Saturday, April 27, 2019

பெரியாரை ஏன் நாம் தந்தை பெரியார் என அழைக்கப் பெற்றோம்

அறிவோம் அரசியல்...
         பெரியாரை ஏன் நாம் தந்தை பெரியார் என அழைக்கப் பெற்றோம், ஒரு முறை பச்சையப்பன் கல்லூரியின் பேராசிரியரும், மனோதத்துவ நிபுணருமான பெரியார்தாசன் அவர்கள், அயல் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அப்போது லண்டன் மாநகரத்திற்கு சென்ற  பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு பேராசிரியரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது, இருவரும் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தன் கையில் வைத்திருந்த தந்தை பெரியார் அவர்கள் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? என்கிற புத்தகத்தை அவருக்கு பரிசளித்தார் பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், அதை இரண்டு நாள் படித்துவிட்டு மீண்டும் தொடர்புகொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், பெரியார் என்பவர் யார் அவர் உங்கள் நாட்டில் என்ன? பெரிய (ஸ்காலரா?) எனக் கேட்டுள்ளார், அதோடு அவர் விடவில்லை  ஒரு மணி நேரம் அந்த புத்தகத்தை குறித்து  பேசிக் கொண்டிருந்தாராம், உடனே பெரியார் தாசன் குறுக்கிட்டு இல்லை இல்லை அவர் ஒன்றும் நீங்கள் சொல்லும் அளவுக்கு படித்தவர் அல்ல அவர்தான் எங்கள் நாட்டின் தந்தை எனப் போற்றப்பட்ட பெரியார் என கூறியுள்ளார்,

                  அந்த அளவுக்கு பெண் விடுதலை குறித்து அன்றைக்கே உலகத்தில் எவரும் சிந்திக்காத காலகட்டத்தில் பெண் விடுதலை குறித்து கருத்துக்களை சிந்தித்து பொது வெளியில் கொண்டு சேர்த்தவர் அதற்காக போராடியவர் தந்தை பெரியார் எனலாம், அன்றைக்கு தமிழகத்தில் இருந்த பெண்கள் அனைவரும் ஒரு சிறப்பு மாநாடு ஏற்பாடு செய்து அதில் ஈவே ராமசாமி அவர்களை அழைத்து இன்று முதல் எங்களுக்கு நீங்கள் தந்தை பெரியார் என பட்டம் கொடுத்தார்கள் என்பது வரலாறு, இதைத்தான் ஒருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் பெண்களைப் பார்த்து பெண்ணே உன்னை பெற்றவர் பெரியார் என எழுதி தீர்த்தார்,

      சரி நாம் இப்போது விடயத்திற்கு வருவோம், #சீமானின்குஞ்சி ஒருவர் ஏன் பெரியாரை தந்தை பெரியார் என்கிறீர்கள் அவர் என்ன உங்க அம்மாவோடு கூடி கலவி புரிந் தாரா? என்பன போன்ற கேள்விகளை முன் வைக்கிறார், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை, காரணம் சீமானின் வார்ப்புகள் அப்படி என்பதை நாடு நன்கு அறியும், நாம் கூறுவது ஒன்றுதான், இந்தியாவில் சுதந்திர விடுதலைக்குப் போராடிய பெருமகன் காந்தியாரை தேசப்பிதா என்று கூறும்போது, பிரதமர் நேரு அவர்களை நேரு மாமா என்று அன்போடு அழைக்கும் போது, இந்திரா காந்தி அவர்களை அம்மையார் இந்திரா காந்தி என்று அழைக்கும் போது, சோனியா காந்தியை அன்னை சோனியா என்று அழைக்கும்போது, செல்வி ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்கும் போது, அவ்வளவு ஏன் சாதி தாஸ் அவர்களை ஐயா என்றும் அவர் மகன் சின்ன அய்யா என்று இருக்கும்போது,

         ஒட்டுமொத்த உலக பெண் இனத்திற்கும் குரல் கொடுத்த மாபெரும் தலைவன் பெருமகன் தந்தை பெரியார் அவர்களை தந்தை பெரியார் என்று அழைப்பதும், அப்படி அழைப்பவர்கள் தாயின் நடத்தையை இழிவுபடுத்துகிறார்கள் என்றால் இவர்கள் எப்பேற்பட்ட மன நோயாளிகளாக இருப்பர், என்பதை உங்கள் நடுநிலைக்கு விடுகிறேன் என அறிவோம் அரசியல் தெளிவோம்

No comments: