கீதை - ‘விஜயபாரதம்!'
- மயிலாடன் -
கேள்வி : பொறியியல் படிக் கும் மாணவனுக்கு ‘கீதை' தேவையா?
பதில் : வயது முடிந்த வயதானவர்களுக்கு போகும் வழியில் புண்ணியம் தேட சொல்லப்பட்ட தல்ல கீதை; வாழ வேண்டிய வாழ்க்கையோடு, போராட வேண் டிய ஒரு பொறுப்புள்ள இளை ஞனுக்குச் சொல்லப்படுவது தான் கீதை.
- ‘விஜயபாரதம்', ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 18.10.2019, பக்கம் 35
அப்படியா கதை?
இந்து மதச் சித்தாந்தத்தை அமெரிக்காவரை சென்று பரப்பிய பெரும் பேச்சாளர் என்று தம் பட்டம் அடிக்கப்படும் விவேகா னந்தர் கீதைபற்றியும், கிருஷ் ணன்பற்றியும் என்ன சொல்லுகிறார்?
‘‘கீதை என்ற நூல் மகா பாரதத்தின் ஒரு பகுதியாகும். கதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முதன்முதலில் மகாபாரதத் தின் ஒரு பகுதியாக அதாவது வேத வியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?
இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா?
மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?
நான்காவதாக அர்ஜுனனும், ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானோ? என்பன.
கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி குருசேத்திர யுத்தம் நடை பெற்றது என்பதற்கு எந்த ஆதா ரமும் இல்லை. யுத்தத்தில் கிருஷ் ணன் அர்ஜுனனுடன் எல்லை யற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக் கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டாரா என்ற பிரச்சினை எழுகிறது.
அர்ஜுனன் ஏனையப் பெயர் கள் பயன்படுத்தப்பட்டு உள்ள னவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.''
- விவேகானந்தர் ‘கீதையைப் பற்றிய கருத்துகள்' என்ற நூலில்,
ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய ‘பகுத்தறிவுச் சிகரம் பெரியார்' என்ற நூல், பக்கம் 117
கீதை வாழவேண்டிய வாழ்க்கை முறையைப் பேசுகிற தாம், போராட வேண்டிய பொறுப்பை இளைஞர்களுக்குக் கூறுகிறதாம் - எழுதுகிறது ‘விஜய பாரதம்.'
பிறக்கும்பொழுதே பேதம் கற்பிக்கும் இந்நூல் எந்த வாழ்க்கை முறையைச் சொல்லிக் கொடுக்கப் போகிறது?
சொந்த ஜாதி தர்மக் கடமை அல்லது தொழில்களை ஒருவர் அரைகுறையாகச் செய்வது மற்ற வர்களுக்குரிய சுவதர்மத்தை ஜாதி தர்மக் கடமை அல்லது பணி களை முழுமையாகச் செய்வதைக் காட்டிலும் நல்லதாம். (கீதை, அத்தியாயம் 3; சுலோகம் 33).
ஜாதி, அதன் வழி குலத் தொழில் செய்வதுதான் கீதை கூறும் வாழவேண்டிய வாழ்வியலாம்!
இந்தப் பதிலை எழுதும் ‘விஜயபாரத'த்தின் ஆசிரியர் தன் ஜாதித் தொழிலைத்தான் செய்து கொண்டு இருக்கிறாரா?
‘‘கீதையைப் படிப்பதைக் காட்டிலும் கால்பந்து விளையாடக் கற்றுக் கொள்'' - இதுவும் விவேகானந்தர் கூற்றுதான்.
என்ன ‘விஜயபாரதமே' சரிதானா?
நன்றி : "விடுதலை" நாளேடு 17.10.2019

No comments:
Post a Comment