Monday, July 16, 2018

கலைஞர் கருணாநிதி & டெலோ தலைவர் குட்டி மணி

கலைஞர் கருணாநிதி டெலோ தலைவர் குட்டி மணிக்கு துரோகம் இழைத்ததாக இன்று சிலர் முகநூலில் பதிவு செய்துள்ளனர்.
கலைஞர் கருணாநிதி குட்டி மணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தது உண்மைதான்.
அந்த காலத்தில் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்படுவோர் பரஸ்பரம் பரிமாறப்படும் நடவடிக்கையின் கீழேதான் குட்டிமணியும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஒப்படைக்கப்பட்ட குட்டிமணி சில மாதங்களில் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் இலங்கை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அப்போது தொடரப்பட்ட வழக்கில்தான் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்காக அவர்கள் வெலிக்கடை சிறையில் வைக்கப்பட்டிருந்தவேளையில் 23.07.1983 யன்று அரசின் சதித்திட்டபடி சக சிங்கள கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர், “குட்டிமணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதி” என்று சட்டசபையில் எம்.ஜி.ஆர் குற்றம் சாட்டினார்.
இதனால் “ கருணாநிதியால் ஒப்படைக்கப்பட்ட போது எமது தலைவர் குட்டிமணி போராளி இல்லை. கடத்தல்காரன்” என்று அப்போதைய டெலோ தலைவர் சிறீசபாரட்ணம் கருணாநிதிக்காக பேட்டி கொடுத்தார்.

No comments: