Monday, November 18, 2019

காஞ்சிக் காமக்கோடிப் பீடச் சங்கராச்சாரியாரின் கரைகடந்த தமிழ் வெறுப்பு

சில ஆண்டுகட்கு முன், இற்றைக் காஞ்சிச் சங்கராச்சாரியார், ஆண்டாள் திருப்பாவையின் "செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்" என்னும் அடியிலுள்ள தீக்குறளை சென்றோ தோம்" என்னும் தொடருக்கு, தீய திருவள்ளுவரின் குறளை யாங்கள் ஓத மாட்டோம் என்று ஆண்டாள் சொன்னதாகப் பொது மேடை யிற் பொருள் கூறி, தம் தமிழிலக்கண அறியாமையையும் தமிழ் வெறுப்பையும் வடமொழி வெறியையும் ஒருங்கே காட்டினார்.

    ஆட்சிமொழிக் காவலர் திரு. கீ. இராமலிங்கனார் ஆச்சாரி யார் மடத்திற்குச் சென்று இதுபற்றி வினவியபோது, ஆச்சரியார் நேரடியாகத் தமிழில் விடையிறுக்காது. தம் அணுக்கத் தொண்டர் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு சமற்கிருதத்திலேயே விடை கூறினாராம். "சுவாமிகளுக்கு நன்றாகத் தமிழ் தெரியுமே! தமிழிலேயே எனக்கு நேரடியாய் விடை கூறலாமே!" என்று ஆட்சி மொழிக் காவலர் சொன்னதற்கு, "சுவாமிகள் பூசை வேளையில் நீச பாஷையில் பேசுவதில்லை" என்று அணுக்கத் தொண்டர் மறு மொழி கூறினாராம். எது நீச மொழி என்பதை, 'எது தேவமொழி?' என்னும் பகுதியிற் காண்க.


No comments: