Monday, November 28, 2022

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்மோனிய பொட்டி இளையராஜாவிடம்

*கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்மோனிய பொட்டி இளையராஜாவிடம்*




#கம்யூனிஸ்ட்_இயக்கத்திற்குதான் #நன்றிகடன்பட்டவர்கள்_இவர்கள்!


கேரளாவில் #இஎம்எஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது தேவிக்குளம், பீர்மேடு தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சார மேடைகளில் பாடுவதற்காக மாயாண்டி பாரதி மூணாறு பண்ணைப் புரத்தில் தோட்டவேலை செய்து வந்த பாவலர் வரதராஜனை அழைத்து வந்துள்ளார். 


தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் வெற்றி பெற்றபின் தலைவர்கள் எல்லாம் ஊருக்கு திரும்பியபின் மாயாண்டி பாரதியிடம் வாழ்க்கை நடத்த வழிச்சொல்லுங்கள் எனக்கூற, அதற்கு ஐமாபா, "நான் என்ன முதலாளியா? பணக்காரனா? என்ன செய்ய முடியும்? கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையில் உன் பாட்டை பற்றி எழுதுகிறேன். ஆனா நீ ஒத்த குரல்ல பாடுனா பத்தாது. ஒரு கச்சேரி மாதிரி கொடுக்கனும்"ன்னு சொன்னார் ஐமாபா. 


அதற்கு, "என் தம்பி பயல்கள் 10 ,15 வயசு. அவனுங்கள கூட்டிட்டு வரேன்" என்றார் பாவலர் வரதராஜன். அதன்படி, தமிழ்நாட்டில் பாட்டு கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 


பாவலர் தம்பி பாஸ்கர், தபேலா போட, ராசய்யா (இளையராஜா) பெண் குரலில் பாட, அமர்சிங் (கங்கை அமரன்) ஜால்ரா போட, கச்சேரிகள் நடந்துள்ளது.


தனியாக பாட்டு மட்டும் பாடி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கலை அழகு கொடுக்க முடியாது என எண்ணி, கச்சேரி நடத்த தபேலா, ஹார்மோனியம், ஜால்ரா வாங்க தோழர்களிடம் நிதி தாரீர் என பத்திரிகையில் செய்தி வெளியிட்டப்பட்டது. 


அதற்கு தோழர்கள் அளித்த உதவியில் பாவலரின் இசை க்குழுவிற்கு இசைக்கருவிகள் கட்சியால் வாங்கப்பட்டுள்ளது. 


மாயாண்டி பாரதியால் சென்னையில் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இப்படி தான் தங்களது இசைப் பயணத்தை பாவலர் குடும்பம் தொடங்கியது.


#கம்யூனிஸ்ட் கட்சியால் அறிமுகம் செய்யப்படாமல் போயிருந்தால், இந்த நால்வரும் பண்ணைப்புரத்திலேயே இப்போதும் தோட்ட வேலை செய்து கொண்டிருந்திருப்பார்கள்.


வாழ்க்கை தந்த கம்யூனிஸ்ட் கட்சியை மறந்து பேசும் இவர்களை (கங்கை அமரன் மற்றும் இளையராஜா) போன்ற ஆயிரக்கணக்கான சுயநலவாதிகள் இந்த தேசத்தில் உள்ளனர். 

No comments: