Saturday, May 20, 2017

ராஜிவிற்கு ஜெயா கொன்ற நன்றி

அந்த படுகொலை தமிழகத்தில்தான் நிகழ்ந்தது , தமிழகம் தன் தாய்வீடு என நம்பி வந்த தலைவன் இங்குதான் செத்தான்
அவனின் சாவில்தான் ஜெயா ஆட்சிக்கே வந்தார், ராஜிவின் ரத்தம் இங்கு சிந்தியிராவிட்டால் ஜெயா அரசியல் வாழ்வு முளைத்தே இருக்காது
1984ல் தொல்வியின் விளிம்பில் இருந்த ராமசந்திரன் இந்திரா கொலையில் கிடைத்த அனுதாபத்தில், அவருடன் இருந்த கூட்டணியால் தப்பினார், இல்லை அன்றே தோற்றிருப்பார்
1991ல் ஜெயா முதல்வரானதும் ராஜிவ் கொலையிலே தான், இரு பெரும் தலைவர்களின் அனுதாபமும் தமிழகத்தில் அதிமுகவிற்குத்தான் சென்றதே தவிர காங்கிரசுக்கு அல்ல, அப்படி ஒரு அப்பாவி கட்சி அது
அந்த தலைவனின் நினைவிடம் இங்குதான் இருக்கின்றது, என்றாவது ஜெயாவோ கலைஞரோ அங்கு அஞ்சலி செலுத்த கண்டீர்களா?
கலைஞர் செல்லமாட்டார், அப்படி சென்றால் அவர் நினைவுகளை கிளறிவிட்டு காங்கிரஸ் வந்துவிடும் என்பதால் அல்ல, மாறாக ஒரு குற்றவுணர்ச்சி அவர் நெஞ்சில் இருக்கலாம்
பத்மநாபா கொலை நடந்தபொழுதே அந்த சிவராசனை, தஞ்சைபக்கம் போலிசில் சிக்கிய சிவராசனை சுட்டு கொன்றிருந்தால் ராஜிவ் கொலை நடந்திருக்காது, கலைஞருக்கு அது நன்றாகவே தெரியும்
ஆனால் இவ்வளவு தூரம் கொடூர புலிகள் செல்வார்கள் என யாரும் நினைத்து பார்க்கவில்லை, அப்படி கலைஞரும் நினைக்கவில்லை, ஆனாலும் கலைஞரின் மன்சாட்சி உலுக்கியிருக்கலாம்
ஆனால் ஜெயலலிதா?
கொஞ்சமேனும் நன்றி இல்லாதவர் அவர்தான், ஜெயாவினை அரசியலில் உயர்த்திவிட்டதே ராஜிவ், கடைசியாக உயிர்கொடுத்து முதல்வராக்கியதும் அவரே
அன்று ஜெயாவும், ராஜிவும்தான் கூட்டணி, ஆனால் அந்த கூட்டத்திற்கு ஜெயா வரவில்லை ஏன்? பலத்த சந்தேகம் தான், ஆனால் முன் கூட்டியே மறுநாள் ராஜிவ் கலந்துகொள்ள இருந்த கிருஷ்ணகிரி கூட்டத்திற்கு தயாராக ஜெயா அங்கே இருந்ததால் சந்தேகம் தீர்ந்தது
ராஜிவ் திருப்பெரும்புதூரில் தப்பியிருந்தால் மறுநாள் கிருஷ்ணகிரியில் ஜெயாவோடு கொல்லபட்டிருப்பார்
அப்படி ராஜிவினை நினைக்க வேண்டிய ஜெயா என்றாவது திருப்பெரும்புதூர் சென்றதாக சொல்லமுடியுமா?
அதனை கூட மன்னித்துவிடலாம், அதற்கொரு காரணம் சொன்னார் பாருங்கள்
"நான் ஏன் திருப்பெரும்புதூர் செல்ல வேண்டும்? சென்னைக்கு வரும் காங்கிரசார் எல்லாம் அண்ணா சமாதிக்கு செல்கின்றார்களா?"
ராஜிவிற்கு ஜெயா கொன்ற நன்றி கொஞ்சமல்ல..

No comments: