Tuesday, June 14, 2022

படி..படி..படி...

 படி..படி..படி...
படிக்காம ஜெயிச்சவன் ஒருத்தர் இரண்டுபேர காட்டலாம் படிச்சு ஜெயிச்சவன் லட்சம் பேர என்னால காட்டமுடியும் .. படிக்காம ஜெயிக்கலாம் அப்படி எவனாவது சொன்னா நம்பாதே ..
இவர்களெல்லாம் முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில்  தவறான பாதையை காட்டும் சூழ்ச்சி ..
தமிழ்நாட்டின் தலைவன்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்

M. K. Stalin
Chief Minister of Tamil Nadu
..
ஆம்
படிக்காம விவசாயம், பண்ணு ஆடு வளர்க்க போ.. லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம் .. IPS வேலைய ராஜினாமா பண்ணிட்டு ஆடு வளர்த்தேன்  என படிக்க  நினைக்கிறவன் மனதில் விசத்தை விதைக்கிற "பசுமைவிகடன்" விவசாயம் பண்ணி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இன்ஜினியர் என மயக்கும் வார்த்தைகளை நம்பாமல் படியுங்கள் .. படிப்பு மட்டுமே ஒருவனின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் ..
..
எங்கே படிச்சு மேல வந்துடுவானோ என்கிற அச்சம் பன்நெடுங்காலமாய் கல்வி மறுக்கபட்டவன் உயரத்தை நோக்கி வரும் போது அவனை திசைமாற்றும் சதி.. அதை நம்பாமல் கல்வி ஒன்றே குறையாத செல்வம் .. எப்படியாவது படித்துவிடு என முதலமைச்சர் கவலைக்கொள்கிறார் .. எக்கேடுகெட்டால் என்ன மாட்டு மூத்திரமும் புல்டோசரும் முஸ்லிம்களும் இருக்கும் வரை நம்மை அசைக்கமுடியாதென மக்களை மடையர்களாக வைத்திருக்க நினைக்கும் காலத்தில் படி என்கிறார் திராவிட மாடல் முதல்வர் ..
..
காலையில படி மாலையில விளையாடு என பாரதி பாட்டை பாடமாக்கி அவர்கள் மட்டும் எல்லா நேரமும் படித்துக்கொண்டிருக்க பாவேந்தர் தான்
"காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி"..
படி படி படி என பாடினார் ..
..
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான் திராவிடத் தலைவர்கள் படித்த சமுதாயம் உருவாக வேண்டுமென பாடுபட்டார்கள், பாடுபடுகிறார்கள் ..  
மிக முக்கியமான காலகட்டத்தில்
வரலாற்றை மாற்றி எழுத துடிக்கும் சனாதனசக்திகள், தமிழகத்தின் விடுதலை வரலாற்றை கூட மறைக்க முயலும் பாசிச சக்திகள், சாதிமத துவேசத்தை எளிதாக நம்மிடையே கடத்த முயலும் இக்காலகட்டத்தில் .. மிகப்பெரிய மாற்றம் என்ற பெயரில் பொய்புரட்டு புராணத்தை புகழ்ந்து கல்வியில் திணிக்க முயலும் வேளையில், எதையும் ஆய்ந்தறிந்து சரியானதை தேர்வு செய்து மாணவச் செல்வங்களின் நெஞ்சில் நல்லதை விதைக்க சரியானவரிடம் அதிகாரம் வந்திருப்பதும் அதை அவர் மிக சாதூர்யமாக கையாள்வதும் மகிழ்வை தருகிறது "எண்ணும் எழுத்தும்"..
..
இந்திய ஒன்றிய அரசு (எல்லாமாநிலத்திற்கும்) ஒதுக்கியதை விட அதிகமாக நிதியை ஒதுக்கி வலுவான கல்வி கட்டமைப்பை தருகிறார் .. நம் பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும்..
ஆம் அப்போது தான் இச் சமூகத்தில்
 சிறந்தவர்களாக பண்பாளர்களாக, நல்லொழுக்கமுள்ளவர்களாக, சாதிமதவெறியெனும் சாக்கடையில் மூழ்காமல் எதையும் அறிவுக் கொண்டு சிந்திக்கும் நல்லவர்களாக உருவாக்குவோம் ..
..
நல்லதை விதைப்போம்
வருங்காலம்  நன்மையே பயக்கும்

No comments: