Thursday, January 25, 2018

நம் உணவு... நம் உரிமை

வெஜிட்டேரியன் என்று ஜீவகாருண்யத்தால்
( ????)பெருமிதமாய் உணரும் நண்பர்களை ஒரே ஒரு விஷயம் செய்யக் கேட்கிறேன்.
மாடுகள் பற்றி விசாரியுங்கள்.
உங்கள் அம்மா,அப்பா தாத்தா,பாட்டிகள் மிகுந்த வயதானவர்கள், தற்போது மாடு வளர்ப்பவர்கள், மாடுகளை மொத்தமாக பாலுக்கு வளர்ப்பவர்களிடம் அந்த மாடுகள் என்னவாகின்றன என்று கேளுங்கள்.
”அத அதுகப்புறம் கொடுத்திருவோம். வித்திருவோம்” என்று சொல்பவர்களை கிடுக்கிப்பிடியாய் பிடித்து “யாருக்குக் கொடுப்பீர்கள். எதற்கு கொடுப்பீர்கள்” என்று கேளுங்கள்.
கொஞ்சம் வசதிக்குறைவான வேலைதான்.
ஆனால் இதைச் செய்யுங்கள்.
பருப்பும் நெய்யும் கொள்ளை விலை விற்கும் போது மிக மலிவாக கிடைக்கும் மிக அருமையான ஒரு புரத உணவை இப்படி மொக்கைக் காரணங்களால் ஒதுக்கித் தள்ளுவது இந்தியாவுக்கு பின்னடைவையே தரும்.
இந்தியாவின் ஜனத்தொகை, இந்தியாவின் உணவு தேவை, இந்தியாவின் குழந்தைகளும் கர்பிணிகளும் அனுபவிக்கும் புரதக் குறைவினால் வரும் நோய்கள் இது பற்றியெல்லாம் கொஞ்சம் படியுங்கள்.
1970 யில் உலக மக்கள் தொகை எவ்வளவு இருந்தோ அதிலிருந்து இப்போது இருமடங்காகி இருக்கிறது. அதாவது 100 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
இந்தியாவின் 1970 மக்கள்தொகை 55 கோடி. இப்போதைய மக்கள் தொகை 133 கோடி.
(133/55 x 100) -100 = 141
அதாவது உலக மக்கள்தொகை இருமடங்காகி இருக்கும் போது, இந்தியாவின் மக்கள்தொகை மட்டும் இரண்டரை மடங்காகி இருக்கிறது.
நமக்கு எவ்வளவு புரதம் தேவையாயிருக்கும். இதையெல்லாம் உணராமல் மேலோட்டமாக சிந்தித்துக் கொண்டிருப்பதற்காக நாம் பட்டம் எல்லாம் பெற்றோம்.
சாதரண உணவுச்சங்கிலி விஷயத்தை மிகுந்த காம்பிளிகேட்டாக புரிந்து கொண்டு கவனம் செலுத்த எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது ஒருவன் உணவு உரிமையில் தலையிட்டுக் கொண்டு, அசைவம் சாப்பிடுபவன் மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டு
எப்போது திருந்தப் போகிறோம் நண்பர்களே.
புனிதத்துக்கும் சைவத்துக்கும் சம்ந்தமில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த வேலையை அசைவம் சாப்பிடுவர்கள்தாம் ஆரம்பித்து வைக்கிறார்கள். வெள்ளி செவ்வாய் சனி அசைவம் சாப்பிடுவதில்லை. கோவிலுக்கு போவதானால் அசைவம் சாப்பிடுவதில்லை. இதிலிருந்து அவர்களே அசைவம் என்பதை புனிதமில்லாத பொருளாக கட்டமைக்கிறார்கள். அங்கிருந்து வரும் ஆழ்மன உணர்வுதான் இறுதி வரை ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியை அடையச் செய்கிறது.
-அசைவத்துக்கும் இறைவழிபாட்டுக்கும் சம்பந்தமில்லை
- அசைவத்துக்கும் புனிதத்துக்கும் சம்பந்தமில்லை.
-அசைவத்துக்கும் ஆன்மிகத்துக்கும் உணர்வுக்கும் சம்ந்தமில்லை
-அசைவத்துக்கும் உடல்நலமின்மைக்கும் சம்ந்தமில்லை.
- பிராய்லர் கோழியில் ஸ்டீராய்ட் எல்லாம் இல்லை. ஸ்டீராய் போட்டு வளர்த்தால் ஒரு கோழி ஆயிரம் ரூபாய்க்கும் மேலேதான் விற்க வேண்டும்.
- குறைவான உடல் உழைப்பை கொண்டவர்கள் அசைவம் சாப்பிடத் தேவையில்லை என்ற கருத்து தவறானது.
இதையெல்லாம் புரிந்துக்கொள்ளுங்கள்.
இன்றிலிருந்து வெள்ளி செவ்வாய் சனி போன்ற கிழமைகளில் சைவம் என்பதை முதலில் கட் செய்யுங்கள். முட்டையாவது சாப்பிட்டு அந்த சைவ புனித கோட்பாடுகளை அறுத்துவிடுங்கள்.
என் மகளை அப்படித்தான் நான் வளர்த்து வருகிறேன். அவளுக்கு வெள்ளி சனி செவ்வாய் தெரியாது.
நினைத்துப் பாருங்கள். உயிர்தான் உணவாக முடியும். உயிரிலிருந்து வராததை Anything Inorganic ஆன பொருளை உணவாக கொள்ள முடியுமா? உப்பு ஒரு Inorganic பொருள். அதை சுவைக்குப் போட முடியுமேதவிர உணவாக கொள்ள முடியாது.
உங்கள் தட்டில் விழும் எதற்கும் ஒரு உயிர் உண்டு.
இளைஞர்களே உங்கள் அம்மா அப்பா குருநாதர்கள் அனைவரும் மரமண்டைகள். அவர்களைத் திருத்த முடியாது.
ஆனால் நீங்கள் மாற்றம் கொண்டு வரலாம். கொஞ்சம் யோசித்தால் போதும்.
நம் உணவு... நம் உரிமை

கோவில் என்பது பார்ப்பனர்களால் கட்டமைக்கப்பட்டது. அவன் தான் அசைவம் சாப்பிட்டால் கோவிலுக்கு வராதே என்றும் பூனூல் போட்டிருக்கும் கடவுளுக்கு உகந்ததல்ல என்ற கட்டுக்கதையை கட்டவிழ்த்து விட்டான். 

கடவுள் நம்பிக்கை கொண்ட நம் முன்னோர்கள் கூட்டம் உண்மை என்று நம்பி முருக பக்தர்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சாப்பிடுவதை நிறுத்தி கொண்டார்கள்.

இவர்களுடைய உண்மையான தெய்வங்களான ஐயனார் முனியப்ப சாமிகளுக்கு கிடா சேவல் பன்றிகளை பலியிட்டு அங்கேயே சமைத்து உண்டுவிட்டு வந்த தமிழன் பார்ப்பனன் பேச்சை கேட்டு இன்று ஞாயிற்று கிழமைகளில் கூட பெருமாளுக்கு சாப்பிடாமல் வாழும் வாழ்வியல் முறைக்கு சென்று விட்டான்.

No comments: