போலீஸ் என்பது ஒரு monolithic organization - பல மக்கள் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஜீவன். அதில் இருப்பவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சேர்ந்து, ஒருவருக்காக மற்றறொருவர் என இருப்பவர்கள். காவல்துறை (Department ) தான் முக்கியம், அதில் உள்ள காவலர்கள் அனைவரும் ஒரு என்ஜினில் உள்ள சிறு பகுதி போல. துறையின் ஒட்டு மொத்த பலமும் அவர்கள் ஒற்றுமையில்தான் உள்ளது. ஒரு எறும்பு புற்றில் இருக்கும் -- புற்றினால் எறும்பு, எறும்பால் புற்று என்பது போல இருப்பவர்கள்.
ஒரு பெரிய அதிகாரி கல்லூரிகளுக்கு சென்று "காவல்துறை உங்கள் நண்பன், உங்களுக்காகவே செயல்படும் உங்கள் சேவகன்" என்று கூறுவதெல்லாம் இடது கையால் தட்டிக் கொடுத்து வலது கையால் பிடரியில் அடிப்பது போல. கூட்டிக் கழித்துப் பார்த்தால், கடைசியில் அவரும் காவலரே.
மேலிடத்தில் உத்தரவு கொடுத்தால் "உங்கள் நண்பன்" என்று சொன்னதற்கு ஆரவாரம் செய்தவனை கட்டுப்பாடு இழந்து, கண்ணியம் இல்லாமல் (அ ) தயவு தாட்சணியம் பார்க்காமல் பூட்ஸ் காலால் மிதிக்கும் காவல்துறையின் ஒரு கடமை மிக்க அலுவலரே.

No comments:
Post a Comment