Monday, November 18, 2019

ஆகமவிதி ஆகாதவிதி இனியாவது திருந்துங்கப்பா!

சபரிமலைக்கு பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி.!
ஆகமவிதி படி கோவில் நிர்வாகம் அனுமதி மறுப்பு..?

● பெண்களை உடன்கட்டை ஏற்றி கொளுத்திக் கொல்வது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

உடன்கட்டை தடுப்பு சட்டம் வந்திருக்குமா ?

● சிறு வயதில் திருமணம் மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

குழந்தை திருமணத் தடுப்பு சட்டம்
வந்திருக்குமா ?

● வர்ணாசிரம சாதி ஏற்றத்தாழ்வுகள் மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

அனைவரும் சட்டதின் முன் சமம்
என்னும் உரிமை கிடைத்திருக்குமா??

● கணவன் இறந்தால், மனைவிக்கு மொட்டை அடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்க்காரவைப்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

இந்த சமூக தீமை ஒழிந்திருக்குமா ?

● பெண்களுக்கு பொட்டுகட்டி கோவில் தேவதாசியாக்குவது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா ?

● பார்ப்பனர் அல்லாதோர் படிக்கக்கூடாது
என்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் படித்திருக்க முடியுமா??

● சில பிரிவு பெண்கள் மேலாடை உடுத்தக்கூடாது என்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

அனைத்து பெண்களுக்கும் மேலாடை அணிய உரிமையுண்டு என்ற சட்டம்
வந்திருக்குமா?

● அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

பெண் கல்வி சாத்தியப்பட்டிருக்குமா ?

● திருமணம் முடிந்த பெண், முதல் நாள்
பார்ப்பன நம்பூதிரியுடன்தான் முதலிரவு கொள்ளவேண்டும் என்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

இந்த இழி பழக்கம் மறைந்திருக்குமா??     

● ஒரே மத அமைப்பு என்று சொல்லிக்கொண்டு, ஒரு பிரிவின் மீது தீண்டாமை கடைபிடிப்பதுவும் மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

தீண்டாமை தடை சட்டம்
வந்திருக்குமா ?

● ஒரே மத அமைப்பு என்று சொல்லிக்கொண்டு, எங்கள் கோவிலினுள் நுழையாதே என்று மக்களின் ஒரு பிரிவினரை தடுப்பது அந்த மதத்தின் நம்பிக்கை என விட்டிருந்தால்,

அனைத்து சாதிக்கும் ஆலய நுழைவு
சாத்தியப்பட்டிருக்குமா?

● பார்ப்பனர்கள் கடல்தாண்டி போகக்கூடாது என்பது கூட மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

இன்றைய நிலையில் லட்சகணக்கான
பார்ப்பனர்கள் வெளிநாடுகளில் வசிக்கவோ
வேலைசெய்யவோ முடியுமா ?

● உலகம் தட்டையானது என்பது  மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

உலகம் உருண்டையானது என்பது
நிருபிக்கப்பட்டிருக்குமா ?

● பூமியைத்தான் சூரியன் சந்திரன்
போன்றவை சுற்றிவருகின்றன என்பது
 மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

அறிவியல் வளர்ந்திருக்குமா ?

● ராகுகேது என்ற பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுகுவதால்தான் கிரகணங்கள் உருவாகின்றன என்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

வான்வெளி அறிவு
வளர்ந்திருக்குமா ?

● பிராத்தனைசெய்தால் நோய்கள் குணமாகும் என்பது  மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

மருத்துவ அறிவியல் தான்
வளர்ந்திருக்குமா ?

● தாய்மொழி என்பது நீசபாசை, தாய்மொழியில் கடவுளை
வழிபடக்கூடாது என்பது மத நம்பிக்கை என விட்டிருந்தால்,

தமிழ் அர்ச்சனை என்னும் சட்டம்
நடைமுறைக்கு வந்திருக்குமா ?

யார் சொல்லியிருந்தாலும் எதைச் சொல்லியிருந்தாலும் நானே சொல்லியிருந்தாலும், அதை நம்பாதே !
உன் பகுத்தறிவின் துணை கொண்டு ஆராய்ந்து அறிவு பெறு என்று
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீசு தந்தைப் பெரியார் போன்ற பகுத்தறிவாளர்களும் இறைமறுப்பாளர்களும்  கூறியதால் தான் மேலே  உள்ள அனைத்தும் சாத்தியமானது.

மாற்றம் ஒன்று தான் மாறாதது.

அன்று அகல் விளக்கில் முகம் காட்டிய கடவுளர்கள் இன்று LED விளக்கில் ஜொலிக்கும்போது எங்கு போனது உங்கள் 'ஆகம விதி' ?

48 நாள் விரதமிருந்து மலையேறிய கன்னி சாமிகள், இன்று 'காலையில் மாலை போட்டு சிறப்பு தரிசனத்தில் அன்றே மலையேறி , அன்று மாலையே Tasmac மலையேறும் போது எங்கே போனது 'உங்க ஆகம விதி' ?

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கோசத்துடன் பெரு வழியில் 48 மைல்கள் நடந்த கால்கள் இன்று 4 கி.மீ களாக சுருங்கிய போது எங்கே போனது உங்கள் 'ஆகம விதி' ?

இருமுடி கட்டிய பின் 'சென்று வருகிறேன் ' என்று கூட சொல்லக் கூடாது , என்ற உங்களது ஆகம விதி எவ்வாறு Android phone களை அனுமதிக்கிறது ?

இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் உங்களது "ஆகம விதி" பெண்களை மட்டும் அனுமதிக்காது என்றால் ஒன்று மட்டுமே எண்ணத் தோன்றுகிறது....
உங்களது கடவுளர்களுக்கு பெண்கள் ஏற்புடையவர்கள் அல்லவெனில்
எங்களது தமிழ்ச் சமூகத்திற்கே எந்தக் கடவுளர்களும் தேவையே இல்லை!

போங்கய்யா!
நீங்களும் உங்க மத நம்பிக்கைகளும்!

போங்கய்யா..!
உங்க எல்லா கடவுளர்களும்,
கூடவே உங்க செல்லரித்துப்போன அனைத்து வகையான
மத நம்பிக்கைகளும்...!

ஆகமவிதி ஆகாதவிதி
இனியாவது திருந்துங்கப்பா!

No comments: