உருது மொழியை கட்டாய பாடமாக சட்டம் - தெளிவு பெறுக!
-------------------------- -------------------------- -------------------------- -
உருது மொழியை கட்டாய பாடமாக சட்டம் இயற்றுவதாக தளபதி கூறினார் என்று தினமணி பத்திரிக்கை வெளியிட்டு இருக்கும் செய்தியும் அதன் மேல் " திமுகவில் சுரணை உள்ள இந்துகள் யாராவது இருக்கீங்களா?
"என்ற வாசகம் உள்ள புகைப்படமும் தற்போது இணையத்தில் சுற்றி வருகிறது.
இந்துக்களோ, இஸ்லாமியர்களோ, கிருஸ்துவர்களோ யாராக இருந்தாலும் ''சுரணை உடையவர்கள் மட்டும்தான்" திமுகவில் இருக்கிறோம்.
இப்போது தினமணி திரித்து இருக்கும் செய்தியின் பின்னணியைப் பார்ப்போம்.
நம்முடைய கல்வி திட்டத்தில் ஓரியண்டல் பள்ளிகள் என்ற ஒரு அமைப்பு உண்டு.
மொழிச் சிறுபான்மையினர் தங்களின் தாய்மொழியில் பயில்வதற்காக அரசு ஏற்படுத்திய வசதி அது. சம்ஸ்கிருத ஓரியண்டல் பள்ளிகள், உருது ஓரியண்டல் பள்ளிகள் கன்னட தெலுங்கு ஓரியண்டல் பள்ளிகள் என பல ஓரியண்டல் பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன.
இது போக அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தாய்மொழியான தமிழ் தவிர்த்து முதலாம் மொழியாக இந்தி, ஃபிரஞ்ச், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைத் தேர்வு செய்யலாம்.
சமஸ்கிருதத்திற்கு என்று தனியாக ஓரியண்டல் பள்ளிகள் இருந்தாலும் மற்ற அரசு,மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள் விரும்பினால் சமஸ்கிருதத்தை முதலாம் மொழியாக எடுத்துப் படிக்கலாம்.
ஆனால் உருது, கன்னடம்,தெலுகு உள்ளிட்ட பிற மொழி மாணவர்கள் ஓரியண்டல் பள்ளிகளில்தான் அதைப் பயில இயலுமே பிற பள்ளியில் முதன்மை மொழிப்பாடமாக எடுக்க முடியாது.
அதென்ன சமஸ்கிருதத்திற்கு மட்டும் விதிவிலக்கு? வேறொன்றும் இல்லை...
1950 களில் பள்ளிகளில் பெரும்பாலும் பிராமண சமூகத்தவரே ஆசியர்களாக இருந்தனர். ஆங்கிலப் பாடமோ, கணிதமோ அல்லது இன்ன பிற பாடங்களை எடுக்கும் பிராமண ஆசிரியர் பெரும்பாலும் சமஸ்கிருதமும் அறிந்தவர்களாக இருந்த காரணத்தால் அதற்கென்று தனியாக ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டிய கட்டாயம் இல்லாததாலும் இதனால் அரசுக்கு எந்த செலவும் இல்லை என்பதாலும் ஓரியண்டல் பள்ளிகளில் அல்லாமல் பிற பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை பாடமாக படிக்க அரசு அனுமதித்தது. ஆனால் ஒரு மாணவர் தனக்கென்று உருது ஆசிரியரோ அல்லது தெலுகு ஆசிரியரோ கேட்டால் அதற்கென ஒரு ஆசிரியரைத் தனியாக நியமிப்பது கடினம். எனவே அரசு அவர்களை ஓரியண்ட்ல் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கச் சொன்னது.
இப்போது அரசு பள்ளிகளில்,மெட்ரிக் பள்ளிகளில் சமஸ்கிருதம் அறிந்த ஆசிரியர்களும் இல்லை. சமஸ்கிருதத்திற்கு என்று தனியாக ஆசியர்களும் இல்லை.
அதை மொழிப்பாடமாக எடுக்கும் மாணவர்கள் தனியாக பயிற்சி பெற்று எழுதுகின்றனர்.
இதேபோன்ற வாய்ய்பு எங்களும் வேண்டும்
என்றும், பிற மொழியை ஓரியண்டல் பள்ளியில் மட்டும் அல்லாமல் விரும்பும் பட்சத்தில் சமஸ்கிருதத்தைக் கற்பது போல அனைத்து பள்ளியிலும் பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது பிற மொழியினரின் நீண்டநாள் கோரிக்கை. அதற்கான அரசு ஆணை வெளியிட பரிசீலிக்கப்படும்.
என்று தளபதி சொன்னதைத்தான் " தமிழகத்தில் இருக்கும் எல்லாருக்கும் கட்டாய உருது" என்பது போல திரிக்கிறது "பொய் மணி"
--------------------------

No comments:
Post a Comment