Monday, January 08, 2018

அவையெல்லாம் இந்த சீழ் பிடித்த சமூகத்தின் பொது பிரச்சனை இல்லை

சில பதிவுகளை படித்த பின் அதற்கான பதில் இது.
தலித்துகளுக்காக தலித்தியவாதிகளாக போராடுங்க, யாரு வேண்டாம் என தடுத்தார்கள் ?
இஸ்லாமியர்களை சிறுப்பான்மையினராக ஒடுக்குவதை எதிர்த்து, கை கொடுங்க யார் வேண்டாம் என்றார்கள் ?
பெண்களுக்காக பெண்ணியவாதிகளாக போராடுங்க, யாரு வேண்டாம் என்று தடுக்கிறார்கள் ?
அத விட்டுட்டு நீங்க வந்து கை கோர்க்கும் வரை, அவங்க குரல் எழுப்பாம இருக்கனுமா ? அல்லது நீங்க தான் போராளிகள் என்பதற்கான பேட்டண்ட் ரைட் வாங்கி இருக்கீங்களா ?
அட என்ன தான் உங்க நியாயம் ?
ஜல்லிக்கட்டு என்றவுடன் பதறிகிட்டு போய் கூட்டம் தானா தானே சேர்ந்தது ?
அதே கூட்டம் ஏன் தலித் வன்கொடுமைக்கும் ஜாதிக்கு எதிராகவும் சிறுபான்மையினரை கொல்லும் போதும்... பெண்கள் மீது வன்முறை நிகழ்த்தும் போதும் வரதில்லை...?
ஓ.... அது அவங்கவங்களுக்கான உரிமை போராட்டமா ? அதனால உங்களுக்கெல்லாம் தானா போய் அவர்களோடு போராட முடியாது போல !!! 
அப்ப ஜாதி, ஆணாதிக்கம், மதத்தின் பெயரால் நடக்கும் ஒடுக்குதலிலெல்லாம் உங்களுக்கு பாதிப்பு இல்லை. பாதிக்கப்பட்டது, ஒடுக்கப்பட்ட ஜாதியினர், பெண்கள் மற்றும் இஸ்லாமியர்கள். அதனால அவையெல்லாம் இந்த சீழ் பிடித்த சமூகத்தின் பொது பிரச்சனை இல்லை. மஞ்சு விரட்டு தான் பொது பிரச்சனை. அடேயப்பா... ஜாதி இந்த சமூகத்தின் சீர்கேடு என உணராமல் அது தலித்துக்களின் பிரச்சனை என நினைத்தால், அது பார்ப்பன மேட்டுக்குடி மனநிலை தான்.
கருப்பர் இன போராட்டத்தில் ( சிவில் ரைட்ஸ் மூவ்மண்ட்) தானாகவே போராடியவர்களில் வெள்ளை இனத்தவர்கள் உண்டு. கருப்பர்கள் அவர்களின் உரிமைப் போராட்டத்தை அவர்களே தான் மேற்கொண்டார்கள்.
ஆனால் இங்கே இருக்கும் சில கோட்பாடுவாதிகள் ஜாதி ஏதோ தலித்துகள் பிரச்சனை என்பது போல யோசித்துக் கொள்வதும் ஜாதிய சமூகம் தன்னை கேவலப்படுத்துகிறது என்ற சுரணையின்றி தலித்துகளுக்கு பாடம் நடத்துகிறது.
ஜிக்னேஷ் மேவானி தான் தலித் போராளி, ரஞ்சித் ஜாதி வெறியன் என்று ஒப்பீடு செய்து, தங்களை போராளிகளை ரேட்டிங் செய்யும் போராளி நீதிபதிகளாக தீர்ப்பெழுதுவதெல்லாம் என்ன வகையான சிந்தனையோ ?
ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் உங்கள எல்லாம் வெத்தலை பாக்கு வச்சி அழைக்கனுமோ ? இந்தந்த அடையாளத்தில் தான் போராடுவேன் என்று சொல்லிக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டும், நிதானமாக ஜாதி கட்டமைப்பிற்குள் உட்கார்ந்து கொண்டே புரட்சி பேசறவங்க பேசிக்குங்க. போராடறவங்க போராடுங்க. தலித் என உணராதவனெல்லாம் கொடி பிடிக்க நேரம் பார்த்துட்டு உட்காரட்டும்.
அவன்/ள் தலித், பிறப்பால் ஜாதி கட்டமைப்பை ஏற்க்காதவள்... அவள்/ன் எல்லா வழிகளிலும் போராட்டத்தை தொடங்கிவிட்டான்/ள்.
டாட்.

No comments: