காட்சி 1
--------
வண்ணக்கிளி அண்ணன் இயற்பெயர் மாரிமுத்து. துணை வட்டாட்சியர்.
நான் கேஷியராக பணிபுரிந்த நட்சத்திர விடுதி பாரில் வண்ணக்கிளி அண்ணண் பேரர். அண்ணணுடைய அப்பா வருவாய் துறையில் அலுவலக உதவியாளர்(பியூன்). திடீரென ஒருநாள் பணியில் இருக்கும் போதே இறந்துவிட்டார்.
வண்ணக்கிளி அண்ணண் பத்தாவது தேர்ச்சி பெற்றவர். ஒரு சிட்பண்டில் சொற்ப சம்பளம். சிறு வயதிலேயே திருமணம். இரண்டு குழந்தைகள். சோறு போட்ட அப்பா இறந்ததால் குடும்பம் தத்தளிக்கிறது.
வண்ணக்கிளி அண்ணண் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பித்தார். இப்போதுதான் மிகப்பெரிய சோதனை. அவர் அப்பா இறந்த அன்று அண்ணணிண் வயது நிர்ணயிக்கப்பட்ட வயதைவிட மூன்று மாதங்கள் கூடுதலாக இருந்து தொலைந்து விடுகிறது. இதனால் அவரது வேலைகோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.
வண்ணக்கிளி அண்ணண் வயது வரம்பை தளர்த்தி பணியிடம் வழங்குமாறு மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கிறார்.
கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர், வயது வரம்பு தளர்வை அரசு மட்டுமே செய்ய முடியும் என்பதால் வயது வரம்பில் தளர்வு வழங்கி ஆணை வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்கிறார்.
இதற்கு வருவாய்த்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, நிதித்துறை ஆகிய துறைகள் ஒப்புதல் அளித்து முதல்வருக்கு அனுப்பி கையொப்பம் பெற வேண்டும்.
ஆனால் வருவாய்த்துறைக்குப் போன கோப்பு வயது வரம்பில் தளர்வு தர இயலாது எனக்கூறி கோப்பினை திருப்பி அனுப்பி விடுகிறது.
எங்கள் உறவினர் ஒருவர் தலைமைச்செயலகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றினார். அவர் மூலம் ஏதேனும் செய்யலாம் என ஆறுதல் கூறினேன்.
மீண்டும் விண்ணப்பித்தோம்.
தபால் உரிய செக்க்ஷனுக்கு போகிறதா என கண்காணித்தபடியே இருந்தோம். அந்த பிரிவு அலுவலரும் ஒவ்வொரு இடமாக கோப்பினை தள்ளி தள்ளி விட்டார். ஆனால் கோப்பு வருவாய் துறையை தாண்டவில்லை.
அதன்பிறகு ஆட்சி மாற்றம். கலைஞர் முதல்வராக பதவியேற்றார். ஒரு வழியாக கோப்பு மூன்று துறைகளையும் தாண்டி முதல்வர் கலைஞருக்கு சென்று விட்டது.
கலைஞர் எல்லா கோப்புகளையும் படித்து பார்த்துதான் கையொப்பம் இடுவார் என கேள்வி பட்டிருந்தோம். அதனால் என்ன செய்வாரோ என பயந்து கொண்டே இருந்தோம். காலையில் போன கோப்பு அன்று மாலையே திரும்பியதாக அறிந்தோம். ஒப்புதல் கொடுக்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என தெரியாமல் குழம்பி தவித்தோம்.
மறுநாள் இருவரும் விடுப்பு சொல்லிவிட்டு தலைமைச்செயலகம் சென்றோம். அந்த பிரிவு அலுவலரை சென்று பார்த்தோம். அவர் கட்டைவிரலை உயர்த்தி வெற்றி என்றார். மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது. இந்த இடத்திற்கு வருவதற்கு முழுதாக ஐந்து வருடம் தேவைப்பட்டது.
தயங்கி தயங்கி கலைஞரின் கையொப்பத்தை பார்க்கலாமா என்றோம். வெளியாட்கள் அரசு கோப்பை பார்க்க அனுமதி இல்லை என்றார். மிகுந்த வற்புறுத்தலுக்குப்பின் கலைஞர் வேறு ஏதேனும் கோப்பில் குறிப்புகள் எழுதி இருக்கிறாறா என்றோம்.
ஆமாம் .."மேலும் தாமதிக்காமல் தொடர்புடையவர் ஒரு வாரத்திற்குள் பணியேற்றிடும் வகையில் ஆணை வழங்கவும்" என குறிப்பு எழுதியுள்ளார்.
அதே போல ஒரு வாரத்துக்குள் வண்ணக்கிளி அண்ணண் இளநிலை உதவியாளராக பணியேற்று இன்று துணை வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்று பணிபுரிகிறார்.
இதில் நாங்கள் பிரமித்த விஷயம் என்னவெனில் அம்பாரமாய் கோப்புகள் குவிந்து கிடந்தபோதும் மேம்போக்காக கையொப்பம் இடாமல் ஒவ்வொன்றையும் படித்து அக்கறையாக குறிப்பெழுதி கையெழுத்திடும் கலைஞரின் பண்பு.
மற்றவர்களிடம் கோப்புகள் வருடக்கணக்கில் தேங்கி கிடந்தாலும் தன்னால் தாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அந்த மனிதரின் மனித நேயம் சொல்லில் அடங்காதது. என்ன ஒரு மனிதர் அவர்!
காட்சி 2
--------
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் தத்தளிக்கிறது. அங்குள்ள இளநிலை பொறியாளரே தண்ணீரைத் திறந்து விடுவது தான் முறை. ஆனால், தமிழகத்தில் தன்னைக் கேட்காமல் எதுவும் நடக்கக் கூடாது என்பது ஜெயலலிதா கட்டளை.
தண்ணீரைத் திறந்து விடக் கோரிய கோப்பு ஒரு வாரமாக முதல்வரின் அறையில் உறங்குகிறது. முதல்வர் எங்கு உறங்கினார் என்று தெரியவில்லை.
கடைசி நேரத்தில் அடைமழை நேரத்தில் ஏரியைத் திறந்து விட்டு குறைந்தது 500 பேர் இறந்து போகிறார்கள். பலர் உடமைகளை, தொழில்களை இழக்கிறார்கள்.
***
வரலாறு ஜெயலலிதாவை Able administrator என்று குறித்துக் கொண்டது. என்னடா Able admininstrator என்றால் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பினாராம்.
வாழ வைப்பவர் தானே தலைவர் ஆவார்,
வேலையைப் பறிப்பவர் எப்படி தலைவர் ஆனார்
என்று யாரும் கேட்கவும் இல்லை.
அதற்கு யாரும் பதில் சொல்லவும் இல்லை!

No comments:
Post a Comment