Friday, January 26, 2018

தமிழ் தாய் வாழ்த்து & மனோன்மணியம் சுந்தரனார்... -- சில தகவல்கள்

தமிழ் தாய் வாழ்த்து & மனோன்மணியம் சுந்தரனார்... -- சில தகவல்கள்..
நீராரும் கடலுடுத்த என துவங்கும் தமிழ் தாய் வாழ்த்தை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, அவர் வாழ்ந்த காலக்கட்டம் 1855 - 1897.
நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது, அந்த நூலின் வணக்கப் பாடல்தான், "நீராரும் கடலுடுத்த.." என்னும் பாடல்..
"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
- அதாவது, "ஆரியம் போல உலகவழக்கழிந்து சிதையவில்லை.. " என்ற வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்கப்பட்டு, 1970ஆம் ஆண்டு கலைஞர் திரு.கருணாநிதியின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.
அமரிக்காவில் சமய மாநாட்டில் கலந்துகொண்டபின், விவேகானந்தர் இங்கே திருவனந்தபுரத்தில் இந்து மறுமலர்ச்சியைப் பற்றிப் பேசியபோது, அவருடைய முகத்துக்கு நேரே "நாங்கள் இந்துக்கள் இல்லை" என்று சொன்னவர் தமிழ்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள்... "நீங்கள் யார்" என்று விவேகானந்தர் கேட்டபோது, "தமிழர்களுக்குத் தனிச் சமயங்கள் உண்டு அந்தச் சமயங்களுக்குத் தனித் தத்துவங்கள் உண்டு' என்றார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை... இவைகள் நடந்தது 1890களில்.. அப்போது திராவிட இயக்கங்களோ, பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரங்களோ இல்லை..

No comments: