Monday, June 10, 2019

பசு மாடு பார்ப்பனர்களின் கடவுளா?

பசு மாடு பார்ப்பனர்களின் கடவுளா?
பசு மாடுகளை உணவிற்காகக் கொல்லப்பட்டால் பார்ப்பனர்களுக்குத் தேவையான பால்,தயிர்,வெண்ணெய்,நெய் (இவையெல்லாம் ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்) போன்ற பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடுகள் வருமென்பதால், அதைத் தடுப்பதற்காகப் பார்ப்பனர்கள் பசு மாட்டிற்குக் கோமாதா என்று பெயரிட்டு அதற்கு ஒரு கதை கட்டி அனைவரும் கடவுகளாக வணங்கவேண்டுமென்றும் பசுவைக் கொள்வது பாவமென்றும் பொய்யுரைகளைப் பரப்பி வைத்துள்ளனர்.
பால் தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் தற்பொழுது அனைவரும் பால் பொருட்களை எந்தவித தட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்தி வரும் வேளையிலும் மாட்டுக் கறி அரசியலைத் தூக்கிப் பிடிப்பதற்கு மாட்டுக் கறி ஏற்றுமதியே காரணம்.
உலகில் மாட்டுக் கறி ஏற்றுமதியில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது அதில் பார்ப்பனர்களே முக்கியப் புள்ளிகளாகவும் இருக்கிறார்கள்.
ஏதோவொரு வகையில் பசு மாடு பார்ப்பனர்களுக்குப் பயன்பட்டுக் கொண்டே இருக்கிறது,அதுவரை அவர்கள் பசுவைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்திக்கொண்டு தான் இருப்பார்கள். இனி பயனில்லை என்றவுடன் பசுவைத் தூக்கி ஓரம் வைத்துவிடுவார்கள். இந்திரன், பிரம்மன் போன்ற கடவுள்களையே தூக்கி ஓரம் வைத்தவர்களுக்குப் பசுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
பார்ப்பனர்கள் பசுமாட்டைக் கடவுளாக வணங்குவதில்லை, மற்றவர்களைத் தான் வணக்க சொல்லி இருக்கிறார்கள். இரண்டிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
இதைப் புரிந்துகொண்டு,இனி மாட்டுக் கறி சாப்பிடுவதைப் புரட்சி என்று நம்பி உணர்ச்சிவசப்படாமல், நல்ல கறியாக வாங்கி குறிப்பாக beef steak வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். சுவையாக இருக்கும்.

No comments: