Thursday, January 17, 2019

பார்ப்பனர்களின் கையில் அகப்பட்ட தயிர் சோத்தைப் போல வதைபடும் இந்திய ஊடகங்களின் ethics

"ஏழைங்க, மிடில் க்ளாஸ்ட்ட புடுங்கி இப்படி பணக்காரங்க கிட்ட கொடுக்கிறியே... நீயெல்லாம் உருப்படுவியா?" என்கிற தொனியில் அந்த பாஜககாரர் மோடியிடம் லைவ் நிகழ்ச்சியில் கேள்வி கேட்டுவிட்டார். பதில் சொல்ல முடியாமல், "ச்சலியே புடுச்சேரி கோ வணக்கம்," என நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓடிவிட்டார் மோடி. இது நாமெல்லாம் காணொளியில் கண்ட உண்மை சம்பவம்.
இச்சம்பவத்தை, "மோடியை ஓட விட்ட பாண்டிச்சேரி பாஜககாரர்," என ஏதாவது செய்தித்தாளில் செய்தி பார்த்தீர்களா?
ஆனால் துபாயில் ராகுல்காந்தியை திணறடித்த சிறுமி என்கிற செய்தியை இவர்களாகவே உருவாக்கி, நடக்காத ஒரு செய்திக்கு ஏதோ ஒரு சிறுமியின் புகைப்படம் ஒன்றை எடுத்து மார்ஃப் செய்து வெளியிட்டிருக்கிறது தினமலர், தினகரன் உள்ளிட்ட பத்திரிக்கைகள். இதை பொய் என பிபிசி செய்திவெளியிட்டவுடன் தினகரன் மட்டும் மன்னிப்பு வெளிட்டுள்ளது.
மோடியை மாற்றினாலோ, பாஜகவை மாற்றினாலோ நிரந்தரமாக எதுவும் மாறாது. பார்ப்பனர்களின் கையில் அகப்பட்ட தயிர் சோத்தைப் போல வதைபடும் இந்திய ஊடகங்களின் ethics சரிசெய்யப்பட்டால் மட்டும்தான் உண்மையான ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இல்லையென்றால் எல்லாமே கேலிக்கூத்துதான்.

No comments: