Sunday, June 02, 2019

பார்பனர்கள் மிக தெளிவாகதான் செயல்படுகிறார்கள்

தமிழகத்தை சேர்ந்த இரு பார்பனருக்கு மத்திய அமைச்சர் பதவி அதிலும் முக்கியம் வாய்ந்த பதவிகள் உடனே சிலர் மோடி தமிழகத்தை புறக்கணிக்கவில்லை என்கிறார்கள் முதலில் தமிழர்களுக்கு மந்திரிசபையில் இடமளிக்கவில்லை பார்பனருக்கு அளிக்கபட்டிருக்கிறதென தமிழர்களுக்கு புரியவைக்கவே கஷ்டபடவேண்டியிருக்கிறது
பாஜக கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயர்பதவிகள் பார்பனர்கள் வசமே சென்றடைந்ததை உணராதவரை எதுவும் பலனில்லை
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் பார்பனர்கள் அதிகளவில் இடம் பெறுகிறார்கள் .. மொத்த தொகுதிகளில் 543 ல் பட்டியிலினத்தவர்கள் 131 தவிர்த்து 412 ல் 232  பேர் பார்பனர்கள்
சிறுபான்மையினர் தவிர்த்து ..120 பேர்தான் பிற சாதியினர் அதாவது( OBC,BC,MBC )..
இதையெல்லாம் உணராமல் பாஜக இந்துக்களுக்கான கட்சியென பார்பனர் அல்லாதோர் மல்லுகட்டுவதுதான் கொடுமை
26 கேபினட் அமைச்சர்களில் 13 பேர் பார்பனர்கள் இது எங்கே செல்கிறது.. யார் மந்திரியாகவேண்டுமென நாக்பூர் தீர்மானிக்கிறது அதை உணராததால் தான் வடஇந்தியா இன்னமும் தாழே கிடக்கிறது ..
..
தமிழகம் உட்பட தென்னகத்தில் பார்பன ஆதிக்கத்தை சிதைத்ததில் பெரும்பங்கு பெரியாருக்கு உண்டு அவர் மனிதர்களின் அறிவோடு பேசினார் அவர்களை தட்டியெழுப்பி பார்பனன் உன்னை அடிமைபடுத்தி மதமென்ற பெயரில் பிரித்து வர்ணமென்று கதையடித்து அவன் உயர செல்ல உன்னை படிகளாக்குகிறான் .. உனதுரிமையை பிடிங்கிக்கொண்டு உன் கைகளைக்கொண்டே உன் விழிகளை குத்துகிறானென புரியவைத்ததால் இன்று சுயமரியாதையோடு போராடுகிறான்.. அதையும் மீறி எழும்ப எண்ணுகிற போதெல்லாம் பெரியாரின் தடிகொண்டு அடித்தமர்த்துகிறோம் .. ஆனாலும் சில  துரோகிகளும் அடிமைகளும் தன் சுயமிழப்பதறியாமல் பார்பன அடிவருடியாய் வாழ்வது சாபகேடு ..
..
பார்பனர்கள் மிக தெளிவாகதான் செயல்படுகிறார்கள்
உழைப்பதற்கும் மக்கள் ஏசும் மொழிகளை கேட்பதற்கும், கிண்டல் கேலிக்கு ஆளாகி மானங்கெட்டு திரிவதற்கும் இந்த சூத்திர அடிமைகள் இருக்கிறார்கள் யாருக்கும் உதவாத பதவியை கொடுத்துவிட்டு நாம் அவர்களை ஆட்டிவைக்கலாம் .. அதிகாரம் பதவி எனும் போது நோகாமல் நோங்கு தின்னலாம் ஆம் தறிகெட்டு பேசுவதற்கும் ஓயாது உழைப்பதற்கும் சாதிவெறி மதவெறியை தூண்டுவதற்கும் பொன்னர் தமிழிசை அர்ஜூன் போன்ற சூத்திரர்கள் இருக்கிறார்கள் ...
ஆளுமைமிக்க பதவிகளுக்கு பார்பனர்கள் .. மக்களை சந்திக்காமல் வெயில் மழையென அலையாமல் ஊரூராய் சென்று அவதிபடாமல்
யாரை இரைஞ்சாமல் பதவி தானாக தேடிவரும்
இது புரியாதவரை அக்கா தமிழிசை போன்றவர்கள் கத்திக்கொண்டே திரியவேண்டியதுதான்
மக்கள் செல்வாக்கோடு வென்ற பொன்னருக்கு இணையமைச்சர் மக்களுக்கு யாரென்றே,தெரியாத நிர்மலாவிற்கு ராணுவ அமைச்சர் பதவி தந்தவர்கள் தான் ..இரண்டாவது முறை வென்றவுடன் பார்பனீய ஆதிக்கமும் அதிகமாகியிருக்கிறது .. யார் பதவிக்கு வரவேண்டும் யாருக்கு தரவேண்டுமென மோடி தீர்மானிக்கமுடியாது பார்பன தலைமை பீடம் நாக்பூர் தான் தீர்மானிக்கும் .. பாஜக என்பது  பார்பன (ஜாதி)ஜனதாகட்சி இதுதான் உண்மை இந்துகளுக்கான கட்சியென்பது மிகப்பெரிய பொய்
இதை சூத்திர அர்ஜூனும் பொன்னரும் தமிழிசையும் உணர்ந்தால் நல்லது
..
பணிசெய் பலனை எதிர்பாராதே இது பார்பனீயம்
பணி செய்து பலனை பெறு .. திராவிடம்

No comments: