Monday, April 17, 2017

ஒரு பஞ்சாயத்து ஓடிகொண்டிருக்கின்றது, அதாவது காமராஜருக்கு பின் அணைகளை கட்டியது யார்?
காமராஜர் அடித்து விளையாடிவர், டெல்லிவரை அவருக்கு செல்வாக்கு இருந்தது, அவர் கேட்டால் நேரு முதல் சாஸ்திரி வரை மறுபேச்சின்றி கொடுத்தார்கள், இதனால் காமராஜர் பல திட்டங்களை கொண்டுவர முடிந்தது
இந்நிலையில்தான் அண்ணாவின் ஆட்சி தொடங்கிற்று, மறைக்க ஒன்றுமில்லை, டெல்லியினை எதிர்த்து ஆட்சி செய்வது ஒரு கலை, அரசியல் அப்படித்தான். பல பிரச்சினைகளை சமாளித்து ஆள வேண்டும், மாநில அரசியலின் நிலை அது.
மத்திய அரசோடு மல்லுகட்ட வேண்டும், அதனுடன் வாதிட வேண்டும் , நிலமை முற்றினால் பிரிவினை வாதம் பேசிவிடவும் கூடாது, ஒரு மாதிரியாக கையாள வேண்டிய சிக்கல் நிறைந்தது மாநில கட்சிகளின் மாநில ஆட்சி
அண்ணா அதில் சமார்த்தியமாக தேர் நகர்த்தினார், மக்களிடம் தன் பெயர் கெடாமல் அதே நேரம் டெல்லியினை பகைக்காமல் ஆண்டார், தமிழகத்திற்கு செய்யவேண்டியதை செய்தார், தமிழ்நாடு பெயர் உட்பட‌
பின் கலைஞர் வந்தார், சும்மா சொல்ல கூடாது மதுகடைகள் திறந்ததை தவிர வேறு ஒரு குறையும் சொல்லிவிட முடியாது, கள்ளசாராய சாவுகளும் இன்னும் பல சிக்கல்களும் அவரை அதற்கு தூண்டின, மக்களின் எதிர்ப்பால் அதனை மூடும் மனநிலையில்தான் அவரும் இருந்தார்
அணை கட்டுவதில் திமுக அரசு நன்றாகத்தான் செயல்பட்டது, அணை கட்டுவது ஜெயா சமாதி போன்ற எளிதான பணி அல்ல, அதற்கு பல இயற்கை அமைப்புகள் பொருந்திவரவேண்டும்
அப்படி இல்லாவிட்டால் சிறு அணைகள்தான் கட்டமுடியும், கலைஞர் காலத்தில் அந்த அரசால் முடிந்த அளவு சிறு, பெரும் அணைகள் கட்டத்தான் பட்டன‌
கலைஞர் நிம்மதியாக ஆண்டது வெறும் 3 ஆண்டுகளே, அதன் பின் அவருக்கு நெருக்கடி பல வகையில் தொடங்கியது, இந்திரா ஒரு பக்கம் , ராமசந்திரன் ஒரு பக்கம் என கிளம்பினார்கள்
மிசா எல்லாம் அசைக்கமுடியாத கலைஞரை ராமசந்திரன் அசைத்தார், 1977ல் ஆட்சிக்கு வந்தார்
ராமசந்திரன் டெல்லி கைப்பாவை, அவர் நினைத்திருந்தால் பல நல்ல திட்டங்களை கொண்டுவந்திருக்கலாம், ஆனால் சறுக்கினார்
எந்த பெரும் தொலைநோக்கு திட்டமும் அவரிடம் இல்லை, சத்துணவு போட்டார், ஆனால் அரிசி வரும் வழி அறியவில்லை, மதுகடைகளை மறுபடி திறந்தார்,
அவர் கவனமெல்லாம் ஆட்சி, மேக் அப், தாய்குலங்களை கவர சரோஜா தேவி, லதா, ஜெயலலிதா என்றே இருந்தது
முல்லை பெரியாறு அணை மட்டத்தினை குறைத்து கொண்டது , ராஜிவ் அமைதிபடையினை அனுப்பும்பொழுது மவுனம் காத்தது, ராஜிவ் எங்களை ஏமாற்றினார் என்ற பிரபாகரனின் குரலை கண்டுகொள்ளமால் இருந்தது என ஏக சர்ச்சைகளுக்கு சொந்தக்காரன் அந்த ராமசந்திரன்
10 ஆண்டுகள் ஆண்டுவிட்டு அடுத்து ஜெயாவிற்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு மெரீனா சென்றார் நடிகர் ராமசந்திரன், அவர் மறையும்பொழுது விவசாயத்திற்கு ஒன்றும் செய்திருக்கவில்லை, விவசாயி படம் மட்டும் நடித்திருந்தார்
ஜெயா இன்னும் அகம்பாவி, சசிகலா குடும்பத்திற்கு நன்றிகடன் காட்டினார், சொத்துக்களை குவிப்பதில் அவருக்கு கவனம் இருந்தது, கூடவே 30 வயது குழந்தையினை தத்தெடுத்து அதற்கு திருமணமும் செய்துவைத்து தன்னை தானே தெரசா என சொல்லிகொண்டார்
அணை கட்டும் திட்டமோ, தொலைநோக்கோ அவரிடம் இல்லை,
ஒரு மாதிரியான அடக்குமுறை அவரிடம் இருந்தது, அதுவும் ஆட்சிபற்றி சொல்ல்விட்டால் அவதூறு என வழக்கு தொடரும் அளவிற்கு வன்மம் அவரிடம் இருந்தது, ஒரு ராணியின் மனநிலை அது..
2001ல் ஆட்சிக்கு வந்தாலும் ஜெயா திருந்தியதாக இல்லை, மன்னார்குடி குடும்பத்தில் அவர் எடுத்தமுடிவெல்லாம் வெறும் 1 மாதம் கூட தாண்டவில்லை,
பதவியில் இருந்தபொழுதே சிறைசென்ற முதல்வர் எனும் பெரும் சாதனையினை தவிர எதுவும் ஜெயா செய்ததில்லை, அதனையும் மீறி அவர் வென்றதெல்லாம் தமிழக சாபக்கேடு அல்லது ஜெயாவின் பூர்வ ஜென்ம புண்ணியம்..
1996ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் நல்ல விஷயங்களை செய்தார், பல அணைகள் தமிழகத்தில் கட்டபட்டன‌
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் மட்டும் 8 அணைகள் கட்டபட்டன, அளவுகளில் வேறுபாடு உண்டு. காரணம் கைபற்ற வேண்டிய நிலங்களை தமிழக அரசால் எடுக்க முடியவில்லை, தொழிலதிபர்கள் பலம் அப்படி, மத்திய அரசின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு
இன்னும் தமிழகத்தில் பெரும் அணைகள் உருவாகாமல் இருக்க தொழிலதிபர்கள் வளைத்து வைத்திருக்கும் மலைகளும் காரணம், கேட்டால் நீதிமன்ற கதவுகளை தட்டுவார்கள்,அவர்களில் பலர் ராமசந்திரன் கட்சி என்பது குறிப்பிடதக்கது
இப்படியாக கலைஞர் டெல்லி, அதிமுக இன்னபிற அட்டகாசங்களை சமாளித்துதான் ஆட்சி நடத்தினார்
2006ல் அவர் மறுபடியும் ஆட்சிக்கு வரும்பொழுது, கலைஞருக்கு சில சோதனைகள் உள்ளும் புறமும் வந்தன, இன்னும் ஆதாரம் சமர்பிக்க முடியாத ஸ்பெக்ட்ரம் வழக்கு விஸ்வரூபமெடுத்தது, ஒரு பக்கம் மெஜாரிட்டி இல்லாமல் தடுமாறினார்
அப்பொழுதும் புதிய சட்டமன்றம், அண்ணா நூலகம், திருவள்ளுவர் சிலை என அவர் செய்ய தவறவில்லை
ஆக சுருக்கமாக இப்படி பார்க்கலாம்
கிடைத்த காலமெல்லாம் ஏதாவது ஒரு வகையில் தன் முத்திரையினை தமிழகத்தில் பதித்தது திமுக‌
தமிழ்நாடு பெயர்மாற்றம், சீர்திருத்த திருமண சட்டம், வள்ளுவர் கோட்டம், பூம்புகார், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, எட்டயபுரம் பாரதி நினைவகம் , இன்னும் பல வரலாற்று அடையாளம் எல்லாம் அவர்கள் கொடுத்தார்கள்
அம்பேத்கர் சட்ட கல்லூரி , இட ஒதுக்கீடு, எல்லாம் அவர்கள் கொடுத்தார்கள்
சென்னை கடற்கரையில் தமிழ் அறிஞர் சிலை எல்லாம் அவர்களால் நிறுவபட்டது
சென்னை போக்குவரத்து போல எல்லா மாநகராட்சிகளும் அவர்களால் சீர்பட்டது, வள்ளுவர் சிலை வரை கலைஞர் நன்றாகத்தான் செய்தார்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வரை அவர்கள் திட்டத்தில் குறை இல்லை..
இப்படி ஒப்பிட்டு பார்த்தால் ராமசந்திரன் ஜெயா சாதனை என்ன?
ஒரு புல்லும் புடுங்காமலே இறந்தார் ராமசந்திரன், ஒரு திட்டமும் அறிவும் அவரிடம் இல்லை, தொப்பியும் கண்ணாடியும் சிரிப்புமாகவே செத்தார், அதுதான் ஆட்சி
ஜெயா போயஸ், சிறுதாவூர், கொடநாடு என பங்களாக்களாக கட்டினார், மன்னார்குடி குடும்பம் எல்லாம் மன்னர்கள் ஆனது
கலைஞர் வள்ளுவர் கோட்டம், முதல் புதிய சட்டமன்ற கட்டடம் வரை கட்டிவைத்துவிட்டுத்தான் ஓய்ந்தார்
ஜெயா செய்ததெல்லாம் தனக்காக, கலைஞர் செய்ததெல்லாம் மாநிலத்திற்காக, உள்ளங்கை நெல்லிகனியான உண்மை இது
ராமசந்திரன், ஜெயா போல பெரும்பான்மையும், டெல்லி ஆதரவும் இன்ன பிற வசதிகளும், ஆளும் வர்க்க ஆதரவும் கிடைத்திருந்தால் கலைஞர் இன்னும் தூள்பறத்தியிருப்பார்
நல்ல பேட்டை வைத்து கொண்டு, குஜராத் ஐபில் பவுலர்கள் போல சொத்த பேட்டை வைத்துகொண்டு சிக்சர் அடிப்பதில் பெருமை இல்லை
ஓட்டை பேட்டினை வைத்து கொண்டு, அதன் உடைந்த கைப்பிடியினை பிடித்துகொண்டு நல்ல பவுலர் பந்தில் சிக்சர் அடிப்பதுதான் சாமார்த்தியம்
கலைஞர் இரண்டாம் வகை, அவருக்கு இருந்த அல்லது உருவாக்கபட்ட எல்லா சிக்கல்களையும் தாண்டி இவ்வளவு செய்திருப்பது பெரும் விஷயம்..
தமிழகத்திற்கோ, தமிழனுக்கோ ஒரு நல்ல காரியமும் செய்யாதவர்கள்தான் ராமசந்திரனும், ஜெயலலிதாவும், இன்று இல்லையென்றாலும் ஒரு நாள் புரியும், வரலாறு அப்படித்தான் பதிவு செய்திருக்கின்றது
ஒரு காலமும் அதிமுக அரசின் சாதனையுடன் கலைஞர் அரசினை ஒப்பிட முடியாது, ஏணி வைத்தாலும் எட்டாது
ஏன் ஏணியே வைக்கமுடியாது, அவ்வளவு பெரும் இடைவெளி அது

Stanley Rajan

source: https://www.facebook.com/rajarajan.rajamahendiran/posts/10207827885049676

No comments: