பிஜேபி ஹெச்.ராஜாவுக்கு வாழ்த்துகள்.. "தேவதாசி" குறித்து இப்போதுதாவது உண்மையை ஒப்புக்கொண்ட ஹெச்.ராஜாவுக்கு பாராட்டுக்கள்..
தனது பார்ப்பன வகுப்பை சேர்ந்த ஆண்டாளை, "தேவதாசி" என எப்படி குறிப்பிடலாம்?? என்று கவிபேரரசு வைரமுத்துவை தரக்குறைவாக பிஜேபி ஹெச்.ராஜா பேசும் காணொளியை பார்த்தேன்.. மனம் குளிர்ந்தேன்.. இதற்கு காரணமான தந்தை பெரியாரின் பெரும் தொண்டை நினைவுக்கூர்ந்தேன்.. காரணம் கீழே....
பார்ப்பன வகுப்பை சேர்ந்த ஆண்டாளை தேவதாசி என வைரமுத்து சொன்னது மகா தவறு, ஆண்டாளுக்கு மிகபெரிய இழுக்கு என்றால், அந்த "தேவதாசி" என்னும் சொல் ஹெச்.ராஜாவை எந்தளவுக்கு கொந்தளிக்க வைத்துள்ளது என்பது புரிகிறதா?? அப்படியென்றால், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை, பெரிய ஹிந்து கோயில்களில், இந்த தேவதாசி முறை நடைமுறையில் இருந்துவந்ததே.. அதை நிறுத்தக்கூடாது என அப்போதை ஹிந்து வகுப்புவாதிகளும், ஹெச்.ராஜா போன்றோரின் முன்னோர்களும் கடுமையாக எதிர்த்து ஏன்??
குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கோவில்களுக்கு பொட்டுக்கட்டி "தேவதாசிகளாக", பார்ப்பன் புரோகிதர்கள், கோயில் முக்கியஸ்தர்கள், ஊர் பணக்காரர்களுக்கு தாசிகளாக மாற்றும் முறையை ஒழிக்க "தேவதாசி ஒழிப்பு" மசோதாவை, 1930 ஆம் ஆண்டில் கொண்டு வந்து அம்முறையை முற்றிலும் ஒழித்தது திராவிட இயக்கத்தின் முன்னோடியான அப்போதைய நீதிக்கட்சி அரசு. தேவதாசி ஒழிப்பு மசோதாவை கொண்டுவந்து, அதை சத்தியமூர்த்தி அய்யர் போன்ற பெரிய பார்ப்பனத் தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்டமாக மாற்ற பெரும்பாடுபட்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
நீதிக் கட்சி ஆட்சியில் (1930) தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தபோது,
திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.
திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.
கோயில்களிலே தேவதாசிகளாக இருப்பது, தேவர்களுக்கு அடியார்களாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல; அது தெய்வத் தொண்டு - இந்தப் பிறவியில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் -
தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது என்று கூச்சல் போட்டார்.
தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது என்று கூச்சல் போட்டார்.
தந்தை பெரியாரிடம் அறிவுரை கேட்டார் டாக்டர் முத்துலட்சுமி - மறுநாள் அதன்படி சட்டமன்றத்தில் பேசினார்.
`மோட்ச லோகம் செல்வதுபற்றி திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் நேற்று அவையிலே பேசினார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் - தேவர்களுக்கு அடியார்களாக இருந்து, எங்கள் பெண்களே தொடர்ந்து மோட்சத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.
இனிமேல் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரையினர் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்டு, தேவடியாள்களாக இருந்து, அந்தமோட்ச லோகத்துக்குப் போகட்டுமே - அதில் எங்களுக்கு எந்தவித அட்டியும் இல்லை என்று சொன்னாரே பார்க்கலாம் - வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் வாயில் ஆயிரம் ஊசிகள் போட்டுத் தைத்தது போல அடங்கி உட்கார்ந்து விட்டார்..
இப்போது சொல்லுங்கள், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை பார்ப்பன கும்பல் காப்பாற்ற போராடிய "தேவாதாசி" என்னும் சொல், இப்போது எச்ச.ராஜா அய்யர்வாள்களுக்கு எட்டிகாயாய் கசக்க தந்தை பெரியாரும், திராவிட முன்னோடியான நீதி கட்சியும், டாக்டர் முத்துலட்சுமி அமையாரும் தானே காரணம்.
வாழ்க தந்தை பெரியார்.. வளர்க அவர் தொண்டு..
No comments:
Post a Comment