Friday, May 17, 2019

வீழ்ந்த சிவாஜி

வீழ்ந்த சிவாஜி

1) சூத்திரனாகிய சிவாஜி, பார்ப்பன தாசன். அவன் மூடி சூட ‘சத்திரியனாக’ வேண்டும். அதனால் பார்ப்பனர்கள் முடிசூட்ட மறுத்தனர்.

2) பெரும் தொகையை வாங்கிக் கொண்டு காசியி லிருந்து காகப்பட்டன் என்ற பார்ப்பனர் முடிசூட்ட வந்தான். நாடு முழுதுமிருந்தும் 11,000 பார்ப் பனர்கள், குடும்பத்துடன் அழைக்கப்பட்டனர். அன்றாடம் பூசைகளும், சடங்குகளும் நடந்தன. 44வது வயதில் பூணூல் போடப்பட்டு, சத்திரியன் ஆக்கப்பட்டான். தானும் ஒரு சத்திரியன் என்று ஒப்புக் கொண்டு விட்டபடியால், தனது காதில் விழுவதுபோல் மந்திரங்களை ஓத வேண்டும் என்று சிவாஜி விரும்பினான். பார்ப்பனர் களிடையே சலசலப்பு ஏற்பட்டது. “வேத மந்திரங்கள் என்பது இரு பிறப்பினருக்கு மட்டுமே உரியது. தற்காலத்தில் பார்ப்பனர்கள் தவிர வேறு எவரும் இரு பிறப்பாளர்களாக மாட்டார்கள். உலகில் உண்மையான சத்திரியர் களும் இல்லை” என்று கூறிவிட்டனர். “பேராசை பிடித்த பார்ப்பனன் மந்திரங்களின் ஒரு சிறு அசைவுகூட, சிவாஜியின் காதில் விழாத வண்ணம், தங்கள் வாய்க்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண் டனர்” என்று எச்.எம். அரிபிரசாத் சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

3) சிவாஜியின் எடைக்கு எடை பல பொருட்கள் எடையில் நிறுக்கப்பட்டன. திடீரென இரண்டு பார்ப்பனர்கள், சிவாஜி படையெடுப்பின்போது பார்ப்பனர்கள், பசுக்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு மரணம் அடையத்தக்க வகையில் நகரங்களை எரித்தான் என்றும், அப்பாவங்களுக்கு தகுந்த விலை கொடுத்து, பாவத்திலிருந்து மீள வேண்டும் என்று கூறவே, அதற்காக, 8000 பார்ப்பனர்களுக்கு பணமாகக் கொடுத்தான் சிவாஜி.
பார்ப்பனர்களை நம்பி, அவர்கள் காலடியில் வீழ்ந்த சிவாஜியின் சாம்ராஜ்யத்தை பார்ப்பனர்கள், பொன்னையும், பொருளையும் சுரண்டியே ஆட்சியை திவாலாக்கி விட்டனர். இந்த வரலாற்றையே-‘இந்து கண்ட சாம்ராஜ்யம்’ என்று அண்ணா நாடகமாக்கினார். அந்த நாடகத்தில் சிறப்பாக நடித்ததற்காகத்தான் ‘சிவாஜி’ என்ற பட்டத்தை பெரியார் சிவாஜி கணேசனுக்கு சூட்டினார்.
(நிறைவு)
தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

சேலம் வேத மரபு மறுப்பு மாநாட்டு மலரில் இருந்து

No comments: