Saturday, January 11, 2020

1971ல், 1972ல் நடந்தேறிய அனைவரும் அறிய வேண்டிய மிக இன்றியமையாத அரசியல் வரலாறு.

1971ல், 1972ல் நடந்தேறிய அனைவரும் அறிய வேண்டிய மிக இன்றியமையாத அரசியல் வரலாறு.
ஒன்றிய அரசு நினைத்தால் எப்பற்ப்பட்ட அரசையும், சூழ்ச்சி செய்து, கவிழ்த்து விடலாம். 184 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தை கூட நிலைகுலைய செய்யவும் முடியும். கபட நாடகத்தை அரங்கேற்றி ஒரு செல்வாக்கு பெற்ற நடிகரைக் கூட தனி கட்சியை தொடங்க வைக்க முடியும் என்பதற்கு கீழ்காணும் பதிவு. சான்று.
-----------------------
23.3.92 இல் தமிழ் வார இதழில் போலீஸ் அதிகாரி மோகன்தாஸ் எழுதி வெளிவந்துள்ள தொடர் கட்டுரையின் ஒரு பகுதியை எழுத்துப் பிசகாமல் அப்படியே தருகிறேன்
ஜூனியர் விகடன்
எஸ் எஸ் வாசன் என்ற
பிரபல காங்கிரஸ்காரரும்
ஜெமினி ஸ்டூடியோ அதிபரும் ஆனந்தவிகடன் நிறுவனமான செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் புதல்வர் பாலசுப்ரமணியம் அவர்களால் நடத்தப்படும் ஏடு.
அந்த ஏட்டில் போலீஸ் மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளிவந்து கொண்டு இருக்கிறது
நான் இங்கே குறிப்பிடுவது
13ஆவது தொடராகும்.
போலீஸ் உளவுத் துறை அதிகாரி ஒருவர் அவர் பணியாற்றியபோது நாட்டில் நடந்த சில நடப்புகளையும் விளக்குகிறார் அதைத்தான் வாசகர்களாகிய நீங்கள் இப்போது படிக்கப் போகின்றீர்கள்
அவர் பின்வருமாறு எழுதுகிறார்
எம்ஜிஆரை திமுகவில் இருந்து வெளியே கொண்டுவர ஒரு பெரிய நாடகம் நடத்தினோம்
அந்த நாடகத்தை எப்படி நடத்தினோம் தெரியுமா என்று ஆரம்பித்த
சிஐடி அதிகாரி தொடர்ந்து
சொல்லத் தொடங்கினார்.
எதிர்க்கட்சிகளை உடைப்பதற்கு தேவையான தகவல்களை திரட்டித் தரும் பொறுப்பும் ஒரு சில சமயம் உளவுத்துறையின் தலையில் விழும்
அதைச் செய்ய வேண்டுமானால்
அந்த கட்சியில் உள்ள தலைவர்களுருடைய தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுக்கு உள்ள
பலம் பலவீனங்கள் கண்டெடுக்கப்படும்
அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு போன்ற
புள்ளி விவரங்கள்
இன்டெலிஜன்ஸ் அதிகாரிகளுக்கு
தெரிந்திருக்க வேண்டும்
இல்லையென்றால் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகும்.
1971 திமுக 25 எம்பிக்களை வைத்திருந்தது.
அரசியலில் கருணாநிதியும் ஒரு சூப்பர் மேனாக இருந்த நேரம்
மாநில சுயாட்சிக் கொள்கையை உரமூட்டி வளர்த்துக் கொண்டிருந்தார் தன்னுடைய மாநிலதில் தான்
சிறப்பான ஆட்சி என்று முழங்கினார் இந்த குரல்கள் எல்லாம்
பிரதமர் இந்திரா காந்தி
காதிலும் விழுந்திருந்தன
தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தான் ஆண்டது தமிழ்நாடு மட்டும் ஒரு தீவாக திமுகவின் கையில் இருந்தது.
திமுகழக எம்பிக்களின் ஆதரவு
இந்திரா காந்தியின் அரசுக்கு
அப்போது தேவைப்பட்டது
அதே சமயத்தில் கருணாநிதி
தன் கைக்குள் இருக்க வேண்டும்
என்றும் நினைத்தார் இந்திரா காந்தி
இதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தார்
திமுகவை உடைத்துவிட்டால் தான் அந்தக் கட்சி காங்கிரஸ் உதவியை தமிழ்நாட்டில் நாடும்
என்று முடிவெடுத்தார்.
அதற்கான வேலையை செய்ய இன்டெலிஜென்ஸ்
உயர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்
உதவிக்கு காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும் அனுப்பப்பட்டார் அந்த காங்கிரஸ் பிரமுகர் இன்டலிஜன்ஸ் அதிகாரியோடு உட்கார்ந்து திட்டம் போட்டார்
எனக்கு கூட அப்போது வேறு மாநிலத்தில் தான் பணியில் இருந்தது
ஆனால் தமிழக அரசியல் தெரியும் என்பதால் எனக்கு
ஸ்பெஷல் ட்யூட்டி போட்டிருந்தனர்.
திமுகவில் முக்கிய புள்ளிகள் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தபோது
என் கண்முன் எம்ஜிஆர் தான் முன்னணியில் இருந்தார்.
அதனால்தான் அவரை
திமுகத்திலிருந்து இழுக்க
நாங்கள் முயற்சி செய்தோம்.
அப்போது ஏராளமான படங்களில்
நடித்து கொண்டிருந்தார் எம்ஜிஆர் வருமானமும்அதிகமான இருந்த நேரம்
இதைக் கருத்தில் கொண்டு
வருமான வரி அதிகாரிகள்
அடுத்து வருவாய் கண்காணிப்பு அமலாக்க பிரிவு என்று
எல்லா அதிகாரிகளையும்
எம்ஜிஆர் வீட்டை முற்றுகையிட்டு குடைந்து எடுக்க வைத்தோம்
அப்போது அவர் ஒரு சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக வெளிநாடு சென்று வந்திருந்தார்
அதற்கான கணக்கு வழக்குகளை விசாரித்தார்கள்
ஆனால் இதற்கெல்லாம்
பெரும் பின்னணி இருப்பது
எம்ஜிஆருக்கு தெரியாது.
இந்த சமயத்தில் எம்ஜிஆருடன் பேச என்னை அனுப்பினார்கள்
நான் போன போது எம்ஜிஆர் மிகவும் சோர்வாக இருந்தார்
நானே வழியே பேசி பிரச்சினைகளை சமாளிக்க டெல்லி போய் இந்திராகாந்தியை பாருங்க எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று
யோசனை சொன்னேன்
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டார் எம்ஜிஆர்
பிறகு நானே முக்கியமான காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் மூலமாக அம்மாவை மீட் பண்ணுங்க என்று கூறி வழி காட்டிக் கொடுத்தேன்
அதன்படி எம்ஜிஆர் அந்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் தன் வழக்கறிஞரிடம் சென்று பிரதமரை சந்தித்தார்
சந்திப்பு நடந்து எம்ஜிஆர் உற்சாகமாக திரும்பினார்
இப்படித்தான் மெதுமெதுவாக தொடங்கி திமுகவில் உட்பூசல் உண்டாக்கி கடைசியில் 1972ல் எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்ற வைத்தோம் என்று முடித்தார்
அந்த போலீஸ் அதிகாரி.
ஜூனியர் விகடன் வார இதழில் வந்துள்ள இந்த உண்மையை
20 ஆண்டுகளுக்கு முன்பு
நானும் திமுக தலைவர்களும்
பல ஆதாரங்களுடன்
மக்கள் மன்றத்தில் எடுத்துவைத்த போது இப்படியும் இருக்குமா என்று
எங்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர்
ஆனால் உண்மை 20 ஆண்டுகள் கழித்து சாட்சியுடன் வெளிவந்துள்ளது.
நெஞ்சுக்கு நீதி தொடரிலிருந்து
அண்ணன் Napa Mc.
_____________________
இது ஏதோ முரசொலியில் பதிவானது அல்ல. 'நான் ஏன் பிறந்தேன்' என்று தொடரை கொடுத்த ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வரும் ஜூனியர் விகடனில் வெளியானது.
உண்மைத்தன்மை நிறைந்திருக்கும். ஏனெனில் எழுதியவர் அரசியல்வாதி அல்ல. எழுதிய நேரத்தில் திமுக சட்டமன்றத்தில் 1 இடம் மட்டுமே வென்ற அரசியல் கட்சி.
கணக்கு வழக்குகளை கொடுக்க வேண்டிய பொருளாளர் எவ்வாறு கணக்கு கேட்பார் என்ற அடிப்படையே தெரியாத அறியாதவர்கள் அதிகம் வாழ்ந்த காலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கவில்லை.
நிறைவாக, ஆளும் ஒன்றிய அரசு நினைத்தால் எந்த ஒரு நடிகரையும் கட்சியோ, மய்யமோ, மன்றமோ, இயக்கமோ தொடங்கி வைக்க முடியும்.
பெரும் பலம்வாய்ந்த ஒரு இயக்கத்தை தகர்க்க, ஆட்சியில் வராமல் தடுக்க எல்லா அரசியல் சித்து விளையாட்டுகளை அரங்கேற்றிக் கொண்டிருக்க முடியும்.
அன்று அந்த விவரமறியாத தமிழ்ச் சமூகம் ஏமார்ந்தது. இன்று நிச்சயம் ஏமாராது என்பதனை ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் உணர்த்தி உள்ளனர்.மீண்டும் உணர்த்துவார்கள்.

No comments: