Thursday, November 21, 2019

நவீன பார்ப்பணர்களின் சிந்தனைக்கு,

நவீன பார்ப்பணர்களின் சிந்தனைக்கு,

உண்மையிலேயே எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது,

இன்றைய சூழலிலும், சிதம்பரம் கோவிலில், கேள்வி கேட்கும் ஒரு அம்மாவை ஒரு பார்ப்பண தீட்சிதரால், அடிக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது, IIT நிர்வாக தலைமையை கேள்வி கேட்கும் ஒரு விரிவுரையாளரின் வாழ்க்கையவே நாசம் செய்ய முடிகிறது, IITல் நன்றாக படித்த இஸ்லாமிய பெண்ணை தற்கொலை செய்யத் தூண்ட முடிகிறது. 
அப்படியென்றால் 1950களின் நிலைமை???!!!!

இப்படி ஒரு சூழலில் வன்னியர், கள்ளர், நாடார், வலையர், அம்பட்டர், பறையர், பள்ளர் சமூகத்திலிருந்து புதிய பரிணாம வளர்ச்சி எடுத்திருக்கும் நவீன பார்ப்பணர்களை நினைத்து சிரிப்பதா, வேதனைப்படுவதா தெரியவில்லை. ஏனெனில் 60களில் நவீன பார்ப்பணர்களாக பரிணாம வளர்ச்சி எடுத்த முதலியார், பிள்ளை, வெள்ளாளர், செட்டியார் போன்றவர்கள் பார்ப்பணீயத்தின் சட்டத்தில் இருந்து ஒரு நூல் விலகினாலும், அவர்களை சாக்கடையில் போட்டு மிதித்தெடுக்கும். மதுரை ஆதீனமாக இருந்தாலும் சரி, திருவாடுதுறை ஆதீனமாக இருந்தாலும் சரி பார்ப்பணீயத்தை ஆதரிக்காமல் திராவிட சித்தாந்தத்தை ஆதரித்தால் பாலியல் குற்றச்சாட்டு அல்லது பணம் கொள்ளையடித்த குற்றச்சாட்டு. அவர்களுக்கே அந்த நிலை.
அது போகட்டும்.

இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கும் பொழுது, 70களில் கலைஞரின் நிலையை நினைத்துப் பார்க்கிறேன்.

சிங்கம், புலி, சிறுத்தை, Leopard, Jaguar, Panther போன்ற வலிமை மிக்க மிருகங்களுக்கு நடுவில் ஒரு மான், தன்னை மட்டும் காக்க போராடாமல் தன்னைப்போலவே உள்ள ஆடு, மாடு போன்ற வலிமை குறைந்த மிருகங்களையும் காக்க போராடியதைப் போன்ற ஒரு சூழ்நிலைதான், அன்றைக்கு கலைஞரின் சூழ்நிலை.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத, ஆங்கில புலமை இல்லாத ஒருவர்
நீதிபதிகள், வழக்கறிஞர்கள்,
தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், கோட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஊடகங்கள் என எல்லோருமே பார்ப்பணர்கள் அல்லது நவீன பார்ப்பணர்களான முதலியார், பிள்ளை, வெள்ளாளர், செட்டியார் போன்றவர்கள்தான். அவர்களிடம் வேலை வாங்க வேண்டும்.

ஏற்றுக் கொள்வார்களா?!!!

கலைஞர் மீது எவ்வளவு தனிமனித தாக்குதலை தொடுத்தனர்.

ஆனாலும், 
எவ்வளவோ பிரச்சினைகள், தொந்தரவுகள், இழப்புகள், அவமானங்கள் என்று எல்லாவற்றையும் எதிர் கொண்டு
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்காக எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ அதனை செய்து முடித்தது மட்டமல்லாமல் தமிழ்நாட்டையும் வளர்ச்சி பாதையில் எடுத்து வந்துள்ளார் என்றால்,

#கலைஞர் எவ்வளவு வலிமை மிக்க மனிதர்.

No comments: