Friday, February 03, 2023

பார்ப்பனீயம் எதிர்க்கும் பேனா நினைவுச் சின்னம்!

பார்ப்பனீயம் எதிர்க்கும் பேனா நினைவுச் சின்னம்!



“1944 இசைச் சித்தர்,வெங்கலகுரலோன் சிதம்பரம் ஜெயராமனின் தங்கையான பத்மாவதி அம்மையாரை திருமணம் செய்து முடிந்து தேனிலவுக்காக மாமானார் வீடான சிதம்பரம் செல்ல ஆயத்தமான நிலையில் 144 தடையுத்தரவு!! 


அதுவும் இந்திய வரலாற்றில் தனி ஒரு மனிதனுக்காக பிறப்பித்தது ஆச்சரியமான செய்தி!


ஆம்! கருணாநிதி என்ற 22 வயது புது மாப்பிள்ளைக்கு தான் !!


ஏன் தெரியுமா? 

அன்றைக்கு பார்ப்பனீய அமைப்புக்கள் சார்பாக சிதம்பரத்தில் வர்ணாசிரம மாநாடு அதை கண்டித்து தனது முரசொலியில் கலைஞர் எழுதுகிறார்;


"பரணி பல பாடி பாங்குடன் வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில் சொரனையில்லா சுயநலத்துச் சோதர்கள் ஒன்று கூடி வர்ணத்தை நிலைநாட்ட வகையின்றி

கரணங்கள் போட்டாலும் மரணத்தின் உச்சியில் நின்று மானங்காத்திட மறத்தமிழா போராடு"!


இந்த வரிகள் தான் வர்ணகும்பல்களை கலங்கடித்தது மாநாட்டை சீர்குலைக்க சதி என்று முரசொலி மீது புகார் அளித்து சிதம்பரம் நகருக்குள் நுழைய கலைஞருக்கு தடையாணையை பிறப்பித்தது

அன்றைய அரசாங்கம்! 


அதனால் தான்


 அன்று முதல் இன்று வரை பார்ப்பனீயம் கலைஞரை எதிர்க்கிறது அந்த ஆரியத்தையும் அதன் சூத்திர அடிவருடிகளையும் சுட்டெரித்தது கலைஞரின் பேனா !! 


அதை நினைவுச் சின்னமாக அமைத்தால் அவர்களுக்கு எரியத்தானே செய்யும்!!!


யவன குமாரன்

No comments: