பிரபல தீஸிஸ் திருடனின் பிறந்தநாள்
ஆசிரியர்_தினமா.!?
ஜாதுநாத் சின்ஹா கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1915ல் இளங்கலை தத்துவவியல் முடித்து, புகழ்பெற்ற ஃபிலிப் சேமுயல் ஸ்மித் மற்றும் க்ளின்ட் நினைவு பரிசுகளையும் வென்று, 1917ல் முதுகலையும் முடிக்கிறார். உடனடியாக கல்கத்தா ரிப்பன் கல்லூரியில் தத்துவவியல் துறை துணை பேராசிரியராக தேர்வாகி பணி செய்கிறார்
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பிரேம்சந்த் ராய்சந்த் மாணவர் கல்வி உதவித்தொகைக்காக 1922ம் ஆண்டு, “இந்திய உளவியல் ஞானம்” என்ற தலைப்பில் தொகுதி 1 மற்றும் 2 என்ற இரண்டு ஆராய்ச்சி ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க தொடங்குகிறார். அதற்கு தேர்வாளராக பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். ஆராய்ச்சியின் ஒவ்வொரு வகுப்பீடும் தேர்வாளர் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் சமர்பிக்கப்படுகிறது. 1923ம் ஆண்டு ஜாதுநாத் சின்ஹாவுக்கு புகழ்பெற்ற க்ரிஃப்ஃபித் பரிசும் மௌஅத் பதக்கமும் வழங்கப்படுகிறது. 1925ல் ஆராய்ச்சியின் முழு அறிக்கையும் சமர்பிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஜாதுநாத் சின்ஹா தனது ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் சாறுகளை மீரட் கல்லூரி இதழில் 1924 மற்றும் 1926ம் ஆண்டுகளில் வெளியிடுகிறார்.
ஜாதுநாத் சின்ஹாவினுடைய ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் பெரும்பகுதியை திருடி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தனது இந்திய தத்துவம் புத்தகத்தின் இரண்டாம் தொகுதியில் பதிந்து வெளியிட்டிருப்பதை நவம்பர் 1928ல் கண்டுபிடிக்கப்பட்டது.
சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் இந்த பதிப்புரிமை மீறல் தொடர்பாக, 20.12.1928 தேதியிட்ட புகார் கடிதம் ஒன்றை மாடர்ன் ரிவ்யூவ் இதழுக்கு அனுப்புகிறார் ஜாதுநாத். 1929 பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் புகார் கடிதங்களை அனுப்புகிறார். அவை அதே இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவை பலனிக்காதததால், 1929 ஆகஸ்ட் மாதம், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மீது தனது ஆராய்ச்சி ஆய்வறிக்கையை திருடிவிட்டதாக, கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்குகிறார் ஜாதுநாத்.
சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நடவடிக்கையால் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மானம் கப்பலேறுவதை சகிக்க முடியாமல், சக பேராசிரியர்களின் துணையோடு, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு பேச்சுவார்த்தை நடத்தி மே 1933ல் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
பிறகு 1952ல் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி, 1954ல் பாரத ரத்னா விருதையும் வாங்கிக் கொண்டார்.
பின்பு 13.05.1962ல் இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், அதன் பிறகு வந்த தனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட அவரே வற்புறுத்தினார். அதன் விளைவாக 05.09.1962ம் ஆண்டு முதன்முதலாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
இப்படி தனது மாணவனின் ஆராய்ச்சி அறிக்கையைத் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு, பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி பாரத ரத்னா விருது வாங்கிய சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது வரலாற்றுப் பிழை
நியாயமாக பார்த்தால் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலேவின் பிறந்தநாளான ஜனவரி 3 தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட வேண்டும்.
No comments:
Post a Comment