சீமான் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கியது முதலே இவர் ஒரு ப்ராடு என்பதை நான் அறிவேன். சீமானின் அரசியல் துவக்கமே, சீமானும் பிரபாகரனும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை சென்னை நகர் முழுக்க சுவரொட்டிகளாக ஒட்டுவதிலிருந்து தொடங்கியது. (பிரபாகரன் இறந்த பிறகு) அமைதி காலத்தில், புலிகள் அமைப்பினர் தமிழகத்திலிருந்து பலரை அழைத்து சந்தித்தனர். அப்போதெல்லாம் சீமான் ஒரு சாதாரண இயக்குநர். பிரபல இயக்குநர் கூட கிடையாது. பிரபாகரனை சந்தித்து வந்தவர்கள், சீமான் – பிரபாகரன் சந்திப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறினர்.
2008 ஜூலையில் நான் சிறையில் இருந்தேன். அப்போது எனக்கு அடுத்த ப்ளாக்கில், “தம்பி அண்ணா” என்று புலிகளின் உளவுப் பிரிவில் இருந்த ஒருவரை ராமேஸ்வரத்தில் இருந்து கைது செய்து வைத்திருந்தனர். தம்பி அண்ணாவோடு பேசிக் கொண்டிருக்கையில், அவர், தம்பி சீமானை என்னை வந்து சந்திக்க சொல்லுங்கள் என்றார். அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்ற வாயிலில், ஜனவரி 2009ல் வழக்கறிஞர்கள், ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஒரு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில் அதில் கலந்து கொள்ள சீமான் வந்தார். அப்போதுதான் அவர் பொது வாழ்வில் இறங்குகிறார். வழக்கறிஞர் புகழேந்தியிடம் தம்பி அண்ணா பேசியது குறித்து கூறியதும், “நீயே போயி பேசுய்யா” என்றார். சீமானிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு விபரத்தை கூறினேன். தம்பி அண்ணா விடுதலையாகி, அகதிகள் முகாமுக்கு சென்ற பிறகும், கடைசி வரை சீமான் அவரை சந்திக்கவேயில்லை. சீமானுக்கு புலிகள் இயக்கம் பற்றிய எந்த புரிதலும், இல்லை என்பதை அவரோடு உரையாடியபோது புரிந்து கொண்டேன்.
10 ஜூலை 2010ல், சீமானை கருணாநிதி அரசு கைது செய்தது. பின்னர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது. அப்போது சீமான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை 10, 2010 முதல், டிசம்பர் 10, 2010 வரை சீமான் வேலூர் சிறையில் இருந்தார். அந்த ஆறு மாதங்களும், சீமான், ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ரவி, ராபர்ட் பயஸ், போன்றோரோடு கழித்தார். முருகன் புலிகள் இயக்கத்தில் மூத்த பொறுப்பில் இருந்தவர். அவர்களோடு உரையாடித்தான் சீமான் புலிகள் இயக்கம், அதன் செயல்பாடுகள் பற்றியெல்லாம் அறிந்து கொண்டார்.
அதற்கு பின்னர்தான், ஆமைக் கறி கதை, ஏகே 76, அரிசிக் கப்பல் கதையெல்லாம். சீமான் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன் என்ற எனது எண்ணம், மீண்டும் மீண்டும் உறுதியானது.
ஆறு மாதங்களை அவர்களோடு கழித்த சீமானுக்கு 28 ஆண்டுகளாக சிறையில் இருப்பதன் வலியும் வேதனையும் புரிந்திருக்க வேண்டும்.
வெறும் கைதட்டல்களுக்காக அவர்களின் விடுதலையே நாசமானால் கூட பரவாயில்லை என்று பேசும் சீமான் மனிதனாக மதிக்கப்படக் கூட தகுதியானவர் இல்லை.
இன்றும் சீமானை நம்பி அவர் பேசுவதை ரசித்து அவர் பின் செல்லுபவர்கள், அறிவு வளர்ச்சிக் குறைந்தவர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

No comments:
Post a Comment