போடுறோம்னு எழுத்து ஓடுச்சி ..பாப்போமா...எனக்கு பயமா இருக்கும்..நைட்டு துணைக்கு கூட பாக்குறீங்களா " என்று பீடிகை ஆரம்பம் ஆகும்.
"டேய் ..பேய் எல்லாம் இல்லடா...அது பொய்.. சரி..நான் வேணும்னா துணைக்கு இருக்கேன் " என்று சொல்லி அவர்களும் சைக்கிள் கேப்பில் என்ஜாய் செய்துவிடுவார்கள். இப்படி இரு தலைமுறைக்கு இடையில் ஒரு WIn-Win ரெலேஷன்ஷிப் ஏற்படுத்தியது கில்மா பேய்கள் என்றால் அது மிகையில்லை.
வா அருகில் வா , ராசாத்தி வரும் நாள், மை டியர் லிசா ,யார் ,உருவம் , ஜமீன் கோட்டை என்று படத்தில் ஏதாவது ஒரு கிளுகிளு சீன் இருந்து வயிற்றில் பாலை வார்க்கும்.
இது மட்டுமா ?..பேய் போதாது என்று இச்சாதாரி பாம்புகள் கூட இச்சையைத் தூண்டும் நம்ம சினிமாவில். நீ யா ? ஒரு டிரென்ட் செட்டர் என்றால், மனைவி ஒரு மாணிக்கம் எல்லாம் கல்ட் மூவி....! ராதா இல்லாத படம் சாதா என்று இளைஞர்கள் தூக்கத்தில் பினாத்தும் அளவுக்கு இம்பாக்ட் ஏற்படுத்திய படம் . உருவம் பல்லவியை எத்தனைப் பேர் மறந்திருப்பார்கள் ??
"அங்க ஜில்பான்சி காட்டுறது ஒரு Reptile ..Freaking Reptile..Snake " என்று புத்தி சொன்னாலும் மனசு , பாம்பு ஆடும் பெல்லி டான்ஸ் மீது லயித்துவிடும்...மேஜிக்கல் ரியலிசம் எல்லாம் அப்பொழுதே கற்றுத் தந்தவை கில்மா பேய்கள் / கில்மா பாம்புகள்.
இதன் தாக்கத்தில் தான் "ஜென்மம் எக்ஸ் " தீம் சாங்கில் கூட Silhouette டில் அழகிய பெண் பேய்கள் சுடுகாட்டில் ஆடும்.
ஆனால் ஏதோ ஒரு யுகப்பிறழ்வு ஏற்பட்டு மெல்லமெல்ல கில்மா Quotient குறைந்து சீரியல் கூட சப்பையாக போனது.. உடல் பொருள் ஆனந்தி, கொலையுதிர் காலம் என்று கில்மா கம்மியான பேய்கள் தான் வரத்தொடங்கின..எப்படி இது நேர்ந்தது ?.இப்படிப்பட்ட ஒரு சமூக வீழ்ச்சியை ஏன் மணிரத்னம், பாரதிராஜா எல்லாம் தடுக்கவில்லை என்று மனம் அடித்துக்கொள்கிறது. பாலுமகேந்திரா மட்டும் பேய் படம் எடுத்திருந்தால் நிச்சயம் பேய் ஒரு சீனிலாவது பேன்ட் போடாமல் சுடிதார் டாப்ஸ் மட்டும் போட்டு வந்திருக்கும். பாலசந்தர் பேய் படம் எடுத்திருந்தால் ஆண்களை துக்கமாக மதிக்கும் பேய் , மகனை பழிவாங்க அப்பாவை கல்யாணம் செய்யும் பேய் வந்திருக்கும் . பாரதி ராஜா படத்தில் ஜாக்கெட் இல்லாத பேய் , பாக்கியராஜ் படத்தில் முருங்கை சூப் குடித்துவிட்டு மூடு ஏறி அலையும் பேய் , விசு படத்தில் "உமா " என்ற பெயருடைய பேய். இப்படி எத்தனை பேயை மிஸ் செய்துவிட்டோம் ? சிலுக்கை எல்லாம் பேயாக நடிக்க வைக்காத பாவத்தை தமிழ்சினிமா எங்கே போய் கழுவும் ?
பேய் படத்திற்கு என்று இருந்த அழகியலை சீர்குலைத்துவிட்டு அரண்மனை மாதிரி கில்மாவே இல்லாத பேய் படம் எடுக்கும் சமூகமாக அல்லவா மாறியிருக்கிறோம் ?
"உருவம் " என்று கரடுமுரடு பெயர் இருந்தாலும் , பல்லவி என்ற அழகிய பேய் இருக்கும் அந்த காலத்தில்..
இப்போது "காஞ்சனா " என்ற அழகிய பெயர் இருந்தாலும் லாரன்ஸ் , அண்டர்வேர் தெரியும் ராஜ்கிரண் தான் அதில் பேய்கள் என்றால் அது எவ்வளவு பெரிய கில்மா வீழ்ச்சி?
எங்கே போனது நமது கில்மா Quotient ?
சாரு நிவேதிதா சொல்லும் கலாச்சார சுரணையற்ற Philistine சமூகம் தான் இப்படி கில்மா பாரம்பரியத்தை சீர்குலைக்கும்.
ச்சே...ஆயாசமாக இருக்கிறது...
மீண்டும் Annabelle படத்துக்கே வருகிறேன் .
Annabelle படத்தில் பேய் யார் என்று கேட்டால் , ஒரு பொம்மை தான் பேய் என்கிறார்கள். என்ன அபத்தம் இது ? காமத்தை தணித்துக்கொள்ள தற்போதெல்லாம் சிலர் பிளாஸ்டிக் பொம்மைகளை தான் நாடிப்போகிறார்கள் என்று சேலம் வைத்தியர் ஒரு பக்கம் கண்ணீர் வடிக்கிறார். அவர் கூற்றை மெய் ஆக்குவதைபோல் இன்று ஒரு பொம்மையை பேய் ஆக்கி அழகு பார்க்கிறது இந்த அவல சமூகம்.
சத்தியமாய் உலகம் சீக்கிரம் அழிந்துவிடவவேண்டும் ..

No comments: