எனக்கு பலவருடங்களாக இருந்த சந்தேகம், சில வருடங்களுக்கு முன்பு முகநூலிலும் கேட்டதாக ஞாபகம். அதற்கான பதில் கீழடியில் கிடைத்தது.
மேற்கே ஆப்கானிஸ்தானில் இருந்து கிழக்கே அஸ்ஸாம் வரையும் வடக்கே காஷ்மீரில் இருந்து தெற்கே ஆந்திரா வரையும் ஆட்சி செய்த சந்திரகுப்த மௌரியர்கள் தமிழகத்தை மட்டும் விட்டு வைத்ததின் மர்மம் என்ன?
வட்டெழுத்திற்கு முந்தைய தமிழின் எழுத்து வடிவத்திற்கு பிராமி என்று யார் எப்படி வைத்தார்கள் என்று தெரியவில்லை. இதற்கு முன்புவரை வட இந்தியாவில் கிடைத்த ஆகப் பழைய எழுத்து வடிவம் 2300 ஆண்டுகளுக்கு முந்தையது மட்டுமே. தமிழின் எழுத்து வடிவங்கள் அதற்கு முந்தையது கிடைக்க வில்லை.
ஏன் கீழடியை இழுத்து மூட முயற்சிக்கிறார்கள் என்பதற்கான காரணம், அறிவியல் ரீதியாக கீழடியில் கிடைத்த எழுத்துக்கள் 2600 வருடங்களுக்கு முந்தையவை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.
வட இந்தியாவில் கிடைத்த பிராகிருதம் இன்று அழிந்துவிட்டது. ஆனால் கீழடியில் கிடைத்த ஆதன் என்ற பெயரை இன்று வரை நம் குழந்தைகளுக்கு சூட்டுகிறோம்.
எழுத்து முறை தமிழகத்திலிருந்துதான் வட இந்தியாவிற்கு சென்றது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.
அறிவிலும் நாகரிகத்திலும் வட இந்தியர்களைவிட நாம் பல மடங்கு முன்னேறியிருந்தோம் என்பதற்குமான ஆதாரம் கீழடி.
பத்ரி சேஷாத்திரியிலிருந்து பக்ஷிராஜன் வரை பதறியடித்து கீழடியை ஏளனம் செய்வதற்கான காரணம் அது இந்தியாவின் உண்மையான வரலாற்றை ஆதாரப்பூர்வமாக நிறுவியிருப்பதுதான்.
அறிவிலும் நாகரிகத்திலும் இவ்வளவு முன்னேறியிருந்த சமூகம் என்பதால், நம்மிடமிருந்து எழுத்து முறையை கற்றுக்கொண்டவர்கள் நம்மீது படையெடுக்காமல் இருந்திருக்கலாம்.

No comments:
Post a Comment