இது 1929ல் இந்தியாவில் இருந்த நிலைமை. சைமன் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்ட ரிப்போர்ட். ஒவ்வொரு மாகாண சட்டமன்றங்களிலும் எத்தனை பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக இந்திய அரசு சட்டம், 1919 படி கவர்னரால் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கும் அட்டவணை இது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது மெட்ராஸ் மாகாணத்தில் மற்ற எல்லா மாநிலங்களை விட அதிகமான தாழ்த்தப்பட்ட பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டது தான். மெட்ராஸ் மாகாணத்தில் 65லட்சம் தலித்துகளுக்கு 10 பிரதிநிதிகள், வங்காளத்திலும் உ.பியிலும் 1 கோடி தலித்துகளுக்கு 1 பிரதிநிதி. 1900களில் தமிழகத்தில் தலித் அரசியல் பிற மாநிலங்களை காட்டிலும் மிகவும் முன்னேறிய நிலையில் இருந்ததற்கான சான்று இது. உரிமைக்காக தொடர்சியாக தலித்துகள் சார்பாக அவர்களின் பிரதிநிதிகள் ஆங்கிலேய அரசிடம் வைத்த கோரிக்கைகளின் விளைவு இது.
No comments:
Post a Comment