Monday, November 18, 2019

வேதம்=சுயநலம். குறள்=பொதுநலம்

🌹🌹🌹🌹🌹🌹

இந்து மத மனு தர்மம் நான்கு வருணம் என்கிறது..👎
குறள் பிறப்பொக்கும் என்கிறது..👍

இந்து மதம் ஏர்பிடிப்பது சூத்திரனுக்குரியதாக கூறுகிறது..👎
குறள் உழவனைப் போற்றுகிறது..👍

இந்து புராணங்களில் சூதாட்டங்கள் வருகின்றன..👎
குறள் சூதாடுவது தவறு என்று கூறுகிறது..👍

பிராமணன் பிச்சை வாங்கி உண்ண வேண்டும் என்கிறது இந்து மதம்.👎
இரந்து வாழின் உலகியற்றியவன் கெட்டழியட்டும் என்கிறது குறள்..👍

மரணம் வந்தால் எந்தச் செயலையும் செய்யலாம் என்கிறது இந்து மதம்..👎
மானம் உயிரினும் பெரிது என்கிறது குறள்..👍

இந்து புராணங்களில் கடவுளுக்கே பல மனைவிகள் உண்டு..👎
குறள் பிறன்மனை நோக்காமை என்கிறது..👍

வேதம்..பசு, குதிரைகளை, வேள்வியில் இடலாம் என்கிறது..👎
குறள் கொல்லாமை பற்றி பேசுகிறது..👍

வேதம் விதி வலியது என்கிறது..👎
குறள் விதியை முயற்சியால் வெல்லலாம் என்கிறது. (ஊழையும் உட்பக்கம் காண்பர்.... குறள்).👍

வேதம் தாழ்ந்த சாதிகள் கல்வி கற்க கூடாது என்கிறது..👎
குறள் எல்லோரையும் கல்வி கற்கச் சொல்கிறது..👍

 வேதம்=சுயநலம்.
 குறள்=பொதுநலம்

திருவள்ளுவரை இந்து மதம் என்ற பெட்டிக்குள் அடக்கக் கூடாது. அது சுயநல அரசியலின் கூப்பாடு.

வாழ்க திருவள்ளுவர்..

வாழ்க திருக்குறள்..


💐💐💐

No comments: