Monday, November 28, 2022

ஊழல் ஓழிப்பு போராளி H. Raja வும் - Lotus benefit fund -ம்

 ஊழல் ஓழிப்பு போராளி 


H. Raja வும் - Lotus benefit fund -ம் 


பாஜகவின் (முன்னாள்) மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜா பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு ஓர் அதிரடிக் கடிதம் வந்துள்ளது. 


பணத்தை பறிகொடுத்த திருச்சியை சேர்ந்த பழனியப்பன்-ரேவதி தம்பதியினர் பத்திரிக்கைக்கு அளித்த கண்ணீர் பேட்டி:-


பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையின் பெயரில் 'லோட்டஸ் பெனிபிட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தை குடும்ப நிறுவனமாக 1997 ஆம் ஆண்டு காரைக்குடியில் துவக்கினார் ஹெச்.ராஜா. அப்பொழுது நான் பா.ஜ.க.வின் திருச்சி மாவட்டத் தலைவராக இருந்தேன்.


ராஜா, மாநில செயலாளராக இருந்த பரிச்சயத்தால், அவர் மேலுள்ள நம்பிக்கையால், அவர் கேட்டுக்கொண்டபடி, முதலில் ரூ.50000 மட்டும் 'லோட்டஸ் பெனிபிட் பண்ட்'டில் முதலீடு செய்தேன். அதற்கு 2 வட்டி வீதம் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு, ரூ.2 லட்சம் கூடுதலாக முதலீடு செய்தேன்.


அதற்குப் பிறகு ரூ.8 லட்சம் என பத்தரை லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தேன்.


திடுமென வட்டி வருவது நின்று விட, என்ன என்று கேட்டதற்கு, "நிறுவனத்தில் திருடு போய்விட்டது" என்றார்.


அதற்குப் பிறகு இன்றுவரை திருச்சியிலிருந்து, காரைக்குடிக்கு 200 தடவைக்கு மேல் வந்து சென்றுவிட்டேன். அவர் எனக்குப் பணத்தைக் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஆளை வைத்து கொலை செய்வதாக மிரட்டுகிறார். என்னைப்போல் அந்த நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் அதிகம். பணத்தை இழந்த அத்தனைப் பேரும் எங்களது பா.ஜ. கட்சியினரே. 


கட்சியில் மாவட்டப் பொறுப்பிலிருந்த எனக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை வாய் மூடி மௌனித்திருப்பதே" என்றார் பழனியப்பன்


முன்னாள் தேசியக்குழு உறுப்பினரும், பழனியப்பனின் மனைவியுமான ரேவதி கூறுகையில்,


"முதலில் ரூ.50000, அடுத்து ரூ.2 லட்சம் என அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது போதும் என்றிருந்தோம். அப்போது சின்னக்கடை வீதியில் எங்களுக்கு சொந்தமான சொத்தை விற்று வங்கியில் போட்டு வைத்திருந்தோம்.


அதை தெரிந்துகொண்ட ஹெச்.ராஜா, "பேங்க்கில் சும்மாதானே பணம் கிடக்குது. இதை எங்ககிட்ட முதலீடு செஞ்சா, 2 வட்டி கிடைக்குமில்ல" என்றார். நாங்களும் அவர் பேச்சை நம்பி முதலீடு செய்து, நடுத்தெருவில் நிற்கிறோம். இப்ப, என் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடக்குது. அதற்காகக் கூட தந்துவிடலாமில்லையா?


வரும் தை பொங்கலுக்குள் எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராவிட்டால் நான், என் கணவர், என் மகள் உட்பட மூன்று பேரும் ஹெச்.ராஜா வீட்டின் முன்னால் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்" என்றார் ரேவதி.


பாஜக-வின் தமிழக தலைவர்களில் இந்த ஹெச்.ராஜா என்பவர் ஒரு தினுசானவர். இவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும்போது ஆதரங்களைப் பற்றி இம்மியளவும் கவலைப்படாமல் துணிந்து பேசக்கூடியவர். மறுதரப்பினரை பேச அனுமதிக்காமல் குறுக்கே பேசியும், கத்தியும் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடியவர்.


குறிப்பாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றியோ, காங்கிரஸின் மீதான பொருளாதார குற்றச்சாற்றுகள், ஊழல்கள் பற்றி பேசும் போதோ கொந்தளிக்கக் கூடியவர்.


ஆனால் அவரே ஊழல்வாதி தான்

No comments: